கொலுசொலி மயக்குதடி -2

Advertisement

கடந்து செல்லும் காட்சிகளை இரசித்தவாறு அவள் அமர்ந்திருக்க... வாசுவோ அவளை தொந்தரவு செய்யாமல் காதில் ஹெட்போனை மாட்டியவாறு அமர்ந்து கொண்டான்....


யாரது.... யாரது... யாரது....
யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது....
மூடாமல் கண்ரெண்டை
மூடச்செய்வது...
யாரது.. யாரது...யாரது....யாரது...

நெருங்காமல் நெருங்கி வந்தது...
விலகாமல் விலகி நிற்பது
விடையாக கேள்வி தந்தது...
தெளிவாக குழம்ப வைத்தது...
யாரது... யாரது... யாரது... யாரது....




வித்யா சாகர் இசையில் கண்மூடி பாட்டில் லயித்திருந்தான் வாசு... வாசு விஜயாக மாறி அசினை தேடிக் கொண்டிருக்க...

இங்க பாருங்களேன்... குதூகலமாக நிலா அவனை அழைக்கவும் அவனிற்கு அவள் அழைத்தது கேட்கவில்லை...

தேவா.... வாசு தேவா.... என்னைப் பாரேன்... அவனது ஹெட்போனை அவளது கையில் இழுத்துக்கொண்டு அவள் கத்தவும் அவனோ பே...வென முழித்தான்...

வால் இல்லாத குரங்காக இருப்பீங்க போலயே... அது ப்ரான்டட் ஹெட்போன் மா... இந்த பாடுபடுத்தற.... நிலாவின் கையில் மிக்சி இல்லாமல் சட்னியாகி கொண்டிருந்த ஹெட்போனை பாவமாக பார்த்தான்....

அட அது கிடக்கு விடுங்க... இங்க வெளியே எவ்ளோ அழகாக இருக்கு... வாங்க வேடிக்கை பார்க்கலாம்... நீங்க தனியாக போனால் பாட்டு கேளுங்க... இல்லை பாட்டு எழுதுங்க... நான் இருக்கும் போது நோ.. நெவர்.... வீரவசனம் போல பேசிக் காட்டினாள்..

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக நான் தனியாக மட்டும்தான் இருக்கேன் நிலா.. நான் இருக்கையில் அப்படினு நீ சொன்ன பாரு எப்படி இருந்துச்சு தெரியுமா.... இரயில் போடற சத்தத்தை தாண்டி ஹோ...னு கத்தனும் போல இருந்துச்சு...

வாசு பேசப்பேச அவள் அப்படியே உருகிப் போனாள்... அவன் பாசத்திற்கும் ஆறுதலான வார்த்தைக்கும் எந்த அளவு ஏங்கிப் போயிருக்கிறான் என்பதை அவளால் உணர முடிந்தது....

இன்றைய காலத்தில் கள்ளமில்லா மனிதர்களை பார்ப்பதே அரிதாகப் போய்விட்டது... பல நாள் பழகியவர்கள் மேலேயே நம்மால் நம்பிக்கை கொள்வது ஆபத்தாக உள்ளது... மனிதர்கள் பெரும்பாலும் உண்மையான முகத்தின் மேலே முகமூடிகளை அணிந்து கொண்டு நம்மை சூழ்ந்திருக்கிறார்கள்...

வாசு... அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்.... பார்த்த சிலமணி நேரங்களில் நிலாவின் பாசத்திற்கு உரியவனாக ஆகும் முழுத்தகுதியும் அவனிடம் இருந்தது... இந்த நிமிடம் அவள் அவன்மேல் வைக்கும் அன்பு என்றும் பொய்த்துப் போகாதபடி வாசு நடந்து கொள்வானா பொறுத்திருந்து பார்ப்போம்....

வாசு... என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி அப்படினு எல்லாம் சொல்ல மாட்டேன்... உங்களோட உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது... இந்த நிமிடம் வரை எனது வாழ்க்கை இதற்கு பிறகு எதை நோக்கி என தெரியாமல் தான் இந்த இரயிலில் ஏறினேன்....

எனக்கான பாதை இனி உங்களோடு தான் தொடர போவதாய் தோன்றுகிறது... ஒரு உறவாய் நானிருப்பேன்... எவ்வாறு என தெரியாது... நிச்சயமாக ஒரு தோழியாய் இருப்பேன் என கண்களை மூடித் திறந்தாள்..

உங்களை நான் தேற்ற வேண்டும் என நினைத்தேன்.. இப்பொழுது நீங்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறீர்கள்... இதை விசித்திரமாக நினைக்க எதுவும் இல்லை.. பெண்களுக்கு இயற்கையாக தாய்மைக்குணம் வந்து விடுகிறது.. வாசு அவளைப் பார்த்து புன்னகை புரிந்தான்..

பொங்கலாக பொங்கிக் கொண்டிருக்கிறோம் நோ மோர் இமோசனல்ஸ்.. நானே இவ்ளோ நேரமாக இருந்த கவலையை எல்லாம் மறந்துட்டேன்...

நிலா அழகாக புன்னகைக்கவும்... அவனும் அதில் இணைந்து கொண்டான்.... எங்கோ கேட்ட குயில் சத்தம் இவர்களை வாழ்த்தும் இசையாய் அமைந்தது....

இட்லி.. தோசை... பிரியாணி... காபி.... டீ... அங்கங்கே உணவுகளை விற்பவர்கள் இரயிலில் நடமாடத் தொடங்கவும்.. நிலா நீ என்ன சாப்பிடறே... பிரியாணி வாங்கலாமா...?

வாசு ஆவலாக அவள் முகம் பார்த்தான்... ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அவனின் ஆசையை கெடுக்க விருப்பமில்லாமல்.. சரி ஓகே வாசு அதே சாப்பிடலாம் எனக் கூறிவிட்டாள்...

இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கியவன் தண்ணீர் பாட்டிலும் வாங்கினான்.... ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு அவனும் உண்ணத் தொடங்கினான்...

வேறு வழியில்லாமல் அவளும் சாப்பிடத் தொடங்கினாள்... உணவை இதுவரை வீணாக்கி பழக்கம் இல்லாததால் மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தாள்...

நல்லா இருந்துச்சு இல்லையா... எனக்கு பிரியாணினா அவ்ளோ உயிர்... வாசு இரசித்து சொல்லவும் அவளும் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்....

சிறிது நேரம் கடந்திருக்க நிலா வேகவேகமாக ஓய்வறையை நோக்கி ஓடினாள்... சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தவள் சோர்வாக இருக்கைக்கு வந்தாள்...

வாசுவோ வந்தும் வராததுமாக அவளிடம் கேள்விகளாக கேட்கத் தொடங்கி விட்டான்.. என்னாச்சு ஏன் இப்படி இருக்கீங்க.. ஆர் யூ ஆல்ரைட்.. டி.டி.ஆர் கிட்ட சொல்லி டாக்டரை அரேன்ஜ் பண்ணலாமா...

கூல் எதுக்கு இவ்ளோ டென்சன்... முதல்ல என்னை மன்னிச்சிடுங்க... எனக்கு அவுட்சைட் புட் ஒத்துக்காது.. வெளில போகும்போது சாப்பிட மாட்டேன்... லாங் ஜர்னி இதுவரைக்கும் போற சந்தர்ப்பம் அமையல.. சங்கடமாக அவனிடம் சொன்னவளை பார்த்து வாசுவிற்கு கனிவு பிறந்தது....

என் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்லையா... நீ எனக்கு தோழினு சொல்லிட்ட.. அப்போ நான் உனக்கு தோழன் இல்லையா.....

வாசு வருத்தமாக கேட்கவும் நிலா அவசரமாக மறுத்தாள்... என்ன வாசு இப்படி சொல்லீட்டீங்க... நான் சொன்னால் நீங்களும் சாப்பிட மாட்டீர்களே....

கவலையாக சொல்லவும் வாசுவோ உருகிப் போனான்... இரயில் ஒரு நிறுத்தத்தில் நிற்கவும் வேகமாக அவளிடம் வந்து விடுவதாக சொன்னவன் என்ன ஜீஸ் பிடிக்கும் என கேட்டான்....

ப்ரஷ் ஜீஸ் வேணும் வாசு.. சாத்துக்குடி இல்லைனா ஆப்பிள்... தயங்கி அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல் இயல்பாக சொன்னாள்...

வாசுவும் புன்னகையுடன் போனவன் திரும்பி வரும்போது கேட்ட இரண்டையும் வாங்கி வந்தான்...

ஒண்ணு போதுமே எதுக்கு இரண்டு... நிலா கடிந்தபடியே அவன் நீட்டிய சாத்துக்குடி ஜீஸை வாங்கியவள் ஸ்ட்ராவை எடுத்து போட்டுவிட்டு குடித்தாள்...

அவள் குடித்து முடிக்கும் வரை இன்னொன்றை கையில் பொறுமையாக வைத்திருந்தவன் அதையும் அவளிடம் கொடுத்தான்...

வேண்டாம் ப்ளீஸ் போதும் என மறுப்பு காட்டினாள்... மேலே மூடியுள்ள அமைப்பில் வாங்கி வந்ததால் பிறகு குடிக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் பத்திரமாய் வைத்தான்...

இரயில் தனது பயணத்தை தொடர்ந்தபடி இருந்தது... போர் அடிக்காத வகையில் ஒருவர் மற்றவரை பற்றி தெரிந்து கொள்ள பேசியதில் நேரம் இனிமையாய் நகர்ந்தது.. எனினும் நிலா கவனமாக தன்னைப்பற்றி எந்த விவரமும் தெரியாத வகையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பற்றி பேசத் தொடங்கினாள்....

புரிந்து கொண்ட வாசுவும் மேலும் எதையும் தோண்டி துருவாமல் அவள் சொல்வதற்கு இடையில் மேலும் ஊக்கப்படுத்தவும் அவளும் உற்சாகமாக பேசத் தொடங்கினாள்....

முடிவே இல்லாத ஒன்று எதுவும் இல்லை அல்லவா.... அதேபோல அவர்களின் அந்த பயணமும் முடிவுக்கு வந்தது.... நீண்ட நெடுநேரப் பயணத்தில் களைப்பாக இருந்தாலும் இருவரும் சோர்ந்து விடவில்லை...

லோக்மானிய திலக் டெர்மினஸ் தான் கடைசி ஸ்டேசன்... முழுதாக 29மணிநேரம் 35 நிமிடங்கள் கூடுதலாய் அரைமணிநேரம் தாமதமாக முப்பது மணி நேரத்தை விழுங்கியிருந்தது அந்த பயணம்....

ஷப்பா இவ்வளவு நேரமாகுமா... நிலா அவனிடம் குழந்தைத் தனமான முகத்துடன் கேட்கவும், சிரித்தவாறு இதுக்கே வியப்படைந்தால் எப்படி, இப்போ நாம போகப் போறது ஈஸ்ட் அந்தேரி.... அதற்கு இன்னொரு டிரைன் ஏறனும்....

வாசு சொல்லவும் நிஜமாகவே நிலா அரண்டு போனாள்.... ஐயோ என்னால முடியாது பா.. இப்போவே பாருங்க மணி நைட் ஒன்பது ஆகப் போகுது... நிலா ஏதோ பெரிதாக கண்டுபிடித்ததைப் போல அவனிடம் சொன்னாள்...

ஆமா நிலா...ஒரு டூ ஹவர்ஸ்ல ரீச் ஆகிடலாம்... நாம நைட் தூங்க வீட்டிற்கு போறது தான் பாதுகாப்பு... இங்கே எல்லாம் வயசுப் பொண்ணை வைத்துக்கொண்டு காலம் தாழ்த்துவது நல்லதல்ல... மும்பை மிகவும் ஜனநெருக்கடியோடு பாதுகாப்பும் குறைவு....

வாசு சொல்வதில் இருந்த உண்மை அவளிற்கும் புரிய அதற்கு பின்பு கேள்வி கேட்கவில்லை....

அங்கேயே இரவு உணவை முடித்தவர்கள் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சேம்பர் என்னும் இடத்தில் இருந்து அந்தேரி செல்லும் ரயில் ஏறினார்கள்....

அந்தேரி இரயில் நிலையம்.... அந்தேரி கிழக்கு மற்றும் அந்தேரி மேற்கு பகுதிகளை இணைக்கிறது.. அங்கு இறங்கியவர்கள் டேக்சி வைத்து வாசு குடியிருந்த அபார்ட்மென்டை அடைந்தனர்...

இரவு நேரம் ஆகிவிட அவளின் பாதுகாப்பு ஒன்றே அவனிற்கு பிரதானமாக இருந்தது.. வாசு இருந்தது பதினைந்து மாடிகளைக் கொண்ட அபார்ட்மென்ட்... பார்க்கும் போதே அதில் சாதாரணமானவர்கள் இருப்பதைப் போலத் தோன்றவில்லை....

வா நிலா... இதுதான் அபார்ட்மென்ட்... நம்ம வீடு பத்தாவது மாடி... போகலாமா... வாசு முன்னே நடக்க அவனைத் தொடர்ந்தாள்...

லிப்டின் மூலம் பத்தாவது மாடியை அடைந்ததும் வாசு தன்னிடம் உள்ள சாவியைக் கொண்டு கதவைத் திறந்தான் ..

சாரி நிலா.. உன்னை வரவேற்க ஆரத்தியும் இல்லை... ஆட்களும் இல்லை.. ஒண்டிக்கட்டை... இனிமேல் நீ... அவ்ளோ தான் சோகத்தை கூட காமெடியாக சொன்னவன் அவள் உள்ளே வருவதற்குள் முன்னே போய் லைட் ஸ்விட்சை போட்டான்..

இருள் விலகி வெளிச்சம் பரவும், வீட்டை பார்த்த நிலாவோ அதிர்ந்து போனாள்...

மயக்குவாள்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

எங்கள் கொங்கு மாநகரத்திலிருந்து நிலா தப்பித்து போக வேண்டிய அவசியம் என்ன?
காரணம் என்ன?

சொத்துக்காக கொல்ல வந்தார்களா?
இல்லை பெற்றோர் இல்லாமல் கட்டாயக் கல்யாணத்திலிருந்து நிலா தப்பித்தாளா?
நிஜப் பெயரே நிலாதானா?

உயிருக்கு or மானத்துக்கு பயந்து ஓடிவந்த ரணகளத்திலும் இந்த பொண்ணுக்கு எப்படி இயற்கையை ரசிக்க முடிந்தது?
வாசுதேவன்தான் நிலாவுக்கு ஜோடியா?

வாசு வீட்டில் விளக்கைப் போட்டதும் பொண்ணு ஏன் அதிர்ச்சியானாள்?
ஒருவேளை இவளுடைய சொந்தத்தின் போட்டோ ஏதுமிருந்ததா?
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

எங்கள் கொங்கு மாநகரத்திலிருந்து நிலா தப்பித்து போக வேண்டிய அவசியம் என்ன?
காரணம் என்ன?

சொத்துக்காக கொல்ல வந்தார்களா?
இல்லை பெற்றோர் இல்லாமல் கட்டாயக் கல்யாணத்திலிருந்து நிலா தப்பித்தாளா?
நிஜப் பெயரே நிலாதானா?

உயிருக்கு or மானத்துக்கு பயந்து ஓடிவந்த ரணகளத்திலும் இந்த பொண்ணுக்கு எப்படி இயற்கையை ரசிக்க முடிந்தது?
வாசுதேவன்தான் நிலாவுக்கு ஜோடியா?

வாசு வீட்டில் விளக்கைப் போட்டதும் பொண்ணு ஏன் அதிர்ச்சியானாள்?
ஒருவேளை இவளுடைய சொந்தத்தின் போட்டோ ஏதுமிருந்ததா?
எங்கள் இல்லை டியர் நம்ம கொங்கு மாநகரம்...
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் கூடிய விரைவில் தெரியும். தொடர்ந்து படியுங்கள்...
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கள் இல்லை டியர் நம்ம கொங்கு மாநகரம்...
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் கூடிய விரைவில் தெரியும். தொடர்ந்து படியுங்கள்...
ஓ நீங்களும் நம்ம ஊருதானா?
ஓகே ஓகே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top