சித்திரையில் பிறந்த சித்திரமே-20

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
மறு நாள் காலையில் அலாரத்தின் சத்தத்தில் விழித்த உதயா

"கேடி அலாரத்தை ஆப் பண்ணுடி " என கூற அவள் அங்கு இருந்தால் தானே

கீழே அவளின் சிரிப்பு குரலும் அவனின் பெற்றோரின் சிரிப்பு குரலும் கேட்க கடுப்புடன் எழுந்தவன்

"இந்த வேணிக்கும் மகேஸ்வரனுக்கும் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா மருமகள எல்லா வேலையும் மகனுக்கு செய்ய சொல்லாம இவங்க ரெண்டு பேரும் அவள பக்கத்தில உட்கார வைச்சு கொஞ்சிக்கிட்டு இருக்காங்க" என மனதிற்க்குள் வசைபாடியவன்

"லெட்சுமி எனக்கு காபி கொண்டு வா " என கத்தி அழைத்து விட்டான்

(கல்யாணம் பண்ணா அம்மா அப்பாவ கூட பேர சொல்லி திட்டுற அளவுக்கு போயிடுறாங்க இவங்கள எல்லாம் வைச்சுகிட்டு நானும் கதை எழுதி)

"இந்தாம்மா காபியை கொண்டு போய் கொடு இல்லனா அதுக்கும் கத்துவான் அவன் " என வேணி சொல்ல

"காபியை எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்"

"அங்கே அவளை முறைத்து கொண்டு உதயா நின்றிருந்தான்"

"ஐயோ காக்கி சட்டை கஞ்சி போட்ட சட்டை மாதிரி நிக்கிதே என மனதிற்க்குள் புலம்பியவள்,வெளியே சிரித்து கொண்டே "

"மாமா காபி " என்றாள்

".................."

"இப்போ காபி கேட்டுட்டு ஏன் இப்படி நிக்கிறீங்க மிஸ்டர் காக்கி சட்டை "

"அடிங்க என்னடி ஓவரா பேசுற அது என்னடி புதுசா காக்கி சட்டை"

"ஹாங் நீங்க காக்கி சட்டை தான,அப்படி தான் சொல்லுவேன் என்ன ஏதாவது மிரட்டுனா என் மாமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன் அவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் தெரியுமா"

"போடி போய் சொல்லு போய் இதையும் சேர்த்து சொல்லு " என வன்மையாக அவள் இதழை சிறைசெய்தான்


"விடுங்க மாமா வேலை இருக்கு" என அவன் அணைப்பிலிருந்து விலகியவாறே கூற


"ஆமா கட்டுன புருசன் கூட பேசும் போது வேலை வந்துரும் உன் மாமியாரோட பேசும் போது மட்டும் வேலை இருக்காது" என அவன் கோவமாக கேட்க

"ஐயோ காக்கி சட்டை கலவரத்துல இறங்கிருச்சே என மனதிற்க்குள் நினைத்தவள்"


"ஐயோ அப்படியெல்லாம் சொல்லல மாமா நான்,என் புருசன் வேலைக்கு கிளம்பி போகுறதுக்குள்ள நான் சமைச்சு என் மாமாகிட்ட பாராட்டு வாங்க வேணாமா" என கூறி சமாளித்தாள்

"முகம் பிரகாசமாக அவளை விட்டவன் "

"சரி போ நான் ரெடியாகி வரேன் " என விட்டான்

"கீழே வந்தவள் எல்லாவற்றையும் சமைத்து முடித்தி டைனிங் டேபிளில் அடிக்கினாள்"

"எல்லாரும் சாப்பிட அமரவும் இவளே பரிமாறினால்"

"வேணிக்கும் ,மகேஸ்வரனுக்கும் தங்கள் மருமளின் மேல் உள்ள பாசத்தை இன்னும் கூட்டியது அவளின் சமையல்"

"சாப்பிட்டு முடித்து உதயா கை கழுவ செல்ல ,"

"நீயும் போய் கை கழுவிட்டு வாம்மா சாப்பிடலாம் " என வேணி கூற

"அங்கே கை கழுவி கொண்டிருந்த உதயா இவளின் முந்தானையில் கையை துடைத்துவிட்டு "

"சாப்பாடு சூப்பரா இருந்துச்சு கிப்ட் நைட் தரேன் இப்போதைக்கு இது என" அவளின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு சென்றான்.

"அம்மா நான் ஸ்டேசன் போயிட்டு வரேன் " என கிளம்பி சென்று விட்டான்.

"வேலை பளு எல்லாத்தையும் முடித்துவிட்டு கொஞ்சம் ஃப்ரி ஆனவுடன் மனைவிக்கு அழைத்தான்"

மறுமுனையில் போன் எடுக்க பட்டவுடன்

"என்ன பண்ணற டி கருவா டார்லிங் " என கேட்க

"சும்மா தான் மாமா இருக்கேன்"

"ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு,உடம்பு எதுவும் சரியில்லையா என்ன"

"இல்ல ஒன்னும் இல்ல"

"சரி நீ ரெஸ்ட் எடு ,நான் அப்பறம் கூப்பிடுறேன்"என கூறி கட் செய்தவன் வீட்டிற்கு கிளம்பி விட்டான்,ஏனோ அவள் பொய் சொல்வது போல் தோன்ற

"அத்தை அவர் இப்போ போன்ல பேசுனத வைச்சே உடம்பு சரியில்லையான்னு கேட்குறாரு ,எனக்கு பயமாயிருக்கு என்ன பண்ண தெரியலை அத்தை"

"இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் ,காய்ச்சல் வரும் வேணாம்னு கேட்டியா,அவன் வேற வந்து என்ன சொல்லபோறான்னு தெரியலை" என வேணி பயந்து கொண்டே கூற

"இதையெல்லாம் உள்ளே நுழைகையிலேயே கேட்டு கொண்டே தான் உள்ளே நுழைந்தான் உதயா"

"எனக்கு தெரியாமா இரண்டு பேரும் என்ன பண்ணி வைச்சிருக்கீங்க " என உதயா கம்பீர குரலில் கேட்க இரண்டு பேருக்கும் அடிவயிறு பிசைந்தது.

"ஓன்னும் இல்ல"என லெட்சுமி கூற

"ஒன்னும் இல்லாம தான் உனக்கு காய்ச்சல் வந்துச்சா?",அம்மா நீங்க சொல்லுங்க என்னாச்சு"

அவரும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் பயந்து கொண்டே

"இல்லடா,நானும் அவளும் கோவிலுக்கு போனோம் ,அங்க அவ உன் பேர பச்சை குத்திக்கிட்டா,அதான் காய்ச்சல் வந்துருச்சு"என கூற

"உதயா இருவரையும் முறைத்த முறைப்பில் லெட்சுமியின் தலை நிமிரவே இல்லை"

"அவ லூசு மாதிரி பண்ண போனானா நீங்களும் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா"

"இல்லை டா,நீங்க மட்டும் மாமா பேர பச்சை குத்திருக்கீங்கள்ள அப்படினு அடம் பிடிச்சு குத்திக்கிட்டாடா" என கூற

"இருவரையும் பார்த்து தலையில் அடித்து கொண்டான்"

"ஏய் என்னடி ஒன்னும் தெரியாத மாதிரி அமைதியா உட்கார்ந்திருக்க" என கோவமாக கேட்க

"காபி கொண்டு வரவாங்க"

"மேல ரூம்க்கு டீ கொண்டு வா" என கூறி விட்டு செல்ல

"இவள் பயந்து கொண்டே ரூம்மிற்க்கு சென்றாள்"

அங்கு கோபத்தோடு உதயா அமர்ந்திருந்தான்

"மாமா"

"உன்ன வைச்சுக்கிட்டு என்ன தாண்டி நான் பண்ணுறது ,டெய்லி இப்படி ஏதாவது பண்ணுற"

"இப்ப நீ பச்சை குத்தினா தான் என் பொண்டாட்டனு அர்த்தமா, சொல்லுடி"

"இல்ல மாமா "

"பேசாத ஒழுங்கா போய் ஹாஸ்பிடல் கிளம்பு"

"இல்ல மாமா எனக்கு காய்ச்சல் போயிருச்சு ,ஹாஸ்பிடல் வேணாம்"

"ஏற்கனவே கடுப்புல இருக்கேன் மரியாதையா கிளம்பு"

"ஹம் சரி"

"இருவரும் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி விட்டு வந்த பின்பும் கூட உதயா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

"மாமா பிளிஸ்,என்ன அடிக்க கூட செய்ங்க ,ஆனா இப்படி இருக்காதீங்க"

"காதல் அப்படீங்கிறது காயப்படுத்திக்குறதுள இல்லடி ,நீ இப்படி லூசு தனமா பண்ணிட்டு வந்திருக்கீயே ,உனக்கு வலிக்கும் அப்படினு நினைக்கும் போதே எனக்கு வலிக்குது டி"

"ஸாரி மாமா"

"போடி"

"அதான் சாரி சொல்லிடேன்ல அப்பறம் போடி சொல்றீங்க"

"இப்ப நீ சாரி சொன்னவுடனே உன் காய்ச்சல் போயிடுமா"

"இல்ல,என் புருசன் பாக்கத்துல இருந்தா சரியாகிடும் "

மெலிதாய் ஒரு புன்னகை உதயாவிடத்தில் "கேடி பேசியே கவுத்திடுவா" என மனதிற்குள் நினைக்க

"சரி நீ ரெஸ்ட் எடு நான் போயீட்டு சீக்கிரம் வரேன் " என கூறி சென்றான்.

அவளை படுக்க வைத்து அவள் தலை கோதி விட்டே சென்றான்.

செல்கையில் சிறு கண்ணீர் துளி அந்த வலியை எவ்வாறு தாங்கியிருப்பாள் என்று

காக்கி சட்டையும் கலங்கியது கருவா டார்லிங்கின் கரை கடந்த அன்பினால்

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது


அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top