சித்திரையில் பிறந்த சித்திரமே - 7

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 7
நிவேதாவின் நிச்சயதார்த்த நாளும் அழகாய் விடிந்தது
காலையில் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தால் லெட்சுமி
“ காலைலே உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா எருமை இப்படி வீட்டெல்லாம் பரப்பி போட்டு இருக்கியே அறிவு இருக்கா உனக்கு என கமல் “கத்திக் கொண்டிருக்க
“ சோ சிம்பிள் தம்பி உனக்கு அறிவு இருந்தான டா எனக்கு அறிவு இருக்கும் “ என லெட்சுமி கூற
அம்மா என கத்திக் கொண்டு அம்மாவிடம் சென்ற கமல் “ அம்மா இந்த பிள்ளையை சீக்கிரமா கட்டி கொடுத்துருங்க மா பிளிஸ் என்னால முடியல “
அதுவும் மதுரைல வேணாம் சென்னைல கொடுத்துருங்க அப்ப தான் எப்பபார்த்தாலும் வீட்டுக்கு வராம இருக்கும் “
“ அப்படி எல்லாம் உன்ன பார்க்காம என்னால இருக்க முடியாது தம்பி
அதுனால எனக்கு பிளைட்ல டிக்கெட் போட்டுறு 45 நிமிஷம் தான் நான்
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே.. அப்பிடினு பாடிக்கிட்டே உன்ன வந்து பார்த்துட்டு போய்டுவேன் என்ன நீ தான் கொஞ்சம் பணம் செலவு பண்ணனும் சாய்ஸ் இஸ் யுவர்ஸ் என்ன உடன்பிறப்பே “ என லெட்சுமி கேட்க
“ உங்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானன்னு “ கமல் போய் விட்டான்.
ஒரு வழியாக கிளம்பி நிவேதாவின் நிச்சயதார்த்ததிற்க்கு சென்றனர்.
லெட்சுமி கேராளா சேலை கட்டி இருந்தால் அவளுடைய நிறத்திற்க்கு அது இன்னும் அழகாய் இருந்தது.மேலும் தலையையும் அதற்கு தகுந்தார் போல் பிண்ணி மல்லிகை பூ சூடி இருந்தால்.அவ்வளவு அழகாய் இருந்தால்.
பத்ராவிற்க்கு தான் கண் கலங்கி விட்டது “ .பதினெட்டு வயதில் தன் பெண் பருவ பெண்ணுக்குரிய அழகில் இருப்பதை காண தன் கணவருக்கு கொடுத்துவைக்கவில்லையே “ என
“ எல்லோரும் கிளம்பிட ரெஸ்ட் ரூம் சென்ற லெட்சுமி தன் தந்தையை எண்ணி மௌனமாய் கண்ணீர் வடித்து விட்டு இயல்பாய் இருப்பது போல் திரும்பி வந்தால் “
“ எல்லாரும் நிவேதாவின் நிச்சயதார்த்தத்தில் கூடி இருக்க எல்லாருக்கும்
நிவேதா,கீர்த்தி,லெட்சுமியை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.
மூவரும் சின்ன பெண்களாய் எல்லாரையும் வம்பு செய்து கொண்டிருந்தவர்கள் இன்று வளர்ந்த பெண்களாய் தங்கள் முன் நிற்பது கண்டு எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி ”
“ நிரஞ்சனின் வீட்டில் இருந்து எல்லோரும் மண்டபத்திற்க்கு வந்து விட்டார்கள் “
நிரஞ்சனின் உடன் பிறந்த தம்பியான அர்ஜுன் இன்று தான் அமெரிக்காவிலிருந்து வந்து இருக்கிறான் அவன் அண்ணனின் திருமணத்திற்க்காக “
“ அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற நிருவனத்தில் மென்பொருள் நிருவனத்தில் சீப் இன்சினியராக பணிபுரிகிரான் “
அவனுக்கும் சேர்த்து பெண் பார்த்து விட வேண்டும் என்பது அவர்களின் அம்மாவின் விருப்பம்.
இப்படியாக எல்லாரும் மண்டபம் வந்து இறங்க மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கும் பொறுப்பு லெட்சுமி மற்றும் கீர்த்தியினுடையது.
“ இருவரும் ஆரத்தி எடுக்க துணை மாப்பிளையாய் நின்ற அர்ஜுனுக்கு தான் கீர்த்தியிடம் இருந்து கண்ணை எடுப்பது பெரும் பாடயிற்று “
இருவரும் ஆர்த்தி எடுத்து முடிக்க கமல் வந்து தன் உடன் பிறவா தமக்கையின் கையை பற்றி உள்ளே அழைத்து சென்றான் “
“ அர்ஜுனினின் அம்மா அப்பொழுதே முடிவு செய்து விட்டார்.அடுத்த மருமகள் கீர்த்தி தான் என்று கீர்த்தி மருத்துவம் இறுதியாண்டு படிக்கறாள்
(பொண்ணு டாக்டர் மாப்பிள்ளை இன்சினியர் நல்ல ஜோடி)
(ஆமா எங்க நம்ம உதயா ஐபிஸ் காணோம்)
“ டேய் உதயாவுக்கு கால் பண்ணியா எங்க கானோம் என நிரஞ்சன் கேட்க கால் பண்ணிடேன் வந்துருவான் என் அர்ஜுன் பதில் சொன்னான் “
மனுஷன நிம்மதியா சைட் கூட அடிக்கவிடமாட்டேங்குறான் என முனுமுனுத்துக் கொண்டே(வேற யாரு நம்ம கீதுவத்தான் நம்ம கதையில சிக்கிட்டு தப்பிக்க முடியுமா என்ன)
ஆரத்தியை வாசலில் ஊற்ற வந்த லெட்சுமி கீர்த்தியிடம் “ என்ன கீர்த்தி சின்ன மச்சான் டோட்டல் சரண்டர் ஆகிட்டார் போல கண்ணாலே சம்மதம் கேட்குறாரு சொல்லிடுடி பாவம் “
என்னத்த சொல்ல எனக்கும்தான் பிடிசச்சுருக்கு ஆனா அவங்க முதல்ல வந்து சொல்லட்டும் அப்புரம் பார்ப்போம் ‘என கூற இருவரும் சிரிக்க
“ ஹலோ கொஞ்சம் அங்கிட்டு போய் சிரிச்சா என் பைக்க பார்க் பண்ண முடியும் “ என்ற கணீர் குரலில் இருவரும் திரும்பி பார்க்க அங்க வேற யாரு நம்ம உதயா சார் தான் (என்ன பையன் அவசரத்துல கிளம்பினதுனால காக்கி ட்ரஸ்லயே வந்துட்டார் அவரோட ராயல் என்பில்டுல)
“ போலிஸா நாங்க இங்க யாரும் இங்க பாதுகாப்பு கேட்கலையெ நீங்க எதுக்கு வந்து இருக்கிங்க “ என லெட்சுமி துடுக்காக கேட்க(அதான போலிஸ்காரன் கிட்ட கூட நீயெல்லாம் அடக்கி வாசிக்க மாட்ட)
“ விஷேசத்துக்கு வந்தவங்கள வாங்கனு கேட்காம வாசலிலே வைச்சு கேள்வி கேட்கிறீயே நீ யாரு “என உதயா கேட்க (நல்லா கேளு திருந்துதானு பாப்போம் ஹிரோவா கொக்கா )
“நான் பொண்ணோட தங்கச்சி “ என லெட்சுமி பதில் சொல்ல
“பொண்ணோட தங்கச்சிச்சு ஓவரா வாய் பேசுனா அவள தூக்கி ஜெயில்ல போட சொன்னாங்க அதான் வந்தேன் “ என உதயா கூற
“ பாப்பு எதுக்கு இப்படி யார்யார்கிட்ட எல்லாம் பேசுற வா “ என கீர்த்தி இழுத்து சென்று விட்டாள் லெட்சுமியை
“ விடு கீது எப்படி பேசுறான் பாரு அவன் இவன் பெரிய பருப்பு “ என கூறி சத்தமிட
“ விடு நம்ம நிவி நிச்சயம் டி நம்மளாலே எந்த பிரச்சனையும் வரக்கூடாது டி பிளிஸ் பாப்பு என் செல்லக்குட்டில விடு டி பிளிஸ் என கெஞ்ச “
“சரி போய் தொலையட்டும் என “ விட்டால் லெட்சுமி
இங்க நம்ம ஹிரோ கனவு காண போய்ட்டாரு
“ ஆளு கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா, நல்லா பேசும் போது கண்மை போட்ட கண்ண நல்லா தான் உருட்டுறா “
கண் நல்லா மீன் மாதிரி இருக்கு ,மூக்கு நல்லா கிளி மூக்கு,
உதடு லிப்ஸ்டிக் போடல ஆனா இது தான் அவளுக்கு நல்லா இருக்கு ”
நல்லா ஒல்லியா இருக்குறனால தான் அந்த சேலை அவளுக்கு அவ்ளோ
கரெக்டா இருக்கோ நல்லா அப்டியே பொம்மைக்கு சேலை கட்டுன மாதிரி”
கல்யாணத்து அப்புறம் எப்படியாவது வெயிட் போட வைக்கனும் “
“ அட பாவி இப்போ தான அந்த பொண்ண பாத்த அதுக்குள்ள வா என அவன் மனசாட்சி கேள்வி கேட்க “
“ அவ பொண்ணு இல்ல என் பொண்டாட்டி என சொல்லி சிரித்து கொண்டே அவன் அண்ணங்களை காணச் சென்றான் ”
( பாவம் உன்னை யாராளையும் காப்பாத்தவே முடியாது போ
அண்ணன் தம்பி மூனு பேரும் இந்த மூனுக்கிட்டையும் மாட்டிக்கிட்டு என்ன பாடு பட போறிங்க்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம் )
சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top