கூட்டாஞ்சோறு

Bhuvana

Well-Known Member
#1
கூட்டாஞ்சோறு :

இதுவும் நெல்லை மாவட்டத்தின் ஒரு ஸ்பெஷல் உணவு.

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
விருப்பமான காய்கறிகள் - 1 கப்
முருங்கை கீரை - 1 கப் {உதிர்த்தது}
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
வெங்காய வடகம் - 10
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைத்து கொள்ள:

தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 20 பல்

மேலே கூறியவற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தனியே வைத்து கொள்ளவும். வெங்காய வடகத்தை கொஞ்சம் எண்ணெய்யில் பொரித்து தனியாக வைக்கவும்.

பிரஷர் குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும், முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து, புளிக்கரைசல் ஊற்றி நன்றாக கலக்கவும்.

அரிசி, பருப்பை கழுவி இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போதே புளிப்பு, காரம், உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும். சாதம் கொதிக்க ஆரமித்தவுடன் வெயிட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் சமைக்கவும்.

கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பில்லை தாளித்து பிரஷர் இறங்கியவுடன் பொறித்த வடகத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அப்பளம், வத்தலுடன் பரிமாறவும்.
 

Attachments

Christy hemraj

Well-Known Member
#2
கூட்டாஞ் சோறு சூப்பரா இருக்கும்... அதனோடு தேங்காய் துவையல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்....
 

Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் நேசம் மறவா நெஞ்சம் கதையின் 27ம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.........படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
ஐரா and அதியன் coming tonight dear makkaleee...may be after 9 pm
PLSSSSSSSSSSSSSSSSSS yaravadhu ud podunga.
@vijayalakshmi jagan
Viji ma தூக்கனாங்கூடு ud இன்னைக்கு உண்டா???

Sponsored