கீர்த்தி சொல்லுவது போல் பட்டால் தான் தெரியும்...
இனியா உனக்கென்ன பிரச்சனை நீ இல்லனு தர்மா வருத்தப்படணும்னு நினைச்சு விஷாலை தூண்டிவிடுற, கடைசில ஏதாவது சிக்கல் செய்து, நீயே அதில மாட்டிக்க போற
அச்சோ
நல்ல குடும்பத்தில் நச்சுப் பாம்பு புகுந்த மாதிரி இவங்க குடும்பத்தில் இனியா ஏதோ குளறுபடி செய்யுறாளே
விஷால் மட்டுமில்லாமல் சூரியா, வசீகரனும் சேர்ந்து கெட்டு சீரழியப் போறாங்களா?
ராமரும் தம்பிகளும் மாதிரி நாலு பசங்க இருந்தும் அழகான குடும்பமா இல்லாமல் இப்படி தறுதலையா திரியுதுங்களே
அருமையான பதிவு ரம்யா.சூர்யா ஊர் சுத்தறதுக்கு இடைஞ்சலா இருக்கும்னு குழந்தை வேணாம்னு சொன்னா,அதுக்கு கீர்த்தி என்ன செய்வா.கீர்த்திக்கு குழந்தை உண்டானதை சொன்னா சந்தோஷப்படாம,அங்கே ஒன்னுக்கு,ரெண்டா குழந்தை வந்தாச்சுன்னு சுனிதா பொறுமுதே.நல்லவேளை ஜமுனா ரெட்டை குழந்தைன்னு சொல்லலை.
ராத்திரியில் டிபன் கொடுங்கனு பொறுமையா சொல்லாம,தர்மா இப்படியா சத்தம் போடுவான்.
ஜமுனா முகம் மாறியதை பார்த்து கீர்த்தி வருத்தப்பட,அம்மா இருந்தா எப்படி பார்த்துக்குவாங்க என கீர்த்தி நினைக்ககூடாது என ஜமுனா சொல்ல,இருவரும் ஒருவரை நினைத்து ஒருவர் பேசுவது அருமை.கீர்த்தி அம்மா பத்தி தெரியாம பேசறீங்களே ஜமுனா.
இனியா படிக்காத ஒருத்தன் வேணாம்னு இவளே தகராறு செஞ்சு கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லுவா,தர்மாக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது தெரிஞ்சு நான் கட்டிக்கிறேன்னு வந்து நின்னா சரின்னு தலையாட்டுவாங்களா.தர்மா,கீர்த்தி சந்தோஷமா இருக்கறதை பார்த்தா எரியுது...
தர்மாவை பழி வாங்க விஷாலோடு தொழில் தொடங்கப்போறான்னு நெனச்சா,சூர்யா,வசீகராவும் கூட்டு சேர்ந்திருக்காங்க.தொழில் தொடங்க பணம் பொதுவில் எடுக்காம,அப்பாங்கட்ட வாங்கறது தான் நல்ல செய்தி.லாபமோ,நஷ்டமோ வந்தா அவங்களே அனுபவிக்கட்டும்.
இனியாவை பற்றி தெரிஞ்சதால சின்ன மகள் திருமணத்தை ஏற்பாடு செஞ்சவங்களுக்கு,தர்மா மேல்
கொண்ட வெறுப்பால் இனியா சின்ன மகள் வாழப்போகும் வீட்டில் பிரச்சனை ஏற்படுத்துவது தெரிஞ்சா என்ன செய்வாங்க.
அபி, விஷாலுக்காக காத்திருக்க விஷால்,அபியை பிறந்தநாள் அன்று ஏமாற்றாமல் பார்க்க வருவானா.அவங்களை கண்டிக்க பெத்தவங்க இருக்காங்கன்னு கீர்த்தி சொல்லியும் தர்மா கேட்கா விட்டால் பட்டுதான் திருந்தனும்.