தானா வந்த சந்தனமே-27

Nilasubramanian

Well-Known Member
#1
அத்தியாயம்-27

புலிக்கூண்டுக்குள் அடைபட்ட புலி போல,தன் அறைக்குள், இங்கும்,அங்கும் நடந்து கொண்டிருந்தார் அகிலாண்டம்.

'ச்சே..இந்த கேசவன் கடைசில, இப்படி சொதப்பி வச்சுட்டார்..இவரை நம்பி, எல்லா ஏற்பாடும் பண்ணா, என் மூஞ்சிலேயே, கரி பூசிட்டார்..மண் குதிரையை நம்பி, ஆத்துல இறங்குன கதை ஆகிடுச்சு..

இந்த கீர்த்தி,ஆர்த்தி மாதிரி இருப்பான்னு பார்த்தா, எப்படி முறைக்குறா..?? பசு மாதிரி இருப்பா இங்க..இப்போ..முகத்தை சுழிச்சு,அலட்சியமா பாக்குறா என்னை..

எவ்ளோ தையிரியம்..எல்லார் முன்னாலையும், அவனை காதலிக்குறேன்,அவனை தான், கடைசி வரை நினைச்சுட்டு இருப்பேங்குறா..திமிர் பிடிச்சவ..

ஆரம்பத்துலேயே, ரெண்டு பேரையும் கவனிக்காமா விட்டுட்டேன்..இல்லைன்னா, முளையிலேயே கிள்ளி இருப்பேன்..

கடைசில அந்த பார்த்தி,ஜெயிச்சுட்டான்..
எவ்ளோ பெரிய தோல்வி எனக்கு..இங்க தான் வருங்கன்னு பார்த்தா, எங்க போய் தொலைஞ்சுதுங்களோ..இங்க வந்தா, ஒரு வழி பண்ணலாம்..'

இரவு முழுதும் தூங்காமல்,அலைபாய்ந்தவர்.
மறுநாள் கண்கள் சிவக்க, ஹாலில் அமர்ந்திருந்தார்.அப்பொழுது தான், மாமி வேலைக்கு வந்தார்.

அவரை கூட கவனிக்காமல்,சிந்தனையில் இருந்தார்.

'என்னாச்சு இவங்களுக்கு??,கண்ணு சிவக்க உக்காந்திருக்காங்க..'

மாமி,சமையல் அறைக்கு சென்று, சமையலை ஆரம்பித்தார்.

அம்மாவை நெருங்க பயந்த ஆரவ்,இரவு,வீட்டிற்கு வந்ததும்,மாடிக்கு சென்று படுத்தவன் தான்.. இப்பொழுது தான் எழுந்து, கீழே வந்தான்.

அம்மாவை பார்த்ததும்,சத்தமில்லாமல்,சமையல் அறைக்குள் சென்றவன்.

"மாமி,காபி கொடுங்க.."

"ஏன்டா அம்பி,அம்மா கோவமா இருக்காளா..??"

மென் குரலில்,
"ஆமாம் மாமி,நேத்து,பார்த்தி வந்து, கீர்த்தியை கூட்டிட்டு போய்ட்டான்..நிச்சயம் நின்னுடுச்சு..அதான்.. நீங்க ஏதும் பேசாதிங்க..அவங்க கிட்ட இப்போ..கடிச்சு குதருற மூட்ல இருக்காங்க.."

"ஓ..கூட்டிண்டு போய்ட்டானா..நல்ல வேளை, நான் பகவானை சேவிச்சுண்டே இருந்தேன்..அவா ரெண்டு பேரும், நன்னா இருக்கனும்.."

வான் நோக்கி, கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டே, சொன்னார்.

"உங்க வேண்டுதல் தான் மாமி, அவங்கள சேர்த்து வச்சுருக்கு.."
கூறிவிட்டு,மேலோட்டமாக நடந்ததை கூறினான்.

"ஆர்த்தி வரலியோ.??."

"இப்போ அவ வந்தா, அவ்ளோ தான்.. அதான்.. இவங்க கோவம் குறைஞ்சதும், கூட்டிட்டு வரனும்.. அதான், அவளுக்கும்,என் குழந்தைக்கும் நல்லது."

"அதுவும்,சரி தாண்டா அம்பி.."

"சரி மாமி,நான் கடைக்கு கிளம்புறேன்..டிபன் செஞ்சு வைங்க..தப்பி,தவறி,அவங்க கூப்பிடாமா,அவங்க கிட்ட போய்டாதீங்க.."

"நேக்கு தெரியாதா, அவாளை பத்தி..நான் போக மாட்டேன்..சீக்கிரம்,உன் ஆம்படையாவை, கூட்டிண்டு வர வழியை பாரு..மாசமா இருக்குற பொண்ணு..மனசு போட்டு ஒளப்பிக்க பிடாது.."

"சரி மாமி..ரெண்டு நாள் போகட்டும்,பொறுமையா பேசிட்டு, கூட்டிட்டு வரேன்.."

"ஹ்ம்ம்.."
மாமி,சந்தோசத்துடன்,சமையலில் ஈடு பட தொடங்கினார்.

ஆரவ்,சத்தமில்லாமல் கிளம்பி,சாப்பிட்டு விட்டு,கடைக்கு சென்றான்.

மதிய வேளை நெருங்கும் வரை, ஹாலில் அமர்ந்திருந்த அகிலாண்டம்,
"மாமி.."
அவர் அழைப்பில்,அவர் முன் வந்தார் மாமி..

"இவன் எங்க போய் தொலைஞ்சான்??, ரெம்ப நாளா கண்ணுல படல.."
பார்த்தியின் அறையை காட்டி, கேட்டார்.

"தெரில ம்மா.. நேத்து,அம்பி பொருள் எல்லாம், எடுத்துண்டு போனான்.."

"மொத்தமாய் காலி பண்ணிட்டு, தொலைஞ்சுட்டானா..??"

அவன் இங்கிருந்து போக வேண்டும் என்று தான், நினைத்தார்..ஆனால் இப்பொழுது, அவன் போனது, அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

அதன் பின்,அவர் அறைக்குள் சென்று விட்டார்.
இரவு உணவுக்கு தான், டைனிங் மேஜைக்கு வந்தார்.

இரவு உணவு வேளை, அமைதியுடன் கழிந்தது.ஆரவும் பேசவில்லை..அகிலாண்டமும் பேசவில்லை.

உணவு முடித்து, மாடிக்கு சென்ற ஆரவ்..ஆதவ்க்கு அழைத்து,விஷயத்தை பகிர்ந்து கொண்டான்.

அவன் அருகே இருந்தா சம்யுக்தாவுக்கும், விஷயம் பகிர பட்டது..

'கிழவிக்கு சரியான நோஸ் கட்.. என்னமோ, மைசூர் மகாராணி கணக்கா, சுத்தும்..இப்போ..பியூஸ் பிடிங்கிட்டா.. அந்த பொண்ணு..'

மனதுள்,குதூகளித்தால் சம்யுக்தா..
இது தான்,சம்யுக்தா..எந்த நேரத்தில்,யார் பக்கம் இருப்பாள் என்று,அவளுக்கு மட்டுமே தெரியும்..பார்த்தி மீது அவளுக்கு, அன்பும் இல்லை,வெறுப்பும் இல்லை.. மாமியார் மேல் உள்ள பிடித்தமின்மை, இங்கு அபிமானமாக மாறியது..

'நாளைக்கு அந்த கிழவிக்கு போன் பண்ணி,
அச்சோ,என்ன அத்தை?? இப்படி ஆயிடுச்சு,சின்ன பையன்,உங்க மூஞ்சில கரி பூசிட்டானு சொல்லி,அது மூஞ்சி மாறுரதை, பார்க்கனும்.

நாளைக்கு முதல் வேலையா, எழுந்ததும்,வீடியோ கால் போடனும்.. உலக அழகி அளவுக்கு அலட்டும்.. இவங்க பையனுக்கு, நான் அழகுல கம்மின்னு, சொல்லாம சொல்லும்..இப்போ அது அழகு முகத்தை, பார்க்கனும்..'

அவளுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு, இப்பொழுதே கால் செய்து விடுவாள்,ஆதவ் அருகில் இருந்ததால்,அடக்கி வாசித்தாள்.

மறுநாள் நினைத்தது போல, கால் செய்து, போலி கரிசனையோடு பேசி,அகிலாண்டத்தின் ப்ரெஸ்ஸரை, முடிந்த மட்டும் ஏற்றி விட்டாள், ஏதோ, அவளால் முடிந்தது.

இங்கு இத்தனை பேருக்கும், விதவிதமான மனநிலை உருவாக்கிய,பார்த்தியும்,கீர்த்தியும்,மதிய விருந்து முடிந்து,பரமேஷின் வீட்டில் இருந்து கிளம்பினார்கள்.

"மாது வாடா போலாம்.."

"இல்லடா..பரமேஷ்ச பார்த்து ரெம்ப நாள் ஆச்சு..கொஞ்ச நேரம் பேசிட்டு,இங்கயே தூங்கி எழுந்து,நைட் கிளம்பினா, விடி காலையில திருச்சி போயிடுவேன்.."

"என்னது திருச்சி போறியா??அதுக்குள்ளேயா..ஒரு வாரம் தங்கிட்டு போடா..நாளைக்கு ,புது வீடு போய்டுவோம்..அங்க தங்கிக்கலாம் நீ.."

"இல்லடா..நீ கூப்பிட்டதால. போட்டது போட்ட படி, கிளம்பிட்டேன்..ரெண்டு மூணு கஷ்டமர், இன்னிக்கே போன் பண்ணி, வண்டி என்னாச்சுன்னு கேக்குறாங்க.. நீங்க செட்டில் ஆகுங்க.. நான் பொறுமையா வந்து,பத்து நாள் தங்கிட்டு போறேன்.."

அவன் வேலை பளு உணர்ந்து,அரை மனதாய் சம்மதித்தான் பார்த்தி..

"அண்ணா..சீக்கிரம் வாங்க..அதுக்கு முன்ன,அண்ணி வரணும்..அதுக்கு, நாங்க திருச்சி வரணும்..அப்புறம் உங்களுக்கு, இங்க முதல் விருந்து எங்க வீட்டுல.."

சொல்லிவிட்டு சிரித்தாள் கீர்த்தி..

"அட மடையா.. எங்களை தொந்தரவு பண்ணாதை..இனிமேன்னு..நேரடியா சொல்லி இருக்கலாம் மா நீ.."

கீர்த்தி பதறி,
"அச்சோ..அப்படி எல்லாம் சொல்லல, ண்ணா.."

"பின்ன..உடனே அண்ணி கேட்டா, நான் எங்க போவேன்..அவளை கண்டு பிடிச்சு,சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி..பெரிய வேலை மா.."

"நான், பொண்ணு பார்க்கவா ண்ணா.."

"பாவம் அவன்,அவனை விட்டுரு,அவனாவது, அமைதியான பொண்ணா, கல்யாணம் பண்ணட்டும்.."
நமட்டு சிரிப்போடு சொன்னான், பார்த்தி..

அவனை முறைத்து விட்டு,
"வீட்டுக்கு வாங்க, இருக்கு உங்களுக்கு.."

அவள் பேச்சில், சிரித்த மாது..
"குடும்பஸ்தன் ஆகிட்டே.. இனி..சரி மா..சாரி மா..தவிற, எதுவும் பேசக்கூடாது பார்த்தி..இன்னையிலே இருந்து, ட்ரைனிங் எடுத்துக்க…"

"அண்ணா..நீங்களுமா..??"

"இல்லாம..உனக்கு சப்போர்ட் அஹ் தான், பேசுறேன்.."

"போங்க..நீங்க.."
பொய்யாக கோபித்துக் கொண்டாள்.

பின் ஒருவழியாய் பேசி விட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள்.

"பார்த்தி,என்ன உதவின்னாலும், பரமேஷ் கிட்ட கேளு,அவனும் என்னை மாதிரி தான்..எப்போவும் உதவி பண்ணுவான்.."

"ஆமாம்.. தயங்காம கேளுங்க.."
என்றான், பரமேஷ்.

இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.

கீர்தியிடம்,வேறு ஒரு காட்டன் புடவையை கொடுத்தான், பார்த்தி..

"இதை மாத்திக்கோ,காலையில இருந்து, பட்டு புடவைலேயே இருக்க..கஷ்டமா இருக்கும்.."
கூறிவிட்டு, வெளியே சென்று நின்றான்.

அவனிடம் இருந்து,புடவையை வாங்கி கொண்டு,புடவை மாற்றினாள்.
மாற்றி விட்டு, கதவு திறந்தாள்.

இரவில் சரியான உறக்கம் இல்லாததால்,பார்திக்கு,சோர்வாய் இருந்தது.உள்ளே சென்று, உடை மாற்றியவன்,பாய் எடுத்து விரித்து, படுத்து விட்டான்.. கீர்த்தியும், அவன் அருகில் படுத்து, உறங்கி விட்டாள்.

அந்தி சாயும் நேரம் தான், இருவரும் எழுந்தார்கள்,அதுவும், கதவு தட்டும் ஒலியில்..

'யார்..??'
என நினைத்து கொண்டு,பார்த்தி சென்று, கதவு திறந்தான்.

வெளியே, பரமேஷின் அம்மா நின்றிந்தார்.

"தம்பி தூங்குனிங்களா..??அது தெரியாம தட்டிட்டேன்.."

"பரவால்ல ம்மா.. வாங்க.."
என்றுவிட்டு,அவரை அமர சொல்லி விட்டு,அவன் குளியல் அறைக்குள், புகுந்து கொண்டான்.

கீர்த்தி இன்னும், தூக்கம் சரியாய் கலையாமல்,அவரை பார்த்து, அரை புன்னகையோடு, அமர்ந்திருந்தாள்.

அவன் வெளியே வந்ததும்,
"தம்பி,இந்த பிளாஸ்க்ல காபி இருக்கு..குடிங்க..கீழ மாது நிக்குது..ஏதோ போன் வந்தது, பேசிக்கிட்டு நிக்குது,அது கூட கொஞ்ச நேரம், பேசிக்கிட்டு இருங்க..கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்.."

எதற்கென்று புரியாவிட்டாலும்,தலை அசைத்து விட்டு,பிளாஸ்க்கில் உள்ள காபியை, கப்பில் ஊற்றிக்கொண்டு,கீழே சென்றான்.

அவன் சென்றதும்,
"தங்கம்..போய்.. குளிச்சுட்டு வாடாமா.."
புரியாமல்,அவரை பார்த்தவள்,

"நான் காலையிலேயே குளிச்சுட்டேன்"
என்றாள்.

அவள் பதிலில், இவர் தான் சங்கடத்துடன், முழிக்கும் படி ஆகியது.

கீழே இருந்து,நேற்று இவர்களுக்கு சாவி கொடுத்த, கீழ் வீட்டு பெண்மணி, மாடி ஏறினார்.

'இது நேத்தே,ஏகப்பட்ட கேள்வி கேட்டுச்சு,இது எங்க, மேல போகுது??'
மாது, யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கீர்திக்கு பதில் சொல்ல முடியாமல், சங்கடப்பட்டுகொண்டு, மௌனமாய், மரகதம் இருந்தார்.

அப்பொழுது உள்ளே நுழைந்த, கீழ் வீட்டு பெண்மணி,

"ஐயே, அக்கா..இப்படி சொன்னா.. அதுக்கு..எப்படி புரியும்..??இங்க பாரு கண்ணு..இன்னிக்கு உங்களுக்கு முதல் ராத்திரி..அதுக்கு தான், உன்னை ரெடி பண்ண, அக்கா வந்துருக்கு,என்னையும் கூப்புட்டுச்சு,சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா.. போ..போ.."

அவர் பேச்சில் முழித்தவளுக்கு, முதல் முறை, லேசான பயம் எட்டி பார்த்தது.
எதுவும் பேசாமல்,குளியல் அறைக்குள் சென்றவள்,குழப்பத்துடனேயே, குளித்து விட்டு,கட்டி இருந்த காட்டன் புடவையை, சுற்றிக்கொண்டு, வெளியே வந்தாள்..

"புடவை மாத்தனுமே..வேற புடவை எடு கண்ணு.."

"இல்ல..இதுவே கட்டிக்குறேன்.."

"இது வேண்டாம் கண்ணு..ஷிபோன் சேலை மாதிரி, ஏதாவது வச்சுருகியா..??"

இங்கு வந்ததில் இருந்து,பார்த்தி கொடுக்கும் புடவையை அணிக்கிறாள்..அவளுக்கு என்ன தெரியும்,அவன், புடவை எடுத்து கொடுக்கும் பேக்கை திறந்து,ஆராய்ந்து, ஒரு வான் நீல ஷிபோன் புடவையை எடுத்தாள்.

"இது நல்லா இருக்கு..இதையே கட்டு..கொடு கண்ணு, கட்டி விடுறேன்.."

"வேணாம்,வேணாம்..நானே கட்டிடுவேன்.."
பதட்டத்துடன் கூறினாள்.

"சின்ன பிள்ளையில்ல ,அதான் கூச்ச படுது.."
பரமேஷின் அம்மாவிடம் கூறி விட்டு,

"சரி வா கா..வெளிய நிப்போம்.."
அவர்கள் வெளியே சென்றதும்,கதவை தாழிட்டு விட்டு,புடவையை மாற்றினாள்.
அவள் முகம் முழுக்க,யோசனை ரேகைகள் ஓடியது..

ஆர்தியிடம்,சாதாரணமாய்,இது பற்றி பேசியவள் தான்.. ஒன்றும் தெரியாத குழந்தை அல்ல அவள்..ஆனாலும், இவ்வளவு நேரம், அந்த சிந்தனை இல்லாமல் இருந்தவளுக்கு,இந்த திடீர் பேச்சு,சற்று பதட்டத்தை கொடுத்தது.புது மண பெண்களுக்கு, பொதுவாக ஏற்படும் பதட்டம்,பயம் தான் அது.

'என் மாமா தானே..எதுக்கு பயம்..??எப்போவும் அவரை, நைட் தானே பார்ப்பேன்..அப்போ வராத பயம்..இப்போ மட்டும் எதுக்கு..??சமாதானத்தை கயிறு கட்டி இழுத்தாள்..அதுவும், இதுவும் ஒன்னா..??மீண்டும் கயிறு, அந்த பக்கம் இழுத்துச் சென்றது..மனதுக்குள், கயிறு இழுக்கும் போட்டி,நடந்து கொண்டிருந்தது.

மனம் சிந்தனையில் இருந்தாலும்,கைகள் தானாக வேலை செய்ய,புடவை கட்டி முடித்தவள்,கதவு திறந்தாள்.

அதன் பின் உள்ளே வந்த,பெண்மணிகள் இருவரும்,அவளுக்கு தலை பின்னி,பூ வைத்து,லேசான ஒப்பனை செய்து விட்டார்கள்.
அதிலேயே,அழகாக தெரிந்தாள் கீர்த்தி.
அவள் தயார் ஆனதும், அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தார்கள்.

கீழே பேசி கொண்டிருந்த,பார்தியையும்,மாதுவையும் மேலே அழைத்தார்,மரகதம்.

மேலே வந்த பார்த்தி,கீர்த்தியை பார்த்தான்.அவள் அவன் முகம் பார்க்காமல்,தலை குனிந்து நின்றாள்.

"மாது, தம்பியை ரெடி ஆக சொல்லு.."

"எங்கடா போறோம்..??"
அவன் கேள்வியில், மாது நெளிந்து,அவனை அழைத்து கொண்டு, அறையினுள் சென்றான்.

வெளியே பதட்டத்தில்,கீர்த்தி நகம் கடித்துக் கொண்டு நின்றாள்.
கொஞ்ச நேரத்தில்,அவன் தயாராகி,வெளியே வந்தான்.

கதவு திறக்கும் சத்தத்தில்,வேகமாய் திரும்பிய கீர்த்தி,
அவனை பார்த்ததும்,சட்டென்று தலை குனிந்து கொண்டாள்.

இந்த வெட்கம் புதிது,அவளிடம்..
ஒரு புன்னகையோடு, அவளை பார்த்தான் பார்த்தி.

இருவருக்கும்,இரவு உணவு கொண்டு வந்தான், பரமேஷ்.
மொட்டை மாடியில் இருந்த விளக்கொளியில்,அமர வைத்து,இருவருக்கும் உணவு பரிமாறினார், மரகதம்.

பரமேஷ் கொண்டு வந்த பொருட்களை, தட்டில் அடுக்கி,அறைக்குள் வைத்து விட்டு வந்தார், அந்த பெண்மணி.

கீர்திக்கு,உணவு உள்ளே இறங்க மறுத்தது..உணவை அளைந்தாள்..

"பிடிக்கலையா மா..சாப்பாடு.."
மரகதத்தின் கேள்வியில்,

"இல்ல..இல்ல..மா..நல்லா இருக்கு.."
கூறிவிட்டு,ருசி அறியாது,இலையில் இருந்ததை,எடுத்து விழுங்கினாள்.

அடுத்து வைப்பதற்குள்,வேகமாய் எழுந்து,கை கழுவ சென்றாள்.
அவள் நடவடிக்கை, புதிதாய் இருந்தது பார்திக்கு,அதன் காரணமும் ஓரளவு புரிந்தது.

அவனும் சாப்பிட்டதும்,
"காலையில, சாப்பாடு கொண்டு வரேன் ப்பா.. உங்க ரெண்டு பேருக்கும்,கிளம்புறோம்."
கூறிவிட்டு,மரகதமும்,கீழ் வீட்டு பெண்மணியும்,பரமேஷும் கீழே சென்றனர்.

"இவங்களுக்கு தான் சிரமம் எங்களால..நேரா நேரத்துக்கு, சாப்பாடு கொண்டு வர வேண்டி இருக்கு.."
சங்கட பட்டான், பார்த்தி.

"அதெல்லாம்,பரமேஷ் அம்மா..நல்ல மாதிரி,ஒன்னும் நினைக்க மாட்டாங்க..நீ சங்கட படாத.. நான் கிளம்புறேன்..போய்ட்டு மெசேஜ் பண்றேன்..வீடு மாறிட்டு,கால் பண்ணு. அட்ரஸ் அனுப்பு..முடியும் போது வரேன்..கீர்த்தியை பார்த்துக்கோ,சின்ன பிள்ளை..ஏதாவது, விளையாட்டு தனமா பண்ணா, கோவப்படாத,உனக்கு சொல்ல வேண்டியதில்லை,இருந்தாலும்,உன் கோவத்தை நினைச்சு..சொல்லுறேன்..நேத்து நடந்ததை வச்சு,அந்த பிள்ளையை கேள்வி கேட்டு, குடையாத.."

"சரீங்க சார்.."
பார்த்தியின் கிண்டலில்..

"உதை கிடைக்கும்,வரேன் டா பார்த்தி..இனியாச்சும் நீ சந்தோசமா இருக்கனும்..பெரிய போராட்டத்துக்கு அப்புறம், சேர்ந்திருக்கிங்க..இனி, அவங்கள பத்தி நினைக்காம, நிம்மதியா இருங்க..அங்க எதுவும் முக்கியமான விஷயம்னா,போன் பண்றேன்..நீயும்,அடிக்கடி பேசு..வரேன் டா.."
கண் கலங்க, அவனை அணைத்து, விடை பெற்றான் மாது.

தினமும்,அவன் ஷெட்டிற்கு வருபவன்,கடந்த ஆறு வருடமாய், இனி அப்படி பார்க்க முடியாது.அந்த வருத்தம் மனதில்,இருந்தது.
அவன் ஆசையும், சந்தோசமும்,முன்னேற்றமும் தானே, இப்பொழுது முக்கியம் என்று, மனதை தேற்றி கொண்டு,கீழே சென்றான்.

அவர்கள் அனைவரும் கிளம்பி சென்றதும்,அறைக்குள் நுழைந்த பார்த்தி,அறை கதவை சாத்தி, தழிட்டான்.அந்த ஒலியில், கீர்த்தியின் உடல், தூக்கிப் போட்டது, பயத்தில்.

ஜன்னல் கம்பியை பிடித்து கொண்டு,உதட்டை,பற்களில் கடித்து,அடக்கி, பதட்டத்தை தணிக்க, முயன்று கொண்டிருந்தாள்.

ஜன்னல் பக்கம் திரும்பி நின்று, வெளியே வேடிக்கை பார்ப்பது போல, நின்றிருந்தாள்.
அதனால்,அவள் முகம்,மனநிலை,பதட்டம் எதுவும்,பார்திக்கு தெரியவில்லை.

அவளை நெருங்கி,அவள் தோள் தொட்டு,தன் பக்கம் திருப்பினான்,பார்த்தி.
அப்பொழுது தான், அவள் முகம் பார்த்தான்.
வேர்த்து வழிந்து, அழுகைக்கு முன்,தோன்றும் அறிகுறியுடன், நின்றாள்.

அதை பார்த்து பதறி,
"என்னாச்சு டா பொம்மு..??ஏன் இப்படி இருக்க??இப்படி வேர்க்குது..இங்க வா.. வந்து உட்காரு..என்று, அறைக்கு நடுவில் விரிந்திருந்த பாயில், ஃபேன்க்கு கீழே ,அமர வைத்தான்.

"ஏன் மா..என்னாச்சு..??"

"ஓ….ஒண்ணுமில்ல.."
அவள் திக்கலிலேயே,அவள் பதட்டம் புரிந்தது.

"அப்புறம்,ஏன் இவ்ளோ அன்ஈஸியா இருக்க??"

"அப்படியா இருக்கேன்..??இல்லையே..அப்படி எல்லாம் ஏதும் இல்லை..நான், நார்மல் அஹ் தான் இருக்கேன்.."

"ஓ..அப்போ ஏன், இவ்ளோ வேர்குது..??"

"அது..இந்த ரூம், காத்து சரி இல்லை.."

நேற்று,இங்கு தான், நிம்மதியாய் தூங்கினாள்,இன்று காற்று குறைவாம்.. மனதுள் சிரித்த,பார்த்தி..

"சரி,ஏதாவது பேசு.."

"என்ன..என்ன பேசனும்..??"

"இதுக்கு ஏன் பதருற??எப்போவும், வாய் ஓயாம பேசுவ,இப்போ, என்ன பேசன்னு கேக்குற..என் பொம்முவா இது..??மாத்தி, வேற பொண்ணுக்கு, தாலி கட்டிட்டனா??"

அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர, முயன்றான்.

"ஹ்ம்ம்..கட்டுவிங்க..கட்டுவிங்க..அப்படி கட்டணும்னு நினைச்சலே..அவ்ளோ தான், இதுல கட்டிடனான்னு, கேள்வி வேற.."
உதடு சுளித்து கூறினாள்.

கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்து விட்டாள், என்று புரிந்தது.

"எனக்கு, வேற யாரும் வேண்டாம்,என் பொம்முவே போதும்.."
அவள் கையை எடுத்து,பின் கையில் முத்தமிட்டான்.

வேகமாய்,கையை இழுத்துக் கொண்டாள், கீர்த்தி.
ஏமாற்றத்துடன், அவளை பார்த்தான்,பார்த்தி.

'இதற்கு முன், நான் இவளை, முத்தமிட்டதில்லையா??ஏன் இப்படி செய்கிறாள்??'
அவன் பார்வையை கண்டு,

"மாமா..நாம, அந்த பூசணி,அப்புறம் என் அப்பா,அம்மா,அரூ..எல்லோரு முன்னாடியும்,பெரிய ஆளா, உயர்ந்து காட்டணும் மாமா..அப்புறம் தான் நமக்குள்ள..இதெல்லாம்.."

"எதெல்லாம்??"

அவனை நிமிர்ந்து பார்த்தாள்,அவன் பார்வையின் குறும்பில்,முறைத்தாள்.

அவள் கைகளை எடுத்து,தன் கைக்குள் வைத்து கொண்ட பார்த்தி,
"பொம்மு..என் கிட்ட என்ன பயம்..உனக்கு..??
இவ்ளோ நாள் பழகி இருக்கோம்..விடிய,விடிய பேசி இருக்கோம்..உன் அறைக்கே வந்திருக்கேன்..என்னமோ,இன்னைக்கு தான் புதுசா பார்க்குற மாதிரி,பயப்படுற.."

அவன் கையில் இருந்து,கையை உருவி கொண்ட கீர்த்தி,கோபமாய் அவனை பார்த்து,
"இப்போ நான், பயம்னு சொன்னனா??"

"அப்புறம் ஏன், உன் முகம் இப்படி இருக்கு??இப்படி பேசுற..??"

"அதான் வேர்க்குறதுக்கு, காரணம் சொன்னேன்ல..நான், நார்மல் அஹ் தான் இருக்கேன்.."
மூக்கு விடைக்க பேசினாள்.

ஒரு விதமான சிரிப்போடு,தலை அசைத்த பார்த்தி,
"சரி..நீ நார்மல்.. அப்போ ஏன்..இப்படி பேசுற.??"

"அதான் சொன்னேன்ல..உங்களுக்கு வேலை இல்ல...பொறுப்பில்லை..அப்படி,இப்படின்னு பேசுனவங்க முன்ன, நாங்க..ஒன்னும் தாழ்ந்து போகலைன்னு..காட்டணும்..நல்லா வாழ்ந்து கட்டணும்..அப்புறம் தான் இதெல்லாம்.."

'அதுக்கும்,இதுக்கும் என்னடி சம்பந்தம்…??…படுத்துறாளே..மனுஷன் நிலைமை புரியாமை..'

"நான் என் மனசுக்குள்ள, சபதம் போற்றுக்கேன்..அவங்க முன்னாடி..கெத்தா போய் இறங்கனும்..பெரிய வேலை,நல்ல வசதியோட.. அப்புறம் தான்..குடும்ப வாழ்க்கை எல்லாம்.."

'நல்லா எடுத்த சபதம்..'
இன்றைய இரவின் பதட்டத்தில்,இதை தவிர்க்க, ஏதேதோ பேசினாள்.. இதுவரை, இப்படி உறுதி எல்லாம் எடுக்காமலேயே, இன்ஸ்டன்ட் மிக்ஸ் மாதிரி,இன்ஸ்டன்ட் சபதம்.

"நீங்க என்ன சொல்லுறீங்க மாமா..??"

'அதான்.. நீயே முடிவு பண்ணிட்டியே..இனி..நான் சொல்லுறதை, கேட்கவா போற..நீ சொல்லுறதை தான், நான் கேட்டாகனும்..'

"என்ன மாமா..பேச மாட்டேங்குறீங்க..பதில் சொல்லுங்க.."

'டேய்,பார்த்தி,சீக்கிரம் சொல்லிடு..இல்ல..சபதத்துக்கு, துணை சபதம்..அடுத்த சபதம்னு, ஏதாவது எடுத்துடுவா.. பெரிய மங்கம்மா சபதம்...முடில...'

"ஹ்ம்ம்..எனக்கு சம்மதம் பொம்மு.."
நாலாபக்கமும்,தலை ஆட்டி வைத்தான்.

"அப்புறம் ஏன், இவ்ளோ நேரம் யோசிசிங்க..??"

"உன் சபதத்தை கேட்டு,சிலிர்த்து போச்சு..அதான்.."
கிண்டல் பண்ணுகிறானோ??என, அவன் முகம் பார்த்தாள்.

ஏதும் கண்டு பிடிக்க முடியவில்லை..
"சரி தூங்குவோமா..மாமா.."

"வேற வழி.."

"என்ன??"

"வேற..என்ன பண்ண, இந்த நைட்ல..தூங்க தானே வேணுமுன்னு, சொன்னேன்.."

"ஹ்ம்ம்..லைட் ஆப் பண்ணிட்டு வாங்க.."

'அது ஒன்னு தான் குறைச்சல்..'
எழுந்து சென்று, விளக்கணைத்து,இரவு விளக்கை போட்டு விட்டு, வந்தான்.

பாயில் ,அவனுக்கு முதுகு காட்டி, திரும்பி படுத்துக் கொண்டாள்.

'நேத்து,எப்படி தூங்குனா..இன்னைக்கு எப்படி தூங்குறா..??"

ஒரு பெரு மூச்சோடு, அவள் அருகில், படுத்துக் கொண்டான் பார்த்தி.


 
Joher

Well-Known Member
#5
:love::love::love:

ஆரவ் நீ பொழைக்க தெரிஞ்சவண்டா :p:p:p
என்ன ஒரு ராஜதந்திரம் அம்மாகிட்டேயே.........

சம்யு....... எதிரிக்கு எதிர் நண்பன் :D:D:D
வீடியோ ல வேற பேசி வெறுப்பேத்தியாச்சு.....
மாமியாருக்கு அடங்குன மருமகள் ஆர்த்தி தானோ???
இல்லை அவளும் வெடிகுண்டு போடுவாளா???

சரி மா சாரி மா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: முதல் நாளே சரி மா போடவச்சுட்டீங்களே.........
ஆனாலும் கீர்த்தி சபதம் எத்தனை மணி நேரத்துக்குனு தெரியலையே......
பல்லி இடி வராமலா போகும் :p
 
Last edited:

Joher

Well-Known Member
#7
Birthday special pa..so Tuesday epi Wednesday than..njoy..vasagargal virupathuku inanga.. potachu..treat ok va..pona epi comments innum parkala.. thanks for all likes and comments..ithukum solunga..;);)
Happy birthday Nila........

Thank you Nila........ ஆனால் செய்வாய் எபி அது பாட்டுக்கு வந்துடனும்....... இது treat எபி தான்........
இது வேற....... அது வேற......
 
SINDHU NARAYANAN

Well-Known Member
#9
Nice update

Happy Birthday to Nila ....

கீர்த்திக்காக...

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்...
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes