கொலுசொலி மயக்குதடி - 23

Advertisement

நிலா சொல்லியவற்றிற்கு மனமே இல்லாமல் சரியென சம்மதித்தான் வாசு.. அதற்கு பின்பு அவள் ஆபிசை சுற்றி பார்த்தாள்...

நிலாவின் முடிவின்படி வாசு மற்றும் சக்தி இருவரின் கேபினிலும் இன்னொரு டேபிள் சேர் அரேன்ஜ்மென்ட் செய்யப்பட்டு சிஸ்டமும் கனெக்ட் செய்யப்பட்டு தயாரானது...

நிலாவே அனைத்தையும் செய்து முடித்தாள்.. அவளின் வேகமும் நேர்த்தியும் சக்தி அறிந்தது தான் என்றாலும் நேரில் இன்றுதான் பார்க்கிறான்...

அனைத்தும் முடிந்து வாசுவுடனே நிலாவும் வீட்டிற்கு கிளம்பினாள்...

வாசு எனக்கு கொஞ்சம் ட்ரஸ் வாங்கனும் போய்ட்டு போலாமா.. ஒன் ஹவர் போதும்.. அவள் அவ்வாறு கேட்டதும்.. ஐயோ பொண்ணுக கடைக்கு போனாலே வரவே மாட்டாங்களே.. சொல்லிவிட்டு பின்பு தான் நிலாவை பார்த்தான்.. அவளோ கொடூரமாய் அவனை முறைத்து வைத்தாள்..

ஒரு தடவை நாம இரண்டு பேரும் ட்ரஸ் வாங்க போயிருக்கோம் தானே.. அதை பார்த்த பின்னாடியும் இந்த டையலாக்கை சொல்வீங்களா...

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவனைக் கேட்டாள்..
வாயைக் கொடுத்து வசமா மாட்டிட்ட டா வாசு.. ஹிஹிஹி... சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் டா... வா வா போலாம்... அவன் சமாளிக்க தெரியாமல் ஏதோ பேசி வைத்தான்...


உங்களுக்கு இருக்கு வீட்ல போய் வச்சுக்கறேன்...

கறுவியவாறு அவள் நடக்கவும் செத்தடா சேகரு என்றவாறு அவளோடு கிளம்பினான் வாசு..
கடைக்கு போய் சேரி செக்சனிற்கு நேராக போனாள்..


அவன் சும்மா இருக்காமல் கேட்டு வைத்ததால் வேண்டுமென்றே பொறுமையாக பார்க்கத் தொடங்கினாள்..

ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்தவள் மொத்தமாக பத்து பதினைந்து புடவைகளும் அதற்கு மேட்சிங் ப்ளவுஸ்களும் வாங்கி முடிக்கையில் சோர்ந்து போயிருந்தாள்...

இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் நிலாவை விட வாசு தான் அதிகமான சோர்ந்திருந்தான்..

நிலாவிற்கு அது நல்லா இருக்கும் இது நல்லா இருக்கும் என்றே பதினைந்து புடவைகளை செலக்ட் செய்தவன் அவளிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு போய் அவனே பில் போட்டு கவர்களையும் நிலா கேட்க கேட்க அவனே தூக்கிக் கொண்டு வந்தான்...

பொறுப்பான கணவராக நடப்பது எப்படினு இப்பவே ட்ரைனிங் எடுக்கறீங்களா.. அவனைப் பார்த்து சிரித்தவாறு நிலா கேட்டாள்..

அவளைத் திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு ஸ்மால் கேர்ள்.. இதுக்கே அரண்டு போனால் எப்படி இன்னும் நிறைய இருக்கு பாலே மீ என ஒருகையால் அவள் கைகளை கோர்த்துக் கொண்டான்...

வீடு வந்து சேரவும் இருவரும் அப்பாடா என அமர்ந்து விட்டார்கள்...

வாசு எனக்கு ரொம்ப டையர்டாக இருக்கு போங்க போய் தோசை சுடுங்க... நான் தொட்டுக்க ஏதாச்சும் ரெடி பண்றேன்..
நோ.. நோ... அன்னைக்கே நீ சொல்லி கொடுத்தப்போ நல்லா வந்துச்சு.. அதையே நான் திருப்பி சுட்ட போது வட்டமாக வரவே இல்ல..


அது வட்டமாக இல்லைனா கூட ஏதாச்சும் ஒரு ஷேப் ஆச்சும் வந்துச்சுனு நான் மனசை சமாதானம் படுத்திருப்பேன்..
ஆனால் அது தோசைக் கல்லை விட்டே வரலை.. நீ என்னை நல்லா ஏமாத்தற.. இந்த டைம் நீ தோசை சுடு நான் குழம்பு வைக்கறேன்...


வாசு கையை ஆட்டி ஆட்டி பேசவும் அதன் அழகில் மயங்கிய நிலாவோ.. அச்சோ பாப்பா சரி விடுங்க.. இப்போ நான் தோசை சுடறேன்.. வாங்க போலாம்...

நிலா கொஞ்சம் கொஞ்சமாக வாசுவிற்கு சமைக்க கற்றுக் கொடுக்க முயற்சி செய்தாள்.. அதில் ஒரு சம்பவம் தான் வாசு தோசை சுட்ட கதையும்.. மாவை ஊற்றிவிட்டு எண்ணெய் விடாமல் விட்டு விட்டான்.. அது கல்லில் நன்றாக பிடித்துக் கொண்டு எடுக்க வரவே இல்லை..

நாலைந்து தடவை முயற்சி செய்தும் இதுவே தொடர இன்றோ குழம்பு வைக்கும் பணியை வாங்கிக் கொண்டான்.. பார்க்கலாம் என்ன பண்றாங்கனு...

நிலா கடகடவென அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல்லை வைத்தாள்...

வாசுவும் வேக வேகமாக ஒரு பெரிய வெங்காயம், நாலைந்து தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் எடுத்து நறுக்கத் தொடங்கினான்..

வெங்காயத்தை பார்த்ததும் இன்று சக்தியிடம் கூறியது நினைவிற்கு வர சிரித்தவாறு தக்காளியை அவனிடம் நறுக்க சொல்லிவிட்டு வெங்காயத்தை வாங்கிக் கொண்டாள்...

வாக்கை காப்பாற்றுகிறாளாம்.. முடியலப்பா இவளோட...

ஒரு வழியாக அனைத்தையும் நறுக்கி விட்டு மிக்சி ஜாரில் தேங்காய், கடலை அரைத்து எடுத்தான்..பத்து முறை அதை நிலாவிடம் காட்டி போதுமா போதுமா எனக் கேட்கவும்...
அட மாமா இன்னும் கொஞ்சம் அரை டா.. அவளோ சலித்துக் கொண்டாள்..


என்னது டா வா.. சரி இல்ல நிலா.. ஒரு கையில் தோசை கரண்டியை எடுத்து நிலா மிரட்டவும்.. அட எதுக்கு இப்போ ஆயுதம் எல்லாம்.. நான் தப்பாவே நினைக்கலயே.. ப்ரீயா விடு ம்ம்ம்.. வாசு அரைக்கும் பணியில் மும்முரமாக ஆனான்..

நிலா தோசை ஊற்றத் தொடங்கவும்... அவளை இடித்தவாறு வந்து வாசு நின்றான்..

என்ன வாசு இப்படி நெருங்கி நிக்கறீங்க.. தள்ளிப் போங்க...

அவளோ செல்லமாக மிரட்டவும்... அவனோ திருட்டுப் பூனையாய் இன்னும் நெருங்கி நின்றான்..

ஐயோ என்ன பண்றீங்க... தோசையை திருப்புவதில் கவனமாக இருந்தவள் அதற்கு பின்பே அவனின் நெருக்கத்தை கவனித்தாள்...

தொண்டைக்குழியில் வார்த்தைகள் சிக்கிக் கொள்ள.. வா...சு.... என்..என்ன பண்றீங்க என திக்கினாள்..

ஒண்ணும் பண்ணலயே... உனக்கு எப்படி தெரியுது என்று இன்னும் அவளின் அருகில் போனான்...

ஒரு மில்லி மீட்டர் இடைவெளியே இருவருக்கும் இடையில் இருக்க.. வேகமாக வாசுவின் இடுப்பில் நறுக்கென கிள்ளி விட்டாள்..

அடியே இராட்சசி இப்படியா டி கிள்ளுவ.. வலியில் கத்தினான்..

அதற்குள் அவனை விட்டு தள்ளி நின்ற நிலாவோ.. என்னது டி யா.. ஏற்கனவே நீங்க பண்ணுன வேலைக்கு ஒரு சூடு வைக்கலாம்னு நினைச்சேன்..

இப்போ டி சொன்னதுக்கு சேர்த்து இன்னொரு சூடு..
வேகமாக தோசைக் கரண்டியை அவனிற்கு அருகே கொண்டு வரவும் அவசரமாக அவளின் கையை பிடித்துக் கொண்டான்..


இதெல்லாம் ரொம்ப தப்பு... பேச்சு பேச்சாக இருக்கனும்.. தோசை தானே சுடற.. அதை கன்டினியூ பண்ணு.. நான் குழம்பு வைக்கறேன்..

அந்த பயம் இருக்கட்டும் என்றவாறு தோசை சுடத் தொடங்கி விட்டாள்..

உனக்கு நேரமே சரியில்லை டா வாசு.. புலம்பியவாறு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து பற்ற வைத்தான்..

மாஸ்டரின் தோரணையில் கடாய் சூடானதும் எண்ணெய் கடுகு வெங்காயம் கறிவேப்பிலை மிளகாய் தக்காளி எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கினான்...

நிலாவிற்கே ஆச்சர்யமாய் இருந்தது.. ஒரு கண்ணால் அவனை சைட் அடித்தவாறு இருந்தாள்...

மேடம் எதுக்கு திருட்டுத்தனமாக பார்க்கறீங்க.. நல்லாவே பாருங்க.. உங்களை மாதிரி எல்லாம் நான் எதுவும் பண்ண மாட்டேன்..

அவளைப் பார்க்கமலேயே சரியாக சொன்னான் வாசு...

திகைத்த நிலாவோ எப்படி வாசு சரியா சொல்றங்க என்றாள்...

கடாயில் வதக்கியபடியே மற்ற மசாலாத் தூள் உப்பு எல்லாம் சேர்த்தவன் அவளை நோக்கி திரும்பி எப்படி ஐயாவோட திறமை பார்க்காமலேயே கண்டு பிடிச்சேனா என்றான்...

பார்றா பயங்கரம் பாஸ்.. கலக்கறீங்க போங்க...சமையலும் பின்னறீங்களே...

இருக்கனும்ல டீச்சிங் யாரு..நம்ம நிலா புள்ளயாச்சே..

கிண்டலு..இருக்கட்டும் இருக்கட்டும்... போதும் எல்லாம் நல்லா ப்ரை ஆயிருச்சு. அரைச்ச வச்சதை ஊத்துங்க...

உடனே வாசுவும் மிக்சியில் இருந்ததை ஊற்றி இன்னும் சிறிது நீர் சேர்த்தான்..

கரண்டியில் சிறிது எடுத்து டேஸ்ட் பாரு நிலா எல்லாம் சரியாக இருக்கானு என்றவாறு அவளிடம் நீட்டினான்...

அவளும் சுவை பார்த்து சூப்பர் எனக் கூறவும்.. ஹய் என குதித்தான் வாசு..
ஹேய் போதும் போதும்...
இன்னும் கொதிச்சு வரணும் மூடி போட்டு மூடி வைங்க...


நிலா சொன்னவாறு செய்தவன் அப்பாடா என மூச்சை வெளியிட்டான்...

நிலாவோ தோசைகளை சுட்டுவிட்டு கல்லை எடுத்து வைத்தவள் அவனையே பார்க்கத் தொடங்கினாள்...

அடுப்பின் சூட்டிற்கு பழக்கம் இல்லாததால் வாசுவின் நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்திருந்தது.. அதைக் கூட துடைக்காமல் அவன் கடாயை கவனிப்பதே தலையாய கடமை என நின்றிருந்தான்...

வாசு என்னைப் பாருங்க... நிலாவின் குரலில் கவனம் கலைந்தவன் என்ன நிலா என அவளின் புறம் திரும்பினான்..
தனது துப்பட்டாவினால் அவனது நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்தாள்...


தேங்க்ஸ்... ரொம்ப ஹீட்டா இருக்கு... இங்கயும் துடைச்சு விடேன்... சட்டைக் காலரை சற்று கீழே இறக்கி கழுத்தைக் காட்டினான்...

சிரிப்புடன் துடைத்தவள் போதும் வாசு நான் பார்த்து இறக்கிடறேன்.. நீங்க போய் குளிச்சுட்டு வாங்க என அவனை அனுப்பினாள்..

மறுகேள்வி கேட்காமல் வாசுவும் உடனே கிளம்பி விட்டான்...

கடாயை திறந்து இன்னொரு முறை சரி பார்த்தவள்.. உப்பு அதிமாக இருந்ததால் சிறிது நீர் ஊற்றி சரிசெய்து இறக்கினாள்..

இவளும் போய் குளித்து விட்டு வரவும் வேலையை பற்றி பேசியவாறு இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்...

மயக்குவாள்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

பரவாயில்லையே
வாசுதேவன் ஒரு நல்ல குடும்ப ஸ்திரனாகிட்டானே
நிலாவின் டிரஸ் வாங்கும் வரை பொறுமையா வெயிட் பண்ணுறான்
குழம்புலாம் வைக்குறான்
கலக்குறே வாசு நீயி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top