கோதுமை பட்டர் நாண்/Wheat butter naan

Advertisement

Bhuvana

Well-Known Member
கோதுமை பட்டர் நாண்/Wheat butter naan

தேவையானவை :

கோதுமை மாவு - 2 கப்
தயிர் - 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
சக்கரை - 1/2 ஸ்பூன்
உப்பு, பட்டர், எள்,
பொடியாக நறுக்கிய
கொத்தமல்லி தழை - தேவைக்கு ஏற்ப

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தயிர், சக்கரை, பேக்கிங் சோடா, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து மாவை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வட்ட வடிவமாகவோ அல்லது ஓவல் ஷேப்பில் தேய்த்து ஒரு பக்கம் சிறிதளவு எள், கொத்தமல்லி இலை தூவி சப்பாத்தி கட்டை வைத்து லேசாக அழுத்தி ஒரு தடவை தேய்த்து விடவும்.

கைப்பிடி சூடாத ஒரு தாவா எடுத்து அடுப்பில் பற்ற வைக்கவும். எள், கொத்தமல்லி இலை தூவிய பின்னே அதை திருப்பி பின் பக்கத்தில் தராளாமாக தண்ணீர் தடவி அதை தாவாவில் சூடு பண்ணவும்.

பின்புறம் வெந்து உப்பி வரும் போது, தாவாவை தலைகீழாக திருப்பி நேரடி அனலில் வேக விடவும்.

அதை தட்டில் மாற்றி
உருக்கிய வெண்ணெய் சிறிது தடவி சூடாக பட்டர் நாணை பரிமாறவும்.

கார்லிக் பட்டர் நாண் க்கு
10 பூண்டு பல்லை பொடியாக நறுக்கி சிறிதளவு எண்ணெய்யில் பொன் நிறமாக வதக்கி எள், கொத்தமல்லி இலையுடன் தூவி செய்யவும்.
 

Attachments

  • FB_IMG_1604467003013.jpg
    FB_IMG_1604467003013.jpg
    69.7 KB · Views: 23

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top