தீராத் தீஞ்சுவையே ..35

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ___35

பேச்சு வார்த்தை சுபமாக முடிந்த சந்தோஷத்தில் பெற்றவர்களும்... விரைவில் எந்த தடங்களும் இன்றி திருமணம் நிச்சயமான சந்தோஷத்தில் சிறியவர்களும் கொண்டாட்டமாக இருந்தனர்...

இருவரும் இப்போது சுதந்திரமாகவும் மணிக்கணக்காகவும் பேசிப் பேசி..என்ன பேசினோம் என்றேத் தெரியாமல் ஓய்ந்து போய் உறங்கினர்...

நாட்கள் கொண்டாட்டமாக நகர்ந்தது...
இதற்கிடையே... திருஷ்டி பொட்டு வைத்தது போல நமது 94 வயது அஞ்சலை பாட்டி அதிரடியாக மிகவும் அபாயகட்டத்தில் மூச்சுத்திணறல் எடுத்து அவதிபட்டதும் குடும்பமே கலங்கிவிட்டது...

நிச்சயம் செய்ய புடவைக்கும் நகைக்கும் ஒதுக்கிய பட்ஜெட் எல்லாம்... மருத்துவ மனைக்கும் மற்ற செலவுகளுக்கும் கரைந்தது...

பேத்தியின் கையால் மீன்குழம்பு சாப்பிட வேண்டும்... பேத்திக்காக மூன்று கல் வைத்த தன்னுடைய வைர மூக்குத்திய போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்த அஞ்சலை பாட்டி இப்பவோ அப்பவோ என்ற நிலையில் இருந்தார்...

பாட்டியின் கடைசி ஆசையாக பேத்தியை வீட்டிற்கு அழைத்து வந்தாவது கடைசியாக காட்டிவிட வேண்டும் என வீட்டின் அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு.... மூர்த்தியிடம் அனுமதி கேட்க.... மூர்த்தி சற்று யோசித்தார்...

லலிதா முடியாது என தடாலடியாக மறுப்பு தெரிவித்தார்.... காரணம் ... திருமணம் முடியும் முன்பு அங்கே பார்க்க சென்று வந்து பாட்டிக்கு ஏதாவது ஆகிவிட்டாள் அதை பின்னாளில் குறையாகவோ...இராசி சம்பந்தப்பட்டோ பேசிட வாய்ப்பு அதிகம் என்பதால் லலிதா முடியவே முடியாதென மறுத்தார்..

பெண்வீட்டாரின் தயக்கம் புரிந்து வசந்தாவும் கணேசனும் பாட்டியின் நிலயை எடுத்துக் கூறி இதனால் தங்களுடைய மறுமகளுக்கு எந்த அவப்பெயரோ பழியோ வராது அதற்கு நாங்கள் பொறுப்பு... என்று பேச்சுவார்த்தை நடத்தினர்...

ஒரு வழியாக மூர்த்தி நேத்ராவை அழைத்துக் கொண்டு வந்தார்.... வீட்டை கண்டறிய கடினம் என்பதால் மித்ரனும் கணேசனும் ஆளுக்கு ஒரு வண்டியில் வந்தனர்....

மித்ரன் நேத்ராவை எப்படியாவது தன்னோடு வண்டியில் ஏற்றி அழைத்துவர வேண்டும் என்று ஆசை பட்டான்.


அங்க ஆயா சீரியசா இருக்கு....இங்க சாருக்கு அவரு ஆளோட ரவுண்டு போகனுமாம்....

ஆனால் நேத்ரா இன்றும் புடவைக் கட்டியிருந்தாள்... அவள் நினைத்திருந்தால் அவனோடு ஒரே வண்டியில் சென்றிருக்கலாம்... ஆனால் திருமணம் முடியாமல் அவனோடு ஒன்றாக செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை..

(என்னம்மா... நீங்க இப்படி பன்றீங்களேம்மா...... போங்கம்மா.....என்றானது மித்ரனுக்கு...

மூர்த்தி அனுமதி அளித்தும் கூட அவள் ஏறவே இல்லை.. மாறாக ஒரு வண்டியை தன் தந்தையை ஓட்டச் சொல்லி அதில் தந்தையோடு அவள் ஏறிக்கொண்டு வந்தாள்...மித்ரனை அவனுடைய தந்தை கணேசனோடு ஒரு வண்டியில் போகுமாறு அனுப்பி வைத்தாள்..

மித்ரன் கடுப்பின் உச்ச கட்டத்தில் இருந்தான்.... வட போச்சே ......பீலிங்ஸ் ஓட வீடு வந்து சேர்ந்தான்...

நேத்ரா வலது காலெடுத்து வைத்து வந்தாள். விளக்கேற்றுமாறு வசந்தா கேட்டுக் கொண்டதற்கு இணங்கி விளக்கேற்றி வைத்தாள்...

பின்னர் ஒரு எளிய உபசரிப்பிற்கு பிறகு... பாட்டியை காணச் சென்றாள்...

பாட்டிக்கு மித்ரன் என்றால் கொள்ளைப் பிரியம். கொள்ளுப்பேரன் என்பதால் பாசத்தை கொட்டி வளர்த்தார்... அவனுடைய குரல் மட்டுமே அவருக்கு நினைவு வந்தது போல திரும்பி பார்த்தார்...

நேத்ராவை காட்டி இவ தான் பாட்டி உன் வருங்கால பேத்தி... என் பொண்டாட்டி நல்லா பாரு எம் பொண்டாட்டி எப்படி இருக்கா சொல்லு என ஏதேதோ பேசினான்... கணேசன் அழுதார்..

நேத்ராவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை... அமைதியாக இருந்தாள் பாட்டி அவளை விழி அசையாது பார்த்துக் கொண்டே இருந்தார்...

அவளுக்கு என்ன பேசுவது என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை... பாட்டியின் கைகளை எடுத்து அவளுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டு மனதில் அவரோடு பேசினாள்...

அசையாத பாட்டியின் இரு விழிகளைப் பார்த்துக் கொண்டே மனதில் பேசினாள்... உங்க பேரனையும் இந்த குடும்பத்தையும் நான் நல்லா பார்த்துப்பேன் பாட்டி... என்று மனதார நினைத்துவிட்டு வேளியே வந்தாள்...

மூர்த்தி மகளை அழைத்துக் கொண்டு கிளம்பிட மீண்டும் அதேபோல் ஆளுக்கு ஒரு வண்டியில் வந்து வீடு நோக்கி இரயில் பயணம் தொடர்ந்தது... இவர்கள் வந்து இரு தினங்களுக்கு பிறகு பாட்டி காலமானார்...

உள்ளுக்குள் மூர்த்தியும் லலிதாவும் நினைத்ததைப் போல சில பூசல்கள் எழுந்தது என்னவோ உண்மை தான்... ஆனால் கணேசன் வசந்தி தம்பதியினர் அதை வருங்கால மறுமகளுக்காக எளிதாக எடுத்துக்கொண்டு தகுந்த பதில் கூறி வெரும் வாய்க்கு அவல் தேடியவர்களை தடாலடியாக ஆஃப் செய்தனர்...

பாட்டி இறந்ததாள் திருமண காரியங்களை தள்ளி வைத்து சோதிடம் பார்த்தனர்... வாழ்ந்து அனுபவைத்து இறந்த வயோதிகக் கட்டை என்பதால் ஆறுமாதம் கழித்து நிச்சயமும் நிச்சயம் முடிந்த அடுத்த மாதமான தை மாதத்தில் திருமணமும் வைக்கலாம் எனத் தேதி குறிக்கப்பட்டது...

அதன்படி எந்த இடையூறும் இன்றி ஆறுமாதம் கடந்தாலும் .... நேத்ராவிற்கு தான் பூனையை மடியில் கட்டிய கதையாக இருந்தது..

இந்த இடைவெளியை லலிதா நன்றாக பயன்படுத்திக் கொண்டார்... தினமும் நேத்ராவை மூளைச்சலவை செய்தார்..

வசதியான இடத்திலிருந்து சில வரண்களை பார்த்து வந்து பலவாறாக அறிவுரை வழங்கினார்...

நேத்ரா எவ்வளவோ எடுத்துச் சொல்லி போராடிக் கொண்டே இருந்தார்..

கணவரின் உதவியோடும்.... மகனின் உதவியோடும் நிறைய முயற்சி செய்தார்...அன்புச் செழியனும் அம்மாவிற்கு ஆதரவாக ஆக்கவிடம் கல்யாண பிரச்சாரத்தில் அம்மாவின் வார்த்தைகளை நேத்ராவிற்கு ஆதரவாக பேசிப் பேசி எவ்வளவோ முயன்று பார்த்தான். ...ஆனால் நேத்ராவினால் எதையும் ஏற்க முடியவில்லை..

காரணம் கணவனாக வரித்து அவனோடு காதல் கதைத்து .. நேரம் மறந்து நிம்மதியாக பாதுகாப்பாக உணர்ந்த தருணங்களையும் அவன் காட்டிய காதலையும் கோடி ரூபாய் பணம் வந்தாலும் வேறு ஒருவரிடம்..பெற முடியுமா....அப்படி கிடைத்தாலும் தான் ஏற்க முடியுமா.... ...

மித்ரனின் முத்தங்களை வாங்கிய கன்னங்களில் இனி வேறொருவனின் பார்வைக் கூட அந்த சாயலில் விழுவதை அனுமதிக்க முடியுமா....... அப்படி இருக்கையில் இன்னொருவனை எப்படி தன் அருகில் நெருங்கிட அனுமதிக்க முடியும்... அதைவிட அருவறுக்கத்தக்க வேறொன்றும் உண்டா... அவனை விட பணமும் வசதியும் எனக்கு பெரிதில்லை...
அவனுயையக் வலிய ....காதலும் அவனுடனான எளிய வாழ்க்கையும்.... போதும்...

அவனால் முடிந்த சராசரி வாழ்க்கைய அவனோடு நிம்மதியாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.. என தன் முடிவில் உறுதியாக இருந்தாள்...

ஒரு கட்டத்திற்கு மேல் அவளுடைய பிடிவாதத்தின் முன்பு அவர்களுடைய வாதங்கள் நிற்கவில்லை...

வெற்றிகரமாக ஆறு மாதங்கள் கடந்த நிலையில் டிசம்பர் 2 ம் தேதி நிச்சயம் செய்து கொள்ள பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. ..

நிச்சயம் முடிந்த கையோடு ஜனவரி 19 திருமணம் என நாள் குறிக்கப்பட்டது...

இந்த இடைவெளி கூட மாப்பிள்ளை வருடாவருடம் மாலை அணிந்து சபரிமலை செல்ல வேண்டும் அதனால் இம்முறை குறுகிய விரத இடைவெளியானாலும் பரவாயில்லை கட்டாயம் செல்ல வேண்டும் என வம்படியாக அடம்பிடித்ததால் தான்.....

அதன் படி நிச்சயம் முடிந்த அடுத்த நாளில் மாலை அணிந்து அதில் இருந்து திருமணத் தேதிக்கு நான்கு நாள் முன்பே சபரிமலை தரிசணம் முடிந்து வீடு வரும்படி விரத நாட்களை கணக்கிட்டு மாலை அணிய ஏற்பாடு ஆனது....
அவனவன் நிச்சயம் முடிஞ்சி தான் கல்யாணம் வரைக்கும் கஷ்டப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு.. ஒரு செல்ல வாங்கி அதுல என்ன பேசுறோம்.... ஏன் பேசுறோம்... எவ்வளவு நேரம் தான் பேசுரோம்னு ... கூடத் தெரியாம விடிய விடியத் தூங்காம டே நைட் ஒர்கவுட் பன்னி ஆபிஸ்ல தூங்கி வீட்ல நைட் சிஃப்ட் பார்த்து பி.பி.ஓ ( B.P.O). மாதிரி காதல...... பேசிப் பேசி வளர்த்து கல்யாணம் பன்ற டார்கெட் ஆ அச்சீவ் பன்றதுக்குள்ள மூச்சுத்திணறி.... நாக்குத்தள்ளி.... முழிப்பிதுங்கி.... நொந்து நூடுல்ஸ் ஆகிட்டு இருக்கான்.........

இவரு மாலை போட்டு விரதம் இருக்க தேதி தேடிட்டு இருக்காராம்....

மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்கத் தோனும்....னு சொல்றது இது தான் போல…

சரி மக்களே இதனால தெரிவிச்சிக்கிறது என்னன்னா….

ஒரு வழியா வேம்புலி(லேட்)__லட்சுமி அவர்களின் பேத்தியும்... தட்சிணாமூர்த்தி _ லலிதா அவர்களின் குமாரத்தியுமான செல்வி நேத்ராவுக்கும் ..

அண்ணாமலை(லேட்)__அஞ்சலை அம்மாள் (லேட்) ன் பேரனும்... கணேசன் __ வசந்தியின் குமாரன் செல்வன் மித்ரனுக்கும்....

டிசம்பர் 4 ஆம் தேதி.....
நாளை மாலை 6.30மணி அளவில் நிச்சயமாக நிச்சயதார்த்தம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது..
அதனால் நாமும் ஒருஎட்டு நிச்சயதார்த்தம் நடப்பதை நாளை பார்த்து விட்டு வரலாம் வாருங்கள்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top