சித்திரையில் பிறந்த சித்திரமே 15

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே-15

அர்ஜூன்-கீர்த்தி திருமணம்

"நிவி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா"நிரஞ்சன் கெஞ்சி கொண்டிருந்தான்

(ஆம் நிவி இப்பொழுது மூன்று மாதம்)

"மாமா என் தங்கைச்சி கல்யாணத்தில நான் வேலை பார்க்காம யாஎ வேலை பார்ப்பாங்க"

"கடுப்பேத்தாமா அங்கிட்டு போங்க"

"சரி டி இந்த ஜூஸையாவது குடிச்சிட்டு போ"

"உங்களுக்கு"

"ஹம் நீயே குடி"

"ஹம்"

"அவள் முழுதும் குடித்து முடிக்க,அவள் இதழின் சுவையை அவனவள் அறிந்து கொண்டிருந்தான்"

"ஹப்பா ஜூஸ் செம டேஸ்டுடி பொண்டாட்டி"

"மாமா என்ன இது " என்று சினுங்கியவளிடம்

"ஜூஸ் குடிச்சது தப்பா டி பொண்டாட்டி.சரி ஏதோ வேலை இருக்குனு சொன்ன போறீயா இல்ல
இன்னொரு ஜூஸ் குடிச்சுட்டு போறீயா "

(வெக்கம் பூசிய முகத்துடன் அவனை தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டாள்)

"எங்க நம்ம ஆள காணோம்"

"யாரை தேடுற டா உதயா"

"எங்கடா நிரஞ்சன் என் பொண்டாட்டியை காணோம்"

"ஏன் டா இன்னும் கல்யாண்ம் தான் முடியையே அதுக்குள்ள நிமிஷத்துக்கு நூறு பொண்டாட்டி போடுற"

"என் பொண்டாட்டி நான் சொல்லுறேன் கேட்க முடியலனா கிணத்துல குதி.என்ன கேள்வி கேட்குற"

"உன் பொண்டாட்டி நேத்து நைட்டே நீ வரைலனு உன் மேல கோவத்துல இருக்குறா.போய் சமாதானப்படுத்து"

"ஐய்யோ மதுரையயே கட்டி மேய்க்கிறேன்,ஆனா நான் கட்டிக்கபோறவள கணிக்க முடியையே"

(போ மாமா உன் மயிலு மல்லுகட்ட தயாராஇருக்கு)

"அக்கா உங்கள மாமா கூப்பிடுறாறு"என்று கமல் கூற

"அதெல்லாம் வர முடியாதுனு போய் சொல்லு போ"

"வா சொல்லுறத கேளு,இப்போ தான் வந்தாரு பார்க்கவே டயர்டா வேற இருக்காரு"

"சரி போ வரேன்"

(ரூமிற்க்குள் சென்றவள் விழிகளின் வட்டத்திற்க்குள் தன்னவனை நிரப்ப முயல,அங்கே அவன் இருந்தால் தானே)

"எங்க போனாங்க"
(பின்னிருந்து யாரோ கண்ணை மூட யாரோ என்ன யாரோ உதயா தான்)

தன்னவனை உணர்ந்து கொண்டவள் திமிறி வெளிப்பட முயல
அதையெல்லாம் எளிதாய் தடுத்தவன்

"என்னடி நான் அம்மா கிட்ட கொடுத்துவிட்ட சேலைத்தான் கட்டியிருக்க "
என கூறியபடி அவளை திருப்பி கையகளை விலக்கியவன் அவளை முழுதாய் ஆராய அவன்
பார்வையிலேயே பாவையவள் பதுமை ஆனாள்

"உன் சேலையின் மடிப்பாய்
உன் இடையில் சேர்ந்திடவா
மணம் வீசும் மல்லிகையாய்
உன் கூந்தல் சேர்ந்திடவா"

என காதிற்குள் அவன் கவிபாட அவள் கன்னசிவப்பை கட்டுபடுத்த இயலவில்லை

"நீங்க கொடுத்ததுனால நான் கட்டலை,என் அத்தை கொடுத்ததுனால தான் கட்டுனேன் போங்க
உங்க ஸ்டேசன்லேயே இருந்துக்க வேண்டியதுதான"

"ஏய் கருவா டார்லிங் என்ன டி வேலை அதிகம் டி சாரிடி"

"உங்க சாரி ஒன்னும் வேணாம்"

"சரி அப்ப இதை போட்டுக்கோ"என அவள் கைகளில் தங்க வளையல்களை கைகளில் போட்டுவிட்டான்
(நல்லா கரெக்ட் பண்ணுறடா உதயா)

"இப்போ எதுக்கு வளையல் வாங்கிட்டு வந்தீங்க,இவ்ளோ செலவு பண்ணி"

"போடி லூசு பொண்டாட்டி ,நமக்கு இருக்குற சொத்துக்கு நகை கடையையே வாங்கலாம்,நீ
என்னடான்னா இப்படி பேசுற"

"இல்ல மாமா"

"சரி உள்ள வரும் போதே பார்த்தேன் ,உன் முகமே சரியில்ல,என்ன பிரச்சனை "


"இல்ல ஒன்னு இல்ல"

"என்னனு கேட்டேன் டி என்ன பார்த்து பதில் சொல்லு"


"மாமா நிவியை அவங்க அப்பா பார்த்துக்குறாங்க,கீர்த்தியையும் அவங்க அப்பா கூட இருக்குறாங்க,ஆனா அப்பா மட்டும் ஏன் மாமா என்ன விட்டுட்டு போனாங்க "

என தன் மார்பில் சாய்ந்து அழுதவளை சமாதானம் பண்ண அவளை இறுக்கமாக அணைத்து
கொண்டான்

"மாமா நான் அவங்கள பார்த்து பொறாமை படலை,ஆனா என்னால அப்பா என் கூட இல்லைங்குறத என்னால ஏத்துக்க முடியலை"
அவளை தள்ளி நிறுத்தியன்

"இங்க பாருடி லூசு யாரு இங்க எப்ப பிறக்கனும் எப்போ இறப்போம் அப்படிங்குறது நம்ம கையில இல்ல சரியா"
இன்னும் அவள் தெளியாததை கண்டு

"நான் உன்ன உங்க அப்பா மாதிரி பார்த்துபேன்னு சொல்லியிருக்கேன்ல,அப்பறம் என்னடி அப்ப நீ என்ன நம்பலை தானே ,நான் தான் உன்ன நல்லா பார்த்துபேன்னு சொல்லுறேன் ஆனா நீ என்ன நம்ப மாட்டுறல போடி நீ எங்கிட்ட பேசாதடி"

என கூறி விட்டு சென்றவனை பார்த்து கொண்டே நின்றுவிட்டாள்

"சாரி டி கருவா டார்லிங் உன்னை மாத்துறது எனக்கு வேற வழி தெரியலை என மனதோடு பேசிகொண்டான்"

அதற்கு பின் அவள் பேச முயன்றும் முடியவில்லை
அர்ஜூன் கீர்த்தியின் திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது

(உணவு உண்ணும் போதும் அவளை கண்டுகொள்ளவில்லை அவன்.அவளாகவே சென்று அவன் அருகில் அமர்ந்து சாப்பிட்டாள்)

"உதயா கெத்த மெயிண்டெயின் பண்ணுடா நீ பேசாமா இருந்தா தான் அவ உன் கிட்ட வர்றா உன்ன அப்ப தான் புரிஞ்சுக்குவா அதுனால அவளுக்கு பாவம் பார்க்காத"என மனசாட்சி எச்சரிக்க

"அவளுக்கு பிடிச்ச லட்டுவை தன் இலையில் இருந்ததை அவள் இலையில் வைத்தவன்,அமைதியாக எழுந்து சென்றான்"

"இவளுக்கு தான் கண்ணை நிறைத்தது கண்ணீர்,நம்மள நம்ம அப்பா மாதிரி தான் இவங்க ஒவ்வொரு விஷயத்துலையும் நம்மள பார்த்துக்குறாங்க நாமளும் இவங்கள புரிஞ்சுகனும்"என மனதிற்க்குள் பேசிக்கொண்டாள்
அவன் கிளம்ப தயாராக

"இவள் தன்னிடம் சொல்லி விட்டு செல்ல மாட்டேனா என எதிர்பார்க்க"

அவனோ அவன் அன்னையிடம் சொல்லிவிட்டு அவளிடம் கூறி விடுமாறு சொல்லி சென்றுவிட்டான்

"அவங்க கிளம்பிட்டாங்களா அத்தை "

"இப்போ தான் டா கிளம்பினான்"

"உங்கிட்ட சொல்ல சொன்னான்"

"ஹம் சரிங்க அத்தை"

"அர்ஜூ மாமா பிளிஸ் சும்மா இருங்க"

"என்னடி லைசன்ஸ் வந்துருச்சுல"

"அதுக்கு சும்மா இல்ல நைட் நான் தூங்கிருவேன் எப்படி வசதி"

"ஐய்யோ பாவி கொல்லாதடி"

"அப்ப சும்மா இருங்க"
கையில் போனை வைத்து கொண்டு போனில் தன்னவனை அழைக்க

"சொல்லு டி"

"ஏன் கிட்ட சொல்லாம ஏன் மாமா போனீங்க"

"என்ன சொல்ல சொல்லுற,நான் உங்கிட்ட என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்ட அப்பறம் என்ன சொல்ல"

"சாரி மாமா"

"நீ எப்ப என்ன நம்புறயோ அதுவே எனக்கு போதும்,உன் சாரி எனக்கு வேணாம்"

"மாமா"

"ஹம்"

"ஐ லவ் யூ"

"ஹம்"

"என்ன மாமா"

"வேலையிருக்கு அப்பறம் பேசுறேன் " என போனை வைத்தவன் எப்படி அவன் கருவா டார்லிங் கவலை பட்டுறுப்பா என கவலை கொண்டான்

"இங்கு போனை வைத்தவளின் கண்ணில் நிற்காமல் நீர் வழிந்தது"


"மறந்தால் தானே நெனைகனும் மாமா
நினைவே நீதானே நீ தன்னே
மனசும் மனசும் இணைந்ஜது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன enna
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிசாளே இந்த கன்னி
வா மாமா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top