தகிக்கும் சூரியனே குளிர் நிலவாய் - 27

Aadhiraa Ram

Well-Known Member
#1

ei91EV946538.jpg


அத்தியாயம் 27:
வானதி விடுமுறையை தனது தந்தையுடன் நேரம் செலவழிப்பற்காக மதுரை வந்திருக்க அவர்களது தோப்பு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தாள். அதிவீரபாண்டியன் தனது படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து அடுத்த மாதம் வருவதாக இருக்க, அவன் தனது மாமாவை முதலில் பார்த்துவிட்டு பின்பு மதுரை வருவதாக கூறியிருந்தான். வானதியை அங்கு தங்கவைத்திருந்த சுந்தரபாண்டியன் அவளது தேவைகளை அனைத்தும் செய்து கொடுக்குமாறு தனது முக்கிய விசுவாசியான ருத்ர வேலனிடம் சொல்ல அவனுக்கு வானதியை கண்டவுடனே மிகவும் பிடித்து விட்டது.

ஆனால் தன்னுடைய முதலாளியின் பெண் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தான். வானதியுமே அதுவரை ருத்ரனை பார்த்ததில்லை, ஆனால் கண்டதிலிருந்து அவள் மனதிற்குள் அவன் மீதை ஏதோ ஒரு பிடித்தம் ஏற்பட்டது. அவனது முரட்டு உருவமும் முறுக்கிய மீசையும் அவளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்த அவளும் அவனிடம் வலியச் சென்று பேசினாள்.

அடுத்த பத்து நாட்களும் இருவரும் தங்களுக்குள் இருந்த ஈர்ப்பை தாண்டி காதலை வளர்த்துக் கொள்ள அதை அங்கிருந்தவர்களிடமிருந்து நாசூக்காக மறைத்து விட்டனர். சுந்தரபாண்டியன் அவ்வப்போது வந்து அவளை பார்த்து சென்றாலும் அவளும் தன் தந்தையும் முன்பு எதையும் காட்டிக்கொள்ளாமல் இருப்பவள் தன் தந்தை சென்றபின் ருத்ரன் மீது நேச பார்வை வீசுவாள்.

இருவரும் பார்வையாலேயே தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருக்க ஒரு மாதம் அப்படியே சென்றுவிட்டது. அவளது அண்ணன் வருவதற்கு இன்னும் நான்கைந்து நாட்கள் தான் உள்ளதால் அதற்குள் எப்படியாவது தனது காதலை ருத்ரனிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிய வானதி அவனிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். அன்று அவன் வெளியில் சென்று வீட்டிற்கு வந்துகொண்டிருக்க அவனிடம் சென்றவள் "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.

அவனுக்கும் அவன் காதலிக்கும் பெண் அவனிடம் வந்து பேசுகிறேன் என்று கூறும்போது கசக்கவா செய்யும். அங்கிருந்த ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றவன் "சொல்லுங்க என்ன" என்று கேட்க அவளோ சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதை கண்டவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்துவிட்டது. அவளை புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளது முகத்தை நிமிர்த்தி "லவ் பண்றீங்களா" என்று கேட்க அவளது விழிகள் படபடப்பில் அடித்துக்கொண்டது.

அவளது படபடப்பை ரசித்தவன் "நம்ம ரெண்டு பேரும் காதல சொல்லித்தான் புரிய வச்சுக்கணும்னு அவசியம் இல்ல. எனக்கு உங்களோட காதல் புரியுது என்னோட காதல் உங்களுக்கு புரிந்தால் தான் நீங்க என்கிட்ட பேச வந்திருக்கீங்கன்னு நான் நம்புறேன்" என்று கூற அவளுக்கும் மிகவும் சந்தோஷமாக போயிற்று. சந்தோஷத்தில் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதை துடைத்த விட்டவன் "என்னோட பொம்மிக்கு எப்பவுன் கண்ணுல கண்ணீர் வரக்கூடாது" என்று கூறினான்.

அவளுக்கும் தனது அன்னையைப் போல் அவன் தன்னை பொம்மி என்று கூப்பிட்டது மிகவும் பிடித்துவிட, "தேங்க்ஸ் தேங்க்ஸ் பார் இவரிதிங்" என்று கூறினாள். அவனும் புன்னகைத்தபடியே "நம்ம இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்புறம் ஐயா கிட்ட நம்மளோட விருப்பத்தை பத்தி சொல்லி நம்ம கல்யாணத்த பத்தி பேசலாம்" என்று கூற அவளும் ஆனந்தமாக சரி என்றவள், அவன் எதிர்பாராத சமயம் அவனது முரட்டு இதழ்களில் தனது மென் இதழ்களை ஒற்றி எடுத்து உள்ளே ஓடிவிட்டாள்.

ருத்ரனும் முதலில் அதிர்ந்தாலும் பின் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியே வர அவனுக்கும் இது சரிப்பட்டு வருமா என்ற எண்ணம் தோன்றினாலும் காதல் அவன் கண்களை மறைத்து விட்டது. ஒரு வாரம் கழித்து அதிவீரபாண்டியன் அங்கு வந்துவிட அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ருத்ரன் செய்துகொண்டிருந்தான். கூடவே நித்தமும் இதழணைப்போடு அவர்கள் காதலும் வளர்ந்தது.

அதிவீரபாண்டியன் வந்த ஐந்தாவது நாள் ருத்ரனை தனியாக அழைத்துவன் "இங்க பார்ட்டி டெக்கிரேட் பன்றவங்க யாராவது இருக்காங்களா கூப்பிடனும்" என்று கூற அவன் ஏன் என்பதுபோல் பார்த்தான். "நாளைக்கு வானதியோட பர்த்டே. அதுதான் பர்த்டே பார்ட்டி செலப்ரேட் பண்ணி அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கறதுக்காக" என்று கூற அவனுக்கு மனதிற்குள் மத்தளமிட்டது.

அவள் தனக்கென்று ஆன பிறகான முதல் பிறந்த நாள் அல்லவா தன்னால் முடிந்த ஏதோ ஒன்றை அவளுக்கு செய்யவேண்டும் என்று எண்ணியவன் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான். பின் ஒரு எண்ணம் அவனுக்கு வர மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், அடுத்தநாள் அவளுக்கு தேவையான பிறந்தநாள் பரிசையும் வாங்கினான்.

அடுத்த நாளை ருத்ரன் ஆவலோடு எதிர்பார்க்க வானதியோ ருத்ரனுக்கு தன்னுடைய பிறந்தநாள் தெரியுமா தெரியாதா என்ற குழப்பத்திலேயே இருந்தாள். அடுத்த நாளும் ஒருவாராக புலர்ந்து விட பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மாலை பார்ட்டி ஆரம்பமானது. வீட்டில் அனைவரும் இருந்ததால் வானதி ருத்ரன் இருவராலும் பேச முடியவில்லை.

அதிவீரபாண்டியன் தங்கைக்கு தான் வாங்கிய ஒரு டைமண்ட் செட்டை பரிசாக கொடுக்க, அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவள் "தேங்க்ஸ் அண்ணா" என்று அணைத்துக்கொண்டாள். சுந்தரபாண்டியனும் அன்று மதியம் வந்தவர் தனது மகளுக்கு ஒரு வீட்டை வாங்கி அதை பரிசாக அளிக்க அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை. "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பா" என்று கூறியவள் அவரை அணைத்துக் கொள்ள இதை பார்த்துக்கொண்டிருந்த ருத்ரனுக்கு தன்னுடைய பரிசு மிகவும் சிறிதாக இருக்கிறது என்ற எண்ணம் வந்தது.

அதனால் அதை கொடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்தான். ருத்ரன் தன்னை கண்டாலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறாமல் இருப்பதும் ஒரு பரிசு கூட கொடுக்கவில்லை என்ற ஏக்கமும் அவளது மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது. அந்த பார்ட்டிக்கு நெருங்கியவர்கள் சிலரை மட்டுமே அதிவீரபாண்டியன் அழைத்திருக்க, பிறந்தநாள் கேக் வெட்டிய வானதி, அதை தனது அண்ணனுக்கும் அப்பாவிற்கும் ஊட்டி விட்டாள்.

பின் அனைவருக்கும் கேக் கொடுக்கப்பட, திரும்ப ஒருமுறை ருத்ரனை பார்த்தவள் அனைவருக்கும் பேசிக் கொண்டிருக்க, தனது அண்ணனிடம் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக கூறி வெளியே வந்தாள். அங்கு வெளியில் நின்று கொண்டிருந்தான் ருத்ரன் அருகில் சென்றவள் "ருத்ரா" என்று அழைக்க வேகமாக திரும்பியவன் "சொல்லு பொம்மி என்ன" என்று கேட்டான்.

"இல்லை என் பிறந்தநாளுக்கு நீ வாழ்த்தும் சொல்லல கிப்டும் கொடுக்கல ஏன்" என்று கேட்க அவனோ "உன் தகுதிக்கு கொடுக்கிற மாதிரி என்கிட்ட எதுவும் இல்லையே" என்று இயலாமையுடன் கூறினான். அவளோ "இருக்குது ஆனா உங்களுக்கு கொடுக்க மனசு இல்லை" என்று கூறியவள் அவனை பார்த்து சிரிக்க, அப்பொழுது அதிவீரபாண்டியனின் குரல் அவளை அழைத்தது. பதட்டமானவள் "பார்ட்டி முடிந்து எல்லாரும் போனதுக்கப்புறம் இந்த இடத்துக்கு வந்துடுங்க. நான் முக்கியமா உங்க கிட்ட பேசணும்" என்று கூறிவிட்டு வேகமாக உள்ளே ஓட அவனும் அவளை பார்த்தபடியே உள்ளே நுழைந்தான்.

பின் அங்கிருந்த அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவராக விடைபெற அதிவீரபாண்டியன் சுந்தரபாண்டியன் கூட தாங்கள் உறங்கச் செல்வதாக கூறி விட்டு தங்களது அறைக்கு சென்று விட்டனர். வேலைக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து அகன்று விட இரவு 11 மணிக்கு யாருக்கும் தெரியாமல் முன்னே தாங்கள் வந்த இடத்திற்கு வந்தாள் வானதி. அங்கு ருத்ரன் நின்றுகொண்டிருக்க அவன் அருகில் வந்தவள் "வாயை திற" என்று கூற அவனோ ஏன் என்பது போல் பார்த்தான். பின் தான் பின்னால் மறைத்து வைத்திருந்த கேக்கை எடுத்து அவனுக்கு ஊட்டியவள் "இதுக்காகத்தான்" என்று கூற அவனோ அவள் காதலில் மெய் சிலிர்த்துப் போய் விட்டான்.

தனக்கு இது கிடைக்காதா என்று அவன் வானதி சுந்தர பாண்டியனுக்கும் அதிவீரபாண்டியனுக்கும் கொடுக்கும்போது ஏங்கியது அவன் மனதுக்கு தெரியும் தானே. அதை உணர்ந்த தனது காதலி கொண்டு வந்து கொடுக்கும் போது அவனுக்கு மகிழ்ச்சி எல்லையை மீறியது. அவன் திரும்பவும் கேக்கை அவளுக்கு ஊட்டி விட அவளும் இன்முகத்தோடு அந்த கேக்கை சாப்பிட்டாள்.

பின் கையை நீட்டியவள் "என்னோட கிப்ட் எங்கே" என்று கேட்க, அவனோ "நான் கிப்ட் வாங்கிட்டு வரல" என்றான்.

"எனக்கு தெரியும் பொய் சொல்லாதீங்க. நீங்க கண்டிப்பா ஏதாவது எனக்கு வாங்கி வெச்சுருப்பிங்க. ஒழுங்கா கொடுங்க" என்று கூற அவன் "சரி உன் கண்ண மூடு. நான் சொல்ற வரைக்கும் எது நடந்தாலும் நீ கண்ணை திறக்க கூடாது" என்று கூற அவளோ "அதெல்லாம் முடியாது" என்று சிணுங்கினாள்.

"நீ கண்ண மூடினா தான் நான் கிப்ட் தருவேன்" என்று கூற அவளும் வேறு வழியில்லாததால் அவன் கூறியபடி கண்களை மூடிக் கொண்டு நின்றாள்.

அவளது கால்கள் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவன் அவளது ஒற்றை காலை எடுத்து தனது மடியில் வைத்து தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த அந்த கொலுசுகளை எடுத்து அவளது கால்களில் அணிவித்தான். கண்களை மூடியிருந்தவளுக்கு புரிந்து விட்டது அவன் தனக்கு கொலுசு வாங்கி கொண்டு வந்திருந்தான் என்று. ஆனந்தத்தில் அவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை ஆனாலும் கண்களைத் திறக்கவும் இல்லை.

ஒரு மாய வலையில் சிக்கியது போல் அவள் அப்படியே நிற்க அவன் மற்ற காலையும் தனது கால் மேல் வைத்தவன் மற்றைய கொலுசையும் போட்டுக் கொண்டிருக்க, அவளோ அவனது தோள்களை வாகாக பிடித்துக் கொண்டு சந்தோஷ மிகுதியில் நின்றுகொண்டிருந்தாள். நிமிர்ந்து அவளது முகத்தை பார்த்தவன் அவளது முகத்திலிருந்த பூரிப்பை வைத்து தனது பரிசு அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான்.

அவளது பொன்னிற கால்களில் முத்தமிட அவளுக்கோ ஒரு நிமிடம் உடல் சிலிர்த்து நின்றது. இருவரும் தங்களை மறந்து அப்படியே நின்று கொண்டிருக்க அந்த இடத்திற்கு வந்த அதிவீரபாண்டியன் வேகமாக ருத்ரனை எட்டி உதைத்தான்.

சுந்தரபாண்டியன் ஒரு முக்கிய வேலையாக வெளியில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட தனது மகனை அழைத்து கிளம்புவதாகக் கூறினார். அவனும் கார் வரை சென்று அவரை அனுப்பி விட்டு வந்தவன் வீட்டின் பின்னாடி ஏதோ பேச்சுக் குரல் கேட்பது போல் இருக்க அங்கு எட்டிப் பார்த்தவன் தனது தங்கையின் கால்களை ருத்ரன் முத்தமிடுவதை கண்டு ஆத்திரம் பொங்கி விட்டது. வேகமாக வந்தவன் அவனை எட்டி உதைக்க சற்று தூரம் சென்று விழுந்தான் ருத்ரன்.

வானதியும் கூட ருத்ரனின் கால்கள் மேல் கால் வைத்து இருந்ததால் அவன் விழுந்ததில் அவள் தடுமாறிக் கீழே விழுக ஆத்திர மிகுதியால் இருந்த அதிவீரபாண்டியன் ருத்ரனை அடிக்க ஆரம்பித்து விட்டான்.

வானதியோ முதலில் அதிர்ந்தவள் பின்பு சுதாரித்து வேகமாக தன் அண்ணனைத் தடுத்தவள் "அண்ணா தயவு செஞ்சு அவர விட்டுவிடுங்க" என்று கெஞ்ச அவளையும் உதறித் தள்ளியவன் "கொன்னுடுவேன் ஜாக்கிரதை. மரியாதையா ஓரமா உட்காரு" என்று சொல்லியவன் ருத்ரனை அடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத ருத்ரன் அவனைத் திரும்பி தாக்க இருவருக்கும் அங்கு பெரிய களகமே மூண்டுவிட்டது. தன்னால்தான் இது அத்தனையும் என்று உணர்ந்த வானதி அழுது கொண்டிருக்க ருத்ரனும் பாண்டியனை வேகமாக பின்னால் பிடித்து தள்ளிவிட சுதாரித்து நின்ற அதிவீரபாண்டியன் "பிச்சைக்கார பையனுக்கு என்னோட தங்கச்சி கேட்குதா. இதுக்குதான் வேலைக்கு இருக்கிறவங்கள எல்லாம் அவங்க அவங்க இடத்துல வைக்கணும். உனக்கு என் தங்கச்சி கேட்குதா" என்று கத்த,

"காதலுக்கு பிச்சைகாரர் பணக்காரர் எல்லாம் தெரியாது சார். மனசுதான் முக்கியம் எனக்கு அவள புடிச்சிருக்கு அவளுக்கு என்ன புடிச்சிருக்கு இதுக்கு நடுவுல யாரும் வர நான் விட மாட்டேன் அது நீங்களா இருந்தாலும் சரி. உங்க அப்பாவா இருந்தாலும் சரி" என்று உறுதியாகக் கூறிவிட அதிவீரபாண்டியனுக்கு ருத்ரன் தன்னை எதிர்த்து பேசியது கோபத்தை வரவழைத்தது.

"என்னடா என்னையே எதிர்த்து பேசுறியா சாப்பாட்டுக்கு வழி இல்ல ஆனா வாய்க்கு மட்டும் குறை இல்லாமல் உனக்கு இருக்கு. சரி என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்க காதலிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு சொல்லு" என்று கேட்க ருத்ரனால் எதுவும் கூற முடியவில்லை.

பின் சுதாரித்தவன் "என்னால என் பொண்டாட்டிய கல்யாணம் பண்ணி காப்பாற்ற அளவுக்கு உடம்புல தெம்பு இருக்கு அத வச்சு நான் என் பொண்டாட்டிய காப்பாத்துவேன்" என்று கூற, அதிவீரபாண்டியன் "காப்பாத்துவ காப்பாத்துவ. இன்னைக்கு நாங்க அவளுக்கு எவ்வளவு பெரிய கிப்ட்ஸ் கொடுத்தோம் தெரியுமா. அதுல உன்னால பாதியாவது செய்ய முடியுமா என் தங்கச்சிய நீ எந்த விதத்துல நல்லா வெச்சுபேன்னு சொல்ற. எங்க அம்மாவை அவ ரூபத்துல நாங்க பார்க்கிறோம். என் அம்மா பட்ட கஷ்டத்தை அவ படக்கூடாது என நினைக்கிறேன். அதனால அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கணும் நான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனா நீ அத நடுவுல வந்து கெடுக்க பார்க்கிறாயா விடமாட்டேன். உன்ன மாதிரி ஒன்றும் இல்லாதவனா நான் என் தங்கச்சி காதலிக்கவே விடமாட்டேன்" என்று கூற,

வானதியும் "அண்ணா அவர் ரொம்ப நல்லவர் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிரா காதலிக்கிறோன்" என்று கூற அவளை வேகமாக அறைந்தவன் "ஓரமா போய் உக்காருன்னு நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். இதுக்கு மேல நடுவுல வந்த உன் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ஆனால் இவன் உயிரோடு இருக்க மாட்டான்" என்று கூற வானதி அதிர்ந்து பின்னோக்கி நகர்ந்து விட்டாள்.

உடனே கோபமுற்ற ருத்ரனும் "என்ன சார் பெருசா பணம் காசுன்னு பேசிட்டு இருக்கீங்க. உங்க பணம் காசு எல்லாம் என்ன ஒன்னும் பண்ண முடியாது. நான் ஒரு சாதாரணமானவன் தான் ஆனா என் பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்குற அளவுக்கு எனக்கு திறமை இருக்குது. உங்க சொத்து பணம் காசு மட்டும் நீங்க சம்பாதிச்சதா என்ன. உங்க அப்பா அரசியலில் இருந்து சம்பாதித்து தானே. ஏதோ நீங்க எல்லாம் மட்டும் வானத்திலிருந்து குதிச்சு பணத்தோட வந்த மாதிரி பேசுறீங்க. ஏன் இதெல்லாம் விட்டுட்டு இங்க இருந்து பாருங்க உங்க அப்பா அரசியல்ல சம்பாதிச்ச காசு தான் அது அத்தனையும் அதை வேண்டாம்னு ஒதுக்கீட்டு இருந்து பாருங்களேன்" என்று கூற,

அதிவீரபாண்டியனோ "என்னால இது இல்லாம கூட நேர்மையாய் இருக்க முடியும் உன்னால இருக்க முடியுமா உன்னால சம்பாதிக்க முடியுமா. என் குடும்ப சொத்து எவ்வளவு தெரியுமா எங்க அப்பா அரசியலில் சம்பாதித்ததை விட எங்க அம்மா வீட்டுல எவ்வளவு சொத்து இருக்கிறது உனக்கு தெரியுமா. நீ என்ன விட கொஞ்சம் அதிகமா சம்பாதிச்சு காட்டு அன்னைக்கு நான் ஒத்துக்குறேன் நீ பெரிய இவன் தான்னு" என்று அதிவீரபாண்டியன் சவால்விட,

ருத்ரனும் "சம்பாதிக்கிறேன். நீ இந்த பணம் இருக்க நாள தானே இவ்வளவு பேசுற நானும் சம்பாதிக்கிறேன். என்னால் முடிந்த எல்லா வழிகளையும் சம்பாதிப்பேன் உன்னை ஒவ்வொரு இடத்துலயும் அடிச்சு நொறுக்குவேன் அப்ப தெரியும் இந்த ருத்ர வேலன் யாருன்னு" என்று கூறிக் கொண்டே போக,

அவனைப்பார்த்து நக்கலாக சிரித்த அதிவீரபாண்டியன் "உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ" என்று கூற கோபம் கொண்ட ருத்ரன், "பண்றேன் எல்லாத்தையும் பண்றேன். ஒவ்வொரு இடத்திலேயும் உன்னை தூக்கி அடிக்கிறேன். அது நல்ல வழியோ கெட்ட வழியோ. உன்ன ஜெயிக்கனும் இப்ப அது மட்டும் தான் என்னோட குறிக்கோள். அப்புறம் நீ ஏதோ பணம் அந்தஸ்து பேசுறியே உங்க அப்பன் யாருன்னு உன்னால வெளியில சொல்ல முடியுமா" என்று நக்கலாக கேட்டான்.

அதிவீரபாண்டியனுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ வேகமாக ருத்ரன் மீது பாய அவனை எளிதாகத் தடுத்தவன் "முடியாது இல்ல அப்ப நீ எல்லாம் கௌரவத்தை பற்றி பேச அருகதை இல்லாதவன்" என்று கூற அதிவீரபாண்டியன் தன்னுடைய இயலாமையை நினைத்து தனது கை முஷ்டியை அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தக்கொண்டான்.

பின் தொடர்ந்த ருத்ரன் "என்னால பணம் காசை எந்த வழியில் வேணா சம்பாதிக்க முடியும் நீ உன்னோட அப்பனோட பேர வெளியில சொல்ல முடியுமா" என்று நக்கலாக கேட்டவன் "இப்ப புரியுதா யாரு இங்க அதிகமான கவுரத்தோட இருக்கான்னு" என்று நக்கலாக கூறிவிட்டு, "உன் தங்கச்சி தான் என்னோட பொண்டாட்டி அதற்கு மாற்று எண்ணமே இல்லை. முடிஞ்சா தடுத்துக்கோ. அதே மாதிரி உன்னை விட அதிகம் சம்பாதித்து காட்டுறேன். . உன்னை தூக்குறேன். . நீ தைரியமான ஆளா இருந்தா இதோ உங்க அப்பா காசுல படிச்சிட்டு வந்திருக்குல்ல அதெல்லாம் விட்டுட்டு ஒரு சாதாரணமான ஆளா என்கிட்ட மோதி ஜெயிக்க பாரு. வீணா உங்க அப்பா சம்பாதிச்ச காசுல படிச்சுட்டு வந்து இங்க ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்காத" என்று கூறினான்.

கோபம் கொண்ட அதிவீரபாண்டியன் "எனக்கு எங்க அப்பா வாங்கிக் கொடுத்த படிப்பு வேண்டாம் எங்க அம்மா வீட்டுக்கு தொழில் இருக்கிறது அந்த தொழிலை வைத்து நான் என் வாழ்க்கையை ஓட்டுவேன். ஆனா என்னைக்கும் என் தங்கச்சி உன்னோட பொண்டாட்டி ஆக மாட்டா" என்று கூறியவன் வானதி அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட ருத்ரன் அதிவீரபாண்டியன் எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவனைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உழன்று கொண்டு இருந்தான்.

வானதியை வேகமாக அவளது அறைக்கு இழுத்து வந்து தள்ளியவன் "இங்க பார் அவனை மறந்து விடு இனிமேல் ருத்ரன் கித்ரன்னு ஏதாவது உளறி கிட்டு இருந்தான்னா அப்புறம் அவ்வளவுதான் உயிரோட கொன்னுடுவேன் ஜாக்கிரதை" என்று மிரட்டியவன் தனது அறைக்கு சென்று இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்படியே கண்ணயர்ந்து விட அடுத்த நாள் காலை எழுந்தவன் தனது தங்கையை காண அவளது அழைத்துச் செல்ல அவளோ அங்கு இல்லை. அதே நேரத்தில் மதுரையில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோயிலில் ருத்ரன் வானதிக்கு தாலி கட்டிக் கொண்டிருந்தான்.
 
MaryMadras

Well-Known Member
#2
அருமையான பதிவு ஆதிரா:):):).அம்மா பட்ட கஷ்டத்தை வானதி படக்கூடாது,நிம்மதியான வாழ்க்கை தரவேண்டும் என பாண்டியன் சொல்ல,எந்தவழியில் என்றாலும் பணம் சம்பாதிப்பது குறிக்கோள் என ருத்ரன் சொல்வதும்,அப்பாபேர் வெளியே சொல்லமுடியாதவன் என்று சொல்லும்போது ,அண்ணனை மட்டுமில்லை தன்னையும் சொல்வது என்று வானதிக்கு தெரியவில்லையா,:unsure::unsure::unsure:அப்போதே ருத்ரன் குணம் தெரிந்து விலகாமல் காதல் கண்ணை
மறைத்து விட்டதா:rolleyes::rolleyes::rolleyes:.
 
Last edited:

Aadhiraa Ram

Well-Known Member
#4
அருமையான பதிவு ஆதிரா:):):).அம்மா பட்ட கஷ்டத்தை வானதி படக்கூடாது,நிம்மதியான வாழ்க்கை தரவேண்டும் என பாண்டியன் சொல்ல,எந்தவழியில் என்றாலும் பணம் சம்பாதிப்பது குறிக்கோள் என ருத்ரன் சொல்வதும்,அப்பாபேர் வெளியே சொல்லமுடியாதவன் என்று சொல்லும்போது ,அண்ணனை மட்டுமில்லை தன்னையும் சொல்வது என்று வானதிக்கு தெரியவில்லையா,:unsure::unsure::unsure:அப்போதே ருத்ரன் குணம் தெரிந்து விலகாமல் காதல் கண்ணை
மறைத்து விட்டதா:rolleyes::rolleyes::rolleyes:.
Romba nandri ma:love::love: andha வயசுல kadhal kanna marichuduchu.. ipo feel panra..
 
Janavi

Well-Known Member
#6
காதல் ,எல்லாவற்றையும் மறக்க செய்யும்.... வானதி மட்டும் விதிவிலக்கா.... Nice sis
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes