சித்திரையில் பிறந்த சித்திரமே 9

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 9
வீட்டிற்க்கு வந்தவுடன் பத்ரா லெட்சுமியிடம் ” லெட்சுமி உனக்கு மாப்பிள்ளை முடிவு பண்ணியாச்சு மாப்பிள்ளை பெயர் உதயா “
நம்ம நிவி மாப்பிள்ளையோட தம்பி தான் நீங்க மூனு பேரும் ஒரே வீட்டுக்கு வாழ போறதுல எங்க எல்லாருக்கும் எவ்வொளோ சந்தோசம் தெரியுமா ?
“நீங்க மூனு பேரும் சந்தோசமா இருக்கனும்,அப்புறம் நம்ம மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் தெரியுமா ?
கமலுக்கு போலிஸ் டிரெயினிங்க்கு என்னலெல்லாம் பண்ணனும்னு சொல்லி கொடுக்கிறேன் சொல்லிருக்காரு “ என பத்ரா மாப்பிள்ளை புராணம் பாட
“ சரி எல்லாருக்கும் மாப்பிள்ளையை பிடிசு இருக்கு சரி எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னு தோணலைல யாருக்கும் “ என லெட்சுமி பாய
“ உன்னை பெத்த அம்மா நான் உன் வாழ்க்கை எப்படி அமையனும்னு எனக்கு தெரியும்,
மாப்பிள்ளைக்கு உன்ன பிடிச்சுருக்கு அதை உங்கிட்ட சொல்லி உன் பின்னாடி சுத்தி உன் பெயரையும் கெடுத்து அவர் பெயரையுமா கெடுத்துக்கிட்டாரு இல்லைல முறைப்படி அவங்க அம்மா,அப்பாவ வைச்சு பொண்ணு கேட்டாங்க்கா’ “
அதுவும் இப்போ நீ இருக்குற மனநிலைல உடனே கல்யாணாம் வேணாம் இன்னும் ஒரு ஆறு மாசம் போட்டும் இப்போதக்கு பரிசம் மட்டும் போட்டுக்கலாம், வரதட்சனையும் எதுவும் வேணாம் என் பொண்டாட்டிக்கு நானே எல்லாம் பார்த்துபேன் அப்படினு சொல்லுறாரு’
“ நாங்க உனக்கு வரதட்சனை இல்லாம கட்டி கொடுக்குறதுக்காக மட்டும் இப்டி செய்றோம்னு நினைக்காத நாங்க உனக்கு செய்ய வேண்டிய எல்லா கடமையும் கரெக்டா செய்ஞ்சுருவோம் ,ஆனா இப்படி ஒரு மாப்பிள்ளையைய தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது “
“ அதுனால நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத பாப்பா “
என கூறி சென்று விட்டார்.
ரூம்மில் வந்து கட்டிலில் விழுந்தவளுக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை “
என கூறி சென்று விட்டார்.
ரூம்மில் வந்து கட்டிலில் விழுந்தவளுக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை
“ இவன் எங்க இருந்து வந்தான் ஒரேநாள்ல் குடும்பத்தையே அவன் புராணம் பாட வைக்கிறான்,ஆனா அவன் எங்கிட்ட வந்து நான் உன்ன காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லையே ,அவன் ஆசைப்பட்டத அடைய போற மாதிரி தான பேசுனான் .
‘ இனி இந்த விசயத்துல் எந்த முடிவும் நம்மளால எடுக்க முடியாது “
“ இதுல கமலோட வாழ்க்கை மட்டும் இல்ல நிவியும்,கீர்த்தியும் வேற இருக்காங்க இதுக்கு ஒரு நல்ல முடிவு நீங்க தான் அப்பா சொல்லனும் என்னால முடியல டாடி பிளிஸ் என கூறி கொண்டே களைப்பில் தூங்கி விட்டால் “
‘ பெண்ணின் பெருமையை பேசியவள் தான்
இன்று பேச்சையும் மறந்த பேதையாய் ஆனாய்
தன் குடும்பத்தின் நலன் காக்க
தன் ஆசைகளையும் கனவுகளையும் தன்னுள்ளே
புதைத்துக் கொள்ளுவது கூட பெண்ணின் பெருமை தான்
இதற்கு இவள் மட்டும் விதிவிலக்கா என்ன ?
அந்த வார இறுதியில் லெட்சுமியையும் கீர்த்தியையும் பொண்ணு பார்க்க வருவதாக இருக்க் அன்றெ இருவருக்கும் பரிசம் போடுவதாக இருந்தது.
“ லெட்சுமி இப்பொழுதெல்லாம் யாரிடடும் அதிகம் பேசுவதில்லை அதற்கு மேல் அவளின் பழைய கேலிகள் எதுவும் இல்லை “
அன்று நிச்சய நாள் கீர்த்தி-அர்ஜூன் ஜோடிக்கு இனிமையானதாகவும் உதயாவிற்கு இன்பமானதாகவும் லெட்சுமிக்கு படபடப்பு மிகுந்ததாகவும் இருந்தது.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட்டனர்
“ அனைவரும் கூடி இருக்க நம்ம இரண்டு மாப்பிள்ளைகள் மட்டும் எங்கடா நம்ம பொண்டாட்டிய காணோம் என் தேடி கொண்டீருந்தனர் “
( ஸ்டாப் நம்ம ஹிரோவ வர்ணிக்க வேண்டாமா )
வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டி இருந்த சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்து ஒரு போலிஸ்ற்க்கே உரிய மிடுக்குடன் அமர்ந்திருந்தவனை கண்டு யாருக்கும் அவன் மீது இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.
“ பெண்கள் இருவரையும் நிவேதா அழைத்து கொண்டு வர நிரஞ்சனின் பார்வை வேறு எங்கு இருக்கும் நிவேதாவிடம் தான் “
எல்லோரும் ஆசிர்வதித்து பெண்கள் இருவரையும் புடவை மாற்றி வரச்சொல்ல
“ புடவை மாற்றி வந்தவர்களிடத்திலிருந்து நம்ம மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் கண்ணை எடுக்க முடியவில்லை “
லெட்சுமியும் ,கீர்த்துவும் கலர் பட்டு உடுத்திருக்க அதை கண்ட மாப்பிள்ளை இருவருக்கும் தான் கண்களை எடுக்க முடியவில்லை.
நம்ம ஹிரோ கவிதை சொல்லுறாருப்பா வாங்க கேட்போம்
“உன் கண்ணில் தீட்டீருக்கும் மையின் அழகில்
மயங்குதடி என் மனம்
உன் கூந்தலில் வாசம் செய்யும் மல்லிகை
மணத்தில் என் மனம் சரணடைந்ததடி உன்னிடம்
உன் மேனி தழுவி நிற்கும் சேலை மீது
செல்ல கோபம் கொண்டேனடி
என் காதில் ஒலிக்கும் உன் கொலுசொலியில்
காதல் நான் கொண்டேனடி
உன்னை மடி தாங்கி என் மரணம் வரை
மகிழ்ச்சியாய் இருக்க வருவாயோ நீ என் மனைவியாக ?
( இதை நீ அவக்கிட்ட சொல்லி இருந்தாலும் புண்ணியம் உன் மனசுக்குள்ள சொல்லி முடியலைடா எங்களுக்கு உங்களோட )
நிச்சய தாம்பூலம் மாற்றியவுடன் மணமக்களை மோதிரம் மாற்றிக்கொள்ள சொல்ல
“ உதயாவும்,அர்ஜூனும் தன்னவளின் கரங்களை பற்றி மோதரமிட அதில் அவர்கள் இருவரின் பெயரும் இருந்தது “
“ மெதுவாக யாரும் அறியாமல் லெட்சுமின் உள்ளங்கையினை வருட டப்பக்கென்று அவள்
நிமிர்ந்து பார்க்க அப்பறம் தான் தெரிந்தது போலிஸ் அவரை நிமிர்ந்து பார்க்க வைக்க நடந்த் நாடகம் என்று “
“ அங்க ஒரு ஜோடி கண்ணாலே காதல் பேசிக்கிட்டு இருந்துச்சு வேற யாரு நம்ம கீதுவும் அர்ஜூனும் தான் “
“ அர்ஜூன் தன்னவளுக்காக வங்கி வந்த புது மாடல் போனை பரிசாக கொடுக்க
நம்ம ஹிரோ அதுக்கும் ஒரு படி மேல போய் ஒரு தங்க சங்கிலி இதய வடிவில் டாலரோடு திறந்தால் உள்ளே இருவரது புகைப்படமும் இருக்குமாறு வாங்கி வந்து இருந்தான்.அதை தன் அன்னையின் கையில் கொடுத்து அவளுக்கு அணிவித்து விடசொல்ல இருவரையும் திருஷ்டி களித்து விட்டு அதை அவள் கழுத்தில் அணிவித்துவிட்டார்.( ஹிரோ கலக்குறீங்க போங்க )
இருவரையும் தனியாக சென்று பேச சொல்ல
“ ஹாய் கருவா டார்லிங் இன்னைக்கு சூப்பரா இருந்தடி மாமாவோட தூக்கத்தை கெடுத்துட்ட போ இன்னைக்கு உன் மாமாவுக்கு சிவராத்திரி தான் போ “
“ என்னடி வாய் ரெஸ்டே கொடுக்கமாட்ட இப்போ ஏன் டி பேசவே மாட்டேங்குற “
“ நான் பேசிட்டா மட்டும் இந்த கல்யாணம் நின்னுடுமா என்ன ?”
அவள் கேட்ட நொடி அவளை அடிக்க கை ஓங்கி இருந்தான் உதயா
“ அவளை வேகமாக அருகில் இழுத்தவன் ஒன்னை மட்டும் நியாபக்கத்துல வைச்சுக்கோ
நான் உன் புருசன் இதை யாராலையும் மாத்த முடியாது சின்ன பொண்ணு அவளுக்கு டைம் கொடுக்கணும் அப்படின்ற காரணத்துனால தான் உனக்கு ஆறு மாசம் டைம் இல்லை அடுத்த மூகூர்த்தத்துலேயே உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிவு பண்ணிருபேன் “
அவளை இழுத்த வேகத்தில் தள்ளி நிறுத்தியவன்
” உன் மனசை தொட்டு சொல்லுடி உனக்கு அன்னைக்கு என்ன பார்த்தவோடனே என்ன பிடிக்கலைனு அன்னைக்கு தான் உன் கண்ணே சொல்லுச்சே உனக்கு என்னை பிடிச்சிருக்குனு இப்போ ஏண்டி மறைக்கிற சொல்லுடி “ என அவளை உலுக்க
“ஆமா அன்னைக்கு பிடிச்சுதான் இருந்துச்சு ஆனா என்னைக்கு நீங்க ஆசைபட்டது நிறைவேறனும் அப்படிங்குறதுக்காக என் அக்காவோட வாழ்க்கையும் என் தம்பியோட வாழ்க்கையும் பகடை காயா மாத்தினிங்களோ அப்போவே நான் உங்கள வெறுத்துட்டேன் “
“ எனக்கு இப்போ பதினெட்டு வயசு தான் ஆகுது ,என் தம்பிக்கு ஒரு நல்ல அக்காவா நான் என் கடமைய முடிச்சுட்டேனா இல்ல எங்க அம்மாக்கு ஒரு நல்ல பிள்ளையா தான் இருந்துட்டேனா இதுல கல்யாணம் பண்ணி இதுனால வேற அவங்கள கடனாக்கி நான் கஷ்டப்படுதனுமா சொல்லுங்க ?”
“ கமல் தான் நமக்கு மூத்த பிள்ளை உங்க அம்மாவுக்கு நீ என்ன எல்லாம் பண்ணி பார்க்கனும்னு ஆசைபடுறியோ அதெல்லாம் என் பொண்டாட்டியாவும் இருந்து நீ பண்ணாலாம் தப்பில்லை.”
“ நான் என்னமோ உன்னை வெறும் பொண்டாட்டியா மட்டும் நினைக்கல,உன் அப்பா உன் மேல எவ்ளோ பாசம் வைச்சிருந்தாரோ அந்த பாசத்தயெல்லாம் உனக்கு மறுபடியும் கொடுக்கனும் அதுக்கு நீ என் கூட இருக்கனும் டி “
“ புரிஞ்சிக்கோடி நீ என்னோட எல்லாமா எனக்கு வேனும் டி எனக்கு பிள்ளையா என் பொண்டாட்டியா,என்னோட ஃப்ரண்டா எல்லாமா வேனும் டி பிளிஸ் டி “
ஐ லவ் யூ டி எனக் கூறி இறுக அனைத்தவனை விலக்க தோனாமல் அமைதியாக கண்ணீர் வடித்து கொண்டு நின்றால் “
கீழே எல்லாரும் தேடுவாங்க வா போகலாம் என் கூறி கைபிடித்து அழைத்து சென்றான்.
“ ஏன் டி நிவி நமக்கு அப்பறமா ஜோடி சேர்ந்தவன் எல்லாம் சந்தோசமா இருக்காங்க
நீ என்னடான என்னை கண்டுக்கவே மாட்டேங்குற ஏண்டி என்னை பார்த்தா எப்படி டி தெரியுது “என் நிரஞ்சன் வினவ
“ என்ன கொஞ்சம் சைட் அடிக்கலாம்னு தோனுது “என்ன பண்ணலாம் என் யோசித்தவளை யோசிக்காமல் இழுத்தவன்
“ ஏண்டி அவங்க எல்லாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கிறாங்க
நீ என்னடான இன்னும் சைட் அடிக்கவா வேணாமானு யோசிக்கிற உன்னை என கூறி
அவள் இதழில் இதழ் பதித்தவன் விடுவிடுவிக்க தான் வெகு நேரம் ஆகிற்று மூச்சு வாங்க விலகி நின்று முறைத்தவளை அருகில் இழுத்து அவள் இடையோடு அணைத்தவன்
“ ஐ லவ் யூ டி “ நிவி மா என கூறியவனிடம் வெக்கத்தை மறைக்க அவன் மார்பில் தஞ்சம் புகுந்தவளை நிமிர்த்தி உனக்கும் என்னை பிடிச்சுஇருக்காடி என கேட்க “
“ இல்லையே என கூறி சிரித்து கொண்டே ஓடிவளை கண்டு தானும் சிரித்து கொண்டே தலை கோதியபடி நின்றான்”
அனைவரும் கிளம்பும் சமயம் மூன்று ஜோடிகளும் கண்களாளே விடை பெற்றுக்கொண்டது
எல்லாரும் சென்றவுடன் தனிமையில் அமர்ந்து யோசித்த லெட்சுமிக்குதான் இது என்ன டா நமக்கு வந்த சோதனை என்று தான் இருந்தது எங்கருந்து வந்தான் என் இப்படி நம்மள குழப்புறான் இவன் நல்லவனா கெட்டவனா என யோசித்து கொண்டிருக்க (நீ இப்படியே யோசி நாங்க அதுக்குள்ள உனக்கு கல்யாணமே பண்ணிவச்சுருவோம், உதயா நீ இனி மர்கயா மர்கயா போயா உதயா )
சித்திரம் சிந்தும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top