தஞ்சாவூர் ஜில்லா:)

Renee

Well-Known Member
#71
Hi mam how r u
Enna mathri erukravanga ninachu kuda paka mudiyatha edathila vasikreenga

Enjoy pannunga mam namma thanjavur thane after retirement vanthu pathrlam
 
Renee

Well-Known Member
#72
தஞ்சாவூர் ஜில்லா:giggle::love:
ஆரம்பிக்கிறேன்....ஊர்க்காரங்க இருந்தால் ஆஜராகுங்கள்:giggle:

*************
பெயர்க்காரணம்

தண்-குளிமை
செய்-வயல்
ஊர்
தண்+செய்+ஊர் என்பதுதான் தஞ்சாவூர்.
தஞ்சன் என்ற அசுரனை நீலமேக பெருமாளாய் எழுந்தருளி விஷ்ணு வதம் செய்த இடம்...

சோழர்,பாண்டியர், நாயக்கர்கள்,மராத்தியர்கள்.இஸ்லாமியர்கள்(டெல்லி சுல்தான் அலாவூதின் கில்ஜியின் தளபதி மாலிக் கபூர்),ஆங்கிலேயர்கள் ஆகியோரால் ஆளப்பட்டது தஞ்சாவூர்.
1991 இல் தஞ்சாவூரில் இருந்து பிரிக்கபப்ட்டது தான் திருவாரூரும் நாகை என்றழைக்கப்படும் நாகப்பட்டினமும்..


மேலும் வரலாறு படிக்க
Tamilnadu Tourism: Thanjavurகோவில்கள்

ராஜ ராஜ சோழர் கட்டிய பிரகதீஸ்வரர் (அ) பெருவுடையார் கோவில் UNESCO world heritage site.
அதனைக் கட்டியவர் ராஜ ராஜ பெருந்தச்சன்.

தாராசுரம்ல இருக்க கோவில்ல...ஏழு படி இருக்கும்..சப்தஸ்வரங்கள் கேட்கும். ஒவ்வொரு படியிலும் ச....ரி...க....ம....ந்னு

.ஐராவதேஸ்வரர் கோவில்...ஐராவதம்-இந்திரனின் யானை...முருகன் மனைவியான தெய்வானையை வளர்த்தது.


கும்பகோணம் temple town சுற்றிலும் கோவில்களே..நவகிரகங்கள் அத்தனைகும் கோவில் உள்ள ஊர்...

காஞ்சிப்பட்டு ,ஆரணிப்பட்டு போல் திருபுவனம் பட்டும் பிரசித்தி தான்...


இவ்வளவு கோவில் இருந்தாலும் நான் போனது பெரிய கோவில் மற்றும் புன்னை நல்லூர் மாரியம்மன் தான்...

கும்பகோணம்,பாப நாசம்,பேராவூரணி,வலங்கைமான்,ஒரத்த நாடு(களவாணி படத்துல வர ஊர்....),திரு நாகேஸ்வரம்,திருபுவனம்,உடையலூர்,தாராசுரம்,திருவிடைமருதூர்,திருச்சேறை,,பழையாறை(பொ.செல வருமே),


திருவையாறு(என்னோட favorite...அந்நியன் படத்துல வரும்....)

சங்கீத மூம்முர்த்திகள்ல ஒருவரான தியாகராசர் பிறந்த ஊர்....காவிரி ஓடும் ஊர்.....அங்கேயும் சிவன் கோவில் உண்டு....

பட்டுக்கோட்டை..
@Ambika நீங்களே என்ன famous நு சொல்லிடுங்கம்மா...எனக்கு தெரியாது...


பட்டுக்கோட்டையில பொது ஆவுடையார் கோவில் ரொம்ப பிரசித்தி..நான் போயிருக்கேன்...பெரிய ஆத்தங்கரை.....இரண்டு சைடும் போலாம் வரலாம்...இரண்டு குளம் இருக்கும்னு நினைக்கிறேன்...நல்ல தண்ணி இருக்கும்...
தை மாசம் ரொம்ப விசேஷம்...கூட்டம் அலைமோதும்...


கும்பகோணம்
@தரணி வாங்க அக்கா...சொல்லுங்கோ....கும்பகோணம் பத்தி சொன்னா பேஜ் பத்தாது....
எனக்கு தெரிஞ்சது காபி..காபி...கும்பகோணம் டிகிரி காபி....:coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee:மக்களே ஹைவேய்ஸ்ல இருக்கதுல்லாம் ஒரிஜினல் கும்பகோணம் காபி இல்லை...visit kumbakonam..taste the yummy coffee:coffee::coffee::coffee::coffee::coffee::coffee:


இன்னும் உள்ள போனா..எல்லா தாலுக்காவிலேயும் திருல ஆரம்பிக்கிற ஊர்கள் நிறைய உண்டு...திருவையாறுல...
திருப்பழனம்...திருக்கண்டியுர்னு.....

கோவில் தவிர தஞ்சாவூர்ல சுத்தி பார்க்க நிறைய உண்டு...
சிவகங்கா பூங்கா...- ஒரு amusement park...அதுக்காக ப்ளாக் தண்டர்..எம்ஜிஎம்..போல இருககது...

தஞ்சாவூர் வீணை ,தட்டு எல்லாம் மிகவும் பிரபலம்....தஞ்சாவூர் வீணைக்கு பேமஸ்:love:

ராஜராஜன் மணி மண்டபம்....தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்....தங்கை சரஸ்வதி மகால் நூலகம்...இங்க இருக்க ஆடியோ விசுவல் ஹால் சூப்பரா இருக்கும்...அப்படியே தஞ்சாவூரை விஷுவலா சுத்தி காட்டுவாங்க....

நேரம் இருந்தால் just click and see

Tamilnadu Tourism: Temples in Thanjavur


இந்த லிங்க் click பண்ணுங்க..மனோரா இருக்கும்...சரபோஜி மன்னர் பிரிட்டிஷ் நெப்போலியன் போனபார்ட்டை ஜெயிச்சப்போ அவங்களை பாராட்டுற விதமா கட்டினது..இது கடல் பக்கம்...near வங்காள விரிகுடா...

Tamilnadu Tourism: Manora Fort, Pattukkottai, Thanjavur

இலக்கணம் வகுத்த தொல்காப்பியருக்கு சதுக்கம் இருக்கு தஞ்சாவூர்ல..


எங்க ஊர்ல பீச்சும் உண்டு...அதிராம்பட்டினம் கடல் இருக்கு.பட்டுக்கோட்டையிலிருந்து சில கிலோமீட்டர்...

உணவு களஞ்சியம்னு சொல்லிட்டு உணவு பத்தி எப்படி சொல்லாம விட

தஞ்சாவூர் அசோஷா அல்வா :love::love::love::love::love: அருமையா இருக்கும்
தஞ்சாவூர் சாம்பார்...
பானக்கம்..(ஆ)பானகம்..
திருவாரூர் கடப்பா
கொத்தமல்லி மட்டன் சுக்கா(o_Oஇதெல்லாமா இருக்கு...நானே சாப்பிடல..நெட்ல பார்த்தேன் மக்களே...ரெசிபிலாம் கேட்றாதீய)
கொலுக்கட்டை...எங்க சைட்ல எலலம் அரச இலை தான் சுடுவோம்....
கும்பகோணம் ஸ்பெஷல் டிகிரி காபி...
மன்னார்குடில வேலு சர்பத் famous...சென்னையில சர்ப்த கிடைக்குதான்னு சொல்லுங்கப்பா....

மன்னார்குடியை 'தென் துவாரகைனு' சொல்வாங்க....
அங்க ராமர் பாதம் வைச்சதா நம்பபடுது...கோவில்லையும் உண்டு...
மன்னார்குடில தான் முதன் முதல்ல மாட்டுவண்டியில்யே நூலகம் அமைச்சாங்களாம்(தமிழ் மதுராக்காவோட அத்தை மகனே கதையில இன்னும் நிறைய சொல்லியிருப்பாங்க...)

இவ்வளவு பிரமாண்டமான தஞ்சாவூர்ல பிறந்ததாலயே என்னவோ ஷங்கர் அப்படி படமெடுக்கிறார்...
எஸ்..டைரக்டர் ஷங்கர்(கும்பகோணம்,கல்கி,சிவாஜி கணேசன்,ராஜுமூருகன்(குக்கூ,ஜோக்கர்,ஜிப்ஸி டைரக்டர்),அப்புறம் பாலகுமாரன்....

காவிரி கரையோரம் பாட்டு,எழுத்து , நடிப்பு என கலைஞர்கள் ஏராளம் தான்..:love::love::love::love:

கலைஞர் அவர்கள் திருவாரூர் தான்..:love: கே.பாலசந்தர்,:love:ஆச்சி மனோரமா, நாதஸ்வர சக்ரவர்த்தி ..TN ராஜ ரத்னபிள்ளை...அபிராமி அந்தாதி பாடின அபிராமி பட்டர், டி.ஆர்..ராஜகுமாரி,பாலிவுட்ல இருக்காகளே ஹேமமாலினி தர்மேந்திரா அவங்க ஒரத்த நாடுல பொறந்தவங்கதானாம்,...:rolleyes:


பட் என்னதான் வளங்கள்ன்னு பெருமை பேசினாலும் கஜா புயலாகட்டும்....அப்புறம் ஒவ்வொரு முறையும் நீர் ஆதாரம் இல்லாம அவங்க கஷ்டப்படும்போதும் ரொம்ப வருத்தமா இருக்கும்...:sleep::cry::cry::cry::cry:

இறுதியாக

"தஞ்சாவூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது"
 
Advertisement

New Episodes