சித்திரையில் பிறந்த சித்திரமே-25

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"காலையில் எழுந்தவுடன் லெட்சுமி உதயாவை தேட அவன் பால்கனியில் இருந்தான்."

"இவள் மெதுவாக எழுந்து காலை கடங்களை முடித்துவிட்டு வந்து அவனுக்கும் சேர்த்து காபி எடுத்து வர கீழே சென்றாள்"

"ஏன் லெட்சுமிமா நீ இப்படி இறங்கி வர கால் வலிக்கும்ல " என வேணி கேட்க

"இல்ல அத்தம்மா டாக்டர் இப்போ கொஞ்சம் கொஞ்சம் நடக்க சொல்லிருக்காங்க,நேத்து ரொம்ப நேரம் நின்னுக்கிட்டே இருந்ததுனால தான் அத்தம்மா வலிச்சது இப்ப இல்லை"

"இப்படி நீ சொல்லிக்கிட்டு இருந்த உன் புருசன் உன்னை ஊரு கடத்திருவான்,அதுனால இப்போ கால் சரியாகிடுச்சுனு சொல்லாத லெட்சுமா"

"சரி அத்தம்மா" என அவள் கண்ணம் பிடித்து கொஞ்சியவள் அவளுக்கும் உதயாவுக்கும் காபி கொண்டு சென்றாள்"

"அங்கே பால்கனியில் நின்றிருந்தவனை

"மாமா காபி இந்தாங்க" என அழைக்க

"..................................................................."

"அவனிடம் பதிலில்லை"

"மீண்டும் மீண்டும் அழைக்க அவன் அசையவே இல்லை"

"அவனை இழுத்து முன்புறம் திருப்ப அவன் கண்கள் இரண்டும் சிவந்திருந்தன நைட் எல்லாம் தூங்காததற்க்கு அடையாளாமாய்"

"மாமா " என மீண்டும் அழைக்க

"அவளிடம் பேசாமல் குளியறைக்குள் சென்று கொண்டான்"

"குளித்துவிட்டு வெளியே வந்தவன் எதுவும் பேசாமல் ரெடியாகி கீழே சென்றான்"

"அவன் பின்னே கீழே சென்றவள் அவன் சாப்பிடாமல் வெளியே கிளம்ப போக,இவள் வேணியின் புறம் திரும்பியவள்"

"அத்தம்மா இப்போ அவங்க சாப்பிடாம மட்டும் போனாங்க அப்பிடின்னா நான் இன்னைக்கு முழுசும் சாப்பிட மாட்டேன் அதோட எந்த மாத்திரையும் போடவும் மாட்டேன்" என உரக்க சொல்ல

"அவள் குரல் அதை கண்டிப்பாக செய்வேன் என்ற உறுதி இருந்தது"

"டேய் வந்து சாப்பிட்டு போடா" என மகேஸ்வரன் அழைக்க

"அவனும் அமைதியாய் வந்து அமர்ந்தான் சாப்பிட"

"அவனுக்கு பார்த்து பார்த்து லெட்சுமியே பரிமாறினாள்"

"இதுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்ல என வாய்க்குள் முனுமுனுத்து கொண்டே சாப்பிட்டான்"

"நீ ஊருக்கு எப்போ கிளம்ப போற "என மகேஸ்வரன் கேட்க

"நான் இன்னைக்கே கிளம்பறேன்"என உதயா சொல்ல

"எப்போ நீ ஜாயிண்ட் பண்ணனும்"

"இன்னும் ஒரு வாரத்துல "

"அதுக்கு எதுக்கு இப்போவே கிளம்பற"

"ஆமா நான் மட்டும் தனியா தானே கிளம்பறேன்,அப்பறம் என்ன பிரச்சனை உங்களுக்கு " என கேட்க லெட்சுமி அழுதுகொண்டே அவளறைக்கு சென்று விட்டாள்"

"இவனும் வெளியே கிளம்பி சென்று விட்டான்"

"சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் கைகளில் ஒரு ஏதோ பேப்பர் இருந்தது"

"லெட்சுமியை தேடி அறைக்கு சென்றவன் அவள் கைகளில் அதை கொடுத்து

"இதில் சைன் பண்ணு " என்றான்

"அதை வாங்கி படித்தவளுக்கு அது தொலைதூர கல்விக்கான விண்ணப்ப படிவம் என தெரிந்தது"

"எப்பவும் தன்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பவனை கண்டு அவளின் கண்களில் கண்ணீர் படலம்"

"அழுது கொண்டே அதை வாங்கியவள் அதில் கையெழுத்து போட்டு கொடுத்தாள்"

"அப்பப்ப போய் கிளாஸ் அட்டண்ட் பண்ணுற மாதிரி இருக்கும் பார்த்துக்கோ" என மட்டும் கூறினான்.

"அவன் வாயில் இருந்து வரையறை இல்லாமல் வரும் கருவா டார்லிங் இன்று ஒருமுறை கூட வரவில்லை"

"மாமா" என இவள் அழைக்க

"அவன் என்ன என்று திரும்பி மட்டும் பார்த்தான்"

"இவளின் கண்களில் கண்ணீரை கண்டவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்"

"அவள் இதழில் தன் ஒட்டு மொத்த பிரிய போகும் வலியையும் ஏக்கத்தையும் அவன் இதழ் மூலம் கூறியவன் அவளை விடுவித்தான்"

"தன் பெட்டிகளை எடுத்து அடுக்க தொடங்கி விட்டான்"

"இவளுக்கு கணவனை எப்படி பிரிந்து இருக்க போகிறோம் என்ற கலக்கம் பிறந்தது"

"பெட்டிகளை அடுக்கி முடித்தவன் கிளம்ப தயாராகி விட்டான்"

"நான் கிளம்பறேன்" என லெட்சுமியிடம் கூறியவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் கீழே சென்று விட்டான்.

"இவளும் கீழே வந்தவள் கண்டது பெற்றோரிடம் விடைபெற்று தயாராக நின்ற கணவனைத்தான்"

"அவளை பார்த்தவுடன் பெற்றோரிடம் அவளை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்."

"அவன் சென்று ஒரு வாரம் சென்ற நிலையில்

"வேணிக்கும் ,மகேஸ்வரனுக்கும் அவனின் டிரான்ஸ்பர் புதியதல்ல என்பதால் பெரிதாக எதுவும் தெரியவில்லை"

"ஆனால் லெட்சுமிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என உணர கூட முடியாத நிலை"

"எவ்வளவு வேலை இருந்தாலும் அவளை கவனிக்கும் விசயத்தில் எந்த விதத்திலையும் குறை வச்சதேகிடையாது உதயா"

"அப்படி இருக்கையில் ஆசை கணவனை பிரிவு என்பது அவளுக்கு பெரும் வலியை தந்தது"

"அதற்காக அவள் மாமனார், மாமியாரை பிரியும் எண்ணமும் அவளுக்கு இல்லை"

"அவளை அவள் உணரும் முன்பே அவள் மாமனாரும்,மாமியாரும் உணர்ந்து விட்டனர்"

"அவள் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருக்க அவளின் அருகில் அமர்ந்த வேணியும்,மகேஸ்வரனும்"

"நீயும் உதயா கூட திருமங்கலத்து போடா லெட்சுமா" என கூற

"அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை"

"ஆமாடா நீயும் அங்கேயே போ ,நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறதுல தான் எங்க சந்தோஷம் இருக்கு,உன்னை நாங்க அனுப்ப மாட்டோம்னு சொன்னதுக்கு காரணம் இங்க செக்கப் பண்ணிட்டு போக சொல்லலாம் அப்படிங்கிறதுக்காகத்தான்"

"நேத்து டாக்டர் கிட்ட உன்னோட ரிப்போர்ட் காமிச்சு எல்லாம் விவரமும் கேட்டுட்டோம் உன்னால தனியா சமாளிக்க முடியும்னு சொல்லிட்டாங்க"

"அதுனால நீ கிளம்பு உன்னை மாமா விட்டுட்டு வருவாங்க" என வேணி கூற

"இல்லத்தைம்மா மாமா இருக்கட்டும் ,நான் டிரைவரோடவே போறேன்"

"நீங்க எதுவும் உங்க பிள்ளைகிட்ட சொல்லாதீங்க "என கூறிவிட்டாள்

அவர்களும் சம்மதமாக தலையாட்ட

"அவளும் மின்னல் வேகத்தில் கிளம்பி வந்தாள்"

"இரண்டு பேரும் கண்டிப்பா வார கடைசில இங்க வரணும் "எனக் கூறி வேணியும் ,மகேஸ்வரனும் விடைக்கொடுத்தனர் அவளுக்கு


"இன்ப படபடப்புடனே அந்த பயணம் இருந்தது லெட்சுமிக்கு ஏனேனில் அங்கு சென்றதில் இருந்து உதயா அவளிடம் பேசவில்லை"

"அங்கு சென்று சேர்ந்ததை வீட்டிற்கு மெசேஜ் மூலம் மட்டுமே சொன்னான் இவளாக அழைத்தும் அவன் பேசவில்லை"

"இந்த உதயா முற்றிலும் புதிது அவளிற்க்கு"

"வீட்டின் வாயிலில் நுழைய அங்கே காவலாளி வந்து கூறினான் உதயா இல்லையென"

"இவளுக்கு இதுதான் சமயம் என தோன்ற தான் வந்திருப்பதை உதயாவிடம் சொல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு காரையும் திருப்பி அனுப்பிவிட்டாள்."

"உள்ளே சென்று அவள் அவன் வீட்டை பார்வையிட அனைத்தும் அது அது இடத்தில் இருந்தது,சரி சென்று குளித்துவிட்டு வரலாம் என அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைய அது உதயா பயன்படுத்தும் அறை அதில் அவர்களின் கல்யாண போட்டோ மாட்டியிருந்தது,"

"அதுமட்டுமில்லாமல் அவள் நிவியின் நிச்சயதார்த்தில் கட்டியிருந்த கேராளா சாரியில் எடுத்த போட்டோ இருந்தது"

"காக்கிச்சட்டை எல்லா திருட்டுதனமும் பண்ணிருக்கு "என மனதிற்க்குள் செல்லாமாக கொஞ்சிகொண்டாள்.

"அவள் பெட்டியை எடுத்து அங்கிருந்த கப்போர்டில் அடுக்கி வைத்துவிட்டு குளிக்கலாம் என அங்கிருந்த கப்போர்டை திறக்க,அதில் அவள் துணிக்கடையில் ஆசையாக வருடிக்கொடுத்த லாங் சர்ட் மற்றும் அதற்கு தகுந்தாற் போல் சட்டையும் இருந்தது."

"அதை எடுத்தவள் மீண்டும் தன்னவனை கொஞ்சிவிட்டு அதை எடுத்து கொண்டு குளியலறிக்குள் புகுந்தாள்"

"அவள் குளித்து முடித்து வெளியேவர அங்கிருந்த டீபாயில் காபியும்,அவளுக்கு பிடித்த சிற்றுண்டியும் இருந்தது"

"இதை யார் கொண்டு வந்து வச்சா யார் வீட்டுக்குள்ள வந்தது"என யோசித்து கொண்டே அவள் சுற்றும் முற்றும் தேட அங்கு யாரும் இருப்பதற்க்குண்டான அடையாளமே இல்லை"

"அவள் பார்வையை சுழற்றிக்கொண்டே இருக்க பின்னிருந்து ஒரு கரம் அவளை இறுக்கி அணைத்தது"

"கரங்களின் உரிமையாளன் நம்ம உதயாவேதான்"

"அவளை மெல்ல முன் பக்கமாக்க திருப்ப அவனை கண்டவுடன் அழுது அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்"

"அவள் முதுகை தடவி கொடுத்தவன் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டை முற்றுகையிட்டான்"

"அவளை தன்னோடு சேர்த்து தூக்கி கொண்டே இருவரும் முத்தத்தில் லயித்திருந்தனர்"

"மூச்சிற்க்கு அவள் சிரமப்பட அவளை விடுவித்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவளையும் அவன் மடியில் அமர்த்தி கொண்டான்"

"அவன் கழுத்தை கட்டி கொண்டு அமர்ந்திருந்தவளிடம் டீபாயில் இருந்த காபியை எடுத்து குடிக்க சொன்னான்"

"அவளும் வாங்கி கொண்டாள்"

"உங்களுக்கு"என கேட்க

"நீ குடி ,நான் அப்பறம் குடிக்கிறேன்."


"ஏன் மாமா"

"உனக்கு இங்க வர ஒரு வாரம் தேவைப்பட்டதுலடி"

"ஹம் உங்களுக்கு இப்படி என் கூட பேச ஒருவாரம் தேவைபட்டுச்சா"

"ஹம் அதுனால தான இப்படி என் பொண்டாட்டி என் மடியில உட்கார்ந்திருக்கா"

"ஆமா நான் வாட்ச் மேன் கிட்ட நான் வந்தது சொல்லகூடாதுனு சொல்லிட்டு தான வந்தேன் எப்படி கண்டுபிடிச்சீங்க"

"ஹம் உனக்கு நான் போட்ட நிச்சயதார்த்த மோதிரத்துலயே ஜிபியஸ் இருக்குடி பொண்டாட்டி"

"இந்த ஒரு வாரத்துல நீ என்ன பண்ண நீ எப்போ ஹாஸ்பிடல் போன அங்க டாக்டர் என்ன சொன்னாரு,நீ இங்க வர்றதுக்கு எப்போ கிளம்பின எல்லாம் எனக்கு தெரியும்டி பொண்டாட்டி"

"ஊரையே பாதுகாக்கிறவனுக்கு என் பொண்டாட்டிய பார்த்துக்க தெரியாதா என்ன" என கேட்க

"ஆமால்ல மாமா நீங்க அன்னைக்கே என்ன ஜிபியஸ் மூலமா தான் கண்டுபிடிச்சீங்களா"

"அது சரி ஆனா எதுக்கு நிச்சயத்தப்பவே ஜிபியஸ் செட் பண்ணீட்டீங்களா"

"ஆமாடி"

"அது எப்படி கல்யாணதுக்கு முன்னாடியே இப்படியெல்லாம் நீங்க பண்ணலாம்"

"என் பொண்டாட்டிய பாதுகாக்க என்ன பண்ணனுமோ அத தான பண்ணேன்,உன் பார்த்தப்போவே நீ தான் என் பொண்டாட்டினு என் மனுசுல முடிவு பண்ணிட்டேன் அதுனால தான் "என கூற

"அவனின் கன்னத்தில் அழுத்தி இதழ் பதித்திருந்தாள் அவன் மனைவி"

"என்னடி கேட்காமலே எல்லாம் கிடைக்குது,ஆமா இந்த ட்ரெஸ் கண்டுபிடிச்சிட்டீயா" என கேட்க

"ஆமா எனக்கு என் புருஷன் வாங்கினது நான் போட்டிருக்கேன் உங்களுக்கு என்ன"

"சரி விடு நாளைக்கு நாம கொடைக்கானலுக்கு போறோம்"

"எதுக்கு மாமா"

"ஹம் கல்யாணம் முடிஞ்சவுடனே போக வேண்டிய ஹனிமூன நானே இப்போ போறோம் அப்பிடின்ற கவலைல இருந்தா நீ வேற ஏன் டி,இந்த ட்ரெஸ்யையும் அதுக்கு தான் எடுத்து வைச்சிருந்தேன் உனக்கு கொடுக்காம"

"ஹனிமூனா" என விழிவிரித்தவளின் விழியில் முத்தமிட்டவன்

"ஆமா,மூனு நாள் அதுனால தான் இன்னைக்கே எல்லா வேலையும் முடிச்சு சீக்கிரம் வந்தேன் நீ எப்படியும் எங்கிட்ட சீக்கிரம் வந்துருவனு நம்பிக்கை இருந்துச்சு அதே மாதிரி இப்போ என் பொண்டாட்டி என் கைக்குள்ள எப்படி" எனக்கேட்க

"சிரித்து கொண்டே அவன் மார்பில் புதைந்து கொண்டாள்"

"ஏய் எழுந்திரிடி கொடைக்கானல் ஹனிமூனுக்கு இப்போ ஒரு ட்ரையல் பார்போம் "

"போங்க மாமா " என விலகி ஓட போனவளை சிறை செய்துவிட்டான் அந்த காவலன்

"ஓரு கவிதை சொல்லுடி "அவள் காதோரம் அவன் மீசை முடி உராய

"சிறிது யோசித்தவள்"

"உன்னை காணமால்

கணப்பொழுதும் கடக்கமுடியாது என கண்டுகொண்டேன்

இந்த சிறு கால பிரிவில்

காலம் முழதும் உன் கைக்குள்ளேயே

கருவரையில் இருக்கும் குழந்தையாய் கட்டுண்டு கிடந்திட ஆசை

என்னை காதலால் கைது செய்த காவலனே

காலம் முழுதும் உன் கைகளினால் கைது செய்வாயா?"என முடிக்க

"கண்டிப்பாடி என் செல்லகுட்டி "என அவளை கைகளில் அள்ளி கொண்டான்.

சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top