தானா வந்த சந்தனமே -3

#1
அத்தியாயம்-3


கேசவன் கண்ணில் படாமல், இரண்டு நாட்களாய் தப்பித்து வருகிறாள் கீர்த்தி.மீனாட்சியின் திட்டுகளை, பரிசுகள் போல வாங்கி கிடப்பில் போட்டு விட்டாள். இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுவிட்டாள். கேசவன் அழைக்கும் போதெல்லாம்,தூங்குகிறாள்,குளிக்கிறாள் என்று காரணம் கூறி தப்பிக்க வைத்தார் மீனாட்சி.


காலையில் ஒன்பது மணிக்கு கடை திறந்தால், கடை அடைத்து, கணக்குகள் சரி பார்த்து, அவர் வீடு வர பத்து, பதினோரு மணி ஆகி விடும்.அதனால், சுலபமாக அவர் திட்டுக்களில் இருந்து தப்பித்து கொண்டிருந்தாள் கீர்த்தி.


அவர்கள் சென்றதும், ஆர்தியிடம் புலம்பி தள்ளி விட்டாள் கீர்த்தி.


"உண்மையா நீ இந்த பம்கின் பேமிலிக்கு தான் போகனுமா??அது பேசுன பேச்சை பார்த்தியா??அது என்னமோ ,அம்பானி பரம்பரை மாதிரியும்,நாமெல்லாம் platform மாதிரியும் பேசுது.அந்த மூத்த மருமக,அது ஒரு அப்பாடக்கரு.காத்து வரலியாம். நம்ம வீட்டு முத்தத்துல(முற்றம்)எப்போவும் எப்படி காத்து வரும்.பிள்ளைங்க ரெண்டு பேரும், அம்மா சொல்ல தட்டமாட்டாங்க போல."


"இப்போ உனக்கு என்னடி பிரச்சனை??நான் தானே கல்யாணம் பண்ணிக்க போறேன்."


"அங்க போனா, நீயும் அந்த வெள்ளை பூசணி சொல்லுறது கேட்டு தலை ஆட்டி, ஆட்டி கழுத்து வலி வர போகுது."


"எனக்கு தானே,வந்தா வரட்டும் விடு."


"அந்த பெரிய மருமக உன்னை மதிக்கவே மதிக்காது. அது ஒரு billgates பரம்பரையாம். அதோட compare பண்ணி, உன்னை எப்போவும் அந்த பூசணி மட்டம் தட்ட போகுது."


"அது என் பிரச்சனை.நீ கவலை படாத."


"இம்புட்டு சொல்லுறேன்.உனக்கு புரியலியா??"


"ச்சு…இப்போ என்னடி உன் பிரச்சனை.நான் என்ன சொன்னாலும், அப்பா முடிவு தான் கடைசி.உனக்கு நம்ம வீட்டை பத்தி தெரியாதா??எதுக்கு இப்போ நொய், நொய்ங்குற."


"தெரிஞ்சு போச்சு டி, எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.உனக்கு அந்த வெள்ளை காக்காயை புடிச்சுருச்சு ,அதான் இப்படி,அந்த பூசணி,பெருச்சாளி,ஜிங்க் ச்சா குடும்பத்துல ஐக்கியமாக முடிவு பண்ணிட்ட."


தந்தையின் முன்னிலையில் மட்டுமே, ஆர்தியை அக்கா என்று கூப்பிடுவாள் கீர்த்தி.மத்த நேரம் வாடி,போடி தான். மீனாட்சி எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்டாள்.


"ஆமா அவரை பிடிச்சிருக்கு,இப்போ அதுக்கு என்னங்குற??"


"அந்த பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா??"


"ஆமா….பேசாம படுடி. அவங்க போனதுல இருந்து இம்சை பண்ணிக்கிட்டு."
என்று கூறிவிட்டு விளக்கணைத்து படுத்துவிட்டாள் ஆர்த்தி.கீர்த்தி தான், பல விஷயத்தை போட்டு குழப்பிக்கொண்டு, தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.


மறுநாள் விடுமுறை தினம் என்பதால்,மெதுவாக எழுந்து, தன் துணிகளுக்கு இஸ்திரி போட்டு கொண்டிருந்தாள் ஆர்த்தி.


படுக்கையை விட்டு எழ மனமில்லாமல், அரை தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்தாள் கீர்த்தி.


அப்பொழுது மாடி ஏறி வந்த மீனாட்சி,


"அரூ மா.மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா??நேத்தே கேட்கணும்னு நெனச்சேன்.நேத்து முழுக்க ,உன் அப்பா முகமே சரி இல்ல.அதான், தனியா பேச முடியலை.இந்த சம்பந்தம் ஒத்து வருமா, தெரியலை.அந்த அம்மா பேசுனதை நெனச்சா, படபடன்னு இருக்கு.உங்க அப்பா என்னடான்னா, இந்த சமந்தத்தை முடிச்சே தீருவேன்ணு ஒத்தைக்காலுல நிக்குறார். இது எங்க போய் முடிய போகுதோ."


"பணத்துக்கு என்னமா பண்ண போறீங்க??.அவ்ளோ கொடுத்து, இந்த இடம் முடிச்சே ஆகணுமா மா??.நமக்கு ஏத்த இடம் பார்ப்போம் மா."


"இதை யாரு, உங்க அப்பா கிட்ட சொல்லுறது.அந்தம்மா வேற, நாமல்லாம் ரெம்ப தகுதி குறைவு மாதிரி, பேசிட்டு போய்ட்டாங்க.உடனே இவர், இந்த இடத்தை முடிச்சு, நம்மளை நிரூபிக்கணும்னு, எந்த இடத்தை விக்கலாம், எதை அடமானம் வைக்கலாம்னு, யோசிச்சுட்டு இருக்காரு.ஹ்ம்ம்…"

"அதெல்லாம் விடு.உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா??அதை சொல்லு"


"அவளுக்கு அந்த பெட்ராமாக்ஸ் லைட் தான் வேணுமாம்."
போர்வைக்குள் இருந்து குரல் கொடுத்தாள் கீர்த்தி."ஏண்டி கழுதை, தூங்குற மாதிரி படுத்துட்டு, நாங்க பேசுரதை கேட்டுட்டு இருக்கியா??திருட்டு கழுதை."


"நான் தூங்குறேன்னு சொன்னனா??நீயா முடிவு பண்ணிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை பேபி மா."


"உங்கிட்ட நேத்தே என்னடி சொன்னேன்??."


"ஏகப்பட்டது சொன்ன..எதை கேக்குற??"


"ஒழுங்கா என்னை அம்மான்னு கூப்பிட சொன்னேன்ல."


"ட்ரை பண்ணுறேன் பேபி மா."


"உன்னை...."


என்று அவர் அடிக்க கை ஓங்கியதும் சிட்டாய் பறந்து, குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் திரும்பி வருகையில் மீனாட்சியும்,ஆர்த்தியும் மாப்பிள்ளை குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்."மாப்பிள்ளையோட அப்பாக்கு ரெண்டு மனைவியாம் ,மூத்தவங்க உயிரோட இல்லையாம்.இவங்க ரெண்டாவது சம்சாரம்.அந்த இன்னொரு பையன், அந்த மூத்த தாரத்தோட புள்ளையாம்."


"வெயிட்,வெயிட்…"
என்று குறுக்கிட்டாள் கீர்த்தி."என்னடி…??"


"அப்போ அந்த பையன், மாப்பிள்ளைக்கு தம்பி இல்லியா??அண்ணனா??"


"தம்பி தாண்டி."


"குழப்புற மம்மி,லாஜிக் இடிக்குதே. மூத்த மனைவி பிள்ளை எப்படி தம்பி ஆனாரு??"


"ஹ்ம்ம்…இதெல்லாம் வக்கனையா கேளு.இந்த மாதிரி படிப்புல கேள்வி கேட்ருந்தா.உருப்பற்றுக்கலாம்."


"டாபிக் மாத்தாதா.விஷயத்துக்கு வா."


அவளை முறைத்து விட்டு,
"அவங்களுக்கு ரெம்ப நாள் குழந்தை இல்லைன்னு, இவங்கள ரெண்டாவது தாரமா செஞ்சாங்களாம். இவங்களுக்கு ரெண்டு பிள்ளை பிறந்ததுக்கு அப்புறம், அவங்களுக்கு பிள்ளை பிறந்துச்சாம் ,பிறந்ததும் கொஞ்ச நாள்ல அவங்க போய்ட்டாங்களாம்.""என்ன ஒரு அநியாயம்.மூத்த மனைவி இருக்கும் போதே இன்னொரு கல்யாணம்.அதுக்கப்புறமும் குடும்பம் நடத்தி, அவங்களுக்கு ஒரு பிள்ளை.உன் மாமனார் ரெம்ப மோசம்.இந்த குடும்பம் உனக்கு வேணுமா யோசிச்சிக்கோ."


"பெரிய மனுஷி மாதிரி பேசாத.உன் வேலையை பாருடி.இதுக்கு தான் உன்கிட்ட இதுவரை, ஏதும் சொல்லல.உன் அப்பா காதுல இதெல்லாம் விழுந்துச்சு ,தோலை உரிச்சுப்புடுவார்.வாயை மூடிட்டு பேசாம இரு."


அவர்களை முறைத்து விட்டு ,முணுமுணு என்று இவர்களை திட்டி கொண்டிருந்தாள் கீர்த்தி.
அவள் முணுமுணுப்பு காதில் விழவில்லை என்றாலும் அவள் திட்டுகிறாள் என்று புரிந்து,


"உன் அப்பா உன்னை பார்க்கணும்னு சொன்னார்.வர்ரியா??"என்றார் மீனாட்சி.

இழுத்து பிடித்த புன்னகையை முகத்தில் படர விட்டு,


"ஏன்,ஏன்மா மீனு??நாமென்ன அப்படியா பழகி இருக்கோம்…??"


"அடி கழுதை, பேர் சொல்லி கூப்புடுற.கல்யாணம் முடியுற வரை, வாய் அடங்கி இரு.அந்த மனுஷன் குணம்தெரியுமில்ல??"என்று கூறிவிட்டு கீழே சென்றுவிட்டார்.


ஆர்த்தி தான் விட்ட வேலையை தொடர்ந்தாள். கீர்த்தி யோசித்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது ,அவளுக்கு அருகில் இருந்த ஆர்தியின் அலைபேசி இசைத்தது. யாரோ அழைப்பதாக கூறியது.ஆர்தியிடம் மட்டுமே அலைபேசி உள்ளது.கேசவனிடம் ஒன்று.வீட்டுக்கு தொலைபேசி ஒன்று பொதுவாய் உள்ளது.ஆர்த்தி வேலைக்கு செல்ல ஆரம்பித்த உடன் தான், இந்த அலைபேசி கூட அனுமதிக்கபட்டது.


அதில் பெயர் இல்லாமல் எண் மட்டும் வந்தது.


"ஏண்டி அரூ, உன் பிரெண்ட்டுக்கு எல்லாம் நம்ம ஹிட்லர் பத்தி தெரியும்.வீட்டுல இருக்கும் போது ஒரு பயபுள்ளையும் கூப்பிடாது. பேரோட call வராதே அரிது.இதுல பேர் இல்லாம யாருடி?? கம்பெனி கால் ஓ…??அவங்க கூட கேஸு பத்தி தெரிஞ்சா பண்ண மாட்டாங்க."


என்று மொபைலை கையில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி பண்ணி கொண்டிருந்தாள்,கீர்த்தி.


"இவ்ளோ ஆராய்ச்சி பண்ணுறதுக்கு எடுத்து பேசலாம்ல."


"அதுவும் கரெக்ட் தான்."


என்று மொபைலை on செய்து காதில் வைத்தாள். அந்த பக்கமிருந்து முதலில் ஒரு சத்தமும் வரவில்லை,பின் மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டது.இதற்குள் கீர்த்தி இருபது, முப்பது ஹலோ சொல்லி விட்டாள்.


"யாருடி இது??கூறுகெட்டவனா இருப்பான் போல.போன் பண்ணிட்டு பேச மாட்டேங்குறான்."
போன் on ல் இருக்கையிலேயே தன் கருத்தை தெரிவித்தாள் கீர்த்தி.சிறிது தயக்கத்திற்கு பின்,ஒரு ஹலோ கேட்டது.ஒரு ஆண் குரல்.


"ஹ்ம்ம்..ஹலோ…யாருங்க??கால் பண்ணா பேசமாட்டீங்களா??"


"ஹலோ,ஹலோ,கொஞ்சம் பொறுமைங்க.நான் ஆரவ்.ஆர்த்தி தானே பேசுறது.??"


"எந்த ஆரவ்??…"


என்று கேள்வி கேட்டுவிட்டு யோசித்தவளுக்கு மண்டையில் பல்பு எரிந்தது.


'அட வெள்ளை காக்காய்..'


அதற்குள் அந்த பக்கம்,
"என்னங்க அதுக்குள்ள மறந்துட்டீங்க??"
குரலில் டன்,டன்னாக சோகம் வழிந்தது."சேச்சே… உங்களை மறக்க முடியுமா அத்தான்…"


"அத்தானா…??"


"ஆமா..எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறீங்க.அப்போ அத்தான் தானே."


இங்கே இவனுக்கு முகமெல்லாம் வேர்த்தது.
' நல்ல வேலை ,எக்குத்தப்பா ஏதும் பேசல'.


பேசி இருந்தா வச்சுசெஞ்சுருப்பா கீர்த்தி அது வேற கதை.

"நீங்களா??உங்க அக்கா number இல்லியா இது??"


"அக்கா number தான் குரல் மட்டும் என்னுது.சரி இருங்க ,அக்கா கிட்ட கொடுக்குறேன்."


இது வரை இவர்கள் பேசுவதை கவனித்த ஆர்த்தி,


'இவருக்கு எப்படி என் நம்பர் கிடைச்சுது'
என்று யோசித்து கொண்டிருந்தாள்.இப்பொழுது இவள் அலைபேசியை நீட்டியதும். சைகை பாஷையில் வாங்க மறுத்தாள். கட்டாயப்படுத்தி அவள் கையில் திணித்து விட்டு, அருகில் நின்று கொண்டாள் கீர்த்தி.இவள் மெதுவாக,
"ஹலோ…"
என்றதும்.


"ஹலோ..நல்லா இருக்கீங்களா??நம்பர் கொடுத்துட்டு, உங்க தங்கச்சியை எடுக்க விட்டுட்டீங்களே.நல்ல வேலை அவங்க சொல்லிட்டாங்க."
என்று இன்னும் கொஞ்ச நேரம் கடலை வறுத்த ஆரவ்.."சரிங்க வேலை நேரம், அம்மா வந்துடுவாங்க, வச்சுடுறேன்" என்று வைத்து விட்டான்.


அவன் பேசியதெற்கெல்லாம் இவள்,ஹ்ம்ம்..ஆமா,இல்லை ,இப்படி ஒரு வார்த்தையில் தான் பதில் அளித்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.அவன் கால் cut பண்ணியதும்,திரும்பி கீர்த்தியை முறைத்து,


"யாரு டி?? இவருக்கு நம்பர் கொடுத்தது."

"தெரியலையே அரூ, ஒரு வேளை கேஸு கொடுத்துருக்குமோ??.இல்ல உன் வெள்ளை காக்காய் நீ வேலை பார்க்குற இடத்துல வாங்கி இருக்குமோ.??"

அப்பாவியாய் கண்ணை சிமிட்டி சொன்னாள்.

"பொய் சொல்லாத, புளுகு மூட்டை, நீ அவசரமா மாடிக்கு வரும்போதே, சந்தேகம் தான்.ஒழுங்கா சொல்லு.நீ தானே கொடுத்த??"

"ஆமா அதுகென்ன இப்போ??அந்த பூசணி உங்களை பேசவிடலை.இந்த காக்காய் சரியாய் பார்க்காம திணருச்சு. அதான் பேசட்டும்னு கொடுத்தேன்.பரவால்ல வெள்ளை காக்காய் அவ்ளோ மோசமில்ல.அம்மாக்கு தெரியமையாவது பேசுதே."

என்று கூறி கண்ணடித்தவளை முறைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை ஆர்திக்கு.
 
#8
அதானே பார்த்தேன்
என்னடா தான் பெற்ற மூன்றாவது பிள்ளையை தறுதலைன்னு அகிலா சொல்றாளேன்னு?
சந்தனம் மூத்தாளின் மகனா?
சந்தனத்தின் அப்பனுக்கு அறிவே
இல்லை
சேண்டல் சந்தனத்தின் பெயர்
என்னவோ?
நல்ல பெண்ணான கீர்த்திக்கும் சந்தனத்துக்கும் எப்போ மீட்டிங்?
எப்போ கல்யாணம்?
சேண்டல் சந்தனம் கீர்த்தியைக் கல்யாணம் செய்ய அகிலா ஒப்புக்கொள்வாளா?
இல்லை பொறாமையால் பொங்கல் பொங்குவாளா?
அடுத்த லவ்லி அப்டேட் இன்று
தருவீர்களா, நிலா டியர்?
@Nilasubramanian டியர்
 
Last edited:

Advertisement

Sponsored