தானா வந்த சந்தனமே-26

Nilasubramanian

Well-Known Member
#1
அத்தியாயம்-26

நேரம், நள்ளிரவு வேலையை தாண்டி இருந்தது.
கார், வீட்டு வாசலில் நின்றது.மாது போன் செய்ததும்,ஒரு அம்மா, கீழ் வீட்டில் இருந்து, வெளியே வந்தார்.

"நீங்க தான், பரமேஷ் சொன்னவங்களா??"
கேட்டு கொண்டே,சாவியை மாதுவிடம் கொடுத்தார்.

அவர் பார்வை, காருக்குள் சென்றது.கார் நின்றது கூட தெரியாமல்,பார்த்தியின் மடியில் படுத்து, அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள், கீர்த்தி.

"ஆமாம் ம்மா.."
கூறிவிட்டு,கார் கதவை திறந்து விட்டான் மாது.
அதன் பிறகு தான், கீர்த்தியின் தோள் அசைத்து, எழுப்பினான் பார்த்தி.

"ம்ம்ம்…"
என்று விட்டு,அவன் கால்களை இன்னும் இறுக்கி கொண்டு, தூங்கினாள், கீர்த்தி..

"பொம்மு..வீடு வந்துடுச்சு..இறங்கனும்.."
அவள் காதருகே குனிந்து, கூறினான் பார்த்தி.

அது, அவள் மூளையை சென்று அடைய, சில நொடி ஆனது.. அடைந்ததும், வேகமாய் எழுந்தவள், சுற்றும், முற்றும் பார்த்தாள்.
சுற்றி இருந்த இருளில், அது என்ன இடம் என்று, தெரியவில்லை.

தூக்க கலக்கத்தில் விழித்தாள்.

'இது, பூசணி வீடு மாதிரி இல்லியே..'

"இறங்கு டா.."

கூறிவிட்டு, இன்னொரு பக்க கதவு திறந்து, அவன் இறங்கினான்.

திறந்திருந்த கதவு வழியாக, இவளும் இறங்கினாள்.

அந்த அம்மா,அவளை மேல் இருந்து கீழாக பார்த்து, அளவெடுத்தார்.

'இது எதுக்கு, பார்வையாலே ஸ்கேன் பண்ணுது..??'
அவரை பார்த்தாள், கீர்த்தி.

அவள் அருகே பார்த்தி வந்ததும்,
"பொஞ்சாதியா தம்பி..??"
அடுத்த கேள்வி,அந்த பெண்மணியிடம் இருந்து வந்தது.

"ஆமாம் ம்மா.."
அவசரமாய், மாது பதில் அளித்து விட்டு, இருவரையும், மொட்டை மாடிக்கு, கூட்டி சென்றான்.

பார்த்தி,கீர்த்தியின் கை பிடித்து, அழைத்து சென்றான்.தூக்க கலக்கத்தோடு,அவனோடு சென்றாள் கீர்த்தி.

அங்கு மொட்டை மாடியில் இருந்த, ஒற்றை அறையை திறந்து,உள்ளே போனார்கள் மூவரும்.

சிறிய அறை, அட்டாச்சுடு பாத்ரூமோடு இருந்தது.

"சரி பார்த்தி,நீங்க தூங்குங்க..நான் கிளம்புறேன்.."

"எங்க டா போற..இந்த நேரத்துல..??"

"பக்கத்து தெருல தான், என் சித்தப்பா பையன், ரூம் எடுத்து, தங்கி இருக்கான்..அவன் கிட்ட நேத்தே, போன்ல சொல்லிட்டேன், வரேன்னு..இந்த சின்ன ரூம்ல எப்படி, இத்தனை பேர் இருக்கது.. நீங்க தூங்குங்க..காலையில, ஏழு மணிக்கு வரேன்..எட்டு மணிக்கு முகூர்த்தம்,சீக்கிரம் ரெடியா இருங்க, ரெண்டு பேரும்,வந்து கூட்டிட்டு போறேன்..கிளம்புறேன் டா.."

"இந்த நேரத்துக்கு எதுக்கு டா, அவங்கள தொந்தரவு கொடுத்துகிட்டு,இங்கயே தூங்கு.."

"அதெல்லாம், தூங்காமா காத்துக்கிட்டு இருக்கேன்னு, இப்போ தான், மெசேஜ் பண்ணான்.. நீங்க தூங்குங்க..நான் வரேன்.."
சொல்லிவிட்டு, கிளம்பி விட்டான்.

மாதுவின், நண்பனின் வீடு தான் இது..கீழே இரண்டு போர்சன் வாடகைக்கு விட்டு, மாடி அறையும், பச்சிலேர்ஸ்க்கு வாடகைக்கு விட்டிருந்தான்..இப்பொழுது தான், ஒரு மாதமாக, காலியாகி இருந்தது.இவன் விஷயம் சொன்னதும்,தங்கி கொள்ள, அனுமதி கொடுத்து விட்டான்.

மாதுவின் நண்பன், வேறு ஏரியாவில் இருந்தான்.
அதனால் சாவியை, கீழ் வீட்டு அம்மாவிடம் கொடுத்து, விவரம் சொல்லி, கொடுக்க சொல்லி இருந்தான்.

அவன் சென்றதும், திரும்பி கீர்த்தியை பார்த்தான்,மாது சென்றது கூட தெரியாமல், இவன் தோளில் சாய்ந்து, தூங்கி வழிந்து கொண்டிருந்தாள்.

உதட்டில் தோன்றிய மென் நகையோடு,அவளை நடத்தி சென்று,அந்த அறையில் இருந்த இரு பாய்களை எடுத்து விரித்து,இரு தலையணைகளை போட்டு, அவளை எழுப்பி, படுக்க சொன்னான்.

மறுவார்த்தை பேசாது,சென்று படுத்து விட்டாள்.
இவன் சென்று, அறை கதவை தாழிட்டு விட்டு வந்து,இவள் அருகில், படுத்துக் கொண்டான்.

'இது எந்த ஊர்??,என்ன இடம்?? எதுவும் தெரியாம, எப்படி தூங்குறா பாரு??..கும்பகர்ணி..'
மனதில் நினைத்து, நகைத்துக் கொண்டான்.

அது, அவன் மீது கொண்ட ஆழமான நம்பிக்கை, என்பதை நினைக்கையில், பூரிப்பாய் இருந்தது.

சந்தோஷத்தில், தூக்கம் வர மறுத்தது.

இவன் புறம் புரண்டு படுத்த கீர்த்தி,இவன் விழித்திருப்பதை பார்த்து,
"தூங்கலையா மாமா..??"


"தூங்கனும் டா.."

"ம்ம்.."

என்றவள்,அவன் மார்பில் முகம் புதைத்து,விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.மனம் முழுவதும் பரவிய நிம்மதியோடு, அவளை சுற்றி, கை போட்டு அணைத்துக் கொண்டு, அவனும் கண் அயர்ந்தான்.

மறுநாள் அதிகாலை,விடியலுக்கு முன், கண் விழித்த பார்த்தி,காலை கடன்களை முடித்து விட்டு வந்து, கீர்த்தியை எழுப்பினான்.

"பொம்மு எழுத்துரு டா.."

"ம்ம்.."
என்று புரண்டு படுத்தவள்,

"தூக்கம் வருது மாமா.."
என்று, கண் விழிக்காமல் கூறி விட்டு,தூக்கத்தை தொடர்ந்தாள்.

"இப்படியே நீ தூங்கிட்டு இருந்தா, ஐயர் கிளம்பி வீட்டுக்கு போய்டுவார்..சீக்கிரம் எழுந்துக்கோ.. டா.."

"அவரு போனா.. போய்ட்டு போறார்.."

"அப்புறம் யாரு, நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பா..??"

அவன் கேள்வியில், கண் விழித்து,அவனை பார்த்தவள்,
"கல்யாணமா??"

"ஆமாம்.. நமக்கு இன்னைக்கு கல்யாணம்..எழுந்திரு,கல்யாணம் முடிச்சுட்டு வந்து,அப்புறம் பொறுமையா தூங்கு.."

"நமக்கு தான், கல்யாணம் ஆயிடுச்சே.."

"அது, நமக்கு மட்டும் தானே தெரியும்..ஊருக்கே தெரியுற மாதிரி,முறைப்படி எல்லாம் நடக்கனும்.. எழுந்திரு,போ..போய் குளிச்சுட்டு வா.."

"ஹ்ம்ம்.."
என்று எழுந்தவளிடம்,

"இந்தா, இந்த பட்டுப்புடவை கட்டிட்டு, தயார் ஆகு, நான் வெளியே நிக்குறேன்,ரெடி ஆகிட்டு, கூப்பிடு.."
அதை கையில் வாங்கினாள்.மெரூன் வண்ணத்தில்,உடல் முழுவதும், ஜரிகை பூக்கள் ஓடிய, பட்டுப் புடவை.

அதை, தடவி பார்த்தவள்,அதை வைத்து விட்டு,குளியல் அறைக்குள், புகுந்து கொண்டாள்.

அவள் தயாராகி,வெளியே வந்ததும்,அவளை ஒரு நிமிடம் பார்த்து,கண்களில்,பாராட்டுகளை தெரிவித்து விட்டு,இவன் தயாராக சென்றான்.இருவரும்,தயாராகி முடிக்கவும்,மாது வரவும்,சரியாக இருந்தது.

பட்டு வேட்டி, வெள்ளை சட்டையில்,பார்த்தி கம்பிரமாய் இருந்தான்.
அவனை கண்களால் பருகிய கீர்த்தி,

"சூப்பர் அஹ் இருக்கீங்க மாமா.."
மென் குரலில்,பார்த்தியிடம் சொன்னாள்.

ஒரு புன்னகையை பதிலாக கொடுத்து விட்டு,
"கிளம்புவோமா..??"
என்றான்.

"ஹ்ம்ம்.."
என்றவள்..மாதுவை பார்த்து விட்டு,

"நீங்க, எங்க போனீங்க ண்ணா.??."

"எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டே.."
கிண்டல் செய்தான், பார்த்தி.

அவனை முறைத்தாள், கீர்த்தி.
"என் சித்தப்பா பையன் கூட, தங்கிட்டு வரேன் மா.."
பதில் அளித்த மாது..

இருவரையும் கூட்டிக் கொண்டு,கோயிலுக்கு சென்றான்.

வழியில் உள்ள ஃபேன்சி கடையில், அவனை நிறுத்த சொன்ன பார்த்தி,அவளுக்கு,கவரிங் தோடு,கண்ணாடி வளையல், வாங்கிக் கொடுத்தான்.

அதை, மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டாள், கீர்த்தி.

"கூடிய சீக்கிரம், தங்கத்துல வாங்கி தரேன் டா பொம்மு.."
சற்று சங்கடத்துடன் கூறினான்.

"எனக்கு, இப்படி போட்டா தான், பிடிக்கும் மாமா..என் அக்கா கல்யாணத்துல கூட, இப்படி தான் போட்டேன், நான்..அதுவும், இது, என் மாமா வாங்கி தந்தது..ரெம்ப ஸ்பெஷல் எனக்கு.."

கூறிவிட்டு, அவனை பார்த்து புன்னகைத்தாள்..அவன் சங்கடத்தை போக்கும், நோக்கத்தோடு.


அவள் கையை, அழுத்தி பிடித்தவன்..அவளை அழைத்து கொண்டு, கோயிலுக்கு சென்றான்.

கோயிலுக்கு வெளியே,பூக்கடையில், அவளுக்கு பூ வாங்கிக் கொடுத்தான்.
அவள் வைத்துக் கொண்டதும்,உள்ளே சென்றார்கள்.

அங்கு, திருமணத்திற்கு அனைத்தும், தயாராய் இருந்தது.

இவர்களை பார்த்ததும்,நான்கு ஐந்து பேர், வந்தார்கள்.

அவர்களை, கீர்திக்கு அறிமுகம் செய்தான் பார்த்தி,
"இவன் ஆகாஷ்..என் கூட டெல்லில படிச்சவன்..வேற காலேஜ்..இன்டெர் காலேஜ் காம்படிசன்ல பார்த்து, பிரென்ட் ஆனோம்.. இதெல்லாம், இவன் பிரெண்ட்ஸ்.."
அனைவரையும் பார்த்து, கை குவித்தாள் கீர்த்தி.

"சரி நேரமாச்சு..வாங்க ரெண்டு பேரும், அப்புறம் பேசிக்கலாம்.."

மாதுவின் அழைப்பில்,இருவரும் மணமேடைக்கு சென்று, அமர்ந்தார்கள்.

ஐயர் மந்திரங்கள் சொல்ல,நல்ல நேரத்தில்,கீர்த்தியின் கழுத்தில் தாலி கட்டி,மூன்று முடிச்சிட்டு.. தன்னில் சரி பாதி, ஆக்கிக் கொண்டான் பார்த்தி.

இருவரும், மாலை மாற்றிக் கொண்டார்கள்.
அவள்,நெற்றி வகிட்டுலும்,தாலியிலும், குங்குமம் வைக்கையில், இருவர் கண்களும் கலங்கியது, ஆனந்தத்தில்,இருவரின் கண்களும், அடிக்கடி சந்தித்து, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டது.

அதன் பிறகு, சடங்கு, சம்பிரதாயங்கள் முடிந்து,கல்யாணத்தை, பதிவு செய்ய போனார்கள்.

கோவில் அலுவலகத்திலேயே, அந்த வசதி இருந்தது.அங்கேயே இருவரும், கையெழுத்து போட்டு,திருமணத்தை பதிந்தார்கள். நண்பர்கள், சாட்சி கையெழுத்திட்டார்கள்.

அனைத்தும் முடிந்ததும்,பார்த்தியின் கை பிடித்து குலுக்கி, அனைவரும், வாழ்த்து தெரிவித்தார்கள், தம்பதிகளுக்கு.

அருகில் இருந்த ஹோட்டலில் சென்று, காலை உணவை முடித்து விட்டு,நண்பர்கள் அனைவரும், விடை பெற்றார்கள்.

அனைவரும் சென்றதும்,மாதுவும்,ஆகாஷும் மட்டும் இருந்தார்கள்.

"அப்புறம் பார்த்தி..எப்போ வந்து வேலையில ஜாயின் பண்ணுற??"

"நாளைக்கு வரேன் டா.."

"நாளைக்கேவா..??இப்போ தானே, கல்யாணம் ஆகி இருக்கு..ஒரு வாரம் கழிச்சு வா.."

"இல்லடா..நாளைக்கே வரேன்.."

"சரி டா.. அப்போ..நாளைக்கு, கம்பெனிக்கு வந்து, ஜாயின் பண்ணிட்டு, ஒர்கேர்ஸ் குவார்ட்ஸ், சாவி வாங்கிக்கோ.இன்னிக்கு சுத்தம் பண்ணி, தயார் பண்ண சொல்லிருறேன்.. இன்னிக்கே, சாவி தருவேன்.அப்பா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.உனக்கே தெரியும்..வேலையில சேராம, சாவி கொடுத்தா, ஏதாவது பேசுவாரு.. சாரி டா.."

"பரவால்லடா..நான் கேட்ட உடனே, வேலை கொடுத்ததே, பெருசு..நாளைக்கே, சாவி வாங்கிக்குறேன்.. ஒன்னும் பிரச்சனை இல்ல.."

"நீ என் கம்பெனில சேருறதுக்கு.. நான் தான், நன்றி சொல்லனும் டா.. நாளைக்கு, ஜாயின் மட்டும் பண்ணு, குவார்ட்ஸ்ல, எல்லா அரேஞ்மெண்ட்டும், நான் பார்த்துக்குறேன்..ஃபர்னிசேர் எல்லாம், அங்கேயே இருக்கு..நீ அங்க போகையில, வீடு தயாரா இருக்கும்.."
கூறிவிட்டு, விடை பெற்றான் ஆகாஷ்.

இவர்கள் வீட்டிற்கு வருகையில்,மாதுவின் நண்பனும்,அவன் அம்மாவும், அந்த வீட்டில் இருந்தார்கள்.

"இவன் பரமேஸ்வரன்..இவங்க, அவன் அம்மா..மரகதம்.இவனும், மெக்கானிக் ஷெட் வச்சுருக்கான்.."
அவர்களை அறிமுக படுத்தினான், மாது.
இருவரும், பரஸ்பரம் புன்னகைத்து கொண்டார்கள்.

பரமேஸ்வரனின் அம்மா..இருவருக்கு ஆரத்தி எடுத்தார்.

அதன் பின் அனைவரும், மாடியில் அமர்ந்து, பேசி கொண்டிருந்தார்கள்.

"மாது சொன்னுச்சு..உங்க விஷயமெல்லாம்.. நீங்க கவலை படாதீங்க..சீக்கிரம், எல்லாம் சரி ஆகிடும்.."

பரமேஷ்சின் அம்மா,கூறிவிட்டு,
"மதியம் நம்ம வீட்டுல விருந்து, ரெண்டு பேரும் வந்துடுங்க" என்றார்.

"இருக்கட்டும் ம்மா.."
சங்கடத்துடன் கூறினான், பார்த்தி.

"அதெல்லாம் பேசக்கூடாது..ரெண்டு பேரும் வரிங்க.."
கூறிவிட்டு,

"நான் போய், அதுக்கான ஏற்பாடு பண்ணுறேன்..நீங்க கிளம்பி, பொறுமையா வாங்க..மாது நீயும் வந்துடு.."
கூறிவிட்டு,கிளம்பி சென்றார்.

பரமேஷும்,மாதுவும்..வெளியே கொஞ்சம், வேலை இருப்பதாய் கூறிவிட்டு,சென்றார்கள்.
அவர்கள் போனதும்,பார்த்தியின் தோள் சாய்ந்த கீர்த்தி,

"எனக்கு இதெல்லாம், கனவு போல இருக்கு, மாமா.."
அவள் கையில், நறுக்கென கிள்ளினான்.

"ஆ…"
என, கையை தேய்த்து விட்டுக் கொண்டு,

"ஏன் மாமா கிள்ளுனிங்க..??"

"இது கனவு இல்லைன்னு.. புரிய வைக்க.."

"ஹ்ம்ம்..அது சரி..அதுக்கு..கால் கிலோ சதையை, பிச்சு எடுத்துட்டீங்க.."

அவன் புன்னகைத்தான்.

"ஆமாம்.. இது என்ன ஊர்.??.நாம இனி, என்ன பண்ண போறோம்..??எதுவுமே கேட்கலை..நீ.. இது வரை.. எதுவும் தெரிய வேண்டாமா..??"

"எதுக்கு தெரியணும்..என் மாமா, என் கூட இருக்கார்..அது போதும் எனக்கு..வேற எதுவும், தெரிய வேண்டாம் எனக்கு.."
கூறிவிட்டு,அவன் கை வளைவுக்குள், இரு கைகளும் கொடுத்து,கட்டிக்கொண்டு,அவன் தோள் சாய்ந்தாள்.

அதில் நெகிழ்ந்த பார்த்திபன்,அவள் உச்சியில் முத்தமிட்டு விட்டு,
"இது சென்னை..இனி இங்க தான், நாம இருக்க போறோம்..என் பிரென்ட் ஆகாஷ் கம்பெனில தான், நான் வேலைக்கு போகப் போறேன்..

அவங்க அப்பா, ஒரு கார்மெண்ட்ஸ் வச்சுருக்கார்.. இவன் தான், ஆறு வருசமா பார்த்துக்குறான்.இப்போ கொஞ்ச மாசமா, ஏதோ,பிரச்சனை வந்து கிட்டே இருக்காம்..

என்னை, இங்க வந்துடுன்னு, அடிக்கடி போன் பண்ணி கூப்பிடுவான்..எனக்கு வர்ர ஐடியா இல்ல..இப்போ தேவை வந்துடுச்சு..அதான்.. உடனே வரேன்னு சொல்லி,இன்போர்ம் பண்ணிட்டு.. உன்னையும் கூட்டிட்டு வந்தேன்."

"ஹ்ம்ம்..அப்போ..நாம, திருச்சி போக போறதில்லையா??"

"இல்ல..ஏன்..இங்க பிடிக்கலையா உனக்கு.."

"அதெல்லாம்..இல்ல..அங்க போனா.. அந்த பூசணிக்கு, பாலிடால் கொடுக்கலாம்னு இருந்தேன்..நம்மள படுத்துன பாட்டுக்கு..தப்பிச்சுடுச்சு.."

"என்ன..??"
முழித்தான், பார்த்தி.

"ஆமாம்.. உங்களுக்கு தெரியாதுள்ள..கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு, அதுக்கு பேதி மாத்திரை கொடுத்து, ஹாஸ்பிடல் அனுப்புனது, நான் தான்..அன்னைக்கே, இந்த ஐடியா தோணால..தோணி இருந்தா, இவ்ளோ படுத்தி இருக்காது, பூசணி.."
பல்லை கடித்துக் கொண்டு, கூறினாள்.

"பொம்மு..எதுக்குடா, இப்படி எல்லாம் பண்ண??அவங்க அளவுக்கு, நாம இறங்க வேண்டாம்.. தேள் கொட்டுதுன்னு..நாமும் கொட்ட முடியாது..நம்ம குணத்தை, யாருக்காகவும் மாத்திக்க கூடாது..பழிக்கு பழி எல்லாம், சரி வராது, விட்டுரு.. அவங்க செயல், கர்மா அவங்களை தாக்கும்..நாம ஏதும், செய்ய வேண்டாம்..சரியா??"

"கரெக்ட்..தேளை திருப்பி கொட்ட முடியாது..அதான், அதை அடிச்சு, தூர போடலாம்னு பார்த்தேன்..முடியாது போல.."
அவன் சொன்ன மாற்றத்தை விட்டு,இதற்கு மட்டும் பதில் சொன்னாள்.

"திவ்யா.."
அவன் கண்டிப்பில்,

"சரி,சரி..பூசணியை,ஒன்னும் செய்யல..போதுமா.."

"ஹ்ம்ம்..குட் கேர்ள்.."
அவள் கன்னம் தட்டி, சொன்னான்.

'ஆனாலும், அதை சும்மா விட மாட்டேன்..எனக்குன்னு நேரம் வரும், அப்போ இருக்கு அதுக்கு..அரூ கல்யாணம், எப்படி கிராண்ட் அஹ் நடந்துச்சு..எவ்ளோ பேர் வந்தாங்க, ..எங்க கல்யாணத்தை, இப்படி சிம்பிள் அஹ், செய்ய வச்சுடுச்சு..பூசணி..அதை ஒரு நாள் டம்மி பீஸ் ஆக்குறேன்..'
மனதுள் நினைத்துக் கொண்டு,அவன் மேல் சாய்ந்திருந்தாள் கீர்த்தி.

கீர்த்தி கழுத்தில் தொங்கிய, மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியை பார்த்தான், பார்த்தி..வேறு எந்த நகையும் இல்லாது, அது மட்டுமே, அவள் கழுத்தில் இருந்தது..அது அவளுக்கு, கூடுதல் அழகை கொடுத்தது.முன்பை விட, இப்பொழுது, கீர்த்தி,வெகு அழகாய் தெரிந்தாள்.
அவள் தாலியை, விரல்களால் தூக்கிப் பார்த்தான் பார்த்தி.

"என்ன மாமா..??"

"இது, எங்க அம்மாவோட தாலி, செயின்ல கோர்த்து இருந்துது..என் பாட்டி தந்தாங்க..அதை, மஞ்சள் கயிறுல மாத்தி, வாங்கிட்டு வந்தேன்..மூணு மாசம் கழிச்சு, தாலி பிரிச்சு, கோர்க்கையிலே ,அந்த செயின்ல போட்டுக்கலாம்.."

"ஹ்ம்ம்..சரி மாமா.."

"அம்மாவோட மத்த நகை எல்லாம்,நம்ம ஜவுளி கடையில வேலை பார்த்த, ஒரு ஏழை பொண்ணுக்கு,அவங்க கல்யாணத்துக்கு, கொடுத்துட்டாங்களாம் பாட்டி.. அந்த நகையை பார்த்தா, அப்பாக்கு, அம்மா நியாபகம், அதிகமா வருமுன்னு,இந்த தாலியை மட்டும்,என் மனைவிக்குன்னு, வச்சுருந்தாங்களாம்.. ஒரு நாள் சொன்னாங்க.."

"ஓ.."
என்றவள்,அவன் கரத்தின் மீது கை வைத்து,அந்த தாலியை பார்த்தாள்.. இப்பொழுது, அது இன்னும் ஸ்பெஷல்லாக தெரிந்தது, அவளுக்கு.

சிறிது நேரத்தில்,பரமேஷ்சும்,மாதுவும் வந்தார்கள்.கையில் சில பாத்திரங்கள்,சமையலுக்கு தேவையானது, இருந்தது.

அதை பார்த்ததும்,

"எதுக்குடா இதெல்லாம்,நான் நாளைக்கு போய், வாங்கலாம்னு இருந்தேன்.."

"உங்க கல்யாணத்துக்கு, பரிசு கொடுக்க வேண்டாமா..அதான்.. போய் வாங்கிட்டு வரோம்.."

"நீ இதுவரைக்கும், செஞ்சதே பெருசு..இதுல, இது வேறயா??"

"உனக்கு வேண்டாட்டி போ..இது, என் தங்கச்சிக்கு, நான் செய்யுற சீரு.. இதை பத்தி, நீ கேட்க கூடாது..ஆமா..என்னமா கீர்த்தி..சரி தானே.."

அவள் மனநிலை புரிந்து,தனக்கு பிறந்த வீட்டு சொந்தம் யாருமில்லை என்று, வருத்தப்பட்டு விட கூடாது, என்று நினைத்து, கூறினான் மாது.. அது புரிந்து,கண்கலங்க கீர்த்தியும்,

"ஆமா அண்ணா..சரி தான்…எங்க அண்ணா கொடுக்குற சீர் பத்தி, உங்களுக்கு என்ன??பத்தலைன்னா, கேட்டு வாங்கிக்குவேன்..ஓகே வா ண்ணா.."

"உனக்கு இல்லாததா மா.."
புன்னகையுடன் கூறி விட்டு,பாத்திரங்களை அங்கு ஒரு மூலையில் வைத்தான்.

"நாளைக்கு, அந்த வீட்டுக்கு போகும் போது, கொண்டு போங்க.."

மதியம், சாப்பாட்டு நேரம் நெருங்கியதால்,அனைவரும் புறப்பட்டு,பரமேஷ் வீட்டுக்கு சென்றனர், மதிய விருந்துக்கு.


 
Joher

Well-Known Member
#4
:love::love::love:

என்ன நிலா...... கல்யாணம் முடிச்ச கையேடு மதிய விருந்து போடுவீங்கன்னு பார்த்தால் அது அடுத்த எபி ல......
கல்யாணம் பண்ணி ரெஜிஸ்டரும் பண்ணியாச்சு........ வீடு வேலையும் ரெடி........
பூசணியை மட்டும் அப்படியே விடலாமா???
ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் வருமே......
காத்திருக்கிறோம் நாங்கள்........
 
Last edited:
#6
ஓஹ் நான் நினைச்ச மாதிரியே பார்த்திபன் திருச்சி போகலையா?
அந்த வீட்டுல இருந்து இவனோட திங்க்ஸை எடுத்துட்டு மாதவனின் ஷெட்டுக்கு பார்த்தி வரும் பொழுதே இனி இவன் அங்கே போக மாட்டான்னு நான் நினைத்தேன்
ஆனால் இவன் போயிருக்கணும்
போயி இவங்க லவ்வை கெடுத்து பார்த்தியிடமிருந்து கீர்த்தியைப் பிரிக்க நினைச்ச அந்த குண்டு பூசணி முன்னாடி இவங்க நல்லா வாழணும்
அதைப் பார்த்து அகிலாவின் ஸ்டொமக் இன்னும் கொஞ்சம் எரியணும்
எது எப்படியோ இவங்க கல்யாணம் நல்லபடியா நடந்து விட்டது
பார்த்திபனுக்கு வேலையும் வீடும் ரெடி
இனி அடுத்து என்ன?
ஆகாஷ்ஷின் கார்மெண்ட்ஸ் கம்பெனியை பார்த்தி நல்லா கொண்டு வருவானோ?
கீர்த்தி எப்படி பூசணியைப் பழி வாங்கப் போறாள்?
ஆமாம்ப்பா
அன்னைக்கே பேதி மருந்துக்குப் பதிலா
கீர்த்தி பாலிடால் கலந்திருக்கலாம்
ஹா ஹா ஹா
 
Last edited:
#7
Hi
கல்யாணம் மிடிஞ்சாச்சு

புது மனைவி
புது வேலை
புது ஊரு
புது வீடு

ம்ம்ம்ம்
பார்த்தி சார் கலக்குறீங்க
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes