கை சேர்ந்த கனவே.....

#1
அழகான கருமையான இரவு..... வைரப்பரல்களாய் நட்சத்திரங்கள் மின்ன மின்ன ..... அதன் நீள வான ஓடையில் நீந்தும் ஒற்றை நிலவை நீண்ட நேரம் விழியகட்டாது பார்த்துக்கொண்டு நின்றாள் மதுமதி....

எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டுவதே இல்லை...அவளுக்கு..... ஆனால் எத்தனை காலம் தான் இப்படி தனியாகவே நின்று தனைமையோடே இரசித்துக் கொள்வது....

தெரியவில்லை....

அந்த நிலவைப் போலவே தனியாகவே நின்று விடுமோ இந்த மதிக்கும் காலம்....

மதுமதி.... அவளைப் பற்றி என்ன கூறுவது கதைகளுக்கே உரிய கற்பனை நாயகி இல்லை இவள்....

நமது இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல நல்ல வெந்த ரொட்டியின் திராவிட நிறம் தான்... கருப்பு வெளுப்பு என்று வரையறுக்க முடியாத கோதுமை நிறம்....

குள்ளக்கத்தரிக்காய் என்றோ ....

நெட்டைக் கொக்கு என்றோ கேளிசெய்ய முடியாத நடுத்தர உயரம் தான்....

கலையான முகம் ... கொஞ்சம் ஃபேரன் லவ்லியூம் ... பான்சும் போட்டு பட்டி டிங்கரிங் செய்தால்... பளபளக்கும் அழகு முகம் தான்....

ஏனோ அதெல்லாம் செய்து கொள்ளத்தான் அவளுக்கு பிடித்தம் இல்லை..

என்ன பூசினால் என்ன … எண்ணெய் தேய்த்து ஊருண்டாலும் ஒட்டுகிற மண் தானே ஒட்டும் என்ற சலிப்பு…

கலகலப்பான இரகம் அவள்.... ஆனால் சிரிப்பும் சந்தோஷமும் அவள் உள்ளத்திலிருந்து பொங்குவதில்லை....

ஆனால் அவள் இருக்கும் இடம் எப்போதும் ஒரு சிரிப்பும் கலகலப்பும் நிறைந்த ஆராவாரத்தோடு இருக்கும்…

அவளுடையப் புன்னகை உதட்டலவில் பொங்கி வழிந்து அருகிருப்போரை அழகாகத் தொற்றிக்கொள்வதோடு சரி....
மதுவிற்கு துணை தனிமை தான்... சுற்றிலும் எத்தனை உறவுகள் வேண்டுமானாலும் தாங்கட்டுமே தாய் தந்தைப் போல வருமா....

அருகிருந்து பராமரிக்க வேண்டிய வயதில் அன்னை தந்தை இன்றி போனால்.. ஆயிரம் உறவுகள் இருந்தும் அங்கே தனிமையைத் தவிர வேறு துனை இருப்பது இல்லை தானே...

பிறந்தநாளுக்கு பரிசு தரவோ.. பிடித்ததைக் கேட்டு சமைத்து தரவோ.. கட்டி உருண்டு சண்டைப் போட்டு செல்லம் கொஞ்சிடவோ அவளுக்கு அவளுக்கு அன்னையும் தந்தையும் இல்லை ..

ஆனாலும் அன்புக்கு கூறையற்ற கூட்டுக்குள் தான் அவளுடைய புகலிடம்…

அவளுக்கு அன்னையும் தந்தையும் (ராதிகா__ வேணுகோபால்) அவளுடைய மூன்று வயதிலேயே ஒரு விபத்தில் காலமாகிவிட்டனர்....அதோடு அத்தை மாமா சித்தப்பா பெரியப்பா என பெரிய உறவுக்குவியலுக்குள்ளே வாழ்ந்தாலும் அவளுக்கு துணை மட்டும் தனிமை தான்...

எப்போதிலிருந்து என சரியாகத் தெரியாது இரவானால் நிலவையும் கரிய இரவையும் வெள்ளிப் பிழம்புகளாய் மின்னும் நட்சத்திரங்களையும் உறக்கம் கண்களைத் தழுவும் வரை உற்று உற்று பார்த்துவிட்டு தான் உறங்கவே செல்வாள்.....

அந்த நேரத்தில் வீசும் குளிர்ந்த தென்றல் அவளை உரசிச் செல்கையில் உணரும் அந்த குளுமையில் தொலைந்த அவளுடையக் காதலைத் தேடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்....

தொலைந்த காதலா......

ஆம் கிட்டத்தட்ட அப்படி தான்… காதல் என்று அவள் உணர்ந்து கொள்வதற்கு முன்பே தட்டிப் பறிக்கப்பட்ட தொலைதூரத்துக் காதல்… தொலைப்பேசி வாயிலாகக் கூட வாழ முடியாத தொலைந்து போனக் காதல்.. ஆனாலும் இன்னும் ஏதோ ஒரு நப்பாசையில் இந்த ஓவியப் பாவை ஓய்ந்து போனாலும் அவளுடைய உள்ளத்து ஆசைகளைத் திரட்டி தீர்ந்து போகாத ஆவளோடு இரவுகளின் விண்மீன் வெளிச்சத்திலும், ஏகாந்தத்தின் மடியிலும் நிலாப் பெண்ணின் துணைக் கொண்டு தேடிக் கொண்டிருக்கும் குழந்தைத் தறமானக் காதல்….

ஆம் அப்படி என்றால் தொலைந்த காதல் தான்... இல்லையா... சொல்ல முடியாமலே இவளே உருகி உருகி தொலைந்து போன காதல்....

ஒவ்வொரு இரவும் அதை அசைப்போட்டு அதன் நினைவுகளையும் இரணங்களையும் நினைத்து நினைத்து புழுங்கி அதிலேயே உழன்று பின் சோர்ந்து கண்கள் கரித்து கலங்கி களைத்து தான் உறங்குவது....

இதோ இன்றும் அவளுடைய நினைவுகளை அசைபோட்டு முடித்து கண்ணீரை துடைத்துக் கொண்டு நகர்ந்துவிட்டாள் உறங்குவதற்கு....

உறக்கத்தில் கூட அந்த முகதாதை அசைப்போட்ட படி அப்படியே லயித்துக் கிடப்பதில் ஒரு தனி சந்தோஷம் தான் அவளுக்குள் ..

ஆனாலும் இரவுகள் அப்படியே நீளாதே… விடியல் வரத்தானே செய்யும்…
இதோ விடிந்துவிட்டிருந்தது அந்த அழகான காலைப்பொழுது…

காலையில் எப்போதும் சித்தி மற்றும் பெரியம்மாவின் கை வண்ணத்தில் பூஜையறையும் சமையலறையும் மணம் கமழக் கலைகட்டிவிடும். ...

மதுவின் இரவு நேர உலகம் தனி... பகல் நேர உலகம் தனி... இதோ... நாடகம் தொடங்கியாக வேண்டும்.....

விடிந்தது அன்றைப் புதிய நாள்....அழகாக ஒரு பக்கம் பக்திப் பாடல்கள் இசைந்து கொண்டிருக்க ....

பெரியப்பா இராஜனும் சித்தப்பா மேகனாதனும் வாக்கிங் முடிந்து வந்து பத்திரிகை சகிதம் அமர்ந்து விட்டனர்....

சித்தி விஜியும் பெரியம்மா கோமதியும் காலை உணவைத் தயார் செய்து அலுவலகத்திற்கும் . பிள்ளைகளின் பள்ளிக்கும் உணவை பேக் செய்கின்றனர்...

பெரியவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் ரக்ஷிதா... ஒரு பையன் ஹரிஷ் பெண் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறாள்....பையன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்...

சிரியவருக்கு ஒரு பையன் மனோஜ் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.... ஒரு பெண் லக்ஷனா மூன்றாவது படிக்கிறாள்...

குட்டீஸ் பட்டாளங்களோடு மதுவும் சேர்ந்தால் அன்று வீடு தாங்காது....

மது விழித்து குளித்து அவளுக்கு நேர்த்தியாக இருக்கும் படி ஒரு புடவையோடு கைப்பை சகிதம் கீழே வந்துவிட்டாள்...

பி.எஸ்.சி கணிதம் முடித்துவிட்டு எம்.எஸ்.சி தொலைதூரக் கல்வியில் படித்துக்கொண்டு இருக்கிறாள்.... மற்றும் பி.எட் முடித்துவிட்டு அருகில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்க்கிறாள்...

வேலைக்கு போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயங்கள் இல்லாத மிடில்கிளாஸ் வர்கத்தை விட ஒருபடி மேலான சூழல் தான்... இருந்தாலும் இரவின் தனிமையே கொடுமையாக உள்ளது இதில் பகலிலுமா என்றே மது வேலைக்கு செல்லும் முடிவைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.....

ஒருவழியாக தன்னை மறந்து ஒன்றிப் போக ஆத்மாத்மமான ஒரு சூழல் கிடைக்கவே அதில் ஒன்றிக் கொண்டாள்...

பள்ளி குழந்தைகள் பாடம் வீடு இதைத் தவிற அவளுக்கு பிடித்தமான பல பொழுதுபோக்குகளை அவளே உருவாக்கிக் கொண்டாள்....

எந்தேரமும் தன்னைத்தானே பரபரப்பாக இயங்கும் படி பார்த்துக் கொண்டாள்...

அந்த பொழுதுகள் அவளுக்கு வேலையோடு சேர்த்து கொஞ்சம் மறதியையும் கற்றுக் கொடுத்திருக்கிறதே…

அந்த கொஞ்ச நேர மறதியில் சிரிக்கவும் சந்தோஷப்படவும் கொண்டாடவும் கொண்டாட்டங்களின் சந்தோஷத்தை பிறருக்கு பகிரவும் கற்றுக் கொண்டு காலத்தை மருந்தாக்கிக் கொண்டு ...
சில காயங்களை சுலபமாக கடந்து வரவும்ஸ பழகிக் கொண்டாள்....மது

அந்த காயத்தின் பெயர் காதல்... அந்த காயங்களின் காரணம் அரவிந்த்... பாவம் இது அவனுக்கேத் தெரியாதே…

அழன் தெரிந்து கொள்வானா….??? தெரிந்தும் கொல்வானா….???

அடுத்தடுத்த பதிவுகளில்….


__ தொடரும்

_ காயத்ரி வினோத் குமார்..
 
Attachments

#3
:D :p :D
உங்களுடைய "கை சேர்ந்த
கனவே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
யாழ் மொழி டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement