கொலுசொலி மயக்குதடி - 25

Advertisement

வாசு அவனது கேபினிற்கு போகவும் நிலா அவனிற்காக காத்திருந்தாள்...

வாங்க சார் வாங்க எல்லாம் உங்க வேலை தானே... இப்போ சந்தோசமா... படபடவென பட்டாசாய் பொறிந்தாள்...

வாசு எதுவும் பேசாமல் அவளின் அருகில் வந்தவன் அவளின் முகத்தின் அருகில் தனது முகத்தை கொண்டு போனான்..

இதை சற்றும் எதிர்பார்க்காத நிலா அவசரமாக இருக்கையை விட்டு எழ முயற்சிக்க இருபுறமும் அணையிட்டு தடுத்திருந்தான்....

வாசு என்ன பண்றீங்க.. இது ஆபிஸ்னு நியாபகம் இருக்கா.. நீங்.... அதை முடிக்கும் முன்னே உஷ்... என அவளின் வாயின் மேல் ஒற்றை விரலை வைத்து தடுத்திருந்தான்...

கண்முழி இரண்டும் தெறிந்து விடுவதை போல அவனை பார்த்தாள் நிலா...

என்ன பேபி இவ்ளோ ஷாக்... எதுக்கு இந்த கோபம்.. அப்டியே மூஞ்சி ரெட் கலர்ல மாறியிருக்கு.. அப்படியே ஆப்பிள் மாதிரி இருக்கு தெரியுமா... அவன் பேசப்பேச அவளின் முகம் இரத்த நிறமாய் மாறியது.. கோபத்தில் இல்லை வெட்கத்தில்..

அவனும் அதை இரசித்தவாறு மெல்ல அவனின் விரலை விலக்கிக் கொண்டான்.. அதைக்கூட உணராமல் பெண்ணவளோ அமைதியை தத்தெடுக்க நிலா... என்றான் வாசு....

கண்கள் இரண்டும் குடையாய் கவிந்திருக்க ம்ம்ம்... என்றாள் நிலா...

மே ஐ கம் இன் சார்... கேட்ட குரலில் இருவரும் சுதாரிக்க வாசு வேகமாக போய் அவனின் இருக்கையில் அமர்ந்து கொண்டான்...

நிலா ஏதோ ஒரு பைலை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பார்ப்பதைப் போல பாசாங்கு செய்யத் தொடங்கினாள்..

எஸ் கம் இன்.. வாசு குரல் கொடுக்க கதவைத் திறந்து கொண்டு மேக்னா உள்ளே வந்தாள்...

என்ன சொல்லுங்க... வேண்டா வெறுப்பாய் வாசு கேட்டு வைத்தான்...

அதை உணர்ந்த மேக்னாவோ... குரலில் இன்னும் குழைவைக் காட்டி.. என்ன பண்ணனும் சார்.. உங்க செட்யூல் சொன்னால் அதை நோட் பண்ணிப்பேன்... அவள் தயராக நோட்பேட் பேனா சகிதம் வந்திருந்தாள்...

பாருங்க மேக்னா.. என்னோட பி.ஏ எல்லாத்தையும் என்ட்ட கேட்கனும்னு இல்ல.. அதோட ஒவ்வொன்னுக்கும் என்னோட கேபின் வர அவசியம் இல்லை.. ஜஸ்ட் ஒரு கால் பண்ணுங்க நான் உங்களுக்கு மெயில் பண்றேன்... நான் அழைத்தால் மட்டும் வந்தால் போதும்...

இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. நான் உங்க பி.ஏ அப்படினு பேர்க்கு தான் மத்தபடி எதுவும் இல்லை.. மேக்னா கடுப்பாகக் கேட்டாள்...

மூஞ்சியை இப்படி வச்சிட்டு வெளியே போகாதீங்க... கிளம்புங்க... நான் என்னோட ஷெட்யூல் எல்லாம் மெயில் பண்றேன்....

அதற்கு மேல் வேறு வழியில்லாமல் மேக்னா கிளம்பினாள்... மறந்தும் கூட நிலாவின் புறம் அவள் பார்வையை திருப்பாமல் போனது ஏனோ யோசனையாக இருந்தது நிலாவிற்கு...

வாசுவைப் பார்க்க அவனோ முகத்தை கைகளால் தாங்கியவாறு அமர்ந்திருந்தான்...

வாசு... அவள் அவனின் அருகில் போக.. தலைவலியாக இருக்கு ஒரு காபி குடிக்கலாமா என கேட்டான்.. அவனின் சோர்வை பார்த்து அவளும் சக்திக்கு கால் பண்ணி அவர்களின் கேபினிற்கு இரண்டு காபி அனுப்ப சொன்னாள்..

என்னாச்சு நிலா ஏதாவது பிரச்சனையா.. அவளின் குரலை வைத்தே ஏதோ பிரச்சனையோ என கேட்டான் சக்தி...

அதெல்லாம் எதுவும் இல்லை சக்தி... எனக்கு என்ன வொர்க் சொல்லுங்க...

மேடம் கால் பண்ணி தான் கேட்பீங்களா.. காபி அனுப்பறேன் இரண்டு பேருக்கும் ஒழுங்கா குடிச்சுட்டு நோட்பேட் அண்ட் பேனாவை எடுத்துட்டு என்னோட கேபினிற்கு வந்து சேரு..

சக்தி கட்டளையாய் சொல்ல... சரிங்க டீச்சர்.. அவளும் சிரித்தாவாறு சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்..

சக்தியும் யோசனையுடன் மேக்னாவைத் திரும்பி பார்த்தான்... இவள் அங்கே போய்ட்டு திரும்ப வந்ததும் நிலா கால் பண்றா.. ஏதாவது இவ பிரச்சனை பண்ணியிருப்பாளா...வாசுவை இவள் பார்க்கற பார்வையே சரியில்லையே...

சக்திக்குள் சந்தேக வித்துகள் முளை விட்டது.. அட்டண்டர்க்கு கால் பண்ணி வாசுவின் கேபினிற்கு இரு காபி அனுப்ப சொல்லிவிட்டு அன்றைய வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்..

சிறிது நேரத்தில் சக்தி அழைத்ததால் நிலா அவனது கேபினிற்கு கிளம்பினாள்.. நேகாவும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்... அதை இயல்பாய் கடக்க முடியாமல் அதில் அடிபட்ட சக்தியின் பெயரால் அவர்களை நின்று கவனித்தாள்...

ஏண்டி உன் சக்தி சார் இன்னும் ஒன் மன்ந்த்ல கிளம்ப போறாங்க நீ என்னடான்னா எந்த கவலையும் இல்லாம இருக்கியே என நேகாவை பார்த்து அந்த பெண் கேட்டாள்...

அதை கேட்டு அலட்சியமாக சிரித்தவள்.. ஆர் யூ மேட்... அவன் அழகாக இருந்தான்.. பெரிய பொசிசன்ல இருந்தான்.. சோ கரெக்ட் பண்ணிட்டா ஜாலியாக இருக்கலாம்னு நினச்சேன்.. ஆனால் அது ஒரு சிடுமூஞ்சி நான் எப்படி மேக்அப் போட்டுட்டு போனாலும் கண்டுக்கவே மாட்டான்.. போன போறான் என்னோட அழக்குக்கு வேற நல்ல பையன் கிடைப்பான்... தோள்களை குலுக்கிக் கொண்டு போனை நோண்டத் தொடங்கினாள்..

ச்சே.. இவ கிட்ட போய் பேசினோம் பாரு... அந்தப் பெண் நொந்தவாறு வேலையை பார்க்கப் போனாள்...

நிலா நேராக நேகாவை நோக்கிப் போனாள்.. அவளை அங்கு எதிர்பார்க்காத நேகாவோ பயத்தில் முகம் வெளிறிப் போய் நின்றாள்..

ப்ளீஸ் பாலோ மீ.. அவள் முன்னே நடக்க என்ன நடக்குமோ என பயந்துவாறு அவள் பின்னே நேகா நடந்தாள்...

நேராக சக்தியின் அறைக்குப் போனாள் நிலா..

சக்தி நிலாவின் பின்னே வந்த நேகாவை பார்த்து கேள்வியாக முகம் சுருக்கினான்...

உட்காரு நிலா... ஏன் மிஸ் நேகாவை வரச் சொல்லியிருக்க..

சக்தி கேட்டதும் நேகாவை ஒருமுறை திரும்பி பார்த்த நிலாவோ இவங்களுக்கு இங்க வேலை செய்ய விருப்பம் இல்லையாம்... ரிசைன் பண்ணனும் சொல்லி இருக்காங்க... அதனால உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன்...

ஐயோ மேம்... நேகா அலற... அதிலேயே என்ன நடந்தது என யூகித்த சக்தி... இன்னைக்கே ரிலீவ் ஆயிடலாம் என ஒரு லெட்டரை பிரிண்ட் அவுட் எடுத்தவன் நேகாவிடம் நீட்டி சைன் பண்ண சொன்னான்..

நோ சார்... நிலாவிடம் செல்லாது என சக்தியிடம் கெஞ்சத் தொடங்கினாள்...

நீங்க நல்ல விதமாக சைன் பண்ணிட்டு கிளம்பிட்டா வேற எங்கயாச்சும் வேலை கிடைக்கும் இல்லைனா ஒரு கம்யூட்டர் சென்டர்ல கூட உங்க குவாலிபிகேசன்ஸ் யூஸ் பண்ணி வேலை பார்க்க விடாமல் செய்து விடுவேன்...

அவனின் கர்ஜனையில் நேகா அரண்டு போய் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு நிலாவை திரும்பிக் கூட பார்க்காமல் கிளம்பி விட்டாள்...

அது வரையில் அங்கு நடந்ததை எல்லாம் நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மேக்னா.. அதனால் தான் சக்தி அவளை வெளியே அனுப்பாமல் அனைத்தையும் பேசியது.. ஓரக் கண்ணால் அவளை கவனித்தவன் அவன் நினைத்தபடியே நடந்ததை உறுதிபடு்த்திக் கொண்டு திருப்தியாக புன்னகைத்தான்...

நிலாவை பார்த்து மெலிதான சிரிப்புடன் வந்த அன்னைக்கே ஒரு தொல்லையை அனுப்பிட்ட நிலா... அவன் சொன்னதை கேட்டு அவளும் சிரித்தவாறு வாசு எதுவும் சொல்வாங்களா என கேட்டாள்...

நோ நிலா.. எனக்கும் முடிவுகள் எடுக்க அதிகாரம் இருக்கு.. சோ எதுவும் சொல்ல மாட்டான்... நாம வேலையை பார்க்கலாம் என சொல்லவும் அவளும் அதில் கவனம்
செலுத்தினாள்...

ஒருவாறு மதியம் வரவும் சக்தியை அழைத்துக் கொண்டு வாசுவின் கேபினிற்கு போனாள் நிலா..

மூவரும் பேசியபடியே மதிய உணவை உண்டார்கள்...


மயக்குவாள்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஐஸ்வர்யா ராயின் அடுத்த வாரிசுன்னு நினைத்த நேகாவுக்கு கல்தா கொடுத்தாச்சா?
அப்போ மேக்னா, மகா இரண்டு பேரும் எப்போ வெளியே போவாங்க?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top