தீராத் தீஞ்சுவையே...32

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_____32

நேத்ரா அப்பாவின் வார்த்தைகள் தந்த உற்சாகத்துடன் தூங்கி எழுந்து பள்ளிக்கு கிளம்பினாள்...

மித்ரனிடமும் வசந்தாவிடமும் இந்த தகவலை சொல்லிவிட்டு... மாலை திலகவதிக்கு கால் செய்து நடந்தவற்றை கதைகதையாக மணிக்கணக்கில் பேசித்தீர்த்தாள்....
திலகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை... இரண்டு தோழககளும் சந்தோஷத்தையும் நீண்ட நாள் காணாத பிரிவையும் ஆர அமர பேசிப் பேசிப்..... பேசியேத் தீர்த்தனர்...

புன்னகையோடும் மகிழ்ச்சியோடும் இந்நிகழ்வைக் கொண்டாடினர்....

நேத்ராவின் தகவல தந்த தித்திப்பில் மித்ரனுக்கு தலை கால் புரியவில்லை...
அவன் எப்படியாவது அவளை நேரில் சந்திக்க வேண்டும் என ஆயிரம் திட்டங்கள் துட்டினான்...ஆனால் நேத்ரா ஒரே வார்த்தையில் அத்தனையையும் தவிடுபொடியாக உடைத்தெரிந்தாள்...

என்ன வார்த்தையா.... முடியாது என்பது தான்...
அவன் இதுவரை எத்தனையோ முறை கேட்டும் அவள் கொஞ்சமும் அருள் பாலிக்கவில்லை....
அவனும் இம்முறை விடுவதாக எண்ணமில்லை.... நானும் எத்தனை நாள் தான் நல்லவனாகவே இருக்குறது. ஒரு மீட்டிங்கு கூட அலோவ் பன்னமாட்ராளே.....இப்படி பர்மனென்ட்டா ரெஸ்ட்ரிக்ஷன் மோட்லயே போட்டதுக்கு நம்ம ஸ்டைல் ல பனிஷ்மென்ட் குடுத்தே ஆகனுமே..... இப்படி ஏதேதோ.... சமாதானங்கள் சொல்லி அவனை அவனே தேற்றிக் கொண்டான்....

நேத்ராவின் அப்பாவும் மித்ரனின் அப்பாவும் நல்ல நேரம் பார்த்து பரஸ்பரம் ஃபோனில் அனைத்தும் பேசி ஒருவரை ஒருவர் சம்பிரதாயமான அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர் .

நேத்ராவின் தந்தையிடம் மித்ரனின் அப்பா கேட்டார்

சம்பந்தி இவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் எப்படித் தெரியும்....

அது எனக்கும் தெரியாது சம்பந்தி... என் பொண்ண கேட்டா இரகசியம் னு சொல்லிட்டா...

ஓஓ...ஹோ... என் பையன கேட்டா சிரிச்சிட்டு போயிட்டான்.....

அது என்னமோ சின்னப் பசங்க சொல்ல தயங்குராங்க போல விடுங்க ஒரு நல்ல நாளா பார்த்து பொண்ணு பாக்க வாங்க...அப்பறமா நம்ம சொந்த காரங்களெல்லாம் ஒரு முறை இரண்டு வீட்டு ஆளுங்களுமா சேர்ந்து கை நனைப்போம்.. அப்பறம் நிச்சயம்... கல்யாணம் பத்தி பேசி முடிவு பன்னிடலாமே..

சரிங்க சம்பந்தி... நேர்ல வரும்போது நாங்க புள்ளையோட ஜாதகத்தை தர்ரோம்... நீங்களும் பொண்ணு ஜாதகத்த குடுங்க..

தாராளமா வாங்கிக்கோங்க...எங்களுக்கு ஜாதகமோ ஜோசியமோ....இதுல எல்லாம் பெரிசா நம்பிக்கை இல்ல.. நம்ம குழந்தைங்க சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்... எல்லாம் நல்லபடியா நடக்கும் .... சரிதானே..

எனக்கும் ஜாதகம் ஜாதி மதத்துல நம்பிக்கை இல்ல சமாபந்தி...நம்ம மறுமகன் தான் கொஞ்சம் பிடிகுடுக்காம பேசுராரு...

அவருக்கு அவரோட தங்கைய மித்ரனுக்கு பொண்ணு எடுக்கலனு கோவம் அதால கொஞ்சம் இதெல்லாம் ஒரு சாங்கியமா முக்கியத்துவம் குடுத்து கேக்க வேண்டி இருக்கு....மத்தபடி எங்களுக்கும் பசங்க சந்தோஷம் தான் முக்கியம் சம்பந்தி...

சரிங்க சம்பந்தி ஒரு நல்ல நாளா பார்த்து நேர்ல வாங்க.. எப்போ வரீங்கனு முன்னாடியே சொல்லுங்க... கல்யாணம் கூட முன்ன பின்ன வசதிக்கு ஏத்த மாதிரி தேதி வைச்சிக்கலாம்...

மத்த சடங்கு... பார்க்க வரது.. கை நனைக்கிறது.. பூ வைக்கிறதெல்லாம் சட்டுபுட்டுனு முடிச்சி... ஆக வேண்டடியத பார்த்து நாள் உறுதி பன்னிட்டா... எல்லாம் நல்லபடியா முன்னாடியை பார்த்து பார்த்து செய்யலாம்....

அதுவும் சரிதான் சம்பந்தி சும்மாவா சொன்னாங்க வீட்ட கட்டிப்பாரு... கல்யாணத்த பன்னிப்பாருன்னு. .நீங்க சொல்றதும் வாஸ்த்தவம் தான் எல்லாத்தையும் சீக்கிரமே ஆரம்பிக்கலாம்... நாங்களும் இன்னைக்கே எங்க குடும்ப ஜோசியரப் பார்த்து பொண்ணு பார்க்க நல்ல நாளா பார்த்துட்டு உங்களுக்கு சொல்றோம்... எது வசதியோ அப்போ பார்க்க நேர்ல வரோம். . சரிதானே.

ரொம்ப சந்தோஷம்.... சரிங்க நான் வெச்சிட்றேன். . வீட்ல கவந்து பேசி நல்ல முடிவா எடுத்துட்டு சொல்லுங்க. .

நல்லது சம்பந்தி....

இவ்வாறாக இருவீட்டிலும் பேசி அவரவர் தனித்தனியே நாள் குறிக்க நடையை கட்டினர்...
மித்ரனோ நேத்ராவிடம் நேரடியாக கேட்டால் வேலைக்கு ஆகாது... எனவே ஒரு திருட்டு விளையாட்டு விளையாடி அவளை சம்மதிக்க வைக்க திட்டம் தீட்டினான்..
என்னத் திட்டம்..... எதுக்கு திட்டம்....
எல்லாம் ஒரு பாழாப்போன அவுட்டிங் காக தான்....
மித்ரன் நேத்ராவிடம்....
அம்மு..
என்னங்க.
ரொம்ப நாளா மாமாக்கு ஒரு வேண்டுதல் பாக்கி இருக்கு...
என்ன வேண்டுதல்....
நம்ம லவ் சக்சஸ் ஆகிட்டா ரெண்டு பேரும் திருவேற்காடு போய் உன் கையால நெய் விளக்கு போட்றதா வேண்டியிருந்தேன் ...
ஓஓஓ...ஹோ... அதுக்கு என்னங்க கல்யாணம் முடிஞ்சதும் ஒடனே போகலாம்

அது.. இல்ல அம்மு கல்யாணம் முடிஞ்சதும் நாம புருஷன் பொண்டாட்டி டி... நான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே வர்ரதா பிளான் போட்டுட்டேன்.

பிளான் ஆஆஆஆ...

இ..இ..இஹி .. இல்ல அது வந்து... வேண்டிக்கிட்டேனு சொல்றதுக்கு பதிலா... மாத்தி ஒரு புளோவுல பிளான்னு உலரிட்டேன் அம்மு... அவ்ளோதான்.

ஓஓ ....ஹோ... சரி எப்படி போறது அப்பா அளோவ் பன்ன மாட்டாரே...

அடியே மக்கு பொண்டாட்டி... தெரியாம போயிதான்டி விளக்கு போடனும்...

அதுவும் வேண்டுதலா.

பின்ன...பர்மிஷன் கேட்டா அனுப்புவாங்களா...

ஆமால்ல ...

ஆமா...ஆமா...சரி சொல்லு எப்போ வர ..

என்னங்க ஒடனே கேக்குறீங்க.

அப்பறம் அடுத்த வருஷம் போலாமா..

அதுக்குள்ள நமக்கு கல்யாணமே முடிஞ்சிடுங்க.

தெரியிதுல எப்போ வர....

அது நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லவா...

அம்மா தாயே லவ் ஓ.கே சொல்ல டைம் கேட்டா மாதிரி. ... கேக்காத உனக்கு நாளைக்கு வரைக்கும் தான் டைம்... நீ வந்தே ஆகனும்...

ம்ம்ம்ம் ட்ரை பன்றேன்....

நோ. எஸ்கியூஸ்... யூ ஷூட் கம்...அவ்ளோ தான் ...பை..

ஹலோ.... ஹலோ.... மித்து...

என்ன இவன் இவ்ளோ அடம்புடிக்கிறான்..

ஸ்கூல் ல என்ன சொல்லி லீவ் போட்றது..

லீவ் போட்டா சாலரி கட் ஆகுமே வீட்டில கண்டு பிடிச்சிடுவாங்களே...

கண்டிப்பா போகனுமா.. இப்படி எல்லாம் இவர யாரு வேண்டிக்க சொன்னது .. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடியே ..

எதுக்கும் நைட் ஒரு டைம் பேசி பார்ப்போம். ..

நேத்ராவின் வீட்டில்.....

நேத்ரா வீட்டில் நுழைந்தவள் மித்ரனின் வார்த்தைகளே காதை சுற்றி ரீங்கரித்துக் கொண்டிருந்தது ..

மனமோ நிலைக் கொள்ளாமல் தவிக்கத் துடங்கியது....

உள் மனதில் மித்ரனோடு போக ஆசை அலை கனவுக் கரைகளை நுரைக்க நுரைக்க மோதி கரைத்து ஏக்கத்தோடு மூழ்கியது...

மனமோ இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் ... பிறகு எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்றது.

மனசாட்சியோ திருமணத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போகலாம் இப்போது போவது போல ஆகுமா என்று அவளை உசுப்பேற்றியது .

உள்ளுக்குள் அமைதியின்றி பால் பானையாக உள்ளம் பொங்கிக் கொண்டிருந்தது...

அதில் தண்ணீரைத் தெளித்து குளிர்விப்பதைப்போல தட்சிணாமூர்த்தி காலை கணேகனுடன் பேசிய தகவல்களை உணவு அருந்தும்போது சந்தோஷமாக மகளிடம் பகிர்ந்து கொண்டார்.

அவளுக்கு கூட இரண்டு கவலம் சாதம் சாப்பிட்டதைக் கூட உணரமுடியாத உணர்வு... வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர்...
ஒரு ஜீவனைத் தவிர... வேற யாரு எல்லாம் நம்ம அன்புச் செழியன் தான்....

அவனுச காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை... முக்கியமாக தன் அக்காவிற்கு வரப்போகும் காதல் கணவன் மீது அறவே நம்பிக்கை இல்லை...

இந்த பேச்சை சகிக்க முடியாமல் தட்டோடு அடுத்த அறைக்கு இடம் பெயர்ந்தவன் அமைதியாக கல்யாணத்தை தடுக்க ஏதாவது ஓட்டை கிடைக்குமா என காத்திருந்தான்....

நேத்ரா இரவு மீண்டும் மித்ரனுக்கு அழைத்தாள்....

அவள் என்ன காரணம் சொல்லி தடுக்க முயற்சி செய்தாலும் இந்த வாய்பை நழுவ விடக்கூடாது என்பதில் மித்ரன் மிகவும் தெளிவாக இருந்தான்....

அவள் இருவீட்டிலும் பெற்றோர்கள் பேசியதையும் திருமணத்திற்கு நாள் குறிக்கப் போவதையும் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டாள்...

அவனும் அதே மனநிலையில் உரிமையாக அவளை கிண்டலும் கேளியும் செய்து கொண்டிருக்க ...

நேத்ரா அடுத்த கட்டமாக எப்படியாவது நாளைக்கு பிளான் செய்து அவுட்டிங்கை எமோஷ்னலாக பேசி நிருத்த வாயெடுக்கும் நேரம்....

மித்ரன் உஷாராக அவனுடைய ஆட்டத்தை தொடங்கிவிட்டான்..

எப்படியோ அம்மு நான் வேண்டிகிட்ட திருவேர்காடு அம்மன் என் வேண்டுதல நிறை வேத்தி வைச்சிடுச்சி...

கூடிய சீக்கிரம் நமக்கு கல்யாணம் நினைக்கவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு அம்மு.... கண்டிப்பா நாம ஜோடியா போய் நாளைக்கு
நெய் விளக்கு போட்டே ஆகனும் அம்மு....
இல்லனா சாமி குத்தமாகி ஏதாவது கல்யாணத்துல தடங்கள் வந்துடக் கூடாது பாரு அதான்டி பயமா இருக்கு..

நாளைக்கு காலைல ஒரு 8.30க்கு லா அங்க ட்ரைன் ஏறிடு பொண்டாட்டி... அப்போ தான் கோவிலுக்கு சீக்கிரம் போக முடியும் .. நீயும் ஈவ்னிங் கரெக்ட் டைம் கு வீட்டுக்கு போக முடியும் சரியா செல்லம்..

.......................

என்னடி...நானே தனியா பேசகட்ருக்கேன்.... நீ வாயேத் தெரக்காம அமைதியா இருக்க...

ஆ... அது ஒன்னும் இல்லைங்க நீங்க சொல்றத தான் கவனமா கேட்டுகிட்டு இருந்தேன்...

என்ன அம்மு இவ்ளோ தூரம் நான் பேசிட்டு இருக்கேன்..நீ அமைதியா இருக்க... கேட்டா ஏனோ... தானோ...னு பதில் சொல்ற...உனக்கு என்கூட வர விருப்பம் இல்லையா...

இல்லைங்க அப்படி எல்லாம் இல்ல... ஏதோ பயமா மனசு சங்கடமா இருக்கு அதான்..

என்மேல நம்பிக்கை இல்லையா அம்மு....

என்னங்க இப்படி கேக்குறீங்க. .

அப்போ புருஷன் கூட வெளிய வர உனக்கு என்னடி பயம் .. சங்கடம் ..

அது... நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க... இப்போ நம்மல ஜோடியா யாரு பார்த்தாலும் தப்பா தானே நினைப்பாங்க...

இவ்ளோ நாள் சமத்தாதானே இருந்தீங்க இப்போ ஏன்க இவ்ளோ அடம் புடிக்கிறுங்க.

ஓ.கே அம்மு நீ வர வேண்டாம் பை....

ஹலோ... ஹலோ... ஹலோ...

மீண்டும் மித்ரனுக்கு கால் செய்தாள்.... கரென்ட்லி நாட் ரீச்சபில்...
நேத்ராவிற்கு இரவு முழுக்கு தூக்கமே வரவில்லை... மித்ரனின் கோவம் அவளையும் தொற்றிக் கொண்டு அவனுக்காக அவளிடம் பரிந்துப் பேசி வாதாடியது..

இத்தனை நாள் கேக்கலையே இப்போ தானே கேக்குறாரு... அதுவும் பார்க்கு பீச்சுக்கா கூபுட்ராரு கோவில்கு தானே....

அதுவும் நமக்காக .. நம்ம கல்யாணத்துக்காக தானே வேண்டிகிட்டு இருக்காரு...

நாம போகலனா தப்புதானே....அவரோட கோவமும் நியாம் தானே...நாம நாளைக்கு போனாதா என்ன...

அப்பாக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்களே...

தெரிஞ்சா தானே .....நாம எப்பவும் போல ஸ்கூல் டைம்கு கிளம்பி போயிட்டு நேரத்தோட வீட்டுக்கு வந்துடலாம் .. மித்துவும் பாவம் தானே... சாமி விஷயத்துல விளையிடக் கூடாது...

பாவம் மித்ரன்.. கோவமா கட் பன்னிட்டாங்க... காலைல ஃபோன் போட்டு கண்டிப்பா வரேனு சொல்லிடனும் என்று பலவிதமான சமாதானங்களை தனக்குத் தானேக் கூறிக்கொண்டு ஒரு வழியாக உறங்கி விட்டாள்....

அங்கே மித்ரனோ.... சரியாக நேத்ராவின் மனநிலையைக் கணக்கிட்டு அரைமணி நேரம் செல்லை அணைத்துவிட்டு.... மேட்ச் பார்த்தவன் ... அதற்கு பிறகு செல்லை ஆன் செய்து...ஆன்லைனில் அப்போதைய ஒரு திரைப்படத்திற்கு இரண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்துவிட்டு விஷமமாக புன்னகைத்தான்...
நேத்ராவிடம் பொய் சொல்லி வரவைப்பது தவறு தான்... போனாப் போகுது பக்கத்துல எங்கையாவது கோவிலுக்கு போயிட்டு..... எப்படியாவது தியேட்டர் போயே ஆகனும்...

இதுகூட இல்லனா அப்பறம் என்ன தான் லவ் லைஃப் இது... ஒரு திருட்டுத்தனமாவது வேண்டாமா..... இவகிட்ட நேரடியா கேட்டா காரியம் ஆகாது... இப்படி ஏதாவது தகிடுதத்தம் பன்னாதான் உண்டு.... என்று மொபைல் திரையில் இருந்த நேத்ராவிடம் தனியே பேசி ஒரு சமாதான மன்னிப்பை வேண்டிவிட்டு நாளைக்கு போகவேண்டிய படத்திற்கான டிக்கெட்களை கன்பார்ம் செய்துவிட்டு சந்தோஷமாகவே .......தூங்கினான் ...

பார்த்தீங்களா.... பயபுள்ளையோட பிளானை.......


இரவு முழுவதும் ஒருத்தி தூக்கமின்றி புறண்டு பயந்து புலம்பி நடுங்கி சிவந்த கண்களை பிரிக்க பிரயத்தனப்பட்டு விழிக்க....

அங்கே மித்ரன் ஹாயாக புத்துணர்ச்சியோடு கிளம்பினான்... அலுவலகம் செல்லும் மிடுக்கோடு ஐயா காதலியைக் காண கச்சிதமாக கிளம்பிக்கொண்டிருந்தார்....
நேத்ராவிற்கோ ஏதாவது பொய் சொல்லி இன்று விடுப்பு எடுத்து வீட்டிலேயே தங்கிவிடலாம என்று ஆயாசமாக இருந்தது. .

மித்ரன் விட்டாள் தானே... காலை எழுந்தவுடன் எப்படியும் நேத்ரா கால் செய்து ஏதாவது சாக்கு போக்கு சொல்லக் கூடும் எனக் கணித்தவன் மீண்டும் எழுந்தவுடன் முதல் வேளையாக மொபைலை ஆஃப் செய்தான் ...

அவளிடம் கோவமாக இருப்பதாகவே நாடகத்தை பலமாக நடத்தினான்...

மித்ரனுக்கு கால் செய்த நேத்ரா அவனுடைய எண் அனைத்து வைத்திருப்பதைக் கண்டு...☹அவன் கோவம் இன்னும் குறையவில்லையே... இதில் வராமல் பதிலும் சொல்லாமல் ஏமாற்றினால் நிச்சயமாக கோவம் இன்னமும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சினாள்...

அதை நினைத்து நினைத்து மறுகுவதை விட ஒருமுறை அவனுக்காக செல்வதே மேல் என மனதை தைரியப்படுத்திக் கொண்டு கிளம்பினாள்...

அதே ஸ்டேஷனில் அவளுடன் வேலை செய்யும் இன்னொரு ஆசிரியர் பவானியோடு தான் அவள் தினமும் பயணம் செய்வாள்...

அவர் வயதில் மூத்தவர்...அவருக்கும் திருமண வயதில் ஒரு பெண் உண்டு... தன் விஷயம் தெரிந்தால் கட்டாயம் தவறாக எண்ணிவிடுவாரே என பயந்தவள் இரண்டு மனதாக மீண்டும் மித்ரனை அழைத்தாள்...

இம்முறை கால் போனது.. .மித்ரன் அட்டன் செய்து ஹலோ ... என்றான்...

நேத்ரா பாவமாக எனக்கு பயமா இருக்கு மித்து கண்டிப்பா வந்தே ஆகனுமா என்றிட .

இம்முறை மித்ரனுக்கு உண்மையில் கோவம் வந்துவிட்டத போடி நீ வரவே வேண்டாம்... உங்க அப்பாவுக்கே நல்ல பொண்ணா இரு எனக்கு தயவுசெஞ்சி கால் பன்னாத ..பை...

எதிர்பாராமல் வாங்கிய திட்டில் நேத்ராவின் கண்கள் கண்ணீரை சொட்டியது... கண்களை பிறர் பாரா வண்ணம் துடைத்துவிட்டு வந்த வண்டியில் வழக்கமாக ஏறும் பெட்டியை விட்டுவிட்ட வேறு பக்கம் ஏறிக்கொண்டு நின்றவளுக்கு அடுத்த பெட்டியிலேயே ஆப்பு காத்துகொண்டு இருந்தது...

பவானி டீச்சர் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு விடுமுறை சொல்லிவிட்டு வேகமாக வண்டியில் ஏறியவள்... வ.உ.சி.. ஸ்டேஷன் இல் வேறு ஒரு சக ஆசிரியரான மேரி எஸ்தர் கண்ணில் வசமாக சிக்கிக் கொண்டாள்...

எதேச்சையாக பார்த்த மேரியோ.....அவளை வினோதமாக பார்க்க நேத்ரா வேறு வழியின்றி அவளிடம் சரணடைந்தாள்...

எஸ்தர் பிளீஸ் டி பவானி மிஸ்கிட்டயும் மத்த ஸாடாஃப் கிட்டயும் எதையும் சொல்லிடாத டி... பிளீஸ்... டி..

எஸ்தரோ இவளை ஏற இறங்க பார்த்து விஷமமாக புன்னகைத்தாள்...

ஏன்டி இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்துகிட்டு நீ என்னம்மா தில்லாலங்கடி வேலை பன்றே.. நாளைக்கு வருவியா இல்ல அப்படி யே போரியா என்றாள்..

நேத்ராவிற்கு மிகவும் கடுப்பாக இருந்தநு... ச்சே கொல்லிக் கட்டைக்கு பயந்து அடுப்புல விழுந்த கதையா போயிடுச்சே...

டேய் மித்ரா புள்ளப்பூச்சியெல்லா உன்னால என்னைக் கலாய்க்கிது டா என மனதோடு மானசீகமாக அவனை அர்ச்சித்தவள்.. வினோலியாவிடம் ஏதேதோ பேசி பாவமன்னிப்பு போல வேண்டி வேண்டி அவளை சரிகட்டிவிட்டு மித்ரனுக்கு அழைத்தாள்....

இதுவரை நேத்ரா எங்குமே தனியாக பயணம் செய்ததில்லை... அதனால் கஷ்டப்பட்டு மனதின் பயத்தையும் பதட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து கால் செய்துவிட்டு காத்திருந்தாள்...

அவனோ உண்மையிலேயே வந்த கோவத்தில் டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டு கோவமாக மனதில் புலம்பிக் கொண்டிருந்தான்....

நேத்ராவிடமிருந்து தொடர்ந்து கால் வரவும் கோவத்தில் கட் செய்து கொண்டே இருந்தான்....

இவளுக்கு நின்ற அழுகை மீண்டும் விழிகளை மிரட்டி அதட்டி வருவதற்கு வழிதேடி கீழ் இமையினை பிழிந்து இமை இடுக்கில் முண்டியடித்து நின்றது.

இவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை விடுமுறை சொல்லிவிட்டோமே பள்ளிக்கும் செல்ல முடியாது வீட்டிற்கு சென்றால் என்னவென்று காரணம் சொல்வது.... என கண்ணீர் சிந்த மூக்கு விடைக்க தொண்டைக் குழியில் வலியெடுக்க வந்த அழுகையை மென்று விழுங்காதக் குறையாக மனதில் போராடினாள்...

பின் மித்ரனுக்கு மெசேஜ் அனுப்பினாள் நான் சென்ட்ரல் வரப்போகிறேன்...இறங்கி காத்திருக்கவா கிளம்பி வீட்டுக்கு போகவா .. பதில் உடனே வராத பட்சத்தில் இரண்டாவது முடிவையே எடுப்பேன்.... .என அனுப்பினால் காலை கட் செய்தவன் மெசேஜ் ஐ பார்த்ததும் துள்ளி எழுந்தான்...

ஆஃபிசில் ஏதேதோ பொய் சொல்லிவிட்டு வண்டியை ரேசில் ஓட்டும் வேகத்தில் கொண்டு சென்றான்.

அவள் சென்ட்ரல் வருவதற்கு முன்பே அங்கே மித்ரன் நின்றிருந்தான்... என்றால் பாருங்களேன்...

அவள் இறங்க வேண்டிய நேரத்தில் அவனிடமிருந்து கால் வந்தது.. வேகமாக தாயைக் கண்ட பிள்ளைப்போல அனைத்து காதில் வைத்தவளுக்கு அப்போது தான் உயிர் போய் உயிர் வந்தது..

எங்கடி இருக்க உருள...

இறங்க போறேன்....

இத காலைலயை செய்ய என்னவாம்... உன்னால டிக்கெட் அ வேற கேன்சல் பன்னிட்டேன் போடி..

டிக்கெட் ஆ... என்ன டிக்கெட் ..

ஐயோ... தவளை... தவளை... வாயால கேட்டவன்டா நீ....

அ..அது. கோவிலுக்கு ஸ்பெஷல் அர்ச்சனைக்கு பிரண்ட் ஒருத்தர் கிட்ட டிக்கெட் வாங்கி வைக்க சொன்னேன். நீ வராத கோவத்துல கேன்சல் பன்னிட்டேன்..

ஓ.. இப்போ கிடைக்காதா ..

ஏன் கிடைக்காது. . அதெல்லாம் தாராளமா கிடைக்கும்.. நீ வா பார்த்துக்கலாம்...

ம்ம்ம்...

சரி பார்த்து இறங்கு..

ம்ம்ம்...

அவள் இறங்கி வரவும்.... வழிதெரியாமல் முழித்துக்கொண்டு நின்றாள்.

மித்ரன் அவளுக்கு வழி சொல்லி சொல்லி அவள் திணறித் திணறி வரும் அழகை அங்கே ஒரு ஓரமாக நின்று இரசித்துக் கொண்டிருந்தான்...

அவள் கிட்டே வரவும் அவளுக்கு தெரியாமல் கையைப் பிடித்திட பயந்து அடித்து திரும்பியவளுக்கு இதயத் துடிப்பு எகிறியது .

மித்ரனுக்கோ அவளுடைய சுபாவம் சீண்டி விட்டு இரசிக்க ஏதுவாக இருந்தது ..

அவன் கையை எடுக்க முயன்றபடியே நான் திரும்பி போயிடவாங்க.... எனக்கு பயமா இருக்கு பிளீஸ் என கெஞ்சினாள்....

அட. வந்ததும் வழியனுப்பி வைக்கவா பிளான் போட்டு வரவைச்சேன்... வா...வா......வா.
எங்கே...
கோவிலுக்கு தான் அம்மு வா ..
அவன் கூடவே செனான்றாள் ...அங்கிருந்து வேறு நடை மேடையில் ஆவடி வண்டியில் இருவரும் ஏறினார்கள் ...
நேத்ராவிற்கு பயம் பதட்டம் படபடப்பு எல்லாம் வந்து வரிசையாக பயமுறுத்தியது ..
மித்ரனுக்கு புன்னகை கொண்டாட்டம்... வெற்றி என விதவிதமான உணர்வுகள் உற்சாகமாகப் பொங்கி வழிந்தது .

நேத்ரா பத்துமுறையாவது கேட்டிருப்பாள் ... எங்கள் போறோம்... எப்போ வருவோம்... இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..

மித்ரன் விஷமமாக சிரித்தபடி மண்டையை எல்லாத் திசையிலும் குத்துமதிப்பாக ஆட்டி அவளை சீண்டி பயமுறுத்தினான்...

வெற்றிகரமாக இருவரும் ஆவடி இரயில் நிலையத்தில் இறங்கினர்.

மித்ரன் ஏதேதோ ஆசையோடு வந்தான்...ஆனால் அவனுடைய முதவ் ஆசையிலேயே மண் விழப்போவது தெரியாமல் அங்கே இருந்த பைக் ஸ்டாண்டில் இருந்து அவனுடைய ...யமகா வோடு வந்து நின்றான்..

நேத்ராவோ வண்டியையும் அதன் பின்புறத்தையும் பார்த்துவிட்டு திரு திருவென முழித்துக்கொண்டு நின்றாள்..

மித்ரன் கெத்தாக ஏறு பொண்டாட்டி என்று காத்திருந்தான்..

அவள் இன்னமும் முழித்துக்கொண்டு தான் நின்றாள்...

என்னடி...

இதுல எனக்கு ஏறத் தெரியாதுங்க..

ஏய் நான் என்ன உன்ன குதிரை மேலயாடி ஏறச் சொன்னேன் பைக் தானே ஏறு... அம்மு… விளையாடாம ஏறுடி டைம் ஆச்சு...

இல்லைங்க நான் சாரி கட்டி இருக்கேன்... இதுவேற கிரேப் சில்க் சாரி...
அதுக்கு ..
இந்த சீட்டு ரொம்ப ஹைட்டா இருக்குங்க. .
அதுக்கு...
ந... நான் இதுல ஏறமாட்டேன்...
ஏன்டி..
இதுல எனக்கு ட்ராவல் செஞ்சு பழக்கம் இல்ல... அதுவும் ஒன்சைட் சாரியோட என்னால ஏறவே முடியாதுங்க பிளீஸ் விட்ருங்க...

ஏய் விளையாடாதடி... நான் ஸ்பீட் பிரேக் ல கூட சடன் பிரேக் போடாம சேஃபா கூப்டு போறேன்டி பிளீஸ் டி அம்மு ஏறு.

இல்லைங்க என்னால பைக் ல வர முடியாது .. இதுல எனக்கு ஏறத் தெரியாதுங்க பிளீஸ்... என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையேச் சொல்லிக்கொண்டிருந்தாள் .

மித்ரனுக்கு குட்டிச் சுவர் கிடைத்தால் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது..

ஆசை ஆசையாக பேக் சீட் ஹைட்டாக மாடலாக பார்த்து வாங்கிய பைக் மீது கோவமும் ....அதில் ஏறவே மாட்டேன் என்று ஸ்ட்ரைக் செய்யும் காதலியின் மீது விரக்திப் புன்னகையும் வந்தது...

அப்போ எப்படி டி கோவிலுக்கு போறது...
நடந்து போலாங்க... இல்லனா பஸ்ல போலாமா...
மித்ரன் நேத்ராவை கொலை வெறியோடும் கையாலாகாத விரக்தியோடும் ஒரு பார்வை பார்த்தான்...
அவள் மௌனமாக நின்றாள்...
இவளுடன் போராடுவதை விட ஏதாவது செய்து நாம் நம்முடைய பிளானை தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யோசித்தவன்...

அருகே இருந்த...ராக்கி சினிமாவில் ஒரூ மொக்கை படத்திற்கு டிக்கெட் போட்டுவிட்டு..

ஒரு ஜூஸ் ஷாப்பிற்கு நேத்ராவை அழைத்து ச் சென்றான்....

அவள் மெல்ல வாயைத் திறந்தாள்... திருவேற்காடு போகலயாங்க.. .
எதுல...
பஸ்ல போலாங்க.

எப்போ ...நாளைக்கு வீட்டுக்கு போறீங்களா மேடம் ...

நைட் ஆகுமா.

நீ வரேன்.... வர மாட்டேனு முடிவு பன்றதுக்கே மதியம் ஆகிடுச்சி... இதுல கோவில் போயிட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள நைட் ஆகிடும். நேரத்தோட வீட்டுக்கு போகனும்னா பேசாம இரு....இல்ல இப்படியே கோவில் கூப்டு போய் தாலிகட்டிடூவேன்.... என்ன எப்படி வசதி. . போலாமா.


ஆ........ வே. வேணா... வேணா.. .

ம்ம்ம்... அப்போ இப்படியே சமத்தா இரு...
சரி ..

ம்ம்ம்... யாருகிட்ட.. எவ்ளோ விளையாட்டு காட்டின. .. வா... வா... மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.

இருவரும் சரியான நேரத்திற்கு திரையரங்கினுள் நுழைந்தனர்... வெற்றிகரமாக மித்ரனின் ஒரு ஆசையாவது ஆசை நிறைவேறியது...

அவர்களுடைய இருக்கை எண்ணைக் கண்டறிந்து அமர அவசியமே இன்றி திரையரங்கு ஈயாடியது .. ...அத்தனை காலி இருக்கைகள்....

கார்னர் சீட் தேட வேண்டிய அவசியமே இல்லை...

எண்ணி விடும் அளவிற்கு குறைந்த தலைகளே தென்பட்டது ..

நேத்ராவிற்கு பயமும் பதட்டமும் கூடி ஏ.சி அறையினுள் கூட வியர்வை அரும்பியது.

அவளுடைய கைப்பைமயை இருக்கமாக தன்னோடு அனைத்துக் கொண்டு தைரியமாக படத்தில் கண்பதித்தாள்..

மித்ரனும் ஒரு மணி நேரம் சமத்தாகவே அந்த ஆளில்லா திரையரங்கில் கடைமைக்கு ஓடிய அந்த படத்தில் கண்ணாக இருந்தான்...

நேத்ராவின் நடத்தை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது..

அவளுடைய கைப்பையை அனைத்திருந்ததைக் காண இன்னமும் சிரிப்பு வந்துவிட்டது...

அவளுக்கு ஆதரவாக கையைப் பிடிக்க அவள் அஞ்சி வெடுக்கென்று பிடுங்கிவிட்டு நகர்ந்தாள்...

அவனுக்கு கோவம் வந்துவிட்டது ... முகத்தை திருப்பிக் கொண்டு கையை கட்டிக் கொண்டு அமர்ந்துவிட்டான்...

நேத்ராவிற்கு தான் ஏதோ குற்ற உணர்வாக உறுத்தியது... பின் மனதை நிதாமாக வைத்துக்கொண்டு படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் ..

மித்ரனால் தான் அமைதியாக படத்தை பார்க்க முடியவில்லை... அவளுடையக் கன்னம் திரையரங்கு வெளிச்சத்தில் அழகாக மின்னியது...

ஆசையாக முத்தமிட்டால்... அடிப்பாலா... திட்டுவாளா.. .

திட்டினாக் கூட ஓ.கே .. அடிச்சிட்டா... ஓ.மை காட்.... வேற வினையே வேண்டாம்...

அதெல்லாம் இல்ல... என் பொண்டாட்டி என்ன அடிப்பாளா... மாட்டா... இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்தாச்சு இன்னும் ஒரு ரிஸ்க் தானே எடுப்போம்....

ஒரு வழியாக மனப்போராட்டத்தோடு அரைமணி நேரத்தை கடத்தியவன் துணிந்து அவளுடையக் கன்னத்தில் ஒரு குட்டி முத்தத்தை ஒற்றி எடுத்தான்..

இமையம் தொட்டு வந்த சாதனை உணர்வு அவனை சிலிர்க்க வைத்தது...
ஆனால் நேத்ராவிற்கோ....

திடீரென இடது கன்னத்தில் வெதுவேதுப்பான ஈர உதடுகள் ஒற்றி எடுத்த அதிர்வில் பதரி அவனை தடுத்து விலக்கினாள்...

மித்ரன் சிரித்துக் கொண்டிருந்தான். நேத்ராவின் நிலை தான் பரிதிபமாக போனது. பயந்ததைப் போலவே செய்துவிட்டானே என நடுக்கமும் முதல் ஸ்பரிசத்தை கொண்டாட முடியாத கோவமும்.. அவனைத் திட்ட முடியாத தயக்கமும் வெட்கம் கலந்த பயமும் சேர்ந்து உடலை நடுங்க வைத்தது.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கோவத்திலும் ஏமாற்றத்திலும் முகம் வெளிரிப் போய் கண் கலங்கியது.

அழுகையே வரும்போல முகமே மாறிவிட்டது. ... மித்ரன் அவளுடைய மாற்றத்தைக் கண்டு மௌனமாகிவிட்டான் பின் அவளை அதிலிருந்து வெளிக்கொண்டு வர முயன்றான்...

அம்மு...
.......
அம்மு .
.....
இங்கே பரேன்...
திரும்பி பாவமாக பார்த்தாள்.

கன்னம் பன்னு மாதிரி புசு புசுனு இருக்கே உங்க நைனா என்ன பிராண்ட் அரிசி டி வாங்குறாரு... என்று நகைத்தான் ..




___தொடரும்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top