கொஞ்சல் - 15

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
கொஞ்சல் 15
Epi15.png

இரவு பத்து மணிக்கு சுதர்சனமும் சாரதாவும் வீட்டிற்கு வந்த பொழுது தான் சித்தார்த்தனும் ஊர்மிளாவும் இரவு உணவை எடுத்துக் கொண்டிருந்தனர்.

சாரதா, “இப்போ தான் சாப்பிடுறீங்களா?”

“சனக்ஸ் சாப்பிட்டதே ஹெவியா இருந்துச்சு மாம்” என்றவன் முடிக்கும் போது ஊர்மிளாவின் இதழ்களை பார்த்துவிட்டு கண்ணடிக்கவும் அவளுக்கு புரை ஏறியது.

சாரதா அவசரமாக வந்து அவள் தலையை தட்டி தண்ணீரை எடுத்து கொடுத்தபடி, “மெதுவா சாப்பிடு” என்றார்.

நீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் சித்தார்த்தன் பக்கம் பார்வையை திருப்பாமல், “இப்போ ஓகே அத்தை.. தேங்க்ஸ்” என்றாள் மென்னகையுடன்.

அவர், “தண்ணி கொடுத்ததுகெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவ”

அவள் அதே மென்னகையுடன், “பழகிடுச்சு” என்றவள், “பங்க்ஷன் நல்லபடியா முடிந்ததா அத்தை?”

“ஹ்ம்ம்.. நல்லபடியா முடிந்தது.. என் பிரெண்ட் உன்னை ஏன் கூட்டிட்டு வரலைன்னு கேட்டா” என்றார்.

இருவரும் உணவை முடித்த பிறகு, சுதர்சன், “சித்து ஆபீஸ் ரூம்க்கு வா” என்றபடி வீட்டில் இருக்கும் அலுவலக அறைக்கு சென்றார்.

அவன் உள்ளே வந்ததும், அவனை சுதர்சன் ஆழ்ந்து நோக்கவும் அவன் விக்னேஷுடன் நிகழ்ந்த மோதலை பற்றி சுருக்கமாக கூறினான்.

சுதர்சன், “எதற்கும் கொஞ்சம் கவனத்துடன் இரு”

“சூர் டாட்.. நம் இடத்தில் இருக்கும் அவன் ஆள் யாருன்னு தெரியும் ஆனால் எனக்கு தெரியும்னு அவன்களுக்கு தெரியாது.. டோன்ட் வொர்ரி டாட்.. ஐ வில் மனேஜ் ஹிம்”

“ஹ்ம்ம்”
என்றவர் அடுத்து அவன் மலேசியா செல்லும் பணியை பற்றி பேசிவிட்டு உறங்கச் சென்றார்.சித்தார்த்தன் அறையினுள் நுழையவும் இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைத்தாள் ஊர்மிளா. அவளது முறைப்பிற்கான காரணம் புரிந்தவன் உல்லாமாக சிரித்தான்.

“ஏன் இப்படி பண்ணீங்க?”

“எப்படி பண்ணேன்?”

அவள் முறைக்கவும் அவன் சிரிப்புடன், “இதெல்லாம் சின்ன த்ரில்”

“உங்களுக்கு த்ரில்லா தான் இருக்கும் எனக்கு தானே கஷ்டம்”

அவள் கையை மென்மையாக பிடித்தவன், “ரிலாக்ஸ் டா.. அவங்களும்..............”

“அவங்களும் நம் வயதை தாண்டித் தான் வந்திருப்பாங்கன்னு தானே சொல்லப் போறீங்க!”

“இதில் எல்லாம் ஷார்ப் தான்”

“வேறு எதில் இல்லை?”

“சொல்லவா!” என்று கிறக்கத்துடன் சொல்லியவனின் பார்வை அவள் இதழில் பதியவும் அவள், “பேச்சை மாத்தாதீங்க”

“யாரு நான் பேச்சை மாத்துறேனா!”

“பின்ன இல்லையா!”

“டீச்சரம்மா பேச்சை மாத்தியதே இல்லையா?”

“மாத்தும்படி ஏன் வைக்கிறீங்க?”

“ஏன் உனக்கு பிடிக்கலையா?” என்று அவன் சிறு யோசனையுடன் வினவ,

அவள் நெற்றியில் லேசாக தட்டியபடி, “மக்கு மாணவா.. நீங்க முதலில் டிஸ்டிங்கஷன் வாங்கினால் உங்கள் மாணவி Phd பண்ண கூட தயார் தான்” என்று கூறி கண் சிமிட்டினாள்.

விசிலடித்தவன், “நீ Phd பண்ண பிறகு நான் டிஸ்டிங்கஷன் வாங்கினால் என்ன!“

ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டியவள், “பிச்சு பிச்சு”

“எதை என் உதட்டையா?”

“அங்க சுத்தி இங்க சுத்தி இதிலேயே வந்து நில்லுங்க!”

“புதுசா கல்யாணமானவன் நினைப்பு வேறு எதில் இருக்கும்? வெறும் பேச்சு தானே! அதுக்கும் தடையா!


அவள் சிறு வெக்கத்துடன், “எனக்கு தூக்கம் வருது” என்றபடி நகர,

அவன் அவளது கை பிடித்து உப்பரிகைக்கு அழைத்து சென்றான்.

அவள், “தூக்கம் வரலையா?”

“உனக்கு வருதா?”

“அதை தானே சொன்னேன்?”

அவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கவும் அவள் பார்வையை தாழ்த்தி, “ப்ளீஸ்” என்றாள்.

அவன், “பேசிட்டு இருக்க தான் கூப்பிட்டேன்”

“உங்கள் பேச்சு இன்னைக்கு வேறு எங்கோ இழுத்து செல்லுது”

அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவளை தன் மடியில் அமரவைத்து அணைத்தபடி, “எங்கே இழுத்து செல்லுது?” என்றான்.

அவள் இன்ப அவஸ்த்தையுடன், “இதை தான் சொன்னேன்”

“சரி நான் அப்படி பேசலை.. என் மேல் உனக்கு எப்படி காதல் வந்ததுன்னு சொல்லு”

“இப்படியே உட்கார்ந்தா?”

“ஹ்ம்ம்”

“ப்ளீஸ்”

சிறு பெருமூச்சை வெளியிட்டவன் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு கையை விலக்கினான். அவன் அருகே இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள்.

“ஹ்ம்ம்.. சொல்லு”

“காதல் எப்படி வந்ததுனா என்ன சொல்ல? எனக்கே தெரியாமல் என் மனசுக்குள் நுழைஞ்சிட்டீங்க”

அவன் செல்லமாக முறைக்கவும் அவள் சிரிப்புடன், “நிஜமா தான் சொல்றேன்.. அன்னைக்கு அந்த குழந்தையை சிரிக்க வைத்த உங்கள் மனம் எனக்கு பிடித்து இருந்தது.. உங்கள் முகம் என்னையும் அறியாமல் என் ஆழ் மனதில் பதிஞ்சிருச்சு.. உங்களை பார்த்த மூன்று நாட்களிலேயே நீங்க என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணீங்க.. அப்பா கிட்ட போய் சொன்னேன்.. அப்பா ‘இந்த வயத்தில் வருவது தான்.. இதை பாஸிங் கிளௌடாக நினைத்து கடந்து வந்திரணும்’ னு சொன்னாங்க.. ஆனா உங்களை காலேஜ் முதல் நாள் பார்த்ததுமே எனக்கு தெரிஞ்சிருச்சு.. நீங்க பாஸிங் கிளௌட் இல்லை எனது வானம் னு” என்றாள்.

அவன், “நீ தான் என் வானம்.. அதுவும் அன்பென்ற மழையை பொழியும் வானம்” என்றான்.

மறுப்பாக தலையை அசைத்தவள், “வேணா இப்படி சொல்லலாம்.. நீங்க என் வானம்.. நான் உங்களை குளிர்விக்கும் நிலவு..” என்றவள் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கி, “வானம் இல்லையேல் நிலவு இல்லை” என்றாள்.

அவன் வார்த்தைகளற்ற நெகிழ்ந்த நிலையில் இருந்தான். ‘இவ்வளவு அன்பை வைக்கும் அளவிற்கு நான் என்ன செய்தேன்!’ என்ற கேள்வி அவன் கண்ணில் தெரியவும்,

வலது கையை அவன் கன்னத்தில் வைத்தவள், “ஏதேனும் காரணம் இருக்கணும் என்றால் அது காதலே இல்லை” என்றாள்.

அவன் தவிப்புடன் அவளை பார்க்கவும், அவள் கனிவுடன், “என்ன?” என்றாள்.

தன் மனதில் எழும் எண்ணத்தை சொல்லமுடியாமல் அவன் மறுப்பாக தலையை அசைக்க, அவள், “சொல்லுங்க.. எது உங்களை வதைக்கிறது?”

“ச்ச்”

“நீங்க நினைக்கும் விஷயம் என்னை காயப்படுத்திவிடும் னு பயப்படுறீங்களா?”

அவன் மெளனமாக இருக்கவும் அவள், “முன்பு சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. நீங்க இப்படி மனசுக்குள்ளேயே நினைத்து வதைபடுவது தான் எனக்கு கஷ்டமா இருக்கிறது.. ப்ளீஸ் சொல்லுங்க”

அப்பொழுதும் அவன் தயக்கத்துடன், “என் வாழ்வில் வசந்தத்தை தரும் தென்றலாய்.. மனதை குளிர்விக்கும் நிலவாய்.. எனக்கே எனக்கான சாரலாய் இருக்கிறாய்.. எனக்கும் உன் மேல் காதல் இருக்கிறது னு எனக்கும் புரியுது தான் ஆனால் ஏதோ ஒன்று.. ப்ச்.. எப்படி சொல்ல! என் காதல் முழுமை அடையாத ஒரு தன்மையில் இருப்பது போல் பீல் பண்றேன்..”

அவனை இதழில் மென்னகையுடனும் விழிகளில் கனிவுடனும் பார்த்தவள், “உங்களுக்கு என் மேல் காதல் இருக்கிறது ஆனால் என் காதல் போல் உங்கள்து ஆழமானதா இல்லையோ னு உங்களுக்கு தோணுது அதான் இப்படி”

“அது உண்மை தானே!”

“நீங்க ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ் னு இருக்கிறீங்க..” என்று கூறி கையை எடுத்தபடி கண் சிமிட்டியவள் அவன் முகத்தில் மென்னகை உதிக்கவும், “சீக்கிரம் சரியாகும்.. உங்கள் மனம் முழுமையாக காதலை உணர்ந்த நொடியில் இருந்து என்னை விட நீங்க தான் அதிகமா காதலை பொழிவீங்க..”

அவன் அமைதியாக இருக்கவும் அவள், “உங்களை சமாதானம் செய்ய சொல்லலை.. நிஜமா தான் சொல்றேன்” என்றாள்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#2
பின் அவள், “உங்கள் மனதை முழுமையா உணர இந்த மலேஷியா ட்ரிப் கூட தோதுவா அமையலாம்”

அவன் புருவத்தை உயர்த்தவும் அவள், “சில நேரம் தனிமையில் தெளிவு பிறக்கும்” என்றாள்.

“அதான் வரலை னு சொன்னியா?”

“இதுவும் ஒரு காரணம்”

“ஒரு காரணமா முக்கிய காரணமா?”

“முக்கிய காரணம் தான்.. இன்னொரு காரணம் எனக்கு பிஸ்னஸ் அண்ட் பெர்சனல் மிக்ஸ் பண்ணுவது பிடிக்கலை”

“இந்த விஷயத்தில் என் மனம் முழுமையாக தெளியும் வரை தான் உன் பேச்சு எடுபடும்.. அப்பறம் எங்கே போனாலும் உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்”

அவள் விரிந்த புன்னகையுடன், “பார்க்கலாம்”

“என்ன பார்க்கலாம்?”

“எதிர்காலத்தில் சூழ்நிலை எப்படி இருக்குமோ!”

“ஏன்?”

அவள் வெக்கத்துடன், “குழைந்தை வந்த பிறகு கஷ்டம்”

அவளது வெக்கத்தை ரசித்தவன், “அதை அப்போ பார்த்துக்கலாம்” என்றான்.

பின் அவன், “சரி நான் கேட்டதை சொல்லி முடி.. பேச்சு எங்கெங்கோ போகுது”

“காலேஜ் முதல் நாள் உங்களை பார்த்தபோது எனக்குள் அபப்டி ஒரு மகிழ்ச்சி.. என்ன தடுத்தும் கேளாமல் என் கண்களும் மனமும் உங்களையே சுற்றவும் தான் என் மனம் உங்களை விரும்புறதை உணர்ந்தேன்” என்றவள் காதலுடன் அவனை பார்த்து, “ஐ லவ் யூ ஸோ மச் சித்” என்றாள்.

எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவள் விழிகளில் தெரிந்த காதலில் அவன் கட்டுண்டு அமர்ந்திருந்தான்.

சில நொடிகள் இருவரின் கண்கள் மட்டும் பேசிக்கொள்ள, கோட்டானின் சத்தத்தில் சுயமடைந்தனர்.

அவள், “வசந்த் அண்ணா காலேஜ்ஜில் வைத்து நீங்க சொன்னது தப்பு”

“என்ன தப்பு?” என்றான் புரியாமல்.

அவள் மென்னகையுடன், “நீங்க என்னுடன் பேசி இருக்கிறீங்க.. சொல்ல போனால் நீங்க தான் முதலில் பேசினீங்க”

“அப்படியா?” என்று ஆச்சரியத்துடன் கூறியவன், “எப்போ? என்ன பேசினேன்?” என்று ஆர்வத்துடன் வினவினான்.

அவனது ஆர்வத்தை ரசித்தபடி அவள் அமைதியாக இருக்க, அவன், “சொல்லு அம்லு” என்றான்.

“நீங்க முதல் முதலில் என்னிடம் பேசியது என்ன தெரியுமா?”

அவள் ரசித்து வினவிய விதத்தில் அவன் அதிகரித்த ஆர்வத்துடன் மறுப்பாக தலையை அசைத்து, “சொல்லு” என்றான்.

“ஐ லவ் யூ னு சொன்னீங்க”

“வாட்!” என்று அவன் பெரிதும் அதிர்ந்தான்.

அவள் விரிந்த புன்னகையுடன் அவனை பார்க்கவும் அவன், “சும்மா விளையாடுறியா அம்லு?”

அவள் மறுப்பாக தலையை அசைக்கவும் அவன் மீண்டும், “நிஜமாவா?” என்றான் நம்ப முடியாமல்.

அவள் அந்த நாளை மனகண்ணில் கொண்டு வந்து ரசித்து கூறினாள்.


ஊர்மிளா சிறு படபடப்புடன் கல்லூரிக்குள் நுழைந்தாள். சற்று தூரம் சென்ற போது “ஏய்! இங்கே வா” என்ற பெண் குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.

ஒரு மரத்தடியில் 3 மாணவர்களும் 2 மாணவிகளும் நின்றிருந்தனர்.

இவள் அங்கே சென்றதும் திமிருடன் நின்றிருந்த ஒரு மாணவி, “பெயரென்ன?”

அவள் சிறு பயத்துடன், “ஊர்மிளா”

“என்ன டிபார்ட்மென்ட்?”

“கம்ப்யூட்டர் சைன்ஸ்”

அப்பொழுது ஒரு மாணவன், “சீனியர்ஸ்க்கு குட் மார்னிங் சொல்ல மாட்டியா?”

“குட்.. குட் மார்னிங் சீனியர்”

“தினமும் எனக்கு விஷ் பண்ணிட்டு தான் கிளாஸ் போகணும்”

“ஹ்ம்ம்” என்று சிறு பயத்துடனே தலையை ஆட்டினாள்.

முதலில் பேசிய மாணவி, “ஏய்! இப்போ என்ன பண்ற.. அங்கே வர ஆரஞ்சு ஷர்ட் போட்டவன் கிட்ட போய் ஐ லவ் யூ சொல்லிட்டு வர” என்று முடித்த பொது அவள் பெரிதும் அதிர,

அவளைவிட அதை சொன்னவளின் நண்பர்கள் தான் அதிகம் அதிர்ந்தனர்.

ஊர்மிளாவிடம் பேசியவன், “ஹேமா வீணா வினையை விலை கொடுத்து வாங்காதே” என்று கூற,

ஹேமாவின் தோழி, “ஆமாம் டி.. வேணாம்..” என்று பதற,

ஹேமா, “ஏன் இப்படி பயப்படுறீங்க?”

அந்த மாணவன், “நீ பட்டும் திருந்தலையா! இப்படியே பண்ணிட்டு இருந்த கை கால் உடைந்து ஹாஸ்பிடலில் தான் இருப்ப..”

மற்றொரு மாணவன், “இவ மட்டுமா இருப்பா! இவ கூட இருக்கும் நாமளும் தான்..” என்றான்.

முதலில் பேசியவன், “ஏதோ சின்ன த்ரில்லுக்காக ராகிங் பண்ண வந்தா இப்படியா கோர்த்து விடுவ!”

ஹேமாவின் தோழி அவள் காதில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “சீனியர்ஸ்சே அமைதியா தான் இருகிறாங்க.. நாம தர்ட் இயர் தான்.. மறந்திடாத” என்றாள்.

இவர்கள் பேசியதையெல்லாம் கேட்டு ஊர்மிளா பயத்துடன் அந்த ஆரஞ்சு சட்டைகாரனை திரும்பி பார்க்க அப்பொழுது அவள் கண்களுக்கு தெரிந்து அந்த அரஞ்சு சட்டைக்காரன் அருகில் இருந்த ஆகாய வண்ண நிறத்தில் சட்டை அணிந்திருந்த சித்தார்த்தன் மட்டுமே.

அந்த அரஞ்சு சட்டைக்காரன் வேறு யாருமில்லை கௌதமன் தான்.. இவர்கள் இப்படி பயப்பட காரணம் இருக்கிறது. இந்த ஹேமா முதலாம் ஆண்டில் இருந்த போது நண்பர்களிடம் ‘அக்னி மன்னன் என்று பெயர் பெற்ற கௌதமனை தன்னிடம் காதல் சொல்ல வைக்கிறேன்’ என்று பந்தயம் கட்டி கௌதமனிடம் போலியாக காதல் நாடகம் நிகழ்த்தினாள். இவளின் திட்டம் அறிந்த கௌதமன் தன்னால் ஒரு பெண்ணின் பெயர் கேட்டுவிட கூடாதே என்ற எண்ணத்தில் பொறுமையாக விலகி தான் சென்றான். ஆனால் ஒரு நாள் இவள் மூன்றாவது மாடியில் நின்றுக் கொண்டு அவன் ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை என்றால் கீழே குதித்துவிடுவேன் என்று மிரட்டினாள். அதில் பெரிதும் கோபம் கொண்ட கௌதமன் தனது மற்றொரு நண்பன் அஜய் மூலம் கீழே தரையில் ஸ்போர்ட்ஸ்-மேட் விரித்து வைத்துவிட்டு அசராமல் ஹேமாவை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு அனைவர் முன்னிலும் அவளது சாயத்தை உரித்துவிட்டே சென்றான். அதன் பிறகு ஹேமா அவன் பக்கம் செல்லவில்லை என்றாலும் அவளுள் கோபம் கனன்று கொண்டே தான் இருக்கிறது.


நண்பர்கள் பயப்படவும் வேறு வழியில்லாமல் ஹேமா கோபத்துடன் ஊர்மிளா முகத்தின் முன் சொடகிட்டு, “ஏய்” என்று அழைத்தாள்.

அதில் மாயவலையில் இருந்து விடுபட்ட ஊர்மிளா திருதிருவென்று முழித்தாள்.

ஹேமா, “ஆரஞ்சு சட்டைகாரன் வேணாம்.. அவன் பக்கத்தில் இருக்கிறவன் கிட்ட சொல்லிட்டு வா” என்றாள்.

ஊர்மிளா அதிர்ச்சியுடன் பார்க்க ஹேமா கோபத்துடன், “என்ன?”

ஊர்மிளா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பெயர் வேணா கேட்டுட்டு வரேன்”

“அவன் பெயர் நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியனுமா?”

ஹேமாவின் தோழி, “விடு டி ரொம்ப பண்ணாத” என்றுவிட்டு ஊர்மிளா பக்கம் திரும்பி, “சரி.. பெயரை கேட்டுட்டு வா.. ஆனா இந்த ரோசை கொடுத்து கேட்கணும்”

ஊர்மிளா இப்பொழுதும் சிறு மிரட்சியுடன் பார்க்கவும், ஹேமாவின் தோழி, “நான் சொன்னதை செய்றியா இல்லை இவ சொன்னதை செய்றியா?”

ஊர்மிளா சட்டென்று அந்த ரோஜா பூவை வாங்கி, “நீங்க சொன்னதையே செய்றேன்” என்றாள்.

ஊர்மிளா மெதுவாக சித்தார்த்தன் மற்றும் கௌதமனை நெருங்கினாள். கௌதமன் அலட்சியத்துடன் நின்றுக் கொண்டிருக்க, சித்தார்த்தன் புருவம் உயர்த்தி இவளை பார்த்தான். அவள் ஹேமா குழுவினரை சிறு பயத்துடன் திரும்பி பார்த்துவிட்டு இவனை தயக்கத்துடன் பார்த்தாள்.

கௌதமன் சிறு கோபத்துடன், “சீனியர்ஸ் நாமே அமைதியா இருக்கிறோம்.. இவள் பண்ற அலப்பறையை பார்த்தியா!”

“விடு டா” என்ற சித்தார்த்தன் இவளை பார்த்து, “ஐ லவ் யூ சொல்ல சொன்னாங்களா?” என்று வினவியதும் ஊர்மிளாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

சித்தார்த்தன், “யாரிடம்?”

அவள் இன்னமும் அதிர்ச்சி விலகாமல், “ஹன்” என்றாள்.

அவன், “யாரிடம்?” என்று அழுத்தத்துடன் கேட்கவும் அவள் ஆள்காட்டி விரலால் அவனை சுட்டி காட்டினாள்.

“சரி.. அவங்க கிட்ட சொல்லிட்டேன் னு சொல்லிட்டு கிளாஸ்க்கு போ” என்றுவிட்டு நகர,

அப்பொழுது தான் சுயம் பெற்றவள், “உங்..க நே..ம் என்ன?” என்று வினவினாள் திணறலுடன்.

“தெரிந்து என்ன செய்ய போற! கிளாஸ்க்கு போ” என்றவன் அவளை திரும்பி பார்க்காமல் கௌதமனுடன் தன் வகுப்பிற்கு சென்றான்.


கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥

 
Advertisement

New Episodes