தானா வந்த சந்தனமே-29

#1
அத்தியாயம்-29

மறுநாள், கம்பனிக்கு கிளம்பி கொண்டிருந்தான்,பார்த்தி.
சமையல் அறையில், பாத்திரங்களின் ஒலி, பயங்கரமாய் கேட்டது..

எதுவும், விழுந்து உருண்டு விட்டதோ?? என, வேகமாய் சென்று, பார்த்தான்..
கீர்த்தி தான், அடுப்பில் இருக்கும் வானெலியோடு,கரண்டி வைத்து, போர் புரிந்து கொண்டிருந்தாள்.

"என்னாச்சு பொம்மு..??"

"இந்த கரண்டி, எடுக்க வரல மாமா..மாட்டிகிச்சு உள்ள..அப்போல இருந்து, ட்ரை பண்ணுறேன்.."

'என்னது எடுக்க வரலையா..??அப்படி என்ன செய்யுறா..??'

அருகே சென்று, எட்டி பார்த்தான்..ஏதோ ஒரு வஸ்து ,டிஜிட்டல் கலரில், உள்ளே இருந்தது..

"என்ன பொம்மு..பசை காச்சுரியா..??எதுக்கு..??"

அவனை முறைத்த கீர்த்தி,
"மாமா, இது பசை இல்லை.. உப்புமா..ரவைல கொஞ்சம், தண்ணி கூடிடுச்சு..அதான், கொஞ்சம் குலைஞ்சு போச்சு.."

'என்னாது.. உப்புமா வா இது..??பாத்திரத்தை விட்டு, கரண்டியே, வெளிய வரலியே,இதை சாப்பிட்டா, என் நிலை..'

இன்னும் அடுப்போடு, போராடி கொண்டு தான் இருந்தாள், கீர்த்தி..

"இந்த சினிமா போஸ்டர் எல்லாம் ஒட்ட, இப்படி தான், பசை காச்சுவாங்க பொம்மு..இதுக்கு முன்ன, அதுக்கு காச்சி கொடுத்துருக்கியா??செம்மையா காச்சுர..கை வசம், ஒரு தொழில் இருக்குன்னு சொல்லு.."

அவனை கோபமாய் பார்த்து,
"என்ன கிண்டலா..??"

" ச்சே ச்சே..பொம்மு..உனக்கு சமைக்க தெரியுமா??"

"என்ன, அப்படி கேட்டுட்டீங்க..??பிரமாதமா, விருந்தே செய்வேன்..என் பாட்டிக்கு சாமி கும்பிட்டப்போ, நான் தான் வடை, பாயசம் எல்லாம் செஞ்சேன்..

ரெம்ப நல்லா இருக்குன்னு சொல்லி,என் அம்மா, அதை முழுசும், ஒரு சாமியார் வந்தார், அவர்க்கு கொடுத்துட்டாங்க..எனக்கு கூட, டேஸ்ட் பார்க்க தரல..அன்னைக்கு, தானம் குடுத்தா நல்லதுன்னு, முழுசும் கொடுத்துட்டாங்க.."

"ஓ..அந்த சாமியாரை, அப்புறம்..பார்த்தியா..உங்க தெருல..??"

"இல்லியே மாமா..ஏன்..??"

"உயிரோட இருந்தா, வந்திருக்க மாட்டாரா..??"

"மாமா…"
பல்லைக் கடித்தாள்.

"சும்மா..காமெடிக்கு சொன்னேன் டா.."

'உன் அம்மா, முழுசா தூக்கி கொடுக்கையிலேயே தெரிலியா, அது, என்ன லட்சணத்துல இருந்துருக்கும்னு..

மாமியார், செம்ம உஷார் போல..சாமியார்களை ஒழிக்க, இப்படி ஒரு வழி இருக்கா, இது முன்னவே தெரிஞ்சுருந்தா, அம்புட்டு போலி சாமியாரையும், போட்டு தள்ளி இருக்கலாம்..இப்படி மாட்டிடியே பார்த்தி..இன்னிக்கு..பேதியா, வாந்தியா தெரில..'

ஒரு வழியாய், கரண்டியை வெளியே எடுத்த கீர்த்தி,
"சாப்பிட வாங்க மாமா.."

'ஆத்தி.. விட மாட்டா போலியே..'

"ஏன்டா..பொம்மு..அதுக்கப்புறம், உன்னை சமைக்க சொன்னாங்களா, உங்க அம்மா..??"

"இல்ல..மாமா..அதுக்கப்புறம், எப்போ கிச்சேன் போனாலும்..போய் படின்னு சொல்லி, அனுப்பிடுவாங்க..ஆனா.. நான் நெறைய, யூ டியூப் பார்த்து கத்துக்கிட்டேன் மாமா..தினமும் ஒன்னு ஒன்னா, செஞ்சு தரேன்.."

"அதெல்லாம் வேண்டாம்.."
ஒரு வேகத்தில் சொல்லி விட்டான், பார்த்தி..

"ஏன் மாமா??.."

"நீ ஏன்டா சிரம படுற..??அதுக்கு தான்.."

"இதுல என்ன மாமா சிரமம்.??.என் மாமாகாக..நான், ஆசை ஆசையா, செஞ்சு தர போறேன்.."

'இதை தான் புத்தர், ஆசையே துன்பத்திற்கு காரணமுன்னு, சொன்னாரா..??'

"எனக்கும் வீட்டுல, பொழுது போகணுமுள்ள மாமா.."

'உன் என்டர்டைன்மெண்ட்க்கு, நான் தான் கிடைச்சனா..??'

"என்ன மாமா,எதுவும் பேச மாட்டேங்குறீங்க.??."

"நீ ,ஒவ்வொரு முறையும் பேசும் போதும்,மாமா வாயடைச்சு போய்டுறேன் டா.. உன் பேச்சுல.."

"மாமா..??"
அவனை சந்தேகமாய் பார்த்தாள்..

"பிலீவ் மீ பேபி மா.."

'எப்படில்லாம், சமாளிக்க வேண்டி இருக்கு..'

அதன் பிறகு, அந்த கோந்தை,இல்லை இல்லை, உப்புமாவை சாப்பிட்டு விட்டு, கிளம்பினான் பார்த்தி..

"மாமா இந்தாங்க.."

கையில் லஞ்ச் பேக்குடன், வந்து நின்றாள் கீர்த்தி..

'இதுல என்ன, வெடிகுண்டு வச்சுருக்காளோ தெரிலியே..??'

"பிடிங்க மாமா..உங்களுக்காக ஸ்பெஷல் அஹ், சீக்கிரமே எழுந்து செஞ்சேன், தெரியுமா??"

"உனக்கேன் மா..இந்த வேண்டாத வேலை.."

"என்ன??"

"இல்ல..இவ்ளோ கஷ்டப்பட்டு,காலையில சீக்கிரம் எழுந்து செய்யனுமா??நான் கான்டின்ல சாப்டுக்குவேன்ல.."

"வெளி சாப்பாடு எல்லாம் சாப்பிட்டா, உடம்பு கெட்டுப் போய்டும் மாமா.."

'உன் சாப்பாட்டை விடவா, மோசமா இருக்க போகுது..??இதெல்லாம் இவளுக்கே, அநியாயமா படலியா?? ஆண்டவா..'

"சரி பொம்மு, கிளம்புறேன்.."

வெடிகுண்டை வாங்கிக் கொண்டு, கிளம்பினான்.

கம்பெனிக்கு, இவன் சென்ற சிறிது நேரத்தில், இவனை பார்க்க, ஆகாஷ் வந்தான்.

"என்ன பார்த்தி, செட்டில் ஆகி ஆச்சா..??எல்லாம் கம்பர்ட்டபிலா இருக்கா??எதுவும் வேணுமுன்னா சொல்லு,செஞ்சு தர சொல்லுறேன்.."

"எல்லாம் ஓகே டா.. ஒன்னும் பிரச்சனை இல்ல..சரி சொல்லு..இங்க என்ன பிரச்சனை..??"

ஒரு பெருமூச்சு விட்ட ஆகாஷ்..

"இப்போ, ஒரு வருசமா தான், இந்த பிரச்சனை..நம்ம கார்மெண்ட்ஸ் துணிகள், குவாலிட்டி சரி இல்லைன்னு, ஏகப்பட்ட பிரச்சனை..நெறைய இடத்துல இருந்து.

பாதி பேர், திருப்பி அனுப்பிச்சுட்டு, பேமெண்ட் ரிட்டன் கேட்டாங்க..நெறைய பேர், ஆர்டர் கான்செல் பண்ணிட்டு போய்ட்டாங்க..
பெரிய,பெரிய ஆர்டர்ஸ் எல்லாம், இதுனால போச்சு..

தினமும், சரக்கு சரி இல்லைன்னு, ஒரே கம்பிளைன்ட்..பதில் சொல்லி முடியல..சரின்னு, நானே, நாம மெட்டிரியல் வாங்குற இடத்துக்கு, நேரடியா போய் செக் பண்ணி, வாங்கி கொடுத்தும், திரும்ப அதே பிரச்சனை.. என்ன பண்ணனே தெரில.."

"அப்போ பிரச்சனை, இங்க உள்ளவங்களால தான்..இங்க தான் கருப்பு ஆடோ, ஆட்டுக் கூட்டமோ இருக்கு.."

"சட்டுன்னு, அப்படி சொல்ல முடியல டா.. இங்க உள்ளவங்க எல்லாம்,ரெம்ப வருஷமா, அப்பா நிர்வாகத்துல இருந்தே, இருக்காங்க.."

"ஹ்ம்ம்..கண்டுபிடிப்போம்..ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட் அஹ் பார்த்து.."

"பாருடா..எப்படியோ, இந்த பிரச்சனை தீர்ந்தா, சரி.."
கூறிவிட்டு,அங்கிருந்து சென்றான் ஆகாஷ்.

'நெறைய டீபார்மெண்ட் இருக்கு,இதுல merchandishingல, ஆகாஷ் நேரடியா மெட்டீரில் வாங்குறதால, அங்க தப்பு நடக்க, வாய்ப்பு கம்மி,அப்புறம் சம்ப்ளிங்… அங்கு சாம்பிள் பார்த்து தான், குவாலிட்டி சொல்லனும், நல்ல மெட்டீரில் வாங்குறதால, அங்க பிரச்சனை வராது.

அப்படி அங்க பிரட் நடந்தா, குவாலிட்டி டிப்பார்ட்மெண்ட் வரும் போது, கண்டு பிடிச்சுடலாம்.பேப்ரிக் ஸ்டார் பண்ணுற இடம்,கட் பண்ணுற இடம்,தைக்குற இடம்,வாஷ் பண்ணுற இடம், இதுக்குள்ள, எங்க தப்பு நடந்தாலும்..

என்னை தாண்டி தான், போகனும்.. அப்போ நிச்சயம், கண்டு பிடிச்சுடலாம்.
இதுக்கு முன்ன, குவாலிட்டி ஹெட் அஹ் இருந்தவன்.. இதுக்கு உடந்தையான்னு, தெரிஞ்சுடும்.

அப்படி, இது வரை பிரச்னை இல்லைனா,இதுக்கு அப்புறம் தான், தப்பு நடக்குது..பினிசிங் அண்ட் பேக்கிங்.. அப்புறம் மெயின்டனன்ஸ் டிப்பார்ட்மெண்ட்..
இது ரெண்டையும் கவனிச்சா, ப்ரச்னையோட ஆணி வேர், பிடிபடும்..

அப்புறம் பைனான்ஸ், ஹெச் ஆர், அட்மின் தான்..

இதுல இருக்கவங்க, உடந்தையா இருந்தாலும்,குவாலிட்டி மாறுரது, இந்த ரெண்டு இடத்துலயா தான், இருக்கும்..

என்னை தாண்டி போற வரை, பிரச்னை இல்லை..அதுக்குள்ள பிரச்னைன்னா, கண்டு பிடிச்சுடலாம்,என்னை தாண்டி போற டிப்பார்ட்மெண்ட்ல, கூடுதல் கவனம் வைக்கனும்..'

மனதுள், கணக்குப் போட்டுக் கொண்டு,வேலையில் கவனம் செலுத்தினான், பார்த்தி..

மதிய உணவு வேளை வந்தது..
வயிறு,அவனை அழைத்து,ஏதாவது கொடு என்றது,மூளை உணவை நினைத்து,அதற்கு சமாதானம் சொன்னது..

ஒரு வழியாய், மூளைக்கு ஆறுதல் கூறி, உணவை எடுத்து திறந்தான்.
மஞ்சள் நிறத்தில்,ஏதோ சாதம் இருந்தது..எடுத்து, ஒரு வாய் வைத்தான்..

என்ன சுவை என்று, கண்டு பிடிக்க முடியவில்லை..

'இதுக்கு மேல சாப்பிட்டா, உசுருக்கு உத்திரவாதம் இல்லை..'

அதை எடுத்து கொண்டு, வெளியே சென்றான்.ஒரு நாய், கண்ணில் பட்டது..அதற்கு வைத்தான்..அது வாலை ஆட்டிக் கொண்டு,உற்சாகத்துடன் சாப்பிட்டது..

'ஹ்ம்ம்..இனி உன்னை, பார்ப்பனோ, என்னவோ..??சாப்பிடு, சாப்பிடு..பார்த்தி,சித்திரகுப்தன், உன் பாவக் கணக்குல, இந்த நாய் பேரும், எழுதுவார் டா.. எனக்கு வேற வழி தெரில, சாரி பப்பி..'

வந்து இருக்கையில் அமர்ந்தவன்,பியூனிடம் சொல்லி,கான்டினில் உணவு வாங்கி, சாப்பிட்டான்.

மாலையில், வேலை முடிந்து, வீட்டிற்கு சென்று, கதவு தட்டியவனை, புன்னகை முகமாய் வரவேற்றாள், கீர்த்தி..

"தாங்கும் மரக்கிளையா, போற வழி நீ துணையா!!
கூட வர, என்ன குறை, அது போதும்!!
ஆலமரத்து மேல, கூவுற ஒரு குயிலா!!
வீட்டுக்குள்ள கூடு கட்டு, அது போதும்!!
என்னோட நீ சிரிச்சா, கண்ணீரை நீ துடைச்சா!!
வேறேதும் வேணாமே, அது போதும்!!
வீடு திரும்பையில, வாசல் துறக்கையில!!
மஞ்சள் முகம் சிரிச்சா, அது போதும்!!.."
அவள் சிரித்த முகம் பார்த்து, பாடிக்கொண்டே வந்தான், பார்த்தி..

"என்ன மாமா..செம்ம ஹாப்பி அஹ்..??பாட்டு பாடிட்டே, உள்ள நுழையுறிங்க..??கல்யாணத்துக்கு முன்ன, நான் பாடுவேன்..இப்போல்லாம், நீங்க பாடுறீங்க..."

"இது என் டெர்ன்.. உன் முகம் பார்த்து,தோணுச்சு.."

அவனுக்கு புன்னகையை, பதிலாய் கொடுத்த கீர்த்தி,
லஞ்ச் பேக்கை வாங்கினாள்.

"சாப்பாடு, எப்படி இருந்துச்சு..மாமா..??"
ஒரு நொடி முழித்த பார்த்தி,உஷாராகி..

"புளி சாதம் சூப்பர்..பொம்மு.."

"மாமா..அது புளி சாதம் இல்ல..வெஜிடபிள் பிரியாணி..பீன்ஸ் எல்லாம் போட்டுருந்தனே.."
சிணுங்கிக் கொண்டே கூறினாள், கீர்த்தி..

'நல்லா இருந்துச்சுன்னு சொன்னதோட, நிறுத்த மாட்டியா..??இப்படி வாயை கொடுத்து, மாட்டுற..'

"ஆமா..ஆமா டா.. செம்ம டேஸ்ட், அதான், பீன்ஸ் எல்லாம் கவனிகல..வேகமா சாப்பிட்டேன்.."

"ஹ்ம்ம்..எனக்கு தெரியும் மாமா,உங்களுக்கு பிடிக்கும்னு..அதான், நைட்கும் எடுத்து வச்சிருக்கேன்..சூடு செஞ்சு தரேன்..ரெபிரேஷ் பண்ணிட்டு வாங்க.."

சொல்லிவிட்டு, சமையல் அறைக்குள் சென்றாள்.

இங்கு, ஷாக் அடித்தது போல நின்றான், பார்த்தி.

'இன்னும், இந்த நாளோட சோதனை முடியலையா?? வெங்கடேஷா..'

அதிர்ந்து போய்,கீ கொடுத்த பொம்மை போல,அறைக்குள் சென்றான் பார்த்தி..

பத்து நாட்கள் கடந்திருந்தது.மெதுவாய் ஆரவ்,அகிலாண்டத்திடம் பேசினான்.

"அம்மா.."

"என்ன..??"

"ஆர்த்தி..அங்கேயே இருக்கா.."

"இருக்கட்டும்,அவ அப்பன் பண்ண வேலைக்கு.. அங்க இருந்தா தான், குடும்பத்துக்கே புத்தி வரும்.."

"அவ இருந்தா ஓகே ம்மா.. உங்க பேர பிள்ளையும்,அங்க இருக்கே..வசதி..பத்தாத இடத்துல..அகிலாண்டேஸ்வரி பேரப்பிள்ளை இருந்தா, ஊர் என்ன பேசும்.??.அவளுக்காக இல்ல ம்மா.. உங்க பேரப்பிள்ளைக்காக..தான் சொல்லுறேன்.."

அவர் முகத்தில், யோசனை ரேகைகள்..

"நேத்து, நம்ம டாக்டர் அஹ் பார்த்தேன்..ஆர்த்தி எப்படி இருக்கா.. ??இந்த மந்த், செக் பண்ணனும், கூட்டிட்டு வாங்கன்னு, சொன்னாங்க..நாளைக்கு வரேன்னு சொல்லிட்டேன்.."

"ஹ்ம்ம்..சரி,சரி…இன்னிக்கு போய், கூட்டிட்டு வா.. அவ,அப்பன் ஆத்தா கூடவெல்லாம், பேசாத.போனமா, கூட்டிட்டு வந்தோமானு, இரு..அங்க, பச்ச தண்ணி கூட, குடிக்க கூடாது நீ.. கிளம்பு.."

"சரி ம்மா.."

உற்சாகம், குரலில் தெரியாத படி, சொல்லி விட்டு, கார் எடுத்துக் கொண்டு, கிளம்பினான்.

தினமும் அவளுடன், போனில் பேசிக் கொண்டு தான், இருந்தான்..அதனால், அவள் வீட்டிலும், அவ்வளவு கவலைப்படவில்லை..

துறையூர் வந்தவன்,
"ஆதி, ஆதி.."

அவன் குரல் கேட்டு, வெளியே வந்த கேசவன்,
"வாங்க மாப்பிள்ளை.."

'ச்செய்..இருந்த மூட்ல..செல்ல பேர் எல்லாம், சொல்லி கூப்பிட்டேன்..மாமனார் முன்ன..'
சற்று நெளிந்தவன்..

"ஆர்த்தி எங்க மாமா..??"

"அவளும்,அவ அம்மாவும், கோயிலுக்கு போய் இருக்காங்க.. உட்காருங்க..இப்போ வந்துடுவாங்க.."
கூறியவர், அவன் அமர்ந்ததும், எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

சற்று சோர்ந்து காணப்பட்டார்.

"கடைக்கு போகலையா மாமா..??"

"இல்ல..மாப்பிள்ளை..கொஞ்சம், உடம்பு சரி இல்லை.."

"என்னாச்சு மாமா..??"

கசப்பாய் புன்னகைத்தவர்.

"எனக்கு பிறந்தது, பண்ண வேலையை நினைக்கும் போதெல்லாம், அப்படி தான் ஆகுது.."

அவர் பேச்சில்,கீர்த்தியின் விஷயம் என்று தெரிந்தது..உடம்பு இல்லை, அவரின் மனம் தான், சரி இல்லை என்று ,புரிந்தது.

"மாமா,நீங்க கவலை படுற அளவுக்கு, ஒன்னும் இல்ல..இந்த கல்யாணத்தை, நீங்களே நடத்தி வச்சிருந்தா, நல்லா இருந்திருக்கும்.."

"என்ன மாப்பிள்ளை சொல்லுறீங்க??..உங்க தம்பி…"
அவர் பேச்சில் இடையிட்டு,

"என்னை விட நல்லவன்..என்னை நம்புறதை விட, அதிகம், அவனை நம்பலாம்..எனக்கு பொண்ணு கொடுத்திங்க..அவனுக்கும், மனநிறைவோட கொடுத்திருந்தா, நல்லா இருக்கும்..இப்படி அவங்களே, கல்யாணம் செஞ்சுக்குற மாதிரி, பண்ணிட்டீங்க.."

அவன் பேச்சில் திகைத்து,
"உங்க அம்மா.."

"அவங்களுக்கு பிடிக்கலைனா, உங்களை கூட, சரி இல்லைன்னு சொல்லுவாங்க..என் கிட்ட ஒரு வார்த்தை, தனியா, நேர்லயோ,கால் பண்ணியோ கேட்ருந்தா, நான், சொல்லி இருப்பேன் மாமா.."

அவருக்கு பேச்சே வரவில்லை..

"என் அம்மா தான்….,
நான் இப்படி சொல்ல கூடாது..தான்.. இருந்தாலும், உண்மை இது தான்..எங்களை பொறுத்த வரை, நல்ல அம்மா..மத்தபடி,அவங்களுக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும், நல்லவங்க.."

"புரியுது மாப்பிள்ளை.."

"என் மேலேயும் தப்பு இருக்கு, நீங்க கேட்காட்டியும்,பார்த்தி பத்தி, சொல்லி இருக்கனும்..அம்மாவை மீற, தைரியம் இல்ல..அதான், இப்போ சொல்லுறேன்.."

"ஹ்ம்ம்.."

"இன்னும் என்ன மாமா..??"

"என் பொண்ணு, தூக்க மாத்திரை போடுற அளவுக்கு, போய்ட்டா மாப்பிள்ளை..அதை தான், தாங்க முடியல.."

அவர் பேச்சில் அதிர்ந்து,
"என்ன சொல்லுறீங்க மாமா..??"

இவ்வளவு நாள், மனதில் அழுத்திய பாரத்தை,முதல் முறை, இவனிடம் இறக்கினார்.

"ஆமா மாப்பிள்ளை..அன்னைக்கு, உங்க தம்பி, கொஞ்சம் லேட்டா வந்துருந்தாலும், மாத்திரை சாப்பிட்டு இருப்பா.."

'ஏன் இப்படி பண்ணா??, நான் தான், கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு, சொன்னேன் தானே..அதுக்கும் ஒத்துகல..'

"அவ அம்மாக்கு தெரிஞ்சா, தாங்க மாட்டா.. இன்னும் அவளை, குழந்தைன்னு தான் சொல்லுவா.. அது தான், என்னால, மன்னிக்கவே முடியல மாப்பிள்ளை.."

"ஏதோ,தெரியாம..செஞ்சுருப்பா மாமா.."

"அவ, தெளிவா தான் இருந்துருக்கா மாப்பிள்ளை,எனக்கு தான், என் பொண்ணை பத்தி தெரியல..அவ, என் கைக்குள்ளைன்னு நினைச்சேன்..அப்படி இல்லடான்னு, பொட்டுல அடிச்ச மாதிரி, சொல்லிட்டா.."

இதற்கு என்ன, ஆறுதல் சொல்லுவது என்று தெரியாமல், அமைதியாய் இருந்தான்.

அப்பொழுது, ஆர்த்தியும்,மீனாட்சியும், உள்ளே நுழைந்தார்கள்.

அவனை பார்த்ததும், மகிழ்ச்சியுடன், வேகமாய் அவனிடம் வந்தாள்..

"பார்த்து ஆர்த்தி.."

"எப்போ வந்திங்க..??வர்ரதா, சொல்லவே இல்லை.."

"என் பொண்டாட்டிய பார்க்கனும் போல இருந்துச்சு.அதான், உடனே வந்துட்டேன்.."

அவன் பேச்சில், அவனை செல்லமாய் முறைத்து விட்டு,சுற்று புறம் உணர்ந்து..பார்த்தாள்..

அவள் அன்னையும்,தந்தையும், இவர்களை மகிழ்வோடு, பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"வாங்க மாப்பிள்ளை..எப்போ வந்திங்க..??"

"இப்போ தான் அத்தை.."

"இருங்க, சீக்கிரம் சமையல் செய்துடுறேன்..சாப்பிடலாம்.."

"இல்ல அத்தை, கடையில கொஞ்சம் வேலை இருக்கு..ஆர்தியை கூட்டிட்டு போக வந்தேன்.."

"கொஞ்ச நேரத்துல, செஞ்சுடுவேன் மாப்பிள்ளை.."

"இன்னொரு நாள், பொறுமையா வந்து, சாப்பிடுறேன் அத்தை.."

கேசவன் சற்று தயங்கி,
"உங்க அம்மா..??"

"அவங்க தான், கூட்டிட்டு வர சொன்னாங்க மாமா..ஒன்னும் சொல்ல மாட்டாங்க..நான் பார்த்துக்குறேன்.."
சரி என்று, தலையாட்டினார்..

அதன் பின், மீனாட்சி போட்டுக் கொடுத்த, காபியை குடித்து விட்டு,இருவரும் கிளம்பினார்கள்.

காரில் செல்லும் போது,
"நான் பயந்தே போய்ட்டேன்..அத்தை, திரும்ப கூப்பிட மாட்டாங்களோன்னு.."

"இப்போ கூட, ஐயா திறமையால தான், கூப்பிட்டாங்க. கூப்பிட வச்சோமுள்ள.."
காலரை, தூக்கி விட்டுக் கொண்டான்..

"போதும் உங்க பெருமை.."
அலுத்துக்கொள்வது போல கூறினாலும்,முகத்தில், மகிழ்ச்சி தெரிந்தது.

"உனக்கு, இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு.."

"என்ன அது..??"
கண்ணில் ஆர்வத்தோடு, கேட்டாள்.

"ஐயாவை சிறப்பா கவனிச்சா தான், சொல்லுவேன்.."

"கவனிச்சுடுவோம்.."

அவன் கன்னத்தில், மெதுவாய் தட்டினாள்..

அவள் குறும்பில் புன்னகைத்து,
"அங்க தானே வர்ர, பார்த்துக்குறேன்.."

காரை, சாலை ஓரம் நிறுத்தி விட்டு,
தன் அலைபேசியை எடுத்து,அதில், ஒரு போட்டோவை கட்டினான்..

அதை பார்த்த ஆர்தியின் கண்களில்,ஆச்சர்யம்,மகிழ்ச்சி..
அதில், கீர்த்தியின் கழுத்தில்,பார்த்தி தாலி கட்டிக் கொண்டிருந்தான்..

கீர்த்தியின் முகம், மகிழ்ச்சியில் மின்னியது..

"யாருங்க அனுப்பிச்சா..??"

"பார்த்தி தான்.."

"ரெண்டு பேரும், நல்லா இருக்காங்க..எப்போ கல்யாணம் ஆச்சு..??"

"ஒரு, பத்து நாள் இருக்கும்.."

அந்த அலைபேசியை வாங்கி, ஆர்வத்தோடு பார்த்தாள், சிறிது நேரம்..

"வேற யாரையாவது, கல்யாணம் பண்ணி இருந்தா, உன் தங்கச்சி முகத்துல, இவ்ளோ சந்தோஷம் இருக்குமா..??"

அவனை நிமிர்ந்து பார்த்தவள்,மறுப்பாய் தலையாட்டினாள்..

"அப்போ ஏன்,என் சித்தி பையனை கல்யாணம் பண்ண சொல்லி, கீர்த்திக்கு அறிவுரை சொன்ன..??"

அவன் கேள்வியில் விழித்து,
"அது,அத்தைக்கு பிடிக்காது..அதான்.."

"வாழப்போறது, அவங்களா கீர்த்தியா..??"
அவன் கேள்வியில், பதில் கூற முடியாமல், தலை குனிந்தாள்..

"உன்னை தப்பு சொல்ல, இதை சொல்லல..இனிமே, ஒருதலை பட்சமா, முடிவு செய்யாத.."
ஆமோதிப்பாய், தலை அசைத்தாள்..

மென்மையாய், அவள் தவறை உணர்த்தியவன். அதன் பின், அதை பற்றி பேசவில்லை..

அவன் மொபைலில் இருந்து,அந்த புகைப்படத்தை, அவள் மொபைல்க்கு, அனுப்பினாள்..

அதன் பின், அவர்கள் பயணம், சாதாரண பேச்சுகளுடன், தொடர்ந்தது..
வீட்டிற்குள் நுழைந்தவளை, அகிலாண்டம்,ஒரு பார்வை பார்த்தார்..

தயக்கத்துடன் ஆர்த்தி,
"அத்தை.."

"உங்க அப்பா செஞ்ச தப்புக்கு, உன்னை தண்டிக்க கூடாதுன்னு.. தான், உன்னை கூப்பிட சொன்னேன்..இனி, உங்க வீட்டுக்கு, போற வேலை வேண்டாம்.. பேச்சு வார்த்தை கூட, குறைச்சுக்கோ..உள்ள போ.."
கூறிவிட்டு,உள்ளே சென்று விட்டார்..

ஆரவை பார்த்தாள் ஆர்த்தி,அவன், கண்களை முடித்திறந்து,பார்த்துக்கொள்ளலாம் என்று, ஆறுதல் கூறினான்..
 
#6
கோந்தோ பசையோ ஏதோ ஒண்ணு
உனக்காக கீர்த்தி ஆசையா செஞ்சு தர்றாளே
அதைப் பாரு பார்த்திபன்
சரி சாப்பாட்டை விடு
கார்மெண்ட்ஸ்ல எங்கே பிரச்சனைன்னு பார்த்து சரி பண்ணி தணிகாசலத்துக்கிட்டே சீக்கிரமா நல்ல பேர் வாங்கு, பார்த்தி
இல்லாட்டிப் போனா அவரிடம் அந்த
அகிலா பூசணி உன்னைய பற்றி
இன்னும் கெட்டதாக எதையாவது
சொல்லிடப் போகுது

ஆரவ் நல்ல அண்ணனா இருக்கான்
பொண்டாட்டியா இருந்தாலும் தப்பு செஞ்சால் தப்பாப் பேசினால் கண்டிக்கிறான்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
:love::love::love:

உன்னோட சமையலை சாப்பிட பார்த்திதான் எலியா??? :ROFLMAO::ROFLMAO:

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்

ஷாக்க் அடிக்குது பொம்மு
நீ சமைச்சு போனா
ஹார்ட் அடிக்கிது தானா
உன் உப்புமாவை தின்னா
 
Last edited:

Advertisement

Sponsored