தீராத் தீஞ்சுவையே...28.2

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____28

அன்புச் செழியன் காட்டிய ஆதாரங்கள் யாவும் ஒரு கணம் லலிதாவை ஆட்டிப்படைத்துவிட்டது..

ஆனாலும் கண்ணால் காண்பதும் பொய்...காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய் என லலிதா மனதை சமனிலைப் படுத்திக் கொண்டார்....

நேத்ராவின் மீது அவருக்கு அளவுகடந்த நம்பிக்கை இருந்தது... அன்பு காட்டிய ஆதாரங்கள் யாவும் அதிர்ச்சி அளித்தாலும் அவரால் நேத்ராவை தப்பாக நினைக்க முடியவில்லை....

மகனுடைய கூற்றையும் பொய் என்று புறக்கணித்து விட முடியவில்லை..

நேத்ரா வேலைக்கு செல்வதோடு இன்னமும் படித்துக்கொண்டு தான் இருக்கிறாள்...

மாலையில் இந்தி டியூஷன்... வேறு .. அவள் இரவிலும் பத்து மணிக்கு மேல் விழித்திருப்பது இல்லை...

இதுவரை எந்த கெட்டப் பேரையும் வாங்கிடாதவள்... தரமான தங்கமாகவே வளர்ந்தவள்... அவளுக்கு காதல் இருக்குமா..

பிறகு ஏன் தற்கொலைக்கு முயன்றாள்... அன்று கேட்டதற்கு மேலே படிக்க வேண்டும் திருமணம் பிடிக்கவில்லை என்றாளே...

அதற்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கும் என நான் ஏன் யூகிக்கவில்லை...

இருக்காது... இருக்காது. யாராவது நண்பராகவோ.. தெரிந்தவராகவோ... பள்ளியில் உடன் பணிபுரிபவராகவோக் கூட இருக்கலாம்...

இவன் ஏதோ சின்னப் பையன் ஆதங்கத்தில் ஏதேதோ சொல்கிறான்... அதை கேட்டு அவளை சந்தேகிப்பதோ... சங்கடப்படுத்துவதோ மிகவும் தவறு என்றே எண்ணினாள்..

மாலை நேத்ரா வரட்டும் இனி நாமே நேரடியாக கவனித்து அவளை கண்காணிக்க வேண்டும்.. நேரடி ஆதாரமோ .. ஏதாவது நிரூபணமோ இன்றி.. வயது பெண்ணை குற்றவாளி போல கேள்வி கேட்பது தவறு...

அப்படியே அவள் வேறு ஒருவரை விரும்பினாலும் அதை தவறாக எப்படி கருத முடியும்.. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை எப்படி தடுக்க முடியும்... அவளுக்கு 23 வயது வந்துவிட்டது... இனியும் அவளை திருத்துகிறேன் பேர்வழி எனக் கண்டிக்க நினைத்து அவளை நாமே வேறோரு பெரிய தவறில் தள்ளிவிடக் கூடாது...

காத்திருந்து அவளுடைய மனதை அறிந்து பின் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக இருந்தார்....

அங்கே மித்ரனின் வீட்டில்....நித்யா தேவி ஒரு கதகலியே ஆடிக்கொண்டு இருந்தாள்...

என்ன ம்மா... நீங்க நல்ல வரன் வேர .. நல்ல வசதியான இடம்.. பொண்ணு கிளி மாதிரி அழகு... அதவிட என் வீட்டுகாரருக்கு நெருங்கின சொந்தம் வேற... எனக்கு னு என் மாமியார் வீட்ல ஒரு மதிப்பு இருக்குமா...

இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் நீங்க இன்னும் மித்ரன் கிட்ட பேசாம இருந்தா எப்படி...

இந்த லீவ்லயே நல்லபடியா பேசி தட்ட மாத்தினா தானே அடுத்து கல்யாணம் முடிஞ்சதும் தீபாவளி சீர்... பொங்கல் சீர்... னு வாங்க முடியும்... ஒரு நல்ல மாமியாருக்கு இருக்க வேண்டிய எந்த குவாலிஃபிகேஷனும் உனக்கு இல்லம்மா... நீ சுத்த வேஸ்ட்..

இன்னைக்கு அவன் வரட்டும்.. மயிலே... மயிலேன்னா இறகு போடாது.... நானே பேசி ஒரு முடிவு பன்றேன்...

நித்திய பேசப் பேச வசந்தா என்ன செய்வது என புரியாமல் தவித்தார்..
வாழப்போகிறவனுக்கு ஒரு ஆசை... வாழும் வீட்டில் பெண்ணெடுத்து வளம் வர மகளுக்கு ஆசை யாருக்கு தான் நான் அடிபணிவது என நொந்துகொண்டிருந்தார்....

நித்யா மேலும் மேலும் கொடுத்த அழுத்தத்தில்...வசந்தாவிற்கு பி.பி எகிறியது....

அன்று மகன் ஊரைவிட்டே போய் விடுவேன் என மிரட்டல் மட்டுமே விடவில்லை...ஒரு ட்ரைலரே காட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்...

இவள் ஒரு புறம் தொல்லை செய்கிறாள்..

என்ன இருந்தாலும் வாழப்போவது அவன் தான் அவனுக்கு பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து காலம் முழுக்க விஷப் பரிட்சை செய்து பார்ப்பது தவறு . இனி நல்லதோ கெட்டதோ... அவன் பிடித்த வேதாலத்தை அவனே கட்டிக் கொண்டு திரியட்டும் என முடிவு செய்துவிட்டார்...

காரணம்.... நித்யா எத்தனை எடுத்து சொல்லியும் அந்த வரனை எடுத்துச் சொல்லி அவளையே நியாயப்படுத்த முயன்றாள்... மகனுடைய சந்தோஷத்தை நினைத்துப் பார்த்த வசந்தா ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து நித்யாவை வார்த்தைகளால் வெளுத்தெடுத்தார்....

கோவத்தில் முறுக்கிக் கொண்ட நித்யாவும் அதிகாரத்தை உதரிவிட்டு பெட்டியோடு புறப்பட்டு போனாள்..

நேத்ரா முடிந்தவரை படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தினாள்... மேலே ... மேலே ...தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள முயன்றாள்...

காதலை அளவோடு காதலித்தாள்... மணிக்கணக்கில் பேசவும் வெளியே சுற்றவும் இருவருக்கும் நேரமும் இல்லை...
நேத்ரா அதற்கு சம்மதிக்கவும் இல்லை...

திலகாவின் வழிகாட்டுதலோடு காதலின் கண்ணியம் பிரண்டு..... நேர்மை தவறி நடக்காமல் நிலைநிறுத்தி நகர்ந்தாள் ..

அங்கே நேத்ராவின் வீட்டிலோ.....

அன்புச் செழியன் அன்னையிடம் கூறி எந்த பயனும் அற்றுப் போனதால் தந்தையிடமே நேரடியாக விஷயத்தைக் கொண்டு சென்றான்....
அவரோ... ஒரு விளையாட்டு பேச்சுக்கு கூட நேத்ராவை சந்தேகிக்கவில்லை...அடப் போடா.. நேத்ரா அப்படி இருக்க வாய்ப்பில்லை... அவளுக்கு புத்தகத்தையும் வீட்டையும் விட்டால் ஒன்றும் தெரியாது என சத்தியம் செய்யாத குறையாக ஆசை மகளுக்கு ஆதரவு அளித்தார்....

அன்பு விடுவதாக இல்லை. அப்படியானால் நேத்ரா யாரையவது காதலித்திருந்தால்... சரி வேண்டாம் காதலித்தால்.....??????காதலித்துக் கொண்டு இருந்தால்....????
டேய் என்ன பாராத்தா உனக்கு சினிமாவுல வர வில்லன் மாதிரி இருக்கா.

இல்லை... ஏன்..
பின்ன என்னடா... நான் காதலுக்கு எதிரிலா ஒன்னும் இல்லடா... அவளுக்கு விருப்பம் இல்லாம யாரையோ வலுக்கட்டாயமா கல்யாணம் பன்னிட்டா மட்டும் அவ சந்தோஷமா இருப்பாளா....
அப்படியே லவ் பன்னா இப்போ என்னடா. நல்லவனா இருந்தா அவ ஆசைய நிறைவேத்தி வைக்கலாம். தப்பானவனா இருந்தா அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைச்சு மனச மாத்திக்க டைம் கொடுக்கலாம்...
ஆனா கட்டாயப்படுத்தி அவளை கஷ்டபடுத்தி பாக்க முடியாதுடா...
என்னப்பா நீங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசுறீங்க .... அக்கா அப்படி ஒரு தப்பு பன்னா... நாலு சாத்து சாத்தி அவள திருத்தி அட்வைஸ் பன்னி வேற நல்ல இடமா பார்த்து கட்டி வைக்காம நீங்க தான் சினிமாத் தனமா பேசுறீங்கப்பா…
உங்களுக்கு தான் மனசுல மார்டன் ஃபாதர் னு நினைப்பு போல...
டேய் அன்பு. ... இப்போ நீதான்டா வில்லன் மாதிரி பேசுர... எனக்கு நீ வேற... நேத்ரா வேர இல்லடா.... ரெண்டு பேருமே ரெண்டு கண் மாதிரி டா...
இதே நீ லவ் பன்னாலும் அப்பா இதேதான் செய்வேன்..உனக்கு லவ் வந்தா நான் அத எதிர்த்தா உனக்கு பிடிக்குமா... உனக்கு வந்தா இரத்தம்.....அவளுக்கு வந்தா தக்காளி சட்னியாடா..

அப்பா நீ வேஸ்ட்... அம்மா தான் சாம்பிராணி மாதிரி பொகையராங்களேனு உன்கிட்ட வந்தா ... நீ வாழ மட்டையா இருக்கியே..... ச்சா.. நல்ல குடும்பம்.... நல்ல அம்மா... நல்ல அப்பா.... எனக்கு னு இந்த மாதிரி தனியா டிசன் பன்னியா கடவுளே..
இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் நட்டு கழண்டு போச்சு போல.. ச்சே...
டேய் அன்பு. .
என்னப்பா....
என்ன தான் எண்ணை தேச்சிட்டு உருண்டாலும் ஒட்ர மண்ணு தான்டா ஒட்டும்... கவலப்படாம போ...
ப்பா. ...... நான் சொன்ன மேட்டருக்கும் இப்போ நீ சொல்ற பன்ச்க்கும் சத்தியமா சம்பந்தமே இல்ல.....ப்பா.... பிளீஸ்..... டார்ச்சர் பன்னாம போங்க..

வேணா... பேசாம போயிடுங்க... கடுப்ப கெளப்பாதீங்கப்பா…
விட்ரா... விட்ரா... அரசியல்ல இதெல்லாம் சாதாரண விஷயம் டா...
ஐயோ... இராமா இந்த கொசுத் தோல்ல தாங்க முடியலையை..........
இப்படியாக மித்ரனுக்கும்... நேத்ராவுக்கும் தெரியாமலே இரு வீட்டிலும் ஆல்ரெடி கிரீன் சிக்னல் காத்திருக்க..
இவர்கள் எப்படி வீட்டில் சொல்லி எல்லோரைன் சம்மதிக்க வைத்து .....கல்யாணம் கலாட்டா செய்வது ...என்று கடலையப் போட சில மாதங்கள் உருண்டோடியது...

ஒரு நாள்...

நேத்ரா மாலை வகுப்பு விட்டு வரும்போது மித்ரனிடம் பேசிவிட்டு இரயில் ஏறி இறங்கி வீட்டிற்கு பொடி நடையாக கிளம்பினாள்...
அவளுடைய மொபைல் கைப்பையிலிருந்து கைக்குள் வருவதற்கு ஆதரவாக ஒலியும் ஒளியும் நடத்திக் கொண்டிருந்தது.....
மித்ரன் தான் கால் செய்கிறானோ என நினைத்து பார்த்தவள் தெரியாத எண்ணாக இருக்கவும் கட் செய்துவிட்டு நடந்தாள்...
மீண்டும்... மீண்டும்... மொபைல் சிணுங்கவே யாராவது பள்ளி மாணவர்களின் பெற்றௌராக இருக்கும் என நினைத்து அட்டன் செய்தவளுக்கு ஹலோ சொன்ன அடுத்த நொடியே சப்த நாடியும் ஒடுங்கியது..
அந்த காலை கட் செய்வதற்குள் அவளுக்கு நாக்கு வரண்டு மேலன்னத்தோடு ஒட்டிக்கொண்டு வர மறுத்தது..
இதயம் பத்தைய வேகத்தில் படபடப்பை ஏற்படுத்தி வியர்த்து வழிந்தது..
அப்பட்டமான அதிர்ச்சி முகத்திலும் குரலிலும் கூத்தாடியது...
அவளுடைய மொத்த வாழ்வும் தட்டாமலையாக சுழற்றி இறக்கிய உணர்வோடு காலை கட் செய்தாள்...
பேயறைந்த உணர்வோடு தான் வீடு வந்தே சேர்ந்தவள்... வேக வேகமாக மிதரனின் எண்ணை தட்டிவிட்டு படபடப்போடு அவன் குரலுக்கு காத்திருந்தாள் .....

யாரு ....ஃபோன் பன்னிருப்பாங்க...அப்படி பேயறைஞ்ச மாதிரி அதிர்ச்சி ஆக... என்ன சொல்லிட்டு கட்பன்னாங்க.....
நல்லாத்தானே... போய்கிட்டு இருந்துச்சி.... ஏன்.... ஏன்.... ஏன்டா....

___தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top