சிந்தையில் நிறைந்த தேனமுதே-2

Pallavi

Writers Team
Tamil Novel Writer
#1
கணவனின் போனிற்கு லைன் கிடைத்ததா என கேட்க ஸ்நேஹாவோடு சித்தார்த்தின் அறைக்கு வந்தாள் சான்வி.

"போயும் போயும் அவன்கிட்ட போன் பண்ண சொன்னீங்களா!அத அவன் எப்பவோ மறந்திட்டு ரித்திகா கூட கனவுல டூயட் பாடிகிட்டு இருப்பான்..."

"ஸ்நேஹா! எப்பவும் அவர் கால இழுத்துகிட்டே இருக்கனுமா?!"

"அது தான் என்னோட ஃபேவரைட் விளையாட்டு அதையும் விட சொல்றீங்களா!"

பேசி சிரித்தபடி இருவரும் சித்தார்த்தின் அறைக்கு வந்தனர்.

அங்கே உலக நினைவே இல்லாமல் சிலையென நின்ற அவனைப் பார்த்து திகைத்தனர்.

"பாத்தீங்களா அண்ணி!நா சொல்லல போன் பண்றத விட்டுட்டு கண்ணை தொறந்துகிட்டே கனவு காண்றான்"
என்ற ஸ்நேஹா அவனருகே சென்று அவன் தோளை உலுக்கினாள்.

"அண்ணா!சித்து அண்ணா!சித்து!டேய் சித்து!கனவுலேந்து முழிச்சுக்கோ...அண்ணி ரகு அண்ணாக்கு போன் பண்ண சொன்னாங்களே...பண்ணிட்டியா?"

அவள் என்னதான் உலுக்கினாலும் அவன் அசையவேயில்லை...அவளுக்கே இப்போது அவன் விளையாடவில்லை...ஏதோ விஷயம் என புரிந்தது.உள்ளே நடுக்கத்தோடு பெரியவர்களை அழைத்து வர ஓடினாள்.

அவன் முகத்திலிருந்தே ஏதோ என்று உணர்ந்தாள் சான்வி.கீழே இரண்டு பாகமாக உடைந்திருந்த அவன் போனும் அதை ஊர்ஜிதம் செய்தது.நடுங்கும் கரங்களால் அவன் போனை எடுத்து சரி செய்தாள்.உயிரிழந்த அதற்கு உயிர்க் கொடுத்தாள்.போன் லோக்கை தேடி வந்து போன கால்களை அலசினாள்.

கடைசியாக வந்த கால் வெளிநாட்டு காலே... படபடக்கும் இதயத்தை அடைக்கியபடி அந்த நம்பர் யாருடையது என யோசித்தாள்.தன் நம்பருக்கு கிடைக்காவிட்டால் தன் பார்ட்னர் சுரேஷிற்கு தொடர்பு கொள்ளுமாறு ரகுராம் கொடுத்திருந்த நம்பர் அது.அந்த கால் வந்த பின் சித்தார்த் ஏன் அப்படி சிலையென நிற்க வேண்டும்?ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும்...பயந்த மனதை ஒன்றும் இருக்காது ஒன்றுமே இல்லை என சொல்லி உருப்போட்டாள்.

ஸ்நேஹாவின் தகவலால் வீட்டோர் அனைவரும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.எதிரே நிற்பவரே தெரியாமல் வெறுத்து நோக்கியபடி நின்ற சித்தார்த்தைக் கண்டு அவர்களும் பயந்தனர்.

"சித்து!சித்து!என்னடா ஆச்சு?ஏன்டா இப்படி நிக்கறே?"என்று அவனை உலுக்கினார் லஷ்மி.

"சித்து!வாட் இஸ் திஸ்?என்னாச்சுன்னு சொல்லப் போறியா இல்லையா?"என்றார் ஜனார்த்தனன்.

"சித்து பையா!பாட்டிக்காவது என்னாச்சுன்னு சொல்லுடா ராஜா"என்று அவன் மொதுகை தடவிக் கொடுத்தார் பாட்டி.

யார் எப்படி கேட்டாலும் வாய்திறவாமல் மூச்சு விட மறந்து நின்றிருந்தான் அவன்.இதுவரை பொறுத்து பொறுத்து பார்த்த சான்வி நேராக அவனெதிரே வந்து நின்றாள்.

"சித்து! சுரேஷ் என்ன சொன்னாரு?உங்க அண்ணாக்கு ஒண்ணுமில்லையே?அவர் நல்லாத்தானே இருக்காரு? சொல்லுங்க சித்து...இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?"

பதில் இல்லாமல் போகவும்..'பளளார்ர்'என அடித்தாள் அவன் கன்னத்தில்.அடித்த வேகத்தில் திடுக்கிட்டு பார்த்த சித்தார்த்.எறிந்த கன்னத்தை தடவியபடி அங்கே நின்றிருந்த எல்லோரையும் பார்த்த சித்தார்த்திற்கு போனில் கேட்டது அப்போதுதான் நினைவில் தாக்கியது.

"ஹலோ சுரேஷ் அண்ணா! சொல்லுங்க...எப்படி இருக்கீங்க... அண்ணா நம்பருக்கு போகவே மாட்டேங்குதே.... ரொம்ப பிஸியோ!"

"சித்து!ஒரு பேட் ந்யூஸ் மனசை தைரியமா வச்சுக்க.... நீதான் வீட்டுல இருக்குற மத்தவங்கள சமாதானப்படுத்தனும்... நேத்து இங்க எதிர்பாராத விதமா நடந்த டெரரிஸ்ட் அடாக்ல வழில வந்த ரகுவ ஷூட் பண்ணிட்டாங்க....ஸ்பாட் அவுட்...பாடிய அனுப்ப எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்... நானும் பின்னடியே வந்திட்றேன்... நீதான் தைரியமா எல்லாரையும் ஹேண்டில் பண்ணனும்...ஓகே பை...."

அதை நினைவு கூர்ந்தவன் பொங்கும் கண்ணீரோடு அவளைப் பார்த்தான்.

பதில் சொல்லாமல் நின்றிவனின் சட்டை காலரைப் பிடித்து உலுக்கியபடி,

"சித்து சொல்லுங்க...உங்க அண்ணாக்கு என்னாச்சு... சொல்லுங்க...சித்து...."

அடைத்த தொண்டையை சரி செய்தவன்,

"அண்ணி!....அண்ணி!..அது...அண்ணா....ரகு அண்ணா.....அண்ணா நம்பள விட்டுட்டு போயிட்டான் அண்ணி....போய்ட்டான்...."

"பொபொய்ய்ய்...."என உரக்க கத்தினாள் சான்வி.

"டேய் சித்து! விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதேடா....அடி பின்னிடுவேன்"என்று அவனைத் திட்டினார் லஷ்மி.

"ஆமா சித்து!விளையாட்றதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.....இனிமே இது மாதிரி விளையாடாதே..."என்றார் ஜனார்த்தனன்.

"ஐய்யோ நா விளையாடல..... அமெரிக்காவுல நேத்தி நடந்த டெரரிஸ்ட் அடாக்ல அண்ணாவை சுட்டுடாங்களாம்.....ரகு அண்ணா இப்ப உயிரோட இல்ல...."
சொல்லியவன் கால் மடங்கி கீழே உட்கார்ந்து அழுதான்.

அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் ஹோவென அழ ஆரம்பித்தனர்.

"ஐயோ ரகு! அம்மாவ விட்டுட்டு போயிட்டியா....ரகு...!"

"ரகு கண்ணா ஏன்டா எங்கள விட்டு போன?!"

எல்லோரின் அழுகையின் மத்தியில் சான்வி மட்டும்,

"இல்ல பொய்....எல்லா பொய்.... அவருக்கு ஒண்ணும் ஆகல.... ஒண்ணும் ஆகல.....அவரு நல்லாத்தான் இருக்காரு...."

என்றவாறே பின்னோக்கி நகர்ந்தவள் தன் நினைவிழந்து கீழே விழுந்தாள்.

"அண்ணி!....."

"சானும்மா!"

"சான்வி"

என பதறினர் அனைவரும்.

இருபது மணி நேரத்திற்கு பிறகு நினைவு திரும்பிய சான்வி பிரமை பிடித்தவள் போல் இருந்தாள்.கண்டது கேட்டது எல்லாம் கனவாக இருக்க வேண்டும் என எண்ணியது அவளின் ஆழ்மனம்.ஆனால் ஆம்புலன்ஸில் வந்தது ரகுராமின் உடல்.அதை பார்க்க முடியாமல் மயங்கி விழுந்தார் லஷ்மி.மரக்கட்டை போல் இருந்த சான்வியை ஸ்நேஹா சென்று அழைத்து வந்தாள்.

எல்லா சாங்கியங்கள் முடிந்து ரகுவின் உடலை எடுத்து சென்ற போதும் அந்த மரக்கட்டைத் தன்மை மாறவேயில்லை.அழுதுவிடு என யார் கூறியும் அவள் அழவேயில்லை.

இரண்டு நாட்களுக்கு பிறகு மருந்து வேகத்தில் தூங்கிக் கொண்டிருந்த சான்வியின் அறை வாயிலில் நின்றிருந்தான் சித்தார்த்.

விதவைக் கோலத்தில் துவண்டக் கொடியென தூங்கிய அவளைக் கண்டு ரத்தம் வடிந்தது அவன் இதயத்தில்.அவளின் ஒளிமயமான வாழ்வை சூன்யமாக்கிய விதியை சபித்தான் அவன்.மவுனக் கண்ணீரில் குலுங்கியது அவன் உடல்.

ரகு மறைந்து இருபது நாட்கள் ஆனபோதும் சான்வியிடம் எந்த மாற்றமும் இல்லை.இப்படியே அவள் துக்கத்தை வெளியிடாமல் தன்னுள்ளயே வைத்திருந்தால் அவள் நிலை கவலைக்கிடமாகி விடும் என பயந்த சித்தார்த் அவளை வெளிக் கொணர ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.அதற்காக அவளைத் தேடிக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

வான்வெளியை வெறுத்திருந்தன அவளின் கண்கள்.மெதுவாக அவளின் அருகே சென்று நின்றான்.அவன் வந்ததையும் உணராமல் சிலையென நின்றாள் அவள்.

"அண்ணி!"

"சான்வி அண்ணி!"

"இங்க பாருங்க...இப்படியே எத்தன நாளுக்கு இருப்பீங்க...அடச்சு வச்சுக்கிட்டு இருக்குற தூக்கத்தை வெளில விடுங்க...அப்பத்தான் உங்க மனசு சமாதானம் ஆகும்...ரகு அண்ணா நம்பளோட இல்ல...அவன் என்னிக்கும் திரும்பி வர போறதுல்ல....அவன் போனதையே எங்களால ஜீரணிக்க முடியால.... நீங்க இப்படியே உள்ளுக்குள்ளையே மருகி மருகி உங்களுக்கும் ஏதாவது ஆயிடுச்சுன்னா எங்களால அத தாங்க முடியாது அண்ணி...கண்டிப்பா தாங்க முடியாது...ப்ளீஸ் மனசு விட்டு அழுதுடுங்க... அண்ணி...அழுதுடுங்க"

இவ்வளவு சொல்லியும் அவள் காதே கேட்காதவள் போல நின்றிருந்ததைக் கண்டு கோபம் கொண்ட சித்தார்த் தான் யார் அவள் யார் என்பதை மறந்தான்.அவளின் தோளை அழுத்தி பற்றித் தன் புறம் திருப்பினான்.

"இப்ப நா சொல்லறத கேக்கப் போறீங்களா இல்லையா? சொல்லுங்க... சொல்லுங்க..."

என அவளை உலுக்கினான்.அவனைப் பார்த்து மலங்க விழித்தாள் அவள்.அது அவனின் கோபத்தை அதிகப்படுத்த 'பளார்...'என அறைந்தான் அவள் கன்னத்தில்.

"புரிஞ்சுக்குங்க....ரகு அண்ணா நம்மளோட இல்ல.... அவன் என்னிக்கும் திரும்பி வராத எடத்துக்கு போய்ட்டான்..."

"அவரு போய்ட்டாரா?திரும்பி வரவே மாட்டாரா?ஏன் போனாரு...என்னை விட்டு ஏன் போனாரு... ரரகுகு......ஏன் போனீங்ககக.....ரகு......"

இதயமே வெடித்துவிடும் போல் கால்கள் மடிந்து அமர்ந்து பற்றிய சித்தார்த்தின் கையில் முகத்தை அழுத்தியபடி அழுதாள் சான்வி.இத்தனை தினங்கள் அடக்கி வைத்திருந்த துக்கத்தை வெளிக் கொணர்ந்த ஹோவென கதறினாள்.

வெறுமையாக இருந்த இன்னொரு கையால் அவள் தலையை தடவியபடி அவனும் கண்ணீர் விட்டான்.

சான்வியை தேடிக் கொண்டு வந்த தாத்தா பாட்டி இருவரும் நடந்ததைப் பார்த்து மவுனக் கண்ணீர் விட்டனர்.
 
Advertisement

Sponsored