சாம்பார் சாதம்

Bhuvana

Well-Known Member
#1
சாம்பார் சாதம்

தேவையானவை:
அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
காய்கறிகள் - 1 கப் (விருப்பம் போல் நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு (ஊற வைத்து கரைத்து வைத்து கொள்ளவும்)
நெய் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

அரைக்க :

மல்லி - 2 ஸ்பூன்
சீரகம் - 3 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 7
சின்ன வெங்காயம் - 10
துருவிய தேங்காய் - 1/2 கப்

மல்லி, சீரகம், வெந்தயம் மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயும் வறுத்து தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு தாளித்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளிக்கரைசல், அரைத்த விழுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்தவுடன் அரிசி, பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும். எப்போதும் வடிக்கிற அரிசியின் தண்ணீர் அளவை விட 2 கப் தண்ணீர் அதிகம் சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும்.

நன்றாக கொதித்து ஆவி வெளியேறும் போது குக்கர் வெய்ட் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து சமைக்கவும்.

10 நிமிடம் போதுமானது. பரிமாறும் முன் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.

உருளைக்கிழங்கு கறி மற்றும் அப்பளமுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் சாம்பார் சாதம் ரெடி.
 
Attachments

#2

Thank you for recipe
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes