சாரல் 6

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
Hi சாரல் next எபி போட்டுட்டேன் sorry ரொம்பவே late ஆகிடுச்சு. சொன்ன மாதிரி ud தர முடியல.

இன்னைக்கு எபி லைட் அஹ் bore அஹ் தான் இருக்கும் because இதை இப்படி define பண்ணியே ஆகணும். சோ கோச்சுக்காம படிங்க.



IMG_20200703_055120.jpg



சாரல் 6

தனது திட்டப்படி அனைத்தும் நடந்த மகிழ்ச்சியில் தனது அறையில் முகம் முழுக்க ஒரு வித உவகையும், தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய கர்வமும் ஒருங்கே அவன் முகத்தில் குடி இருக்க, கண்ணை மூடி அந்த கணத்தின் சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருந்தான் விஷ்வா. தனது சீட்டில் பின்னே சாய்ந்து, டையை சிறிதாக தளர்த்தி, சட்டையின் முதல் இரு பட்டன்களை கழற்றி விட்டு, கண்மூடி அமர்ந்து இருந்தவனின் மனமோ 10 வயது சிறுவனுக்கு அவனுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கி தந்தால் துள்ளிக் குதிப்பான் இல்லையா! அது போல உற்சாக துள்ளல் போட்டுக்கொண்டு இருந்தது.

இது என்ன சும்மா வந்த வாய்ப்பா? இது அவனது பல வருட கனவு. இதற்கு அவன் பட்ட பாடு அவனை அறிந்தோர் மட்டுமே அறிவர். அவன் காலையில் இருந்து நடந்தவைகளை அசை போட்டு கொண்டு இருந்தது.

அசோக்கிடம் செய்ய வேண்டியதை கூறியவுடன், அவன் இவனை “லூசாப்பா நீ!” என்பது போல தான் பார்த்திருந்தான். அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் விஷ்வா, காரணத்தை சொல்ல, ஏனோநண்பனின் துயரம் அறிந்தவனாய் அவனுக்கு உதவி செய்ய முன் வந்தான் அசோக்.

இருந்தாலும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனத்திற்கு சிறு சிறு விஷயங்களும் பெயர் பெற்று தரும். அப்படி இருக்க இப்படி வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் நண்பன் தாழியை உடைத்த கதையாகி போக கூடாதே என நண்பனின் நலனுக்காய் வேண்டியவாறே தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் கம்பெனியின் அதிகாரியிடம் தொடர்பு கொண்டான்.

தொழில் என்று வரும் போது அதில் எந்த வித சமரசமும் இன்றி தனது பக்கம் அனைத்தும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வான் விஷ்வா. தனக்கு ஆர்டர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற பொய்யான வாக்குறுதிகளோ அல்லது அவர்கள் புகழ் பாடியோ செய்ய முயலாதவன். அதுவே அவனுக்கு இந்த பத்து வருடத்தில் தொழிலில் ஒரு நற்பெயரை ஏற்படுத்தி தந்தது.

மற்றவரை போல இருந்து இருந்தால் இந்நேரம் இவன் திறமைக்கு அபார வளர்ச்சி இருந்திருக்கும். இவனது நேர்மையால் இவனால் ஆமை வேகத்தில் தான் தனது சொந்த உழைப்பில் முன்னேறி கொண்டு இருந்தான். அதற்கு பலன் தான் இந்த பேச்சு வார்த்தை.

இதுவரை குட்டி கரணம் போட்டு பல தடைகளை தாண்டி சிறிய அளவில் செய்து வந்ததை, இப்போது பெரிய அளவில் செய்ய ஆசைப்பட்டான். அதற்கு அவன் முழு உழைப்பையும் போட்டு இருக்கிறான். அவனவன் கொக்கு போல இந்த சந்தர்பத்திற்கு காத்திருக்கும் போது, இவனது இந்த செயல் நிச்சயம் அவனுக்கு அவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி தரப்போவதில்லை. அது மட்டுமே உறுதி.

இதை எல்லாம் யோசித்து கொண்டே இருக்கும் போது, அந்த பக்கம் லைன் கிடைத்து விட்டது. இல்லாத தைரியத்தை எல்லாம் திரட்டி, அவன் ஒருவாறு சொல்லி முடிக்க, அந்த அதிகாரியோ அவனை காயிச்சி எடுத்துவிட்டார்.

“இதுக்கு தான்ன்யா உங்களை மாறி சில்லறை கம்பெனி நடத்துற சின்ன பசங்க கிட்ட பேச்சுவார்த்தை வச்சுக்க கூடாதுனு என்றது சரியா போச்சு. உங்களை சொல்ல கூடாது என்ன சொல்லணும் காரியம் ஆகும் வரை காலை பிடிக்க வேண்டியது. அப்புறம் காரியம் ஆனோன காலை வாரி விட வேண்டியது!”

“வைங்கயா போன இனிமே இந்த பக்கம் மறந்தும் கூட எட்டி பார்க்காதீங்க!” என சரமாரியாக வசை மாறி பொழிந்தவர் போனை பட் என வைத்து விட்டார்.

நண்பனிடம் என்ன சொல்வது என தவித்து கொண்டு இருப்பவரின் மனதில் பாலை வார்க்கும் விதமாக, அவரே திரும்ப தொடர்பு கொண்டு, “ சரியா! நீங்க சொன்ன படியே லஞ்சு டைம்லயே மீட்டிங் அரேஞ்சு பண்ணிக்கலாம்!” இது தான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ் இதை மிஸ் பண்ணிடாதீங்க. உங்களை சிபாரிசு நான் தான் பணி இருக்கேன். என் மானத்தை வாங்கிடாதீங்க!” என ஏறக்குறைய மிரட்டி விட்டே போனை வைத்தார்.

இதை கேட்டு நிம்மதி பெரும்மூச்சு விட்டான், அசோக். விஷ்வாவிடம் இதை தெரியப்படுத்த, அதன் பின்னர் வேலை வேகமாக நடைபெற தொடங்கியது.

மதிய உணவு இடைவேளை நேரத்திற்கு முன்பு மீட்டிங் ஆரம்பம் ஆனது. வந்தவர்களை எந்த வித குறைவுமில்லாமல் வரவேற்று அமர வைத்து அதன் பின்னர் பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது.

அந்த நிறுவனம் பல வருடம் பாரம்பரியம் மிக்கது. அவர்கள் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். எப்போவும் தங்களுக்கு இணையான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்பவர்கள்,இந்த முறை ஒரு மாற்றமாக சிறு மற்றும் புதியவர்களை அணுகலாம் என முடிவு செய்ய, விஷ்வா வின் நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

வந்தவர்கள் பலரும் ஆரவமில்லாமல் ஏனோ தானோ என இருக்க, அங்கிருந்த ஒரு வயசானவரின் பார்வை மட்டும் அவனை அளவிட்டு கொண்டு இருந்தது. அவர் அந்த நிறுவனத்தின் தலைவர்.

அவன் தனது விளக்கத்தை முன் வைத்த போது பலரின் பார்வையும் மாறி இருந்தது.
"இவன் என்ன செய்து கிழிக்க போகிறான்?” என நினைத்து இருந்தவர்களின் எண்ணத்தை வெற்றி கரமாக தன்னை நோக்கி தனது செயல்திட்டம் மூலம் திருப்பிவிட்டான்.

அவனது நிறுவனம் பாரம்பரிய சிறுகுறு தானியங்களை கொண்டு எப்போதும் செய்யப்படும் கூழ், களி, கஞ்சி போன்றவற்றிலிருந்து மாறு பட்டு அதில் இருந்து வித விதமாக சப்பாத்தி, பூரி, இட்லி, பணியாரம் பிட்சா போன்ற எண்ணற்ற உணவுகளை புதிய அதேநேரம் எந்த வித செயற்கையான கலப்படம்களும் இன்றி இயற்கையாக உடனடி உணவுகளாக தயார் செய்ய தனது நிறுவனம் மூலம் முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றான்.

இந்த ஒப்பந்தம் மட்டும் அவனுக்கு கிடைத்து விட்டால், அவனது நிறுவனம் மிகப் பெரிய புகழை அடைந்து விடும்.

"மிஸ்டர். விஷ்வ பிரகாஷ். உங்க ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு. பட் இது எவ்ளோ தூரம் ஒர்க் அவுட் ஆகும்?” போன்ற எண்ணற்ற கேள்விகளை அவர்கள் தொடுக்க, அனைத்தையும் சமாளித்து அவர்களை திருப்தி படுத்தி இருந்தான்.

ஆனால் அந்த பெரியவரின் அளவிடும் பார்வையில் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லை.

“சரி மிஸ்டர். விஷ்வப்ரகாஷ். எங்க எம்.டி யோட டிசிஸின் தான் பைனல். சோ நாங்க முடிவு பண்ணிட்டு சொல்றோம். என அவர்கள் கூற, “லன்ச் ரெடியா இருக்கா?” என இவன் அசோக்கிடம் வினவ, எல்லாரும் கலைந்து சென்றனர்.

இவர்களை சிபாரிசு செய்த அந்த அதிகாரியும், அஷோக்கும் பதற்றத்துடன் இருக்க, விஷ்வா மிகவும் அமைதியாக இருந்தான்.

அவன் எப்போதும் டென்ஷன் அடைபவன் இல்லை தான். ஆனால் அவனுக்கும் சேர்த்து இவன். டென்ஷனாக இருந்தான்.

மறுபடியும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது. தனது அனைத்து தரப்பையும் இவன் பக்காவாக சொல்ல, அது அனைவருக்கும் திருப்தியாக இருக்க, இப்போது அந்த பெரியவர் முகம் சற்று தெளிந்து இருந்தது.

கடைசியாக அவர் அவனிடம், “உங்க திட்டம் எல்லாம் நல்லா இருக்கு தம்பி. ஆனா உங்களை விட எங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். ஆனா ன ஏன் நீங்க எந்த காரணத்திற்காக இப்டி நடந்துகிட்டீங்கன்னு சொல்ல முடியுமா?” என அவர் வினவ

இதற்கு அவன் மவுனம் காத்தான். எல்லாரும் அவனையே நோக்க, அது என் personal சர். என அவன் முடிக்க பார்க்க, இது எனக்கு வேண்டிய பதில் அல்ல என்பது போல அவர் அழுத்தமாக அமர்ந்து அவனையே பார்த்து கொண்டு இருக்க.

ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடி திறந்து, என் பொண்ணுக்கு நான் இன்னைக்கு சாயங்காலம் வெளிய கூட்டிட்டு போறதா வாக்கு கொடுத்து இருந்தேன் சர்!” என அவன் முடிக்க, "எல்லாரும் உங்க சொந்த விஷயர்த்திக்காக எங்க நேரத்தை வீணாக்குவீங்களா ?” என நினைக்க, அதையே பலரும் வாய் விட்டும் கேட்க, “இந்த ஆர்டர் உங்களுக்கு தான். உங்க கூட வேலை செய்ய நாங்கள் தயார். சீக்கிரம் எங்கள் வக்கீல் உங்களை தொடர்பு கொள்வார்!” என கூறி அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தார், வைத்தியநாதன்.

சாரல் அடிக்கும்…
 
Last edited:

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஏன்ப்பா?
என்ன ஆச்சு, சுதீக்க்ஷா டியர்?
ஒன்னும் இல்ல பானுமா. இந்த மாதிரி எழுதிட்டு என்னாலேயே படிக்க முடியல. தூக்கம் வந்துடுச்சு. அப்போ ரீடெர்ஸ் நிலைமை. உங்க கமெண்ட் எப்போவும் போல first பார்க்கவும் அப்படி சொன்னேன் மா. ரொம்ப நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top