தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
ஒருவர் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது விமர்சனம் என்ற எண்ணம் வந்துவிட்ட பிறகு அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தி விடுவது சாலச்சிறந்தது என்பது எனது எண்ணம். அந்த விமர்சனங்களைக் கிடப்பில் போட்டால், காலப்போக்கில் விமர்சனங்கள் வெறுப்பாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப் புறக்கணித்து வாழும் தமிழர்களுக்கு இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இந்த கடிதத்தின் வாயிலாக என் மீதும் விமர்சனங்களை வைக்கலாம், காத்திருக்கிறேன். கடிதத்தினைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்
 
Manimegalai

Well-Known Member
இதெல்லாம் சொன்னால்
தமிழர்கள் தான் முதலில் எதிர்ப்பு சண்டை என்று கிளம்புவாங்க..
மொழிப்பற்று இருந்தால்
Anti Indian என்று முத்திரை குத்தப்படும்...
அருமையான பதிவு.
நன்றி.
 
fathima.ar

Well-Known Member
இப்படி ஒரு கடிதம் மூலம்
மனக்குமுறலை கொட்டியதற்க்கு நன்றி...

இப்படியும் கொட்டலாம்..
உங்களுக்கு தெரிஞ்ச அரசு கல்வி கூடங்களிலும் கல்லூரிகளிலும் கலைக் கல்லூரியிலும் அரசு பணி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் சகோ...

உரிய வயசுல வாய்ப்புகள் தெரியாமல் இருக்குறதும் அறியாமை தான்..
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒருவர் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது விமர்சனம் என்ற எண்ணம் வந்துவிட்ட பிறகு அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தி விடுவது சாலச்சிறந்தது என்பது எனது எண்ணம். அந்த விமர்சனங்களைக் கிடப்பில் போட்டால், காலப்போக்கில் விமர்சனங்கள் வெறுப்பாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப் புறக்கணித்து வாழும் தமிழர்களுக்கு இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இந்த கடிதத்தின் வாயிலாக என் மீதும் விமர்சனங்களை வைக்கலாம், காத்திருக்கிறேன். கடிதத்தினைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்
இந்த திரி காலை இருக்காது.
வாசித்தேன்.. வருந்துகிறேன்.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் சொன்னால்
தமிழர்கள் தான் முதலில் எதிர்ப்பு சண்டை என்று கிளம்புவாங்க..
மொழிப்பற்று இருந்தால்
Anti Indian என்று முத்திரை குத்தப்படும்...
அருமையான பதிவு.
நன்றி.
நூற்றில் ஒரு வார்த்தை
தமிழன் ஒன்றுபடவே மாட்டான்
சாதி ஒழிக்கிறோம் என்கிற பெயரில்
அழுத்தமாக பதிச்சு ஊருக்கு சிலை வச்சு

தலைவர்களின் அரும் உழைப்பும் பண்புமே மறைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுள்ளது
விடியும்... விடியணும்... விடியட்டும்
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஒருவர் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது விமர்சனம் என்ற எண்ணம் வந்துவிட்ட பிறகு அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தி விடுவது சாலச்சிறந்தது என்பது எனது எண்ணம். அந்த விமர்சனங்களைக் கிடப்பில் போட்டால், காலப்போக்கில் விமர்சனங்கள் வெறுப்பாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப் புறக்கணித்து வாழும் தமிழர்களுக்கு இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இந்த கடிதத்தின் வாயிலாக என் மீதும் விமர்சனங்களை வைக்கலாம், காத்திருக்கிறேன். கடிதத்தினைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

நண்பரே,

உங்கள் ஆதங்கங்கள் சரியே, தமிழர் தமிழரையே சார்ந்து நிற்க வேண்டும், கூற்றும் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால்,

இறந்து போனவரின் உடலை கோயில் அருகில் கொண்டு செல்வதை பெரும் குற்றம் என்று கருதும் நீங்கள், இறந்து பல நூற்றாண்டுகள் ஆகியும் கோயிலின் கருவறைக்குள் குடிகொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை குழிதோண்டிப் புதைத்த பாவத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். மேலும் அங்கு கருவறைக்குள் உல்லாசமாக இருக்கும் பல தேவநாதன்களின் சாபம் வேறு வந்து சேரும். போதாக்குறைக்கு தமிழ் வேறு வளரத்தொடங்கி விடும். அந்த பாவத்தையெல்லாம் தயவுசெய்து நீங்கள் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

இறந்து போனவரின் உடலை கோவிலுக்கு கொண்டு சென்றால் தமிழ் வளருமா?

திருக்குறள் சொல்லும் மோடிக்கு திருவள்ளுவர் என்றால் யாரென்றே தெரியாது. இதைப்பற்றியெல்லாம் கூட நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது இந்தி. தமிழ் நாட்டில் இருந்தாலும் தமிழ் பேசமாட்டேன் என்று சொல்லும் வட இந்தியாக்காரனிடம் பேசுவதற்கு நிச்சயம் அது உதவும். கோவிலில் சின்னஞ்சிறு சிறுமியைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு, கைது செய்தால் கத்துவார்கள் “பாரத் மாதாகி ஜே” என்று. நீங்களும் கூடவே சேர்ந்து நின்று இந்தியில் கூச்சலிடலாம் “பாரத் மாதாகி ஜே”.

நீங்கள் இங்கு பணியில் இருக்கும் / இருந்த ஆட்சியர்களை (IAS )அவர்கள் பேசிய/பேசும் தமிழை காணவில்லை போலும். சரி மோடிக்கு திருவள்ளுவரைத் தெரிந்தால் என்ன? தெரியாவிட்டால் என்ன? நமக்கு தமிழ் சரியாக தெரிகிறதா? நம் மக்களுக்கு அதை கொண்டு சேர்க்கிறோமா என்பதல்லவா நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்?

அடுத்து அதென்ன சம்பந்தமின்றி சிறுமி கற்பழிப்பு? பாலியல் வன்கொடுமை என்பது உலகளாவிய விஷயம், அதை மொழி எதிர்ப்புக்கு பயன்படுத்த வேண்டாம்.

சரி, உங்கள் கூற்றுப்படி 'பாரத் மாதாகி ஜெய்' சொல்லவில்லை, அப்போது தனி தமிழ்நாடு கேட்போமா? அதுதான் உங்கள் குறிக்கோளா? தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

தமிழ் படிக்க வேண்டும்.
தமிழனுக்கே தமிழ்நாட்டில் வேலை கிடைக்க வேண்டும்.
சமஸ்க்ருதத்தை அறவே கற்றுக் கொள்ள கூடாது.
மோடி-க்கு பல்லக்கு தூக்க கூடாது.
வட நாட்டவர் தமிழகத்தில் பணி செய்யலாகாது.......

செங்குருதி தன்னில் தனித்தன்மை வேண்டும்
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும். [நடக்கிற கதையா சொல்லணும், ஜாதி கடந்து மதம் தாண்டி, நாட்டின் எல்லைக் கோடுகள் கடந்து ஜப்பானியரையும், ஜமைக்காவை சேர்ந்தவரையும் துணையெனக் கொள்ளும் காலத்தில்...? உங்கள் கற்பனைகள் கவைக்குதவா ]

உங்கள் கருத்துக்களில் உலகளாவிய கோபம் தெரிகிறது, ஆனால் உருப்படியான யோசனை என்று எதுவுமில்லை, என்பது என் தாழ்மையான கருத்து.

முதலில் அறிவியல் தமிழ் சொற்களை / கலை சொற்களை / கணினி மென்பொருள் வன்பொருள் பதங்களுக்கு இணையான தமிழ் சொற்களை பயன்படுத்த துவங்குங்கள். தமிழ் தானாக வளரும். அது பல்கி பெருகி நிற்கும் ஆலமரம். மரத்தின் விழுதுகளுக்கிடையே வேறு செடியின் விதை விழுந்தால் துளிர்க்கும், கொஞ்சம் வளரவும் செய்யும், ஆனால் ஆலம் போல தழைக்காது.

எனக்கு பிடித்த பாரதியின் சொல்லோடு ...

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்.

என்று சொன்ன பாரதி-க்கு சமஸ்க்ருதம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரென்ச், அராபிக் தெரியும்.

முடிந்தால் சிந்துநதியின்மிசை பாட்டையாவது பார்க்கவும். தமிழர் தமிழரையே சார்ந்து வாழ வேண்டுமென்ற வாதம் எத்தனை அபத்தம் என்பது புரியும்.

நன்றி.
 
Last edited:

பதிலுரைக்கு நன்றி தோழர். சமஸ்கிருத எதிர்ப்பு தங்களுக்கு பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் தாய்மொழியென்று, அதற்கு உலகின் பல பல்கலைக்கழகங்களில் பல நூற்றுக்கணக்கான கோடி பண்த்தை வாரி இறக்கிறது இந்திய அரசு. சுயமாக எழுத்துக்கள் கூட இல்லாத ஒரு மொழியை ஏன் இந்தியாவின் மூத்தமொழி என்ற பொய்யை இந்திய அரசு மக்களிடம் பரப்புகிறது. ஒரு காலத்தில் சமஸ்கிருதத்தைக் கேட்டாலே நம் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியவர்கள், இன்று ஏன் சமஸ்கிருதத்தை அனைவரும் படியுங்களென்று சொல்கிறார்கள். இந்த கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் புரிந்துகொண்டால், நான் ஏன் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறேனென்று புரியும்.

அதென்ன தோழர், திருவள்ளுவரைத் தாழ்த்தப்பட்டவென்று சொல்லி மூலையில் கிடத்தி வைத்ததை அவ்வளவு எளிதாகக் கடந்துபோய் விட்டீர்கள். கோட்சேவுக்குக் கோவில் கட்ட வேண்டுமென்கிறார்கள், சிலை வைக்க வேண்டு கூச்சலிடுகிறார்கள். கோட்சேவுக்குக் கிடைக்கும் மரியாதைகூட திருவள்ளுவருக்கு இல்லையா. இதற்குக் கோபப்படாமல் வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்.

சிறுமியைக் கற்பழித்தது கோயிலுக்குள் வைத்து என்பது உங்களுக்குத தெரியுமென்று நினைக்கிறேன். அதன்பின்னால் இருப்பது மதவாதம். மதம்தான் முக்கியமென்று என்னும் சமுதாயம், இது போன்ற குற்றங்களை சேர்த்தே வளர்க்கும் என்பதற்கு வரலாறே சாட்சி. முடிந்தால் சமணர் கழுவேற்றம், சிலுவைப்போர்களைப் பற்றிப் படித்துப் பாருங்கள்.

கடைசியில் நான் எழுதாத ஒரு தகவலையும் சேர்த்தே எழுதியிருக்கிறீர்கள். நான் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தது என்கிறேன். ஆனால் நீங்கள் இன்று இருக்கும் தமிழ்நாட்டைத் தனிநாடாக்க வேண்டுமென்கிறீர்கள். ஏன் இப்படி? தமிழ்த்தேசியம் என்றாலே தனித்தமிழ்நாடு என்று உங்கள் மனதில் ஒரு தவறான எண்ணத்தோடு இருக்கிறீர்களென்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தை தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

அந்தக் கடிதத்தில் ஒரு தகவல் கூட உங்களை ஈர்க்கவில்லை என்பது எனக்கு ஆச்சர்மில்லை.
 
//

இதற்கு பதிலாக எதுவுமில்லையே தோழரே? ஒருவேளை கோபப்படுவது மட்டும்தான் தமிழ் வளர்க்கும் என்ற கருத்து ஆழமாக வேரூன்றி விட்டதோ?

நம் தமிழ் வரலாறு - ஓர் தேடல்

இது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்கள் தமிழ் குறித்த அறிவை வளர்க்கும். கீழடி அகழ்வாய்வுகள் வெளிவரட்டும், தமிழின் தொன்மைக்கு அது சான்றாகும்.

பன்மொழி புலமை வேண்டும் என்பதே என் கருத்து. சரி விடுங்கள், வீண் விவாதம் செய்ய நேரமில்லை. அரசியல் பேச விரும்பவில்லை.

என் கருத்து உங்களை எவ்வாறேனும் புண்படுத்தியிருந்தால் தோழர் மன்னிக்கவும்.

அறிவியல் சொற்கள், கலைச்சொற்கள், மென்பொருள் தொடர்பான சொற்கள் எல்லாம் ஏற்கனவே நிறைய உருவாக்கியிருக்கிறார்கள். Laptop Computer என்பதை மடிக்கணினி என்றுதான் அழைக்கிறோம். Software, Hardware என்பதை மென்பொருள், வன்பொருள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். குறிப்பாக ஏதேனும் துறையில் தமிழ் வளரவில்லையென்று நீங்கள் கருதினால், நிச்சயம் அதற்கான வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பாரதியாருக்கு பல மொழிகள் தெரியுமென்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம்தான். வேலுநாச்சியாருக்கு ஏழு மொழிகள் தெரியுமென்று படித்திருக்கிறேன். ஐயா சாத்தூர் சேகரனுக்கு 120 மொழிகளுக்கு மேல் தெரியுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தமிழனாக, குறிப்பிட்ட மொழியைத் தமிழ்ச்சமூகம் படிக்கவே கூடாதென்று பரப்புரை செய்வதில் எனக்கு என்றுமே விருப்பமில்லை. ஆனால், என் தாய்மொழிக்கான முன்னுரிமை மறுக்கப்படுகிறது, அதற்குப் பதிலாக வேறொரு மொழி உயர்ந்ததென்ற கருத்தை என் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது எனும்போது, என்னாலான எதிர்ப்பை நிச்சயம் பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

தமிழ்நாட்டுக்குள் இருந்துகொண்டு தமிழை நீச பாஷை என்று சொன்னவருக்கு தமிழர்கள் என்ன எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதையே வேறொரு மாநிலத்தில் சொல்ல முடியுமா? தமிழைப் படித்தால் ஒரு பயனும் இல்லையென்ற வார்த்தையை ஒவ்வொரு தமிழனும் தன் காதுகளில் பலமுறை கேட்டிருப்பான். சமஸ்கிருதத்தைப் படித்தால் என்ன பயன், தெலுங்கைப் படித்தால் என்ன பயனென்று ஒருவரும் கேட்கவில்லை.

மைசூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்கள் அழிக்கப்படுகிறது, அதனை மீட்டெடுக்க வேண்டுமென்று, தமிழறிஞர்கள் எத்தனை பேர் கோரிக்கை வைத்தார்கள். நடுவண் அரசு இதுவரை செவிமடுக்கவில்லை.

உங்கள் கருத்துக்கள் என்னை சற்றும் காயப்படுத்தவில்லை. நான் எழுதியதில் ஏதேனும் தவறிருப்பதாக நீங்கள் எனக்கு உணர்த்திவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறேன். கருத்துப் பரிமாற்றங்கள் என்றும் தேவையான ஒன்று என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top