தவிக்கும் தமிழகமே

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
தழைத்திருந்த தமிழகம்
இன்று தவித்து நிற்கும்
தமிழகமாய் மாறிப்போனது
மழை தந்த மரம் அழித்தாய்
இன்று தாகம் கொண்டாய்
மேலை நாட்டு
நாகரிகத்தின் மேல் மோகம் கொண்டாய்
இன்று தாகம் கொண்டாய்
சென்னைவாசி என பெருமை கொண்டாய்
இன்று குப்பை போல் வீசி கொண்டிருக்கிறாய்
தமிழா நம் தாகம் தீர்க்க
தமிழனாய் முன்னே வா
கரை புரண்டு ஓடிய
காவேரியை கண்டெடுப்போம்
வளம் கொழித்த
வைகையின் வழியை கண்டறிவோம்
ஏரிகளை எல்லாம் சீர்செய்வோம்
நாம் ஏற்ற்ம் காண்பதற்க்கு
குளங்களில் உள்ள
குப்பை கூளங்களை அகற்றுவோம்
நாம் குடிதண்ணீர் பெறுவதற்க்கு
கணிணியில் கைகள்
தடதடக்க வேலை பார்த்த இளைங்கர்களே
தண்ணீர் தேவை வந்தவுடன்
தவிக்கவிட்டது உங்கள் நிறுவனம்
தாங்கள் வளர்க்கும் வாய் இல்லா
ஜீவங்களுக்கு கூட
தாகம் தீர்க்க துடிப்பது
எங்கள் கிராமப்புரம்
கை நிறைய காசு இருக்கும் ஒரு காலத்தில்
வாயில் வைக்க ஒரு பிடி சோறு இருக்காது உன்னிடத்தில்
தவிக்கும் தமிழனே
மேலை நாட்டு மோகம் விட்டு
மண்ணின் மைந்தனாய் வா
தமிழகம் தலை நிமிரட்டும்.
விசாயம் விரிவடையட்டும்
நம் புகழ் விண்ணை முட்டட்டும்
 
fathima.ar

Well-Known Member
#10
MANAPAKKAM LAKE CLEANING & TREE PLANTATION Work (near Ramapuram, back side Porur DLF IT PARK)

100 VOLUNTEERS NEEDED

DATE : All Saturday & Sunday till AUG 2019.
Time : from 6:00 am (Morning)

Detail - 9677011555 & 9884136764

Location:
582, 2 Manapakkam Rd, Girigori Nagar, Periya Palayatamman Nagar, Manapakkam, Chennai, Tamil Nadu 600125, இந்தியா

Land mark :
50 mts from Manapakkam EB office, Near to Indian Bank, behind Manapakkam Masque.

Google Карты

PLEASE JOIN HANDS TO PROTECT THE WATER BODIES & INCREASE THE GROUND WATER LEVEL - PLS SHARE MAXIMUM
 
Advertisement

New Episodes