சேனை கிழங்கு கறி

Sahi

Well-Known Member
#1
தேவையானப்பொருட்கள்:
சேனை கிழங்கு: ¼ கிலோ
வெங்காயம்: 3 (பொடியாக நறுக்கியது)
பூண்டு: 5 பல் (துருவியது)
இஞ்சி: 1 inch (துருவியது)
தக்காளி: 1 (medium size)
சோம்பு/சீரகப்பொடி: 1 ஸ்பூன்
கரம் மசாலா: 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி: 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி: 1/2 ஸ்பூன்
தனியா தூள்: 3 ஸ்பூன்
உப்பு: ருசிக்கேற்ப
கறிவேப்பிலை: 1 கொத்து
எண்ணை: தேவையான அளவு

செய்முறை:
சேனை கிழங்கை தோல் சீவி, கழுவி சின்ன சின்ன cubes நறுக்கவும். நறுக்கிய கிழங்கை கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து கால் பாகம் வேகவைத்து தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் கறிவேப்பிலையை பொரித்து தனியாக எடுத்துவைத்துவிட்டு பின்னர் வேகவைத்த கிழங்கை பொன்னிறமாக வறுக்கவும்.
அதே வாணலியில் எண்ணெயை குறைத்துவிட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து, மேலே குறிப்பிடப்பட்ட மசாலா தூள், உப்பு சேர்த்து வேக விடவும். பச்சை வாசனை போனதும் சிறிது தண்ணீர் தெளித்து அதனுடன் கிழங்கை சேர்த்து மிதமான தீயில் மூடிபோட்டு வேகவிடவும். பின்னர் பொரித்த கறிவேப்பிலை சேர்த்தால் சுவையான சேனை கிழங்கு கறி தயார்.
செய்துப்பார்த்துவிட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுன்னு.
குறிப்பு:
கிழங்கு அறியும் போது கை அரிப்பெடுத்தால் வேகவைக்கும் நீரில் சிறிது புளி கரைசல் சேர்த்தால் சாப்பிடும் போது நமைச்சல் இருக்காது.
நன்றி. IMG_20181013_141045.jpg
 

Latest profile posts

ஹாய் பிரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்
Vijaya RS wrote on Lakshmi N's profile.
Happy birthday Lakshmi N.
Inniku mazhai adikum un pechu next episode undu friends

Sponsored