சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி

Advertisement

Sahi

Well-Known Member
பிரியாணிக்கு பாசுமதி அரிசிதான் அப்படினு கிடையாது நம்ம பாரம்பரிய சமையல்ல நல்ல சுவையான அரிசி வகைகள் இருக்கு. அதுல முதன்மையான ரெண்டு வகைகள் சில்க்கி பொன்னி மற்றும் சீரக சம்பா.

சில்க்கி பொன்னி சுவை அருமையா இருக்கும். வீட்ல செய்ற பிரியாணி வகைகளுக்கு ஏற்றது. விலையும் நம்ம பட்ஜெட்குள்ள (52 ரூ/கிலோ).

சீரக சம்பா சுவையோட அதோட மணமும் அசத்தும். உணவகங்கள்ள சாப்பிடற உணர்வு கொடுக்கும்.

அந்த சீரக சம்பா வச்சு நம்ம ஒரு மட்டன் பிரியாணி பண்ணலாமா தயாரா இருக்கீங்களா.

கொஞ்சம் நீளமான பட்டியல். எளிமையா இருக்க பிரிச்சு கொடுத்திருக்கேன். ஏதாவது குழப்பமாயிருந்துச்சுனா சொல்லுங்க தெளிவுப்படுத்தறேன். பிழை இருந்தா மன்னிச்சு சுட்டிக்காட்டுங்க திருத்திக்குறேன்.

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ (1/2 மணி நேரம் ஊறவைத்தது)

மட்டன் – 1/2 கிலோ

தக்காளி - 1

பிரியாணி இலை – 2

தயிர் – ½ cup

பெரிய வெங்காயம் நீள வாக்கில் அரிந்தது - 2

மஞ்சள் தூள் – 1 teaspoon

மிளகாய் தூள் – 1 tablespoon

எழுமிச்சை சாறு - 1/2 மூடி

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

Step 1

கல்பாசி – 1

பட்டை – 2

கிராம்பு – 5

மராத்தி மொக்கு – 2

நட்சத்திர சோம்பு – 2

ஜாதிபத்ரி – 1

ஏலக்காய் – 5

ஜாதிக்காய் (பொடித்தது) –1/4 teaspoon

Step 2

தனியா – 2 tablespoon

மிளகு – 1 teaspoon

சீரகம் - 1 teaspoon

சோம்பு – 1/2 teaspoon

Step 3

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

இஞ்சி – ½ inch

முழுப்பூண்டு – 2

Step 4

புதினா – 2 கை அளவு

கொத்தமல்லி – 2 கை அளவு

Step 5

தேங்காய் துருவல் – 2 tablespoon

செய்முறை:

ஆட்டுக்கறியை நல்லா சுத்தம் செய்து 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வச்சுருங்க.

பிரியாணிக்கு சரிக்கு சரி கறி போட்டாத்தான் நல்லா சுவையா இருக்கும்.

1 டம்ளர் சீரக சம்பா அரிசிக்கு 1.5 டம்ளர் தண்ணீர் (தேங்காய் பாலும் சேர்த்து அளந்துக்கோங்க).

Steps 1 and 2ல கொடுத்துள்ள பொருட்களை லேசா வாசனை வர்ற அளவு வறுத்து, ஆறவைத்து பொடிக்கவும் (இதுதான் சீக்ரெட் பிரியாணி மசாலா).

Step 3 ல உள்ள பொருட்களை மிக்ஸியில விழுதாக அரைக்கவும்.

Step 4 ல உள்ள பொருட்களில் 1 கை (புதினா, கொத்தமல்லி) மட்டும் அரைக்கவும்.

தேங்காய் பால் 1 கப் எடுக்கவும்.

குக்கரை அடுப்பில் ஏற்றி 3 ஸ்பூன் நெய், 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு 4 பிரியாணி இலை தாளிக்கவும்.

அரிந்துவைத்த பெரியவெங்காயம் போட்டு மொறுகளா வறுக்கவும். பின் Step 3 விழுது, Step 4 விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்க்கவும். ஒவ்வொரு பொருளும் சேர்த்தப்பின் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் போது தயிர் சேர்த்து கிளறி, மட்டனை சேர்த்து 15 நிமிடங்கள் வெயிட் போட்டு மூடி சிம்மில் வேகவிடவும்.

கறி வெந்ததும் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் (அளந்து வைத்தது) ஊற்றி கொதி வந்ததும் அரிசி சேர்த்து மீதமுள்ள புதினா, கொத்தமல்லி (1 கை) சேர்க்கவும். 1/2 மூடி எழுமிச்சை சாறு பிழிந்து, 1 ஸ்பூன் நெய் விட்டு அதிக தீயில் வைத்து கிளறவும். தண்ணீர் வற்றி அரிசி மசாலாவுடன் கலந்து வரும் நேரம் தம்மில் (தோசை கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் குக்கரை வைத்து தட்டு போட்டு மூடி அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சிம்மில் 20 நிமிடங்கள் வைக்கவும்) வைத்தால் பிரியாணி ரெடி. அடுப்பை அணைத்தப்பிறகு ஒரு 10 நிமிடம் கழித்து மூடியை திறந்தால் சுவையான மட்டன் தம் பிரியாணி ரெடி.

கத்திரிக்காய் தாளிச்சான், தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும். செஞ்சு சாப்பிட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுன்னு.

நன்றிIMG_20181225_153713.jpg
 
Last edited:

Joher

Well-Known Member
எங்களுக்கு ரொம்ப பிடித்த பிரியாணி........
நான் ஊரில் விறகடுப்பு தம்....... சென்னையில் குக்கர்.........

அரிசி அளவு அதிகமா இருந்தால் மொத்தமா ஊற்றும் தண்ணீர் இன்னும் கொஞ்சம் குறைச்சிக்கலாம்.........
சீரக சம்பா சீக்கிரம் குழைஞ்சிடும்......... so தண்ணீர் பார்த்து சேர்க்கணும்......... (தயிர் ஊற்றி மட்டன் வேக வைக்கும் போது கொஞ்சம் அதிகமா ஈரம் சேரும்.........)
 

Sahi

Well-Known Member
Correct sis. mutton vendhathum thanneer alavu check senchu oothinane. Two times try pannane romba nalla pola polannu vandhuchu. So yam petra inbam peruga ivvaiyagam...
 

Joher

Well-Known Member
Correct sis. mutton vendhathum thanneer alavu check senchu oothinane. Two times try pannane romba nalla pola polannu vandhuchu. So yam petra inbam peruga ivvaiyagam...

அப்ப ஓகே..... சீரக சம்பா கொஞ்சம் risky தண்ணீர் விஷயத்தில்....... அதனால அது வாங்குறதில்லை.......
 

Sahi

Well-Known Member
Achacho negative ayiducha. Route ah maathu:p
Sis unga cooking experienceku idhellam oru matter ah.
But enakku ennamo basmati yoda seeraga samba pidikkum
Joher sisku riskellam rusk sappidra mathirinnu kelvi pattane;)
 

Joher

Well-Known Member
Achacho negative ayiducha. Route ah maathu:p
Sis unga cooking experienceku idhellam oru matter ah.
But enakku ennamo basmati yoda seeraga samba pidikkum
Joher sisku riskellam rusk sappidra mathirinnu kelvi pattane;)

நான் எப்படினாலும் என்னோட சமையல் manage பண்ணுவேன்.....
நான் பிரியாணின்னு கூழு காய்ச்சுட்டா எல்லோரும் காண்டாகிடுவாங்க.......
so சாப்பாட்டில் no ரிஸ்க்...........
 

Chitrasaraswathi

Well-Known Member
படத்தை போட்டதற்கு ஆளுக்கு ஒரு பிளேட் சப்ளை செய்யலாம்பா சூப்பர் சீக்ரெட் மசாலாவுக்கு ஒரு நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top