சித்திரையில் பிறந்த சித்திரமே-23

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"அவன் கைகளில் இருந்தது அவளுடைய டைரி"

"அவளின் இன்பம்,துன்பம் ,ஏக்கம்,கண்ணீர்,சோகம்,ஆசை,பாசம்,கனவு,லட்சியம் எல்லாம் அந்த டைரியினில் உள்ளே தான் இருக்கிறது"

"அவள் மறக்க நினைப்பவைகளும் அந்த டைரியில் அடக்கம்"

"கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பவளை முறைத்தான் அவள் கணவன்"

"இப்போ எதுக்குடி அழுகுற,இவனுக்கு இந்த டைரியை பார்க்க என்ன தகுதி இருக்குனு நினைச்சு அழுகிறீயாடி" என அவன் கோபமாக கேட்க

"இல்லை என மறுப்பாக தலையசைத்து மறுத்தாள்"

"அப்ப சொல்லுடி எதுக்கு அழுகுற"

"இந்த டைரி வேணாம் மாமா தூக்கி போட்டிடுங்க பிளிஸ்"

"போடி லூசு என் பொண்டாட்டி டைரிய தூக்கி போட நீ யாருடி "என இவன் கேட்க அவள் கண்களில் வழியும் கண்ணீர் நின்றபாடில்லை"

"சொல்லுடி ஏன் எங்கிட்ட இருந்து இதை எல்லாம் மறைச்ச"

"நான் மறக்கனும்னு நினைக்கிறத எதுக்கு மாமா சொல்லனும்"

"எதுக்குடி நீ மறக்கனும்,உன் மாமா இருக்கிறேன் டி ,நீ ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேத்த அப்பறம் ஏன் டி மறக்கனும் நீ"

"நீ எழுதுன இந்த கவிதை எல்லாம் நான் எப்படி ரசிச்சு படிச்சேன் தெரியுமாடி"

"அது எப்படி மேடம் பிடிக்கலை பிடிக்கலைனு சொல்லிட்டு எனக்கே கவிதை எழுதிருக்கியேடி என் பொண்டாட்டி"

"அது எப்படி எப்படி"

"சிறகடித்து பறந்த என் மனம்
சிறை பட்டுவிட்டது உன்னிடத்தில்
சிந்தனை முழுதும் நீ இருக்க
உன் நினைவில் நான் இருக்க
ஆயுள் முழுவதும் உன்
அன்பை அனுபவிக்கும்
தண்டனை வேண்டி
தவிப்புடன் காத்திருக்கிறேன்
தருவாயா என் காதல் கோட்டையின் காவலனே?"


"ஹம் எப்படிடி இப்படி எழுதுன பிளாட் ஆயிட்டேண்டி என் அழகி"

"இப்படி எழுதுனதெல்லாம் ஏன் டி மறைச்சு உன் துணிக்கடில வைச்சிருக்கடி"

"இதெல்லாம் இனிமே பண்ண முடியாது மாமா,வேணாம் இதை தூக்கி போட்டிடுங்க"

"லூசாடி நீ,கல்யாணம் ஆனாதல பண்ண முடியாதுனு யோசிக்கிறீயா"

"இல்ல மாமா நான் படிக்கலைல"

"அடிங்க,ஏய் நீ ஒரு மனுசனுக்கு தேவைபடுற அடிப்படை படிப்ப முடிச்சிட்ட,அதுக்கும் மீறி நீ படிக்கனும்னு ஆசைப்பட்டா அதை நிறைவேத்த நான் இருக்கும் போது உனக்கு என்னடி"

"இல்ல மாமா அது வந்து நான் படிக்க போக முடியாது இனிமே காலேஜூக்கு"

"அப்போ வீட்டிலேருந்தே படி"

"வேணாம் மாமா"

"நீ படிக்கிற தமிழ் இலக்கியம் சரியா"

"மாமா"

"என்னடி மாமா நீ படிக்கிற இப்படி எழுனதெல்லாம் நான் பப்ளீஷ் பண்ணுவேன் சரியா"

"வேணாம் மாமா பிளிஸ்"

"அப்ப எங்கூட பேசாதடி இனிமே"

"மாமா ஏன் மாமா"

"பேசாத போ மாத்திரை போட்டலை படு"

"எனக்கு தூக்கம் வரலை"

"அவன் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துவிட்டான்"

"அவனருகில் நெருங்கி படுத்தாள்"

"அவன் விலகி போக"

"மாமா பிளிஸ்"

"தள்ளி படுடி"

" மாமா கால் வலிக்குது "என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூறினான்.

"வேகமாக எழுந்தவன்,அவள் காலை எடுத்து தன் மேல் வைத்து கொள்ள அவள் கண்களில் கண்ணீர் தடங்கள்"

"மாமா நான் படிக்கிறேன்"

"ஹம்"

"நீங்க சொன்ன மாதிரி நான் இனிமே மறுபடியும் எழுதுறேன்"

"ஹம்"

"மாமா பேசுங்க"

"என்ன பேச"

"ஐ லவ் யூ மாமா "என கூறி அவன் கன்னத்தில் முத்தம் வைக்க

"ஏய் என்னடி பண்ற " என கூற அவன் இதழ் கடையோரம் சிரிப்பு வந்துவிட்டது.

"நானே உனக்கு கால் சரியாகனும்னு தள்ளி இருந்தா நீ இப்படி என்ன கிளப்பி விடாதடி"

"ஹம் என்ன மாமா பண்ணுவீங்க"

"ஹம் பண்ணும் போது பாருடி பொண்டாட்டி"

"மாமா,நான் கண்டிப்பா படிக்கனுமா"

"உன்ன பேச விடுற தால தானடி இப்படி பேசுற எனக்கூறி அவள் இதழை முற்றுகையிட்டான்"

"சில நிமிடங்கள் கழித்து விட்டவன்,அவளை தன் மார்பில் போட்டு தூங்க ரெடியாகினான்"

"நீ படிக்கிற அவ்ளோ தான் சரியா,எதையும் போட்டு குழப்பிக்காத தூங்கு"

"அவன் மார்பில் புதைந்தவள் நிம்மதியாக தூங்கினாள்"

"லெட்சுமியின் அக்காக்கள் கீர்த்தியும்,நிவேதாவும் வந்து பார்த்துவிட்டு சென்றனர் இருவரும் அவளை கேலிக்கைகளோடு கழிந்தது அன்றைய பொழுதும்"

"இப்பொழுது லெட்சுமியின் கால் ஓரளவு சரியாகி இருந்தது"

"அவள் கால் சரியானதும் படிக்க வேண்டும் எனக் கூறியிருந்தான் உதயா"

"இன்று நிவேதாவிற்கு ஏழாம் மாதம் வளைகாப்பு"

"எல்லாரும் அங்கே கிளம்பி கொண்டிருக்க இவளும் கிளம்பினாள்"

"கிளம்பும் போதே உதயா அவளை எச்சரித்து தான் கிளப்பியிருந்தான் ரொம்ப நேரம் நிற்க கூடாது என "

"அவளும் சரி சரியென்று தலையாட்டி கொண்டிருந்தாள்"

நிவேதாவின் வளைகாப்பில் சந்திப்போம்.

சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Sponsored