சித்திரையில் பிறந்த சித்திரமே-26

Advertisement

eanandhi

Well-Known Member
சித்திரையில் பிறந்த சித்திரமே-26

"கொடைக்கானல் சென்று வந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இருவரும் அவர்களின் வாழ்க்கையை தொடர்ந்தனர்."

"செல்ல சண்டைகளோடும் சிறு சிறு கோபங்களோடும்"

"வார இறுதியில் லெட்சுமி கல்லூரிக்கும்,இருவரும் சேர்ந்து வேணியையும்,உதயாவையும் பார்த்து வருவது வழக்கமாகியது"

"இவள் கவிதை எழுதுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது."

"இதற்கு இடையில் ஒரு நாள் எல்லோரையும் ஒரு விழா என்று மட்டும் சொல்லி அழைத்து கொண்டு சென்றான் உதயா"

"அங்கே சென்ற போது இவள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தின் வெளீயிட்டு விழா"

"பேச வாய் வரவில்லை நன்றாக ப்ற்ச தெரிந்தவளுக்கே ஏதோ சும்மா சொல்கிறான் என் லெட்சுமி சொல்லி கொண்டிருக்க அவன் உண்மையாகவே நிறைவேற்றி விட்டான்."

"தன் மனைவியிடம் சொன்னதை"

"அங்கே "உதயலெட்சுமியின் கவிதைகள்" எனும் பெயரில் இவள் கவிதைகள்"

"நூல் வெளீயிட்டை அங்கு ஒரு பிரபல எழுத்தாளரை வைத்து உதயா செய்திருந்தான்"

"இவள் கண்களில் காரணம் இல்லாமல் கண்ணீர் தன் கணவனின் செய்கையில்"

"நூல் வெளீயிட்டு விழா முடிந்து அனைவரும் இரவு உணவை முடித்துகொண்டு வீடு திரும்பினர்"

"எல்லோருக்கும் மனம் நிறைந்திருந்தது"

"பெற்ற தாயாய் பத்ராவிற்கும்,பெறாத பெற்றோர்களாய் வேணிக்கும்,மகேஸ்வரனுக்கும் லெட்சுமியை நினைத்தும் உதயாவை நினைத்தும் பெருமை"

"இருவரையும் இங்கேயே தங்கி செல்ல பெரியவர்கள் சொல்ல"

"உதயா மறுத்துவிட்டான் திருமங்கலத்திற்க்கே செல்கிறோம் என்று"

"யார் சொல்லியும் கேட்காமல் வண்டியில் கிளம்பி விட்டான் தன் கருவா டார்லிங்கோடு"

"காரில் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள்"

"ஐ லவ் யூ சோ மச் மாமா" என கூற

"சந்தோசமா இருக்கியாடி கருவா டார்லிங்"என உதயா கேட்க

"என் மாமா இருக்கும் போது என் சந்தோசத்துக்கு என்ன குறைச்சல்"

"அப்படியா அப்போ என் பொண்டாட்டி ஹாப்பினா நானும் ஹாப்பி,அப்படியே இன்னைக்கு நைட் என்ன கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சா டபுள் சந்தோசமா இருக்கும்"

"காக்கிசட்டை கோரிக்கை கொஞ்சம் தீவிரமா இருக்கே,யோசிச்சு தான் மாமா சொல்லனும்"

"மாமா மேல கருணை காட்டுடி பாவம்டி மாமா"

"காக்கிசட்டை கருணையெல்லாம் கேட்ட நான் என்ன பண்ண"

"ஹம் மாமாவ நல்லா கவனி அதே போதும்"

இருவரும் ஏதேதோ பேசியபடியே வீடு வந்து சேர்ந்தனர்.

"இருவரும் ஃப்ரஷாகி கட்டிலில் வந்து அமர"

"மாமா உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் மாமா"

"என்னடி பர்மிசனெல்லாம் கேட்குற" என அவளை அருகே இழுத்து தன் மடியில் இருத்தியபடி கேட்க

"மாமா நான் உங்களுக்கு ஒரு கிப்ட் தர போறேன்"

"நீங்க எனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க அதுக்காக என்னோட சின்ன கிப்ட் "

"என்னடி சீக்கிரம் சொல்லு ,அதுக்கப்பறம் நிறைய வேலை இருக்குடி "என கண்ணடித்து கூற

"மாமா நாம அம்மா,அப்பா ஆக போறோம் மாமா"

"என்னடி சொல்லுற நிஜமாவா"

"ஹம் ஆமா மாமா"

"செக்கப் பண்ணியா"

"ஹம் ஆமா.நானும் அத்தையும் இன்னைக்கு நீங்க அங்க வர்றதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணோம்"

"நான் தான் உங்ககிட்ட சொல்லுவேன்னு அத்தையை சொல்லகூடாதுன்னு சொன்னேன்"

"ஐயோ ஐ லவ் யூ டி கருவா டார்லிங்" என கூறி அவளை தூக்கி சுற்றினான்.

"மாமா இறக்கிவிடுங்க பிளிஸ்"

"நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமாடி"

"அவன் கழுத்தை கட்டி கொண்டு"

"நானும் தான் மாமா"என்றாள்

"உங்களால தான் எல்லாமே இன்னைக்கு இந்த புக் வெளியிட்டது,இப்ப நான் சந்தோசமா இரிக்கிறாது எல்லாத்துக்கும் நீங்க மட்டும் தான் மாமா காரணம்"

"அழுது கொண்டே அவன் நெஞ்ச்சில் சாய"

"உன்னை நான் அழ கூடாதுனு சொல்லிருக்கேன்ல"

"என் பொண்டாட்டி நீ உனக்காக நான் என்னவேணாலும் பண்ணனும்டி அது தான் நான் உன்ன நல்லா பார்த்துக்கிறதுக்கு அடையாளம்"

"நீ தாண்டி என் முதல் குழந்தை என் பிள்ளை விளையாட்டுக்கு கூட அழ கூடாதுடி" என நெற்றி முட்டி சொல்ல

"மாமா நான் உங்களுக்கு என்ன மாமா பண்ணேன் ,ஏன் என் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க"

"நான் உங்க மேல இவ்ளோ பாசம் வைச்சிருக்கேனானு சத்தியமா எனக்கு தெரியலை மாமா"

"போடி லூசு"

"இங்க பாசத்தை தராசு வைச்சு அளந்து யாரோடது பெரிசுனு காட்ட முடியாதுசரியா,அது மட்டும் இல்ல நம்ம வைக்கிற பாசம் எதிர் திசைல இருந்து அப்படியே வரனும்னு அவசியம் இல்லடி,
எனக்கு உன்ன பார்த்தப்ப வந்த பாசம் என் கடைசி காலம் வரைக்கும் மாறாது,நான் இப்படி தான் இருப்பேன்.சரியா"


"பாசம் எதுனால வருதுனு இங்க யாரலையும் கண்டுபிடிக்க முடியாது ,அதுக்கு காரணமும் தேவை கிடையாது,புரியுதா" எனக் கூறி அவள் கண்ணத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க

ஒரு அழகான புன்னகை அவளிடத்தில்

"கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் சேலையை விலக்கி அவள் வயிற்றில் முத்தமிட்டு"

"என் செல்லகுட்டி அம்மாவ பத்திரமா நீங்க தான் பார்த்துக்கனும் சரியா "என கூற

"இவளோ இங்கு சிரித்து கொண்டிருந்தாள்"

"மாமா நமக்கு குழந்தையா எங்க அப்பா வந்து பிறப்பாங்களா மாமா" என கேட்க

"அவள் இதழில் அழுத்தமாய் முத்திரை பதித்தவன்"

"கண்டிப்பா என் கன்னுக்குட்டி ஆசைப்பட்டது எதுவும் நடக்காமா போயிடுமா"

"உண்மையாவா மாமா"

"கண்டிப்பாடா நீ இப்போ தூங்கு,நாளாக்கு காலைல நாம டாக்டரிடம் போகலாம்"

அவளும் சரியென தலையாட்டிவிட்டு

அவன் மார்பிலேயே தலை வைத்து தூங்கிவிட்டாள்.

"தூங்கும் தன் மனைவியையே ரசித்து கொண்டிருந்தவன் தன் குழந்தையை சுமக்கும் அவள் வயிற்றை வருடி விட்டு அவனும் அவளை அணைத்த வண்ணம் தூங்கினான் நெஞ்சம் நிறைந்த நிம்மதியோடு"

சித்திரம் சிந்தும்
super sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top