க மு, க பி - 53_1

#6
சபாஷ், சனத்
நேற்று முடிந்த கதையை
இன்று திரும்பவும் ஆரம்பிக்க
நினைத்த லலிதாவுக்கு நல்ல
செருப்படி கொடுத்துட்டான்

மருமகள் பாவம் வெறும்
வயிற்றோடு வேலைக்கு
போயிட்டாளேன்னு சிறிதும்
கவலைப்படாமல் மகனைப்
பற்றி வருத்தப்படும் லலிதாவை
அவளின் நடிப்பைப் பார்க்கும்
பொழுது பத்திக்கிட்டு வருது,
காஷிப்ரா டியர்

மருமகளின் பெற்றோர் இங்கே
வந்து அவளைப் பார்க்கலைன்னு
சுவாதியைத் தண்ணி தெளிச்சு
விட்டுட்ட ரேஞ்சில் குற்றம்
சுமத்தி பேசினவளுக்கு வீடு
தேடி வந்தவர்களை வாங்க-ன்னு
ஒத்த வார்த்தை சொல்லக்கூட
லலிதாவுக்கு நோவுதா?
இவளெல்லாம் என்ன ஜென்மமோ?

நல்லவேளை நான் பயந்ததைப்
போல விஸ்வம் மாறவில்லை
As usual சுவாதியின் மீது அதே
பிரியத்துடன் இருக்கார்

எப்பொழுதும் மாமனார்கள்
நல்லவர்களே

லலிதா அடிக்கும் வேப்பிலையை புறந்தள்ளி வீசி அம்மாவுக்கு
மகன் மட்டுமில்லை
என் மனைவிக்கு கணவனும்
நான்தான்னு சொல்லாமல்
சொல்லி நெத்தியடியாய் பேசி
லலிதாவின் வாயை சனத்
அடைத்து விட்டான்

மனைவி, அவளின் பெற்றோரின்
மரியாதை குறையக் கூடாதுன்னு தங்கையையும் வெளியே
அனுப்பி விட்டான்

தான் ஒரு நல்ல, அருமையான
கணவன்-னு மீண்டும் சனத்
நிரூபித்து விட்டான்

விஸ்வம் ஒரு அருமையான
அப்பா
 
Last edited:

Advertisement

New Episodes