கொஞ்சல் - 10

eanandhi

Well-Known Member
#9
சந்தன் மற்றும் மகிஷா சென்ற ஐந்து நிமிடத்தில் மெல்லிய கொலுசொலி கேட்கவும் திரும்பி பார்க்காமலேயே வருவது யாரென்று சித்தார்த்தனுக்கு புரிந்தது.

அவன், “ஊர்மி ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்றான்.

அவள் அமைதியாக அவன் அருகே சென்று தனது வலது கையை அவனது இடது கரத்துடன் கோர்த்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“ச்ச்” என்ற சத்தம் அவனிடமிருந்து வரவும்,

அவளும் வானத்தை பார்த்தபடி, “நான் அமைதியா இருக்கிறேன்.. ஆனா தனியாலாம் விட முடியாது” என்றாள்.

“ஏன்டி படுத்துற!”

“இப்போ எதுக்கு தனியா வந்து நிற்கிறீங்க?”

“எனக்கு தனிமை வேணும்”

“அது தான் ஏன்?”

“ஏன் னு உனக்கு தெரியாதா?”

“தெரியாம தானே கேட்கிறேன்”

“ப்ச்”

“இப்படி சலிச்சா என்ன அர்த்தம்?”

“தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்கிறது பிடிக்கலை னு அர்த்தம்”

“சரி நேரிடையாவே கேட்கிறேன்.. இப்போ என்ன நடந்து போச்சு னு இப்படி தேவதாஸ் மாதிரி வந்து நிற்கிறீங்க?”

அவன் சிறிது விலகி, “இது என்ன உதாரணம்?” என்று சிறு கோபத்துடன் வினவினான்.

அவள் அவன் கையை விடாமல் அவன் கண்களை பார்த்து, “அப்போ நீங்க பண்றதுக்கு என்ன அர்த்தம்?”

“நீ என்னை புரிந்துக் கொண்டாய் என்று நினைத்தேன்”

“புரிந்துக்கலை னு நினைக்கிறீங்களா?”

“சரியாக புரிந்திருந்தால் இப்படி பேச மாட்ட”

“நீங்க தான் புரியாம நடந்துக்கிறீங்க”

“என்ன புரிஞ்சுக்கலை?” என்று சற்று காட்டத்துடன் கேட்டான்.

“உங்கள் மனம் காதல் தோல்வியில் வருந்தலைன்னு எனக்கு தெரியும் ஆனால் அவன் பேசியதை கேட்டு நீங்க இப்படி நடந்துக் கொண்டால் அதற்கு அர்த்தம் நான் சொன்னது தான்.. அது தான் உங்களுக்கு புரியலை”

“உளறாதே!”

“மற்றவர்கள் வேற எப்படி நினைப்பாங்க?”

“மற்றவர்கள் எண்ணம் பற்றி எனக்கு கவலை இல்லை.. நீ................”

“அப்பறம் ஏன் மற்றவர்கள் பேசியதிற்கு மதிப்பு கொடுக்கிறீங்க?”

“அவன் பேசியதை கேட்டு என் மனம் குளுகுளு னு இருக்குமா?”

“அவன் பேசியதை பிடிச்சிட்டு ஏன் தொங்குறீங்க?”

அவன் முறைக்கவும் அவள், “அவன் ஏதோ உளறினான்னு.......................”

“எது உளறல்? அவன் சொன்னதில் உண்மையே இல்லையா?”

“எது உண்மை?” என்றவளது கண்கள் அவனை ஆழ்ந்து நோக்கியது.

“நான்” என்று வேகமாக ஆரம்பித்தவன் பின் நிறுத்தி, “வேணாம் ஊர்மி.. நான் இப்போ இருக்கும் மனநிலையில் உன்னை காயப்படுத்திவிடுவேனோ னு பயமா இருக்குது.. ப்ளீஸ் நீ கீழே போ”

“நீங்க சொல்ல வந்ததை சொல்லி முடிங்க”

அவன் கோபத்துடன் குரலை சற்று உயர்த்தி, “இம்சை பண்ணாம கீழே போடி”

அவளோ நிதானமாக, “இந்த கோபம் கூட அன்பு தான் தெரியுமா? உங்களை நீங்களே தனிமை படுத்தி வதைபட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை காயப்படுத்திவிடக் கூடாது என்ற உங்கள் தவிப்பு காதல் இல்லாமல் வேறு என்ன?”

அவன் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க, “இது தான் காதலின் ஆரம்பம்” என்றாள் மென்னகையுடன்.

பின் அவன் கன்னத்தில் கையை வைத்து, “காதல் என்பது இன்பத்தில் மகிழ்வது மட்டுமில்லை.. நீங்க வருந்தும் போது என்னால் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? உங்கள் மனதை வருத்துவதை வெளியே கொட்டுங்க.. நீங்க வருந்துவதை பார்த்து என் மனம் கஷ்டபடுவதை விட உங்கள் வார்த்தைகள் என்னை அதிகமாக கஷ்டப்படுத்தி விடாது..”

அவளது அன்பில் அவன் மனம் மொத்தமாக அவளிடம் சரணடைந்தது. அவன் வார்த்தைகளின்றி தன் கன்னத்தின் மேல் இருந்த அவளது கையை அழுத்தி பற்றினான்.

சில நொடிகள் நான்கு கண்கள் மட்டும் பேசியது.

அவன் கண்கள், ‘உன் அன்பிற்கும் காதலுக்கும் நான் தகுதியானவனா!’ என்று வினவ,

அவள் கண்களோ, ‘உன்னை விட வேறு யார் எனக்கு இணை!’ என்றது.

அவளது இரு கன்னத்திலும் கையை வைத்து அவள் முகத்தை பற்றியவன், “தவமின்றி கிடைத்த வரம் நீ” என்றான்.

அவள் மெல்லிய குரலில், “நீங்கள் தான் எனக்கு கிடைத்த வரம்” என்றாள்.

அவன் சட்டென்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து அணைத்துக் கொண்டு அவள் தலையில் கன்னம் பதித்து கண்களை மூடினான். அவள் கைகள் மென்மையாக அவன் முதுகை வளைத்தது.

சில நொடிகள் கழித்து அவள் மெல்லிய குரலில், “ரூமுக்கு போகலாமா சித்?” என்று வினவினாள்.

அப்பொழுது தான் இருக்கும் நிலையை உணர்ந்தவன் பிடியை தளர்த்தி, “சாரி” என்றான்.

அவள் சிறிது தலை சரித்து, “எதுக்கு?” என்றாள்.

அவன் மென்னகையுடன், “கட்டி பிடிச்சதுக்கு இல்லை”

“ஓ” என்று ராகம் பாடிய இதழில் கவி பாட தோன்றியது அவனுக்கு இருபினும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு, “ரூமுக்கு போகலாம்” என்றவன் வேகமாக கீழே செல்ல அவளும் அவனை தொடர்ந்தாள்.

அறைக்கு சென்றதும் மெத்தையில் அமர்ந்தபடி அவள், “இப்போ சொல்லுங்க” என்றாள்.

அவள் அருகில் அமர்ந்தவன், “இப்போ என் மனம் லேசா தான் இருக்குது.. அதை விடு”

“இல்லை.. இது தற்காலிக தீர்வு தான்.. பின்னாடி என்னைக்காவது பெரிதாக வெளியே வரலாம்.. பேசி முடிச்சிருவோம்.. சொல்லுங்க”

“கண்டிப்பா பேசணுமா?” என்று அவன் சிறு தயக்கத்துடன் வினவ,

அவள், “கண்டிப்பா” என்றாள் உறுதியான குரலில்.

அவன், ”நான் சவிதா கழுத்தில் தாலி கட்டியது உண்மை தானே!”

அவள் வரவழைத்த ஆச்சரிய குரலில், “யாரோ ‘நீ தான் என் மனைவி.. நீ மட்டும் தான் என் மனைவி’ னு சொன்னாங்க” என்றாள்.

“நானும் அதை என் மனதில் பதிய வைக்க நினைத்தாலும் உண்மை சுடுதே! ஒருவேளை அவன் சொன்னது போல் நடந்திருந்தால்..................”

அவனை கடுமையாக முறைத்தவள், “அவன் ஒரு ஆளு னு அவன் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பதே தப்பு இதில் நடக்காததை கற்பனை செய்து மனதை வருத்திகிறீங்களா?”

“ச்ச்..”

“நடக்காததை நினைத்து அப்படி நடந்திருந்தால் இப்படி நடந்திருந்தால் னு கற்பனை பண்ணுவதில் என்ன பிரயோஜனம்? அப்படி கற்பனை செய்து எதற்கு தேவை இல்லாமல் நம் இனிமையை கெடுத்துகனும்? இதை தானே அவனும் விரும்பினான்! என் சித் ஜெய்க்க பிறந்தவர்.. தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக்காதீங்க”

அவன் அமைதியாக இருக்கவும், “என்ன?” என்று அவள் மிரட்டும் தொனியில் வினவ,

அவன் வருந்தும் குரலில், “எப்படி ஆரம்பித்த நாள்! எப்படி இனிமையா கழிக்க நினைத்தேன் தெரியுமா?”

“ஆமா.. அப்படியே என்னை கட்டி பிடித்து வாழ்க்கை நடத்திட கற்பனை பண்ண மாதிரி தான்” என்று முணுமுணுக்க, அவன் சிறு ஆச்சரியத்துடன் அவளை பார்த்தான்.

கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥

sema sis supera iruku ud
 
Advertisement

Sponsored