சிரிக்க மட்டும் 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
#நகைச்சுவை_விருந்து_!

படித்ததில் அடித்தது

*அந்தப்க பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.*

*விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,*

*"உங்கள் பெயர் என்ன?''*

*அந்தப் பெண் "கமலம்'' என்றாள்.*

*"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?'' என கேட்டார் வக்கீல்,*

*அதற்கு அவள் "தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்'' என்றாள்.*

*"அவள் பெயர் என்ன?'' அடுத்த கேள்வியை கேட்டார் வக்கீல்.*

*"அவள் பெயரும் கமலம் தான்" எனப் பதிலளித்தாள்.*

*வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,*

*"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''*

*அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.*

*"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்"*

*இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,*

*"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"*

*நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,*

*"ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் ஏது?''*


*Anti climax !*

*வே.காரி : இல்லை அவர் என் பேரை சொல்லலை...*

*நீதிபதி ‌: ( வேலைக்காரியிடம்..)*
*அதெப்படி.. அவர் உன் பெயரை ‌சொல்லவில்லை என்று அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?*

*வே.காரி : என்னை‌ அவர் எப்பவுமே டார்லிங் ‌னு‌ தான் கூப்பிடுவார்.. என் பேரைச் சொல்லி கூப்பிடுங்க ரொம்ப ஆசையா இருக்குன்னு பல முறை சொல்லியிருக்கேன்.. அந்தச் சனியனை நினைவு படுத்தாதே.. அப்புறம் நான் ‌மனுஷனா இருக்க மாட்டேன்னு ரொம்ப கோபப்படுவாருங்க, எஜமான்..*

*நீதிபதி : ‍

*Anti climax to Anti climax..*
..
*நீதிபதி : அப்படியானால் இவர் மீதான குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை என கேஸை தள்ளுபடி செய்கிறேன்..*

*மனைவி & வேலைக்காரி :*

*அதெப்படீங்க எசமான்..*
*அப்படீன்னா, அந்த மூணாவது கமலம் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க..*

*நீதிபதி : *
 

Megala kailasam

Active Member
அய்யோ முடியலப்பா ஹஹஹ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:அந்த மூணாவது கமலம் எங்க மா இருக்கா:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top