சிதற வைத்த செம்பாவையாள்

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்....

மீ ஷம்லா...
சில பேருக்கு என்னை தெரிஞ்சிருக்கலாம்...
தெரியாமலும் இருக்கலாம்...
இனிமே தெரிஞ்சிக்கோங்க பிரெண்ட்ஸ்...

இப்போ கதை...
சில உண்மைகளும் கற்பனையும் கலந்த கலவை.
நாயகன் நாயகி... கதையின் கரு எல்லாவற்றையும் கதையின் போக்கிலே தெரிந்து கொள்ளுங்கள்....
உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்பதை நீங்க தான் படிச்சு பார்த்திட்டு சொல்லணும்...
படிச்சிட்டு கண்டிப்பா கமென்ட் பண்ணித்தான் ஆகணும் பிரெண்ட்ஸ்... kindly request....
new1 .jpg
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 01



I'm so lonely broken angel,
I'm so lonely, listen to my heart.


Man, dooset daram,
Be cheshme man, gerye nade.
Na, nemitoonam,
Bedoone to, halam bade.


I'm so lonely broken angel...
I'm so lonely, listen to my heart...
One n' lonley, broken angel...
Come n' save me, before I fall apart...



ஆடிடோரியத்தின் எட்டுத்திக்கும் பரவிய குழைந்த குரல் வெகு திருப்தியளிக்க அதை கண்மூடி ரசித்தபடி தனக்குள் ஆழ்ந்து போயிருந்த ஷாலினி திருப்தியுடன் முன் நின்ற மாணவியை பார்த்து.

“இத்தனை நாள் ப்ராக்டீஸ்ல இன்னிக்கி தான் நல்லா பாடியிருக்க இதே மாதிரி காம்பெடிசன்லயும் பாடி பிரஸ்ட் பிளேஸ் எடுக்கணும் புரியுதா... கீப் இட் அப்...” பாராட்டி விடைபெற்று ஆசிரியர்களுக்கான ஸ்டாப் ரூம் நோக்கி சென்றார்.

‘பார்றா நம்மள பாராட்டிட்டு போகுது.. அவ்வளவு நல்லாவா பாடினேன்..’ மனதில் எண்ணிக் கொண்டாள் அவள்.

‘இது உனக்கு தெரியுது உன்னைய பாராட்டிட்டு போன டீச்சருக்கு தெரியலையேமா’ டைமிங் கவுண்டர் கொடுத்தது அவள் மனசாட்சி.

‘எவ்ளோவோ கேட்டிட்டோம் இத கேக்கமாட்டோமா..’ அதை கேட்டு வெமாசூசு எதுவுமில்லாமல் சிரித்துக்கொண்டே பதிலடிகொடுத்தாள்.

‘இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல...’ காறித்துப்பியது மனசாட்சி.

அதில் சுற்றும் முற்றும் பார்த்தவள் ‘நல்லவேளை யாருக்கும் தெரியலை...’ எனும் பாவனையுடன் முகத்தை கெத்தாய் வைத்துக் கொண்டு உற்சாகத்துடன் தோழிகளை நாடிச் செல்ல,

‘அடச்சி தூ... ரியாக்சன குறை...’ மீண்டும் அது காறி உமிழ அதை கேட்டு அசட்டு சிரிப்பை உதிர்த்தவள்,

‘இது நமக்குள்ளே இருக்கட்டும் வெளிய யாருக்கும் தெரிய வேணாம்...’ காலில் விழாத குறையாக அவள் கெஞ்ச மனசாட்சி கேவலமான பார்வையுடன் போனால் போகட்டும் என்று சமத்தாய் உள்ளே நுழைந்து கொண்டது.

‘ஷப்பாஹ்... இது கிட்ட மாட்டிக்கின்னு நான் படும் பாடிருக்கே... தாங்கமுடில...’ உதட்டி பிதுக்கி அழுவது போல் பாவனை செய்தவள் தோழிகள் அருகில் நெருங்கவும் கெத்தாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“என்னடி சீடுமூஞ்சி வாயால பாராட்டெல்லாம் வாங்கிட்டியாம்... பெரிய ஆளு தான் போ... என்ன சொக்கு பொடி டி போட்ட... நானும் அது வாயால என்னைக்காவது ஒரு நாள் பாராட்டு வாங்கலாம்னு பார்க்கிறேன் முடியலடி... என்னைய பார்த்தாலே உர்ராங்கோட்டான் மாதிரி உர்ருன்னு முறைச்சு வைக்குது...” கடுப்பில் பொரிந்தாள் ஷாஷி.

அதை கேட்டு பள்ளி சீருடையின் மேற்சட்டையை தூக்கி விட்ட பாலா சீரியசான முகபாவத்தில் அவள் தோள் மேல் கைபோட்டு “மச்சி... இதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு சொல்றேன் கேட்டுக்கோ... இதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும் ஒரு முரட்டு தனமான புத்திசாலித்தனம் வேணும்...” கண்களை உருட்டி உருட்டி அவளை ஓட்ட,

“உன்கிட்ட கேட்டதுக்கு என்னைய ...” ஷாஷி கடுப்புடன் பல்லை கடித்து பாதியில் நிறுத்த,

“செருப்பாலயே அடிச்சிக்கனும்.. அத தானே சொல்ல வந்த” அழகாய் முடித்து வைத்தாள் ஷிக்கு.

“ஹா ஹா...” ஷிக்குவும் பாலாவும் கையடித்து சிரிக்க “உங்கள...” அவர்களை அடிக்க துரத்தினாள் ஷாஷி.

“அடியே அடிக்காதடி... வலிக்கிது... வேணாம் விட்டிடு அழுதிடுவேன்...” ஷிக்கு ஆடிடோரியத்தின் மேல் தளத்தில் படிகளில் ஏறி இறங்கி ஆட்டம் காட்ட அவளுடன் பாலாவும் சேர்ந்து கொண்டாள்.

“கன்னி பொண்ணு சாபம் உன்னைய சும்மாவிடாதிடி... இதுக்கு மேலா என்னால ஓட முடில விட்டிடு...”

“அடிங்..” பாலாவின் பேச்சை கேட்டு மீண்டும் அவளை துரத்த இறுதியில் மூவரும் மூச்சு வாங்க படியில் தோய்ந்து அமர்ந்து கொண்டனர்.

“எ..என்னா..ல முடில... ஷப்பா.. மூ..ச்சு வாங்கிது...” தொண்டை உளற மூச்சு வாங்கிக் கொண்டு ஒரு போத்தல் தண்ணீரை மூவரும் காலி செய்தனர்.

“காலைல போனதிலிருந்து எஸ்எஸ் (SS – சிடுமூஞ்சி ஷாலினி) கிட்ட பாடி காமிச்சே என் தொண்ட போச்சு... இப்போ செம்மையா பசிக்கிது.. கான்டீன் போகலாம்.. இல்ல இங்கயே பொட்டுன்னு போய்டுவேன்...” சோர்ந்த குரலில் கூறிய பாலா தோழிகளை இழுத்துக் கொண்டு கான்டீன் சென்றாள்.

“அண்ணே... ஆறு சமோஸா...”

“எதுக்கிடி ஆறு சமோஸா...” ஷிக்கு லட்டுவை வாய்க்குள் மென்றபடி கேட்க, அதில் அர்த்த பார்வை பரிமாறிக் கொண்ட பாலாவும் ஷாஷியும் வாய்விட்டு சிரித்தனர்.

தோழிகளின் சிரிப்பின் காரணம் உணர்ந்து முதலில் அவர்களை முறைத்தவள் பின் சன்ன சிரிப்புடன் சிரிக்கும் போது பளிச் பளிச் என மின்னும் பாலாவின் கன்னத்து குழியை ஆசையுடன் தடவிக் கொடுத்து எப்போதும் போல் “நான் மட்டும் பையனா பொறந்திருந்தேன் அப்பிடியே உன்னை தூக்கிட்டு போய்....”

“தூக்கிட்டு போயி...” ஷாஷி கண்ணடித்துக் கொண்டு கேட்க,

“அப்பிடியே...” கள்ளச்சிரிப்புடன் ஷிக்கு பாதியில் நிறுத்த,

“சீ... கர்மம்... கர்மம்... என்னத்த சொல்ல போற...” கண்களை சுருக்கி மறைமுகமான ஆர்வத்துடன் கேட்டாலும் முகம் தோழியின் பேச்சில் லேசாய் சிவந்து போனது.

“கல்யாணம் பண்ணுவேன்னு தான் சொல்ல வந்தேன்... நீ என்ன நினைச்ச...” குறும்புடன் ஹை பை அடித்துக் கொண்டு இரு தோழிகளும் ஒருமித்த குரலில் கேட்க, அதில் சன்னமாய் வெட்கம் கொண்டவள் “சும்மாயிருங்கடி...” முகத்தை கைகுட்டையால் மறைத்துக் கொண்டாள்.

“வெக்கத்த பாருடா... இந்த உலகத்தில யாரை வேணா நம்பலாம் ஆனா அமைதியா இருக்கிற யாரையும் நம்ப கூடாதுடி...” ஷாஷி கண்ணடிக்க, அதை ஆமோதித்து தலையசைத்தாள் ஷிகா.

அதற்குள் சுட சுட சமோஸா வரவும் பசியில் இருந்த மூவரும் எச்சில் ஊறிய நாவுடன் தக்காளி கெட்சப் ஊற்றி ஒரு கட்டு கட்டினர்.

மூவருமே பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாய் படித்தவர்கள். பெண்கள் பள்ளி என்பதால் பெரிதாய் கட்டுபாடுகள் இல்லாவிடினும் ஓரளவு கட்டுப்பாடுடன் கூடிய பள்ளி தான். இப்போது பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தனர்.

படிப்பில் மூவரும் மூன்று விதம். ஷிகா எப்போதும் வகுப்பில் முதலிடம். பாலா இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்வாள். ஷாஷினிக்கு அந்தளவுக்கு படிப்பில் ஈடுபாடில்லை. அவள் ரசனைகள் சற்று வித்தியாசமானவை. ஆனாலும் படித்து நல்ல மார்க் எடுத்து விடுவாள்.

சாப்பிட்டு முடித்து கிரௌண்டிற்குள் நுழைந்தவர்கள் கல் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

“மோர்னிங் வந்தது... இன்னும் கிளாஸ்க்கு போகல... சீதேவி மட்டும் என்ட்ரி கொடுத்தா நம்ம மூனு பேரையும் மூதேவயாக்கி இமேஜ் டேமேஜ் பண்ணிடுவா... சும்மாவே நம்ம மூனு பேரையும் அதுக்கு பிடிக்காது இப்போ மட்டும் கிளாஸ்க்கு போகல வச்சி செஞ்சிடும்...” பாலா வகுப்பாசிரியரின் நினைவில் கடுப்புடன் கூறினாள்.

“ஏன்டி நல்ல நேரத்தில் அவ பேச்சை எடுக்கிற வாயில வந்திட போகுது... இவங்களையெல்லாம் யாருடி டீச்சர் ஆக சொன்னாங்க... இப்போ நம்ம உயிரை குடிக்கிறாங்க... உனக்கே தெரியும்ல எனக்கு ஹிஸ்ட்ரி எவ்ளோ இன்ரெஸ்ட்னு; எப்போ இவ வந்தாவோ அன்னைக்கு போச்சு என் ஹிஸ்ட்ரி மேல இருந்த ஆசை... இப்போ எனக்கு கிளாஸ்க்கு போற மூடே இல்லடி... நீ வேணா போய் அவ அறுக்கிறதை ஆசைதீர வாங்கிட்டு வாயேன்..” கடுப்புடன் கூறியபடி உதட்டை சுழித்துக் கொண்டாள் ஷிகா.

“அது என்ன தேவைக்கு... அதெல்லாம் நானும் போக போறதில்ல... நீங்க ரெண்டு பேரும் வராம நான் என்னைக்கு அந்த வகுப்புக்குள்ள போய் இருக்கேன்....” அலுப்புடன் உரைத்த பாலா ஷாஷியின் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.

“இன்னிக்காச்சும் தூங்கலாம்னு பார்த்தேன் அதுக்கு வேட்டு வச்சிட்டானுங்க... ஈவ்னிங் டியூசன் க்ளாஸ் போறதா இல்ல கட் பண்றதா...” மாலை நேர வகுப்பை பற்றி பேச்சை எடுத்தாள் ஷிகா.

“நான் கண்டிப்பா வருவேன்...” அவசரப்பட்டு வாயை விட்ட ஷாஷி அதன் பின்பு தான் அவசரபட்டதை உணர்ந்து அசடு வழிந்து இதழை அழுந்த கடித்துக் கொண்டாள்.

“அம்மாடியோய்... செம்ம ஸ்பீட்டா தான் போ...” ஓட்டினாள் பாலா.

“அதுக்கில்லடி.. இன்னிக்கு சயின்ஸ்ல முக்கியமான பாடம் படிக்கிறோம்ல அதுக்கு தான் சொன்னேன்... வேறயொன்னுயில்ல...” தோழிகளிடம் வசமாய் சிக்கிக் கொண்டதில் தவிப்புடன் படபடத்தாள்.

“அப்பிடியா... நான் நம்பிட்டேன்... ஷிக்கு நீயும் நம்பிட்டேன்னு சொல்லு... அப்போதான் இது நம்பும்... நாம நம்பிட்டோம்னு...” தான் நம்பவில்லை என்பதை மறைமுகமாக எடுத்துரைத்தாள் பாலா. உடன் ஷிகாவும்.

“நானும் சத்தியமா நம்பிட்டேன்டி...” இதழ்கடையோரம் குறும்பில் துடித்தது.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
“ஏன்டி இப்பிடி ஓட்டிறீங்க...” முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு கேட்க,

“ஏண்டி மத்தவங்கள கலாய்ச்சா சிரிக்கிற... கூடவே நீயும் சேர்ந்து கவுண்டர் கொடுக்கிற.. ஆனா உன்ன கலாய்ச்சா மட்டும் முகத்த பச்ச குழந்த மாதிரி வச்சிக்கிட்டு அழுகிற சீன் போற...” பாலா கிடுக்கிபிடி போட,

“தானா வந்த எலியை தப்பிச்சுக்கொன்னு விட்றதுக்கு அவ்ளோ நல்லவங்க இல்லடி நாங்க...” ஷிகா உடன் சேர்ந்து கொண்டாள்.

“அதுவும் இது சாதாரண எலியில்ல... காதல் வலையில் சிக்கியிருக்கிற எலி... சும்மா விட்டிடுவோமா இல்ல விடத்தான் பூனை நினைக்குமா...” அவளை எலியாக்கி தங்களை பூனையாக்கி அவளை சுற்றி வளைத்தனர்.

‘இனி இதுங்க என்னை ஒருவழியாக்காம விடமாட்டாங்களே... இருக்கிற பிரச்சினைல இவளுங்க வேற’ தன்னை நினைத்து எழுந்த பரிதாபத்துடன் தோழிகளின் நடுவில் அமர்ந்திருந்தாள் ஷாஷி.

“சரி சொல்லு...”

“என்னத்த சொல்ல சொல்ற...”

“என்னடி இப்பிடி பட்டுன்னு கேட்டிட்ட... உன் லவ் ஸ்டோரியை தான் கேட்கிறோம்.. வேற எதை பத்தி உன்கிட்ட பேச போறோம்... சரி சொல்லு சொல்லு...” கதை கேட்கும் ஆர்வத்தில் கேட்டாள் ஷிகா. அதே ஆர்வம் பாலாவுக்கும் இருந்திருக்கும் போல. அவளும் ஷாஷியின் முகத்தை ஆவலுடன் பார்த்திருந்தாள்.

ஷாஷி ஒருவித வெட்கம் கலந்த படபடப்புடன் அமர்ந்திருந்தாள். அவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் இதே நிலை தான். யாரிடத்திலும் அதை கூற முடியவில்லை. இந்த வயதில் என்ன காதல் என யாராவது திட்டி விட்டால்... இல்லை வீட்டிற்குள் முடக்கி விட்டால்... அந்த பயத்தினால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.

தோழிகளின் முகத்தை பார்த்தாள். கதை கேட்கும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தனர். அதை பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்தவள் தன் காதல் கதையை விவரிக்கலானாள்


@@@ அது ஒரு மாலைநேர வகுப்பு..

பாலாவும் ஷிகாவும் அங்கு செல்லாததால் தன் வகுப்பு மாணவர்களுடன் சலசலத்தபடி வந்தவள் கன்னத்தில் புரண்ட முடிக்கற்றை மென்மையாய் காதின் புறம் சொருகி விட்டாள்.

அவள் அணிந்திருந்த சிகப்பு நிற குர்தியும் கருப்பு நிற பாலாஸ்ஸோவும் மஞ்சள் குழைந்த வெள்ளை நிறத்தினளை எடுப்பாக காட்டியது. தோளின் வலது புறம் தோள்பை. ஒரு கையில் நெஞ்சோடு சேர்த்தணைத்த புத்தகம். இடது கையில் வாட்ச். காதில் மெல்லிய தொங்கட்டான், கழுத்தில் மெல்லிய பென்டன் பதித்த சங்கிலி. எளிமையான அலங்காரம். இருந்தும் பேரழகியாய் காட்டியது.

பாதி வழியிலே தோழிகள் பிரிந்து சென்றிருக்க அந்த குறுகிய சந்தில் தனியாய் நுழைந்தாள் ஷாஷி. பழக்கப்பட்ட இடம் என்பதினால் பெரிதாய் பயம் கொள்ளவில்லை. இருந்தும் பொழுது சாய்ந்து கொண்டிருந்ததில் இருள் படிய துவங்கிய வானம் அவளை பீதியடைய செய்திருந்தது.

வேகமான நடையில் சிறு தூரம் கடந்திருந்தாள் அதற்குள் அவள் வழியை மறித்தாற் போன்று வந்து நின்றது பள்சர் ஒன்று. அதில் திடுக்கிட்டு போனவள் முன்னால் நின்றவனை ஏறிட்டாள். அவன் யாரென சரிவர தெரியவில்லை. பெண்களுக்கேயான இயல்பான பயம் நெஞ்சை கவ்வியது, அதற்கு மாறாய் அவன் பார்வை கூச்சத்தை மூட்டியது தான் விந்தையிலும் விந்தை. பதின் வயதில் காலடி எடுத்து வைத்தவளுக்கு அந்த உணர்வுகள் புதிது.

இருந்தும் அவனை தாண்டி போக முற்பட்டாள். கை நீட்டி போக விடாமல் தடுத்து நிறுத்தினான்.

“கொஞ்சம் பேசனும்..” மென்மையுடன் கூடிய அழுத்தமான குரல்.

அவளுக்கோ முன்னே பின்னே தெரியாதவன் வழிமறித்து நிற்பதை பார்த்து அடிவயிற்றை பிசைந்தது. யாராவது பார்த்துவிட்டால் என்ற எண்ணமே அவளுள் பயத்தை விளைவித்தது.

இங்கிருந்து சென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க “என்ன பேசணும்...” வழமைக்கு மாறாய் குரலுக்கு பதில் காற்று வந்து சதி செய்தது.

அவளின் நிலை அவன் முகத்தில் காந்த புன்னகையை தவழ செய்தது. மனதிற்கு பிடித்தவர்களின் எந்தவொரு செயலும் மனதை மகிழ்விக்கும் போலும்.

“கண்டிப்பா பேசத்தான் போறேன்.. அதுக்கு முன்னாடி சின்ன இன்ட்ரோ”

“ஐயம் ரோஹன்” கை நீட்டினான்.

‘லூசாப்பா நீ... யாருன்னு தெரியாத பொண்ணுக்கிட்ட வந்து கை குலுக்க கை நீட்டிற.... ஒருவேள உண்மையிலேயே லூஸா இருப்பானோ’ அந்த எண்ணத்தின் ஊடே இறுக்கமாய் கைகளை ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொண்டு அவனை பார்த்து வைத்தாள்.

“கை கொடுத்தா பதிலுக்கு கை கொடுக்கணும்னு தெரியாதளவு நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்லன்னு எனக்கு தெரியும்... அப்றோம் ஏன்? ஒருவேளை முன்னபின்ன தெரியாதவன்கிட்ட கைகொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்களா...”

‘ஆமா உங்க ஆயா வந்து சொல்லிட்டு போச்சு... லூசுத்தனமா பேசிறான்...’ மண்டையை சொரிந்தவள் “வழி விட்டீங்கன்னா நான் வீட்டுக்கு போய்டுவேன்...” நடுவழியில் நந்தி மாதிரி வழியை மறிக்கிறானே என்ற கோபம் வார்த்தைகளில் தெறித்தது.

“சொல்ல வேண்டியதை சொன்னதும் நானே பத்திரமா கூட்டிட்டு போறேன்...”

அதை கேட்டு அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள் ஷாஷி.

‘அது என்ன தேவைக்கு டா... என் வீட்டுக்கு எனக்கு வழி தெரியும் நான் போய்க்குவேன்... அதுக்கு இவன் வழியை விட்டாத்தானே...’

“என்ன சொல்லணுமோ அதை சீக்கிரம் சொல்லுங்க...” கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டு உரைத்தாள்.

“சொல்றேன்... சொல்றதுக்கு தான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன்...” கைகளை பிசைந்து தலையை அழுந்தக் கோதி நெற்றியை தேய்த்து பல பாவனைகள் செய்தவன் தன் மனதிலுள்ளதை அவளிடத்தில் எப்படி கூறுவது என தடுமாறினான்.

‘வாரணமாயிரம் சூர்யா கூட இந்தளவுக்கு பெர்போர்மேன்ஸ் பண்ணியிருக்க மாட்டான்...’

“நான் என்ன சொல்ல வந்தேன்னா... எனக்கு... ஐ மீன்.. எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது... நேரடியாவே சொல்றேன்... எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. காதலிக்கணும் போல இருக்கு... உனக்கும் என்னை பிடிச்சதின்னா இதே இடத்துக்கு நான் நாளைக்கும் வருவேன்... அப்போ சொல்லு... உனக்காக காத்திருப்பேன்...” என்றவன் அவள் முகத்தை உற்று நோக்கி புன்னகை புரிந்தான்.

மறுநொடி அவளை பார்த்தவாறே தன் பைக்கை உயிர்பித்தவன் “I will be waiting” அழகாய் தன் மனதிலுள்ளதை எடுத்துரைத்தவாறு வந்த வேகத்தில் பறந்தும் போயிருந்தான்.

அவளோ முதலில் அவன் சொன்ன வார்த்தைகளை ஏனோதானோவென கேட்டிருந்தவள் அதன் பின்பே அதன் அர்த்தம் உணர்ந்து கற்சிலையாய் சமைந்து போய் நின்று விட்டாள். எத்தனை நேரம் அசையாது நின்ற இடத்திலே ஆணி அடித்தது போல் நின்றாளோ தூரத்தில் எங்கோ புள்ளியாய் கேட்ட பறவைகளின் சல்லாப சத்தத்தில் தன்னிலைக்கு மீண்டவள் படபடத்த இதயத்துடன் வீட்டை நோக்கி ஓடினாள்.

வீட்டிற்கு வந்தும் கூட அவளால் அவனின் வார்த்தைகளை மறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவள் காதினுள் ஒலித்து பெரிதும் இம்சித்தது.

புத்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பிலாவது ஈடுபடுவோம் என்றால் புத்தகத்திலும் அவன் முகம் தெரிவது போல் மாயை. பாட்டி வீட்டுக்கு செல்வோம் என்றால் மீண்டும் அவன் கண் முன் தோன்றிடுவானோ என்ற பயம். தூங்க சென்றால் மூடிய விழிகளுக்குள் அவன் முகம். தோழிகளிடத்தில் சொல்ல முயன்றவளுக்கு கூச்சம் உந்தி தள்ள தொலைபேசியின் அருகினில் சென்றவள் பாதியிலே திரும்பி விட்டாள்.

அன்று முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போல் திரு திருவென முழித்துக் கொண்டு செய்வதறியாமல் தவித்து போனால் மறுநாள் ஏதேதோ சாக்கு சொல்லி வகுப்பிற்கு செல்லாமல் மட்டம் போட்டுவிட்டாள்.

ஆனாலும் அவன் நினைவுகள் விடாது கருப்பாய் அவளை துரத்திக் கொண்டே தான் இருந்தது. ஒரு சில கணங்கள் தான் அவனை அசட்டையாய் பார்த்திருந்தாள். சில நொடிகள் தான் அவன் குரல் கேட்டாள். கண்ணிமைக்கும் நொடி தான் அவன் புன்னகை முகம் பார்த்தாள். அதுவே அவள் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டது.

நாட்கள் அதன் போக்கில் நகர அதன் பின் அவன் அவள் கண்களில் விழவேயில்லை. அதை பார்த்து முதலில் களிப்படைந்தவள் பின்பு அவனை காணாது தவித்து தான் போனாள். இதுவரைக்கும் யாரிடத்திலும் அவள் இது போல் உணர்ந்ததில்லை. முதன் முதலாய் அவள் இதயத்தை மலர செய்தவன் அதன் பின் அவள் கண்களிலே படாமல் போனதில் தவித்து போனவள் அதை யாரிடத்திலும் சொல்ல முடியா பயத்தில் தனக்குள் மறைத்துக் கொண்டு வெளியில் தன்னை உற்சாகமாய் காட்டிக் கொண்டாள்.

அவள் உயிர்தோழிகளிடத்தில் கூட அவள் மூச்சு விடவில்லை. விருப்பமில்லாததால் இல்லை. சங்கடத்தினால். தோழிகளுக்கு தான் தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என்பதனால். உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டாள். வெளியில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. தினமும் வகுப்பு முடிந்து செல்லும் போதும் அவள் விழிகள் அந்த குறுகிய சந்தில் பாய்ந்து மீளும். அவனை காண மாட்டோமா எனும் ஏக்கம் அதிகரிக்கும். இந்த வயதில் இது தேவையில்லாதது என அவளே தன்னை சமன் படுத்திக் கொள்வாள். அவனை நினையாதே என மனதிற்கு கட்டளை இடுவாள்.

மனம் ஒரு குரங்காயிற்றே. நினையாதே என்று மனதை சமன் படுத்திக் கொண்டு அவன் நினைவிலே நாட்களை கழித்தாள். இரண்டு மாதங்கள் நில்லாமல் கடந்திருந்தது.

மழை வரும் போல் இருந்ததில் நேரத்துடனே வகுப்புகள் முடிந்திருக்க குடை கொண்டு வராததில் நகத்தை கடித்து துப்பிக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் அந்த குறுகிய சந்தினுள் நுழைந்தாள் ஷாஷி.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
கிட்டத்தட்ட அவள் இந்த வழியால் வந்தே இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. முதலில் பயத்தில் வராமல் இருந்தவள் பின்பு அவனை காணாத தவிப்பில் வரவில்லை. இன்று வீட்டிற்கு அவசரமாய் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உந்தி தள்ளியதில் இந்த வழியால் நுழைந்திருந்தாள்.

கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதும் இடையிடையே வானத்தை பார்ப்பதுமாய் நடந்து வந்து கொண்டிருந்தவள் எதன் மீதோ மோதி தடுமாறி நின்றாள். பயத்தில் நெஞ்சம் வேகமாய் அதிர்ந்தது. முகம் வெளுக்க அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் தன் முன் நின்றவனை பார்த்ததும் ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.

அவளிடத்தில் காதலை உரைத்த ரோஹன் தான் அவள் முன் நின்றிருந்தான்.

முதலில் அவனை பார்த்து ஆசுவாசமடைந்தவளின் கண்கள் ஏக்கமாய் அவன் முகத்தை தழுவி மீண்டது மறுகணமே தவிப்புடன் கூடிய கோபத்தில் அவனை கடந்து சென்றாள்.

அவள் முகத்தையே விழியகற்றாது பார்த்திருந்தவன் அவள் கண்களில் தோன்றிய ஏக்கத்தையும் சடுதியில் மின்னிய கோபத்தையும் சந்தோஷத்துடன் குறித்துக் கொண்டான்.

தன்னை தாண்டி செல்ல முற்பட்டவளின் கையை மென்மையாய் பற்றினான். உள்ளுக்குள் சிலிர்ப்பொன்று ஓடி மறைய பதறிப்போய் அவனிடமிருந்து கரத்தை விடுவிக்க முயல அவளின் முயற்சி கண்டு தானாகவே அவள் கைகளை விடுவித்தான்.

“கோபமா இருக்கியா...”

‘நான் எதுக்கு இவன் மேல கோபப்படனும்.. அது என்ன தேவைக்கு... இவனா வந்தான் காதலிக்கிறேன்னு சொன்னான் அப்றோம் காணாம போய்ட்டான்... இப்போ மறுபடியும் வந்திருக்கான்.. இவன் மேல கோபப்பட்டு நான் என்னத்த கிழிக்க போறேன்... அம்மா சொல்லற மாதிரி படிச்சி கிழிச்சாலும் பரவாயில்ல...’ மனதினுள் முனங்கினாள்.

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்... இப்பிடி உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்...”

‘பதில் சொல்ல பிடிக்கலேன்னு அர்த்தம்... இது கூட தெரியாமலா இவன் இவ்ளோ தூரம் நெட்டகொக்கு மாதிரி வளர்ந்திருக்கான்...’

“உன்கிட்ட தான் பேசுறேன்... பதில் சொல்ல மாட்டியா...”

“தயவு செஞ்சு முதல்ல வழி விடுங்க.. எனக்கு டைம் ஆச்சு நான் வீட்டுக்கு போகணும்...”

“நான் கேட்ட கேள்விக்கான பதில் இது இல்லையே... முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அப்றோம் வீட்டுக்கு போகலாம்...”

“நீங்க யாரு... நான் எதுக்கு உங்ககிட்ட பதில் சொல்லணும்... தேவையில்லாம வழியோட போற பொண்ணுக்கிட்ட தகராறு பண்றீங்களா..” அவளின் அவனை காணாத தவிப்பு ஏக்கம் நொடியில் கோபமாய் உருமாறியது.

“ரெண்டு மாசமா உன்னை பார்க்க வராதனால கோபமா இருக்கியா... இல்லன்னு பொய் மட்டும் சொல்லாதே...”

“நான் எதுக்கு உங்ககிட்ட கோபப்படணும்... அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்ல... இப்போ நான் வீட்டுக்கு போகணும் வழி விட போறீங்களா இல்லையா....” கோபத்துடன் பொரியும் போதே கருமேகங்கள் சூழ்ந்த வானம் மழையை பொழிந்தது.

மழை வலுக்கவும் செய்வதறியாது தவித்தவள் பயத்தில் அவனை தாண்டி செல்ல முற்பட வழியில் இருந்த கல் தடுக்கி விழ பார்த்தவளை நொடியில் தன கரங்களில் தாங்கிக் கொண்டான் ரோஹன்.

“ஏய்.. பார்த்து போக மாட்டியா...” கடிந்து கொண்டவன் அவளை தள்ளி நிறுத்தினான். அவள் தான் அச்சத்திலும் கூச்சத்திலும் முகம் லேசாய் சிவக்க தலை குனிந்து நின்று கொண்டாள். பெரும் மழை கொட்டிய போதும் அங்கிருந்து அகலும் எண்ணம் மனதை தாக்கவில்லை மாறாக அவன் தொடுகை அவளுள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதை உணர்ந்தவன் போல் அவள் முகத்தையே காதலுடன் பார்த்தவன் “முக்கியமான வேலையா வெளியூர் போயிருந்தேன்... அதான் பார்க்க வரமுடியல...”

வலுத்த மழையுடன் கூடிய மௌனமான நேரத்தில் அவன் காந்த குரல் மென்மையாய் அவள் செவியை நிறைத்ததில் தானாகவே அவள் தலை அசைந்து அவன் கருத்தை ஏற்றுக் கொண்டது.

“பிடிச்சிருக்கா...”

என்ன சொல்வதென புரியாத நிலையில் மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்த ஷாஷி தவிப்புடன் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவளின் தவிப்பை உணர்ந்தாற்போன்று “சரி போ... வீட்டுக்கு போய் டேப்லெட் போட்டுக்கோ... பீவர் வந்திடும்...” அக்கறையுடன் மொழிந்தவன் அவள் அங்கிருந்து செல்லும் வரை அவளையே பார்த்திருந்தான்.

“இந்த மழைக்குள்ள எதுக்குடி ஓடி வந்த... எங்கயாவது நின்னு வந்திருக்கலாம்ல...” கவலையுடன் கூடிய அன்னையின் வார்த்தைகள் கூட அவள் செவியை எட்டவில்லை.

ஈர உடையை களைந்து வேறு உடைக்கு மாறியவள் தலையை துவட்டி காய வைத்து மாத்திரை ஒன்றை போட்டுக் கொண்டாள்.

அன்றிலிருந்து இன்று வரை அவன் அவள் வாய் வார்த்தைக்காக காத்திருக்க அவளோ அதை சொல்ல முடியாமல் தவித்த வண்ணம் தன் விழிகளில் நேசத்தை நிரப்பி அவனை பார்த்துக் கொள்வாள். ஆனால் அவளை பின்தொடர்வதை அவன் இன்னமும் நிறுத்திக் கொள்ளவில்லை.

வகுப்பு முடிந்து வீடு செல்லும் வரை அவளை பின்தொடர்ந்து செல்வான். அவள் பத்திரமாய் செல்கிறாளா என்பதை கண்காணிக்க. இப்படியே கண்ணாம்பூச்சி ஆட்டமாய் சென்று கொண்டிருகின்றது அந்த பதின் வயது பெண்ணின் காதல் கதை.

கதை முடிந்த சமயம் பள்ளி விடுவதற்கான மணியோசை கேட்க மூவரும் ஓட்டமும் நடையுமாய் வகுப்பை அடைந்து தங்கள் பைகளை எடுத்துக் கொண்டனர்.

ஆங்கில தின போட்டியில் பங்கு பற்றியதில் முழு நேர பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்க வகுப்பிற்கு செல்வதற்கு கூட அவர்களுக்கு நேரமிருக்கவில்லை.

“பாய் டி ஷாஷி.. ஷிக்கு பாய் டி... பார்த்து பத்திரமா போங்க....” தோழிகளுக்கு கையாட்டி விடைகொடுத்தாள்.

“நாங்க போய்க்குவோம்... நீ பத்திரமா போய்க்கோ.. பாய் டி...” பாலாவிடம் விடைபெற்று புறப்பட்டு சென்றனர் அவர்களிருவரும்.

பாலாவின் வீடு சற்று தொலைவில் இருப்பதால் அவள் வீட்டுக்கு செல்வது ஆட்டோவில் தான் என்பதால் அதற்காய் பள்ளி வாசலில் நின்று காத்திருந்தாள். இன்னும் சில மாணவர்கள் உடன் நின்றிருந்தனர்.

அதேநேரம் பாலாவின் வருகைக்காக தவமிருந்தவன் அவளை பார்த்தும் மனதும் உடலும் பரபரப்பாக அவளை பார்த்த வண்ணம் தன் பைக்கில் அமர்ந்து நண்பர்களுடன் உரையாடுவது போல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

தலை குனிந்து நின்றிருந்த பாலாவிற்கு தன்னை ஏதோ துளைப்பது போல் இருக்க பார்வையை உயர்த்தி பார்த்தாள். அவன் தான் நின்று கொண்டிருந்தான். அவள் போகுமிடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ஆசாமி தான் சன்ன சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து பல்லை கடித்தவள் ‘பொறுக்கி ராஸ்கல்...’ வசைபாடினாள்.

அவளுக்கென்று சில கனவுகள் இருந்தது. படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.. கை நிறைய சம்பாதிக்க வேண்டும். நிம்மதியான வாழ்வு. மிக முக்கியமாய் பெற்றோர் தனக்கு பொருத்தமானவனை தெரிவு செய்வர் என்ற நம்பிக்கை அவளுள் அதிகமே உண்டு.

காதலில் ஈடுபாடு வரவில்லை. அந்த வயதும் அவளுக்கு இல்லை என்றாலும் இன்னும் அந்த உணர்வுகள் அவள் நெஞ்சத்தை தாக்கவில்லை.

“என்னடா மச்சான்... உன் ஆளு உன்னை நிமிர்ந்து கூட பார்க்காம தலை குனிஞ்சு நிக்குது...”

“அவ எப்போவும் அப்பிடித்தாண்டா... அவளோட இந்த குணம் தான் எனக்கு அவகிட்ட ரொம்ப பிடிச்சது...” பார்வை ரசனையுடன் அவள் முகத்தை தழுவ ஆசையுடன் உரைத்தான் மஹத்.

சில நாட்களுக்கு முன்பு தான் அவளை பார்த்தான். பார்த்ததும் பிடித்து விட்டது. தனக்கானவள் என்பதை முடிவு செய்து கொண்டவன் அவள் போகும் வழியெல்லாம் நிழலாய் பின்தொடர்ந்தான்.

“எப்போடா காதலை சொல்லப்போற... சீக்கிரம் சொல்லிடுடா.. இல்லன்னா கிளி பறந்து போய்டும்...”

“சொல்லணும் மச்சான்... கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன்...” நெஞ்சை தடவிக் கொண்டு உரைத்தவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள் வீட்டை அடைந்திருந்தாள்.

ஆயிரம் பேர் வழியில் இடைப்பட்டாலும் அவள் நெஞ்சம் அவனுக்குத்தான்.


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலை
இப்போ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலை
இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்



சிதறும்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சிதற வைத்த
செம்பாவையாள்"-ங்கிற,
அழகான, அருமையான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷம்லா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top