கொரோனா காலத்தில் வந்த அழையா விருந்தாளி

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அன்று ஒரு சாதாரண கொரோன கால அசாதாரண நாள், அதாவது ஊரடங்கு தளர்வுகள் இன்னமும் அறிவிக்கப்படாமல், மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கி கிடந்த நாளாகத்தான் அன்றும் இருந்தது, தர்ஷினி கார்ஷெட்-இல் அவளது மாலை நடை பயிற்சியை முடித்து வீட்டினுள் வரும்வரையில்.

உள்ளே நுழைய எத்தனித்தவள், திறந்திருந்த கதவு வலது பக்க ஓரமாக ஏதோ நெளிந்து நெளிந்து சோபாவின் அடியில் செல்வதை சற்றே அசிரத்தையாக பார்த்தவாறு வீட்டிற்க்குள் வர, அம்மாவைப் பார்த்து, "ம்மா.. அது என்னமா எதோ உள்ள போகுது?", என்றாள்.

"எங்கடீ?"

"தோ சோஃபாக்கு அடிலதான், சின்னதா டெய்ல் மாதிரி தெரிஞ்சது"

"எது? வாலா? என்னடி உளர்ற?"

"ஆமாம்மா, நாங்கூட ஃபர்ஸ்ட் பாக்கும்போது எலி ஏதாவது ஓடுதோன்னு நினச்சேன், ஆனா, அது எலி வால் மாதிரி தெரில"

"இவ ஒருத்தி, எதையும் ஒழுங்கா சொல்ல மாட்டா, நீ உள்ள போ நா பாக்கறேன்"

"நானும் பாக்கறேன், அது சோஃபா க்கு அடிலேர்ந்து வெளிய வராம இந்த பக்கமா வந்தா என்ன பண்றது?"

"சரி சரி, எதுக்கும் கைல ஒரு கழி வச்சுக்க..", என்று சோஃபா புறம் செல்லத் துவங்க....

மகள் அம்மாவைப் பார்த்து முறைத்தபடி, "எதையும் புரியறா மாதிரி பேசமாட்டியா? இப்போ நான் தமிழ் டிக்ஷனரி-ல்லாம் புரட்டி நீ சொன்னதுக்கு அர்த்தமென்னனு தேட முடியாது, கழின்னா எதைக் கழிக்கணும்?"

"ஷப்பா... நீல்லாம் தமிழ் படிச்சேன்னு வெளில சொல்லிக்காதடி, வெக்கக்கேடா போயிடும், எப்ப பேசினாலும் அதுக்கு ஒரு விளக்கம் கேக்கற ஆளு நீயாதான் இருப்ப"

"மா.. டென்த் வரைக்கும்தான் தமிழ் படிச்சேன், அதுல நான் ப்ரைஸ் கூட வாங்கியிருக்கேன். ஓகே லீவ் இட். பட்.. இன்னும் கழிக்கு அர்த்தம் வரல..."

"அடியே.. கழின்னா குச்சி, தடி போதுமா, எதுக்கும் அதை கைல வச்சிட்டு தயாரா.. வேணாம் இதுக்கு... தயிர் எதுக்கு-ன்னு கேட்டாலும் கேப்ப, உன் பாஷைக்கே நான் வந்து தொலையறேன், ஒரு ஸ்டிக் வச்சிட்டு ரெடியா சோஃபாக்கு டூ ஸ்டெப் பாக்-ல நில்லு",

"சூப்பர்ம்மா, இதே மாதிரி எப்பவும் பேசினா என்னவாம்? இது எனக்கு க்ரிஸ்டல் க்ளியரா புரியுது பாரு?", எனவும்..

"டீ...", என்று பல் கடித்த அம்மா, "ஏதாச்சும் நீ சொன்ன டெயில்-லோட இருக்கா பாரு", என்றபடி அவர் சற்றே நீளமான வாரியலை சோஃபாவின் அருகே கொண்டு செல்ல, படக் கென கதவைத் திறந்து அந்த வீட்டின் தலைவர் உள்ளே வந்தார்.

"ப்பா. கொஞ்சம் மெதுவா வரக்கூடாதா?", என்று வந்தவரை லட்சியம் செய்யாமல் காரியத்தில் கண்ணானார், பஞ்ச் லாம்ப்.

"என்ன பண்ற?", இது மீகாமன்.

"உங்க பொண்ணு உள்ள வரும்போது எதோ வால் மாதிரி சோபாக்கு அடில போனதை பாத்தாளாம், அந்த பக்கமா எதுவும் வந்தா மாதிரி தெரில, அதான் பாக்கறேன்"

"ம்ம்ம்", என்று மனைவிக்கும், "ஏண்டா அந்த வால் பாக்கறதுக்கு ஒடக்கான் மாதிரி இருந்ததா?", கேள்வியை மகளுக்கும் எறிந்தார் அவர்.

சற்றே டென்ஷானான மகள்... "பா, நீங்களுமா? ஒடக்கான்னா என்ன-ன்னு முதல்ல சொல்லுங்க, அப்பறம் நான் சொல்றேன்"

"உங்க பொண்ணுக்கு தமிழே புரியாது, இதுல உங்கூரு பாஷையை வேற பேசினா....?", குடும்ப குத்துவிளக்கு கேலி பேச...

மனைவியை ஒரு பார்வை பார்த்து, மகளிடம் திரும்பி, "ஒடக்கான்-ன்னா ஓணான் டா, ம்ம். காமிலியன்?", என்று யோசித்து..."இல்லல்ல.. கார்டன் லிஸார்ட்..."

"ஓ, நோ ப்பா, அது அப்படி இல்ல, நல்லா நெளிஞ்சி நெளிஞ்சி போச்சு"

வால் வரை நெளிந்து செல்வதென்றால்.. யோசித்து "ஒரு வேளை பாம்பா இருக்குமோ?", என்று கு. கு. மனைவி சொன்னதும்...

"என்னது !!! ", என்று அதிர்ந்து இரண்டடி தள்ளி சென்று நின்றார் கணவன்.

"வாட்....?", இது மகள். 'அதிர்ச்சியில் கூட ஆங்கிலமே வருகிறது இவளுக்கு' என்று எண்ணம் கு.கு மனதில் உதிக்க அவளை முறைத்தவாறே..

"எரும, வெளிய போகும்போது கதவை சாத்திட்டு போவேண்டியதுதான?", என்று மகளை வசைபாட...

'அம்மா ஃபுல் ஃபார்ம் கு வந்துட்டாங்க, இனி எல்லா அனிமல்ஸ்-ம் அம்மா வாய் லெர்ந்து வரும், சோ அவங்க மைண்ட் டைவர்ட் பண்ணி வேலைய பாக்க சொல்லணும்' உஷாரான மகள், "மா இப்போ அது என்னன்னு பாக்கனுமா? இல்ல என்னை திட்டணுமா?"

"சரி.. தள்ளி நில்லுங்க, நான் சோஃபாக்கு அடில வாரியலை விடறேன், ரெண்டு பேரும் பாருங்க"

"ஏயேய்.. நில்லு, ஒரு வேளை பாம்பா இருந்தா என்ன பண்ணுவ? அது பாட்டுக்கு உள்ள போயிடுச்சுன்னா?", பதட்டமாக கு.த. கேட்டார்.

"இப்போ என்ன பண்ணணும்ங்கிறீங்க?"

"கொஞ்சமா சோஃபாவை மூவ் பண்ணி பாப்போம், உள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம், தென் என்ன பண்றதுன்னு டிசைட் பண்ணலாம்" அதற்குள் மகள் கையில் ஒரு ஒட்டடை குச்சிவைத்துக் கொண்டு வீட்டின் உள் செல்வதை தடுக்கவென அந்தப்பக்கமாக தயாராக நின்றாள்.

"ம்ம்", கணவன் மனைவி இருவரும் மெல்ல அதிர்வுகள் அதிகமில்லாது அந்த மூன்று பேர் அமரும் சாய்வு இருக்கையை நகர்த்த....

"ஹக்..."

"ஆ..."

"ஓ..மை..", மூவரும் வேறு வேறு விதமாக தங்களது அதிர்வினை பதிவு செய்தனர். காரணம் அங்கு இருந்தது சுமார் மூன்றடி நீளமான பாம்பு... வீட்டில் டைல்ஸ் என்பதால் வேகமாக அசைய முடியாது கிடந்தது.

மூவரும் மின்னலென கூடத்தின் நடுப்பகுதிக்கு வந்தனர்.

"இப்போ என்னங்க பண்றது?"

"தெரிலையே?", என்று முழித்த கு.த., தனது ஆறாம் விரலான அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தினார்.

"யாருக்குங்க போனு?"

"சூ.. சும்மா இருடி..", என்று மனைவியை அடக்கிவிட்டு, "ஹலோ நூறுங்களா? இங்க எங்க வீட்ல பாம்பு வந்துருக்கு, பாரெஸ்ட் டிபார்ட்மென்ட் கு சொல்லி ஆளனுப்பி சொல்லறீங்களா?"

"............."

"என்னது அதுக்கு வேற நம்பர் போடணுமா?, நீங்களே சொல்லிட மாட்டீங்களா?

"....."

"சரி சரி எங்க ஏரியா XXXXXX, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணலாமா?"

"...."

"ஓகே தேங்க்ஸ் மேம்", என்று பேசியை அணைத்துவிட்டு, மீண்டும் அடுத்த அழைப்பைத் தொடர்ந்தார்.

அவரை விசித்திரமாக பார்த்தவாறே மனைவி நிற்க.. மகள் அருகே வந்து "என்னம்மா?", என்று கேட்டாள்.

"இல்ல, உங்கப்பா கிராமத்துல வளர்ந்தவர்தானா ன்னு பாத்துட்டு இருக்கேன்?", இது கு.கு.

"ஓய்.. கேக்குது. நா கிராமத்துல வளர்ந்தாலும் எட்டு கட்டு வீட்ல வளர்ந்தேன், கடப்பா கல் வச்சு கட்டின பண்ணை வீடு, அதுல ஏன் பாம்பு வரப்போகுது?", என்று கு. த. மனைவியை முறைக்க...

"இப்போ எங்க கால் பண்றீங்க?"

"போலீஸ் ஸ்டேஷன்க்கு"

"ஆமா, உடனே வந்து கிழிக்க போறாங்க பாருங்க"

"ஏய்.. நா Friends of Police தெரியுமில்ல?", அதற்குள் அவரது அலைபேசியில் தொடர்பு கிடைத்துவிட.. அங்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பலன்தான் பூஜ்யம். ஒரு மணி நேரம் கழித்து வருவதாக சொன்னார்களாம்.

"ஓ. நான் வேணா பாம்புக்கு முட்டையும் பாலும் தரட்டுமா?"

"ஏன்/ கூடவே ஒரு பாயும் தலைகாணியும் தாயேன், தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்..", எள்ளலாக கணவன், இப்போது யாருக்கோ அலைபேசியில் பேச முயற்சித்தபடியே..

"மாம்.. பாம்பு பால் குடிக்கும்னு யார் சொன்னா?, இடியாடிக் .."

"ஏய்.. எத்தனை ராமநாராயணன் படத்துல பாத்திருக்கேன் தெரியுமா?", பக்தியுடன் இல்லத்தரசி.

"ஷூ.. ஹலோ அசோசியேஷன் செக்ரெட்டரியா? ஆமாமா நான்தான் பேசறேன், நம்ம வீட்ல ஒரு பாம்பு வந்துடுச்சு, யாரவது செக்யூரிட்டி ய அனுப்பறீங்களா?"

"....."

"எது? என்ன பாம்பா? தெரிலையே?"

"......"

"ஒரு மாதிரி ஆஷ் அண்ட் பிளாக் கலர்ல இருந்தது"

"......."

"ஒரு நாலடி இருக்கும் போல இருக்கு", மனதுக்குள் "உன் வீட்ல பாம்பு வரட்டும்டா, ஸ்கேல் வச்சு அளந்து பாருன்னு சொல்றேன்", என்று கருவியபடியே சொல்ல...

"...."

"ஓகே..", என்று சற்றே தளர்வுடன் பேசியை நிறுத்தி... "செக்யூரிட்டி வெளிய போயிருக்கானாம், வந்த உடனே அனுப்பறேன்னு சொல்றார்", என்றார் மகள் மனைவியை பார்த்தபடி.

பெண்கள் இருவரும் கீழே குனிந்து பாம்பின் அசைவைப் பார்த்தபடி இருக்க.. அடுத்த அழைப்பை கணவர் ஆரம்பிக்க...

"இது வேலைக்காகாது, இரு வர்றேன்", என்று கு.கு. உள்ளே சென்று அவரது பேசியை எடுத்து, "நான் அம்மாகிட்ட கேக்கறேன்", என்றார்.

தொடர்பு உடனே கிடைக்க.., "மா.. இங்க நம்ப வீட்ல பாம்பு வந்துருக்கு, என்ன பண்றது சொல்லுங்க?"

"...."

"இல்லம்மா, உள்ள வரல, ஹால் சோஃபா-க்கு அடில இருக்கு, ஆனா மெதுவா அசைஞ்சிட்டு இருக்கு"

".................."

"ஓகே மா அப்புறம் போன் பண்றேன்", என்று விட்டு சமையலறை சென்று, ஒரு பாத்திரம் நிறைய கல் உப்பினை எடுத்து வந்தார்.

"என்ன பண்ணப்போற?", பேசியில் இருந்து சற்றே கவனத்தை திருப்பி மனைவியைப் பார்த்து கேட்டார் அக்குடும்ப படகின் மீகாமன்.

"ம்ம்.. பாம்புக்கு பல் விளக்கி விட போறேன்", என்றுவாறே வாசல் கதவை திறந்து வைத்து சோஃபாவை ஒட்டி வீட்டின் உள்பக்கமாக கூடத்தில் நெடுக கல் உப்பினை வைத்து கோடு போட்டார்.

அடுத்த இரண்டு நிமிடத்தில், உப்பின் வாசனை படவும், மெல்ல அசைந்த அந்த பாம்பு தனது அசைவை வேகமாக்கி வாசலுக்கு சென்றது. அதே நேரம் எதிரே, செக்யூரிட்டி வர,

"அங்கேயே நில்லுப்பா", என்று அவருக்கு ஆணையிட்டு கு.த. நிற்கவைக்க.. செக்யுரிட்டியோ வெளியே வரும் பாம்பினைக் கண்டு தலைதெறிக்க ஓட்டம் பிடிக்க.., அவரது அரவம் கேட்டு அரவம் இன்னும் வேகமாக பக்கத்திலிருந்த புதருக்குள் சென்று மறைய, மகள் சிரித்துக் கொண்டே பேசியில் பாம்பு போவதை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தாள்.

அதன் பின், அசோசியேஷன் செக்ரெட்டரி சென்னாரென்று, அக்கம் பக்கம் வீட்டினர் ஒவ்வொருவராக கிட்டத்தட்ட இருபது இருபத்தியிரண்டு பேர் வந்து பாம்பு படலம் குறித்து தலைவரிடம் விசாரிக்க வர... அனைவருக்கு காஃபி போட்டு கொடுத்து இரண்டு லிட்டர் பால் காலியானது, அதற்கு கணவன் மனைவியிடம் வசை வாங்கியது தனி கதை. இது தவிர,காவல் துறை நண்பர்கள் வந்து குசலம் விசாரித்து சென்றது இதன் கிளைக்கதை.
 
n.palaniappan

நண்றி
சிரிக்க வைத்தற்க்கு
 
I R Caroline

Well-Known Member
:D:D:D பாம்புக்கு இவ்வளவு ஆர்பாட்டமா, சிரிக்க வைத்துவிட்டீர்கள் சிஸ். தெரியாத வார்த்தைகள் கழி, ஒடக்கான், வாரியல்ன்னா என்ன சிஸ் பெருக்குமாரா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top