ஜெய் ஸ்ரீராம்

#1
ஒரு குட்டி கதை:

ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை
தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார்.

எனவே மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார்.
அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டார்

ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார்.

"நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
எனவே தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது!'' என்றார் அஞ்சனை புத்திரன்.

பக்தரும் சம்மதித்தார்
இருவரும் விளையாட ஆரம்பித்தனர்.

பக்தர் ஒவ்வொரு முறையும் "ஜெய் அனுமான்" என்றபடியே காய்களை உருட்டினார்.
ஆஞ்சநேயர் ''ஜெய் ராம்" என்றபடி காய்களை உருட்டினார்.

ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றான்.
"சரி அடுத்த முறை ஜெயிக்கலாம்!" என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட வெற்றி பக்தனின் பக்கமே!

மனம் வருந்திய ஆஞ்சநேயர் "ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா...?" என்று ராமரிடம் பிரார்த்தித்தார்.

அவர் முன் தோன்றிய ராமன், "ஆஞ்சநேயா... நீ, என் பக்தன் ஆதலால், உன்னிடம் என் சக்தி இணைந்துள்ளது.
அவனோ உனது பக்தன்.
ஆதலால் அவனது சக்தியுடன் நம் இருவரது சக்தியும் இணைந்து விடுகிறது.
இதுவே அவனது வெற்றிக்கு காரணம்!'' என்றார்...

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes