தானா வந்த சந்தனமே -15

#1


அத்தியாயம்-15

படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து, கத்தியவளின் வாய், பார்த்தியின் கைகளால் மூடப்பட்டது.அவளின் காதருகில்,


"நாந்தான்டி…ஊரை கூட்டாதே."
என்னும் மெல்லிய முனுமுனுப்பு கேட்டது.

அவன் குரலை ,அடையாளம் கண்டுகொண்டாள் கீர்த்தி.

அவன் கைகளை விலக்கிய கீர்த்தி,
"மாமா..நீங்களா..??"

அவள் கேள்வியில் ஆச்சர்யம்.

"ஆமா.."

"வர முடியாது. வேலை இருக்குன்னு சொன்னிங்க.."

அவள் கேள்விக்கு, அவன் பதில் அளிக்கும் முன், அவள் அறைக்கு வெளியே, யாரோ வரும் அரவம் கேட்டது."அச்சோ..!!யாரோ வராங்க.இங்கிருந்து போங்க.."

"நீ கத்துனதுக்கு, ஊரே வந்தாலும் ஆச்சரியமில்லை.நான் போக மாட்டேன்.நீயே சமாளி."

"ஆத்தி..விளையாடாதீங்க..ப்ளீஸ்,ப்ளீஸ்..
போங்க".

"முடியாது.."

சொல்லிவிட்டு, படுக்கையில் நன்றாக படுத்துக்கொண்டான்.

'ஆண்டவா..இவன் வேற படுத்துறானே..'


இப்பொழுது அறையை நெருங்கி இருந்தது,ஓசை.

வேகமாய் ,அவன் மீது போர்வையை இழுத்து போர்த்தி, முழுவதும் மறைத்து விட்டு,அவன் மேல் ஏறி படுத்துக்கொண்டாள்.

அறையின் கதவு திறக்கப்பட்டது.வெளியே ஆர்த்தி நின்று கொண்டிருந்தாள்.

அந்த அறையில், விடிவிளக்கின் ஒளி மட்டுமே இருந்தது.கண்கள் அந்த ஒளிக்கு பழகியதும்,ஆர்த்தி,

"ஏண்டி கத்துன??"

"நானா..??"

"பின்ன நானா..??நீ கத்துனதை கேட்டு,என்னாச்சோ?? ஏதாச்சோன்னு?? ஓடி வரேன்..
நீ சாவகாசமா,நானா கத்துனேன்னு கேக்குற..??"


"அது…உன்னை பார்த்து தான்.இப்படி நைட் பிசாசு மாதிரி வந்தா,பயமா இருக்காதா..??அதான்.."

"நானே,நீ கத்துனதை கேட்டு தான் வரேன்.கதை விடுறியா..??"

அவளுக்கு கீழ் இருந்த பார்த்தி,அவள் காதில் இப்பொழுது ஊதினான்.
காதில் ஏற்பட்ட குறுகுறுப்பில்,இரு காதுகளையும், கைகளில் மூடிக்கொண்டாள்.


"நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன்,நீ காதை மூடிக்கிட்டா என்னடி அர்த்தம்??."

'போய் டிக்ஸ்னரி பாரு டி..'

"அது..அது..கனவு கண்டு,ஏதோ கெட்ட கனவு கண்டு கத்தி இருப்பேன்."

"ம்ஹ்ம்..நீ சரி இல்ல.."

அறைக்குள் நுழையபோனவளை தடுத்து,

"ஏய்,நில்லு,நில்லு.நீ எங்க வர்ர..??"

"என்னடி புதுசா,கேள்வி எல்லாம் கேக்குற..??உன் ரூம்க்கு, நான் அனுமதி கேட்டுட்டு தான் வரனுமா..??"

இப்பொழுது, அவன் சேட்டையில் சிறிது நெளிந்துகொண்டே,
"என்னை கேள்வி கேக்குறது இருக்கட்டும்.இந்த ராத்திரில தூங்கமா,நீ என்ன பண்ணுற??"


"தூக்கம் வரல,பசியா இருக்குன்னு, பால் குடிக்கலாம்னு வந்தேன்.குடிச்சுட்டு, மாடி ஏறையில உன் சத்தம் கேட்டு வந்தேன்.நீ என்னன்னா,என்னையே கேள்வி கேக்குற.."

அவள் பின் கழுத்தில், பார்த்தி விரலால் குறுகுறுப்பூட்டினான்.

"ஏய்,சும்மா இரு.."

"யாரடி, சும்மா.இருங்குற??உன்னை நான் கேள்வி கேட்க கூடாதா..??"

'அச்சோ.இவ வேற கிராஸ் டாக் ஓட்டிட்டு..'

"உன்னை சொல்லலடி.."

"என்னை சொல்லலியா..??இங்க உன்னை,என்னை தவிர யார் இருக்கா..??அப்போ யார் கிட்ட பேசுன??"

"ஆண்டவா..நான் என் கிட்டேயே பேசிக்கிட்டேன்.போதுமா??"

"நீ என்ன லூஸா..??"

"ஆமா..உங்க கூடவெல்லாம் இருக்கேன்ல.கொஞ்ச நாள்ள அப்படி தான் ஆக போறேன்.."

இப்பொழுது பார்த்தியின் புண்ணியத்தில்,குறுகுறுப்பு அதிகமாகி கூச்சத்தில் புன்னகை வந்தது.
சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.


அவளை வினோதமாய் பார்த்த ஆர்த்தி,
"உனக்கு என்னமோ ஆச்சு டி.."


நல்ல வேளையாக ஆரவின் குரல், ஆர்தியை அப்பொழுது அழைத்தது.
"இதோ வரேங்க.."

அவனுக்கு குரல் கொடுத்து விட்டு,

"லூசு மாறி சிரிச்சிட்டு இருக்காம தூங்கு.பைத்தியக்காரி, பைத்தியக்காரி.மறை கழண்டு சுத்துறா. நாளைக்கு கோயிலுக்கு கூட்டிட்டு போய், விபூதி போடனும்.
ஆண்டவா,இவளுக்கு, நீ தான், நல்ல புத்தி தரனும்."


அவசரமாய் ஆண்டவனிடம் ஒரு விண்ணப்பம் போட்டு விட்டு, கதவை சாத்திக்கொண்டு போனாள் ஆர்த்தி.

அவள் போனதும், விரைந்து எழுந்து வந்து, கதவை தாழ் போட்ட கீர்த்தி.ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு,திரும்பி பார்த்தியை முறைத்தாள்.

அறையின் விளக்கெல்லாம், ஒளிர விட்ட பார்த்தி,கண்ணில் நீர் வர, சிரிக்க ஆரம்பித்தான்.

வேகமாய் சென்று, அவன் வாய் பொத்தினாள் கீர்த்தி.


"போனவ திரும்ப வந்துட போறா.."

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.அவன் சிரித்து முடிக்கும் வரை, அவன் வாயில் இருந்து கையை எடுக்க வில்லை கீர்த்தி.

அதன் பின், அவள் கைகளில் முத்தமிட்டு விட்டு, மெதுவாக எடுத்துவிட்டான்.

"கடைசில, என்னை பைத்தியக்காரி ஆக்கிட்டீங்க.நல்ல பட்டம் வாங்கி கொடுத்துட்டீங்க."

மறுபடியும் பொங்கிய சிரிப்பை,அவள் முறைப்பு பார்த்து,அடக்கினான்.

இருந்தும், அவன் கண்கள் சிரித்தது.

"சரி சிரிச்சது போதும் கிளம்புங்க.."
மறுப்பாக தலையாட்டினான்.


"ச்சு.. எப்படி வந்திங்க??"

"பால்கனி வழியா.."

அவள், பால்கனி கதவை தாழ் போட மாட்டாள். இங்கு, இரவில் இரண்டு செக்யூரிட்டி இருக்கிறார்கள்.பயம் இல்லை என்று,அறை கதவு கூட, பெரும்பாலும் தாழிட மாட்டாள்.

"எப்படி இவ்ளோ உயரம் ஏறுனீங்க..?? இதுக்கு பேசாம, இந்த வழியாவே வந்துருக்கலாம்."

"அப்படி வந்தா, இப்போ, உங்க அக்கா வந்த மாதிரி,யாராவது பார்த்துட்டா, அப்புறம் பிரச்சனை ஆயிடும்."

"அப்படியே அக்கறை தான். அப்படி அக்கறை இருக்கவரு, எங்க அக்கா இருக்கையில,அந்த பாடு படுத்துறீங்க..
நல்லவேளை அவ பார்க்கலை, பார்த்திருந்தா,பிரச்சனை ஆகாதா??அப்புறம் நான் காலி."


கொஞ்ச நேரத்துக்கு முன்னே நடந்ததை நினைத்து, இப்பொழுதும் புன்னகை வந்தது,அவன் முகத்தில்.

"அதுக்கு நீ தான் காரணம். உன்னை யாரு கத்த சொன்னா.??."

அவனை முறைத்து,
"உங்களை…சரி,சரி போங்க.."

"மாட்டேன்.."

"என்ன புதுசா வம்பு பண்ணுறீங்க.."

"சரி, ஒரு முத்தம் கொடு போறேன்."

"ம்ஹம்ம்.. நீங்க இன்னிக்கு சரி இல்ல..புதுசா பேசுறீங்க.நடந்துக்குறீங்க.."


"சரி,அப்போ நான் போகலை,இங்கேயே இருக்கேன்.."

படுக்கையை நோக்கி அவன் சென்றதும்,அவசரமாய் அவன் கை பிடித்து இழுத்து,

"இப்போ என்ன, உங்களுக்கு கிஸ் வேணும்,அவ்ளோ தானே.."

அவன் முகம் திருப்பி, கன்னத்தில் முத்தமிட்டாள்.
"ஹ்ம்ம்..கிளம்புங்க.."


"ஹுஹும்…இது நல்லா இல்லை.இன்னொன்னு கொடு.."

"உங்களை…"

அவனை அடிக்க கை ஓங்கும் போது,
கடிகாரம்,பனிரெண்டு முறை ஒலி எழுப்பி, நேரம் பனிரெண்டு என்று கூறியது.


அவள், அந்த ஒலியில் ,கடிகாரத்தின் புறம் திரும்பினாள்.அப்பொழுது, அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு,

"என் பொம்மு குட்டிக்கு,இந்த மாமாவோட ,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்."


அவன் முத்தத்தில் திகைத்து,அவன் வாழ்த்தில் விழிகள் விரித்து,ஆச்சர்யம் காட்டினாள்.

"எனக்கு பிறந்த நாள்ன்னு, எப்படி தெரியும் மாமா..??"

"ஒரு நாள் ,உன் பேக்ல இருந்து, ஏதோ எடுக்குறப்போ,உன் ஐடி கார்டு கீழ விழுந்துச்சு.அதுல பார்த்தேன்".

"சூப்பர் மாமா..இன்னிக்கு நீங்க வர்லைனு செம்ம கடுப்புல இருந்தேன்.இதுக்காக தான் வர்லியா..??
வழக்கம் போல, மொட்டை மாடிலேயே பார்த்துருக்கலாம் மாமா..இப்படி திக்கு,திக்குன்னு ஆக்கிட்டீங்க."


"அங்க பார்த்தா, எப்படி சர்ப்ரைஸ் அஹ் இருக்கும்.அதோட ,நான் பேசும் போதே, சில நேரம் தூங்கி வழிவ.. சரி இன்னிக்கு, உன் ரூம்க்கு வந்து, கரெக்ட் அஹ் பன்னெண்டுக்கு எழுப்பலாம்னு பார்த்தா.. அதுக்கு முன்னவே எழுந்து, கத்தி ஊரையே கூப்புடுற.."

"பின் கழுத்துல,புஸ்ஸு,புஸ்ஸுன்னு பாம்பு மாறி மூச்சு விட்டா, அப்படி தான்.திடிருன்னு ஒரு உருவம் பக்கத்துல படுத்திருந்தா, பயமா இருக்காதா..??அதுவும் இவ்வளவோ பெரிய உருவம்."
கூறிவிட்டு கண்ணடித்தாள்.


"வாலு.. சரி வா ,கேக் கட் பண்ணலாம்."

"கேக் அஹ் எங்க மாமா..??"

அங்கிருந்த மேஜை மீதிருந்த கேக்கின் அருகே, அவளை அழைத்து சென்றான்.


அதை பாக்ஸில் இருந்து எடுத்து,அதன் மேல் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தான்.

"ஹய், ஸ்ட்ராவ்பெர்ரி கேக்,எனக்கு ரெம்ப பிடிக்கும்.."
மகிழ்ச்சியோடு கூறிவிட்டு,
அவன், பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாட, அவள் கேக் கட் பண்ணினாள்.


கட் பண்ணியதும்,முதல் துண்டு எடுத்து, தன் வாயில் போட்டுக்கொண்டாள்.
பின் அவன் ஞாபகம் வந்து,அவனை பார்த்து அசடு வழிய சிரித்தாள்.


அவளை பார்த்து,நமட்டு சிரிப்பு சிரித்தான்.
"இல்ல மாமா,கேக்ல…"


"உப்பு,உரைப்பு சரியா இருக்கானு பார்த்த..கரெக்ட் அஹ்..??"

"கரெக்ட் மாமா..எல்லாம் சரியா இருக்கு..இந்தாங்க."

இன்னொரு துண்டை எடுத்து, அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அதை வாங்கிக் கொண்டவன்.

அந்த மேஜையில் இருந்த, இன்னொரு பார்சலை எடுத்து, அவளிடம் நீட்டினான்.
"என்ன மாமா இது..??"


"பிரிச்சு பாரு..என் ஜாங்கிரிக்கு, பிறந்த நாள் பரிசு."

ஆவலுடன் அதை பிரித்தாள். அதற்குள்,மயில் கழுத்து நிற, சில்க் காட்டன் புடவை,ரெடிமேட் ஜாக்கெட்டுடன் இருந்தது.

"வாவ்..!!!சூப்பர் அஹ் இருக்கு மாமா புடவை.."

அதை தன் மேல் வைத்து,கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தாள்.


அதை புன்னகையுடன் பார்த்திருந்தான் பார்த்தி.

"நாளைக்கு, இது கட்டிக்கோ.நாளைக்கு முழுசும், நீ என் கூட தான் இருக்க...நாளைக்கு சாயங்காலம் வரை.கிளாஸ் லீவு போடலாம் தானே??"

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை.நான் கிளாஸ் போகலைன்னா.. சார் ரெம்ப சந்தோஷ பாடுவார்.
தினமும், என்னால அவர், டென்சன் ஆகுறார்.
ஆனா, இந்த புடவை… எப்படி கட்டுறது..??"


"ஏன்,புடவை கட்ட தெரியாதா..??நான் வேணா கட்டி விடவா..??"

அவனுக்கு அலகு காட்டி விட்டு,
"ஹ்ம்ம்..ஆசை, தோசை… எனக்கு புடவையெல்லாம், நல்லா கட்ட தெரியும்..ஆனா, என் டிரஸ் எல்லாம், அரூக்கு நல்லா தெரியும்..அவ இதை பத்தி கேட்டா, என்ன சொல்லுறது..??"


"அதெல்லாம் எனக்கு தெரியாது.நீ நாளைக்கு இந்த புடவை தான் கட்டுற. நாளைக்கு காலையில, பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுட்டு, தெரு முனைக்கு வர்ர, அங்க உன்னை பிக் அப் பண்ணிக்குறேன்.அப்புறம், நாள் முழுக்க என் கூட தான் இருக்க.."

"ஹ்ம்ம்...."
அரை மனதாய் தலையாட்டினாள்.


"குட் கேர்ள்.."
அவள் கன்னம் கிள்ளி, முத்தமிட்டான்.


பிறகு சிறிது தயங்கி,
"உனக்கு இன்னொரு கிஃபிட்டும் இருக்கு..பட் உனக்கு பிடிக்குமா தெரியல..கொடுக்கட்டுமா..??"


பெரும் எதிர்பார்ப்போடும்,கண்ணில் ஆர்வத்தோடும்,

"என்ன..??"


அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து, ஒரு சிறிய பெட்டியை எடுத்து,திறந்தான்.

அதில் ஒரு மோதிரம்,இரு இதயங்கள் இணைந்த மாதிரி, டிசைன்னில், பொடி, பொடி, வெள்ளை கற்கள் வைத்து, அழகாய் கண்ணை பறித்தது.

"போடவா..??"

கண்ணில் எதிர்பார்ப்போடு கேட்டான்.


அவனுக்கு பதில் கூறாமல்,தன் வலது கையை அவன் முன் நீட்டினாள்.

மகிழ்வோடு,அவள் கரம் பற்றி,மோதிர விரலில், மோதிரம் அணிவித்தான். அவள் விரலுக்கே அளவெடுத்தது போல், கச்சிதமாய் இருந்தது அம்மோதிரம்.

அணிவித்து விட்டு, அவள் கையில் முத்தமிட்டான்.

அவன் கையை விடுவித்ததும், தன் பக்கம் கையை திருப்பி, அந்த மோதிரத்தை அழகு பார்த்தாள்.
பின் அந்த மோதிரத்துக்கு முத்தமிட்டாள்.


"போட்டது நானு,மோதிரத்துக்கு முத்தமா..??"

அவனை பார்த்து புன்னகைத்தாள்.

"பொம்மு,இப்போ நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு.."

கண்கள் விரித்து, அவனை பார்த்தாள்.

"இந்த முறையுலயும், கல்யாணம் செய்வாங்க தெரியுமா..??"

தெரியும் என்பது போல ,தலை அசைத்தாள்.

"அப்படி மோதிரம் மாத்திட்டு, என்ன செய்வாங்க தெரியுமா.??"

கண்ணில் கேள்வியுடன், தெரியாது என்று தலை அசைத்தாள்.

அவள் இரு கன்னங்களையும், தன் இரு கரங்களால் பிடித்து, அவள் உதட்டின் அருகே, தன் இதழ்களை கொண்டு சென்றான்.

ஒரு நிமிடம் தயங்கி, அவள் கண்களை பார்த்தான்,உத்தரவிற்காக.

அவள் கண்கள் ஆமோதிப்பாக, மூடிக் கொண்டன.

அதன் பின், ஒரு வேகத்தோடு இணைந்த இரு உதடுகளும், பிரிய சில நிமிடம் ஆகியது.


முதலில் உணர்விற்கு வந்த பார்த்தி, அவன் முகம் விலக்கி, அவள் கன்னத்தில் அழுந்தி முத்தமிட்டு, பிறகு விலகினான்.

கீர்த்தி உணர்விற்கு வர, சில நொடி ஆகியது.

முதல் இதழ் முத்தம் இருவருக்கும்.

அந்த நொடியில் இருந்து மீண்டு வர, சில நிமிடம் ஆனது இருவருக்கும்.
அதன் பின், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க, கூச்சம் ஏற்பட்டது.


மறுபடியும் கடிகார ஒலி, மணி ஒன்று என்று அறிவித்தது.
அதில் சுதாரித்த பார்த்தி,

"சரி பொம்மு.நான் கிளம்புறேன்.நாளைக்கு பார்க்கலாம்.."
என்று கூறிவிட்டு,வந்த வழியே பால்கனிக்கு சென்றான்.


"இந்த பக்கமே போங்க.."

"வேண்டாம். யாராவது பார்த்தா, உனக்கு தான் கஷ்டம்.இப்படியே போறேன்.."
கூறிவிட்டு, வந்த வழியே இறங்கி சென்றான்.


பால்கனியில் நின்று, அவன் போவதை பார்த்தவள்.பின் அறைக்குள் நுழைந்து,தன் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

தூக்கம் தூர சென்றிருந்தது.

மறுநாள் விடியல், இனிமையாக விடிந்தது.

குளித்து கிளம்பி, அவன் கொடுத்த புடவையை அணிந்து,கீழிறங்கி வந்தாள்.

அகிலாண்டம், யாரோ தெரிந்தவர்கள் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தார்.

எதிரில் படியேறிய ஆர்த்தி,
"என்னடி, புடவை எல்லாம் கட்டி இருக்க??,என்ன விசேஷம்??"

அவளை பார்த்து முறைத்தாள் கீர்த்தி.
"ஏண்டி முறைக்குற..??"
 
Advertisement

New Episodes