குழந்தைகள் சேட்டை...

Advertisement

I R Caroline

Well-Known Member
இரவு மணி 11.30 இருக்கும், எல்லோரும் உறங்கச் செல்லும் நேரம், அந்த அமைதியான நேரத்தில், "யாராவது இருக்கீங்களா" என்ற குரல் திரும்ப திரும்ப கேட்டதும், வெளியில் வந்து குரல் எங்கிருந்து வருதுனு சுற்றி சுற்றி பார்த்தா, குரல் வரும் திசையை கண்டுபிடிக்க முடியலை.

திரும்ப திரும்ப சத்தம் கேட்க, எல்லோரும் அமைதியாகி சத்தம் வரும் திசையை உன்னிப்பாக கவனிக்க, அருகில் இருந்த ஃப்ளாட்லருந்து சத்தம் கேட்க, உடனே அந்த ஃப்ளாட்க்கு போனா எந்த வீட்டிலிருந்து சத்தம் வருதுனு தெரியலை.

எல்லோர் வீட்டுக் கதவையும் தட்ட வேண்டியதுதான்னு, முதல்ல ஒரு வீட்டுக் கதவை தட்ட, அவர்களிடம் சத்தம் கேட்பதை சொல்ல, "எங்களுக்கு எந்த சத்தமும் கேட்கலை, நீங்கெல்லாம் யாரு" என்று கேட்டாங்க, "நாங்க மூணாவது வீட்ல இருக்கோம்" என்றதும், "உங்க யாரையும் இதுவர பார்த்ததே இல்லையே"

"நாங்க முப்பது வருஷமா இங்கதான் இருக்கோம், உங்க ஃப்ளாட்ல யாருக்கோ பிரச்சினை போல சத்தம் போடுறாங்க", "எங்களுக்கு கேட்கலை" திரும்ப திரும்ப அதையே சொன்னாங்க, எல்லோரும் அமைதியாகி கவனிச்சா அங்க எந்த சத்தமும் கேட்கலை, ஃப்ளாட் விட்டு வெளில வந்தா கேட்குது.

தேடி தேடி ஒரு வீட்டு ஜன்னலிருந்து சத்தம் கேட்க, அது எந்த வீட்டு ஜன்னல்னு கேட்டு அந்த வீட்டு கதவை தட்டி, "என்ன ஆச்சு" என்று கேட்க,

அவங்க சொல்றது ஒன்றுமே புரியலை, வெளியில் ஆட்கள் சத்தம் கேட்டதும், உள்ள குழந்தை பயத்தில் அழத் தொடங்க, குழந்தை ஏன் அழுதுனு வெளில இருக்கறவங்களுக்கு புரியலை,

உள்ளே என்ன பிரச்சினைனு தெரியாம, கதவை உடைச்சா போலீஸ் கேஸானா என்ன செய்யனு எல்லாம் குழப்பமாக, குழந்தை சத்தம் வேறு அதிகமாக, கதவை உடைங்க குழந்தை விடாம அழுது குழந்தைக்கு ஏதாவது ஆகிடப் போகுதுனு உடைக்கப் போக,

ஹவுஸ் ஓனர்ட்ட கேட்கனும்னு மத்த வீட்டுக்காரங்க சொல்ல, உடனே அவருக்கு கால் பண்ணா பூட்டு 1250 ரூபாயாச்சேனு புலம்பறார், அவங்க கிட்ட இன்னொரு சாவி இருக்கும்னு சொன்னார்.

பக்கத்து வீட்டுக்காரங்க, "அது அவங்க கணவர்ட்ட இருக்கும், அவர் வேலைக்கு போயிருப்பார்", உடனே அவர் நம்பர் கேட்டு அவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல, "நான் இங்கிருந்து வர 1 மணி நேரமாகும்" என்று சொன்னார்.

பக்கத்து பில்டிங்ல வேலை பார்க்கும் கார்பென்டர், இது வேலைக்கு ஆகாது குழந்தை இப்படி அழுதுட்டு இருந்தா, அதுக்கு ஏதாவது ஆகிடும்னு, வுட் கட்டர் வைத்து ஒரு செகண்ட்ல லாக் கட் பண்ணிட்டு உள்ள போனா,

அவங்க கணவரை நைட் ஷிப்ட் வேலைக்கு அனுப்பிட்டு, இவங்க மெயின் கதவையும் பூட்டிட்டு ரூம்க்கு போயிருக்காங்க, ஹால்ல விளையாடிட்டு இருந்த குழந்தை ரூம் கதவை வெளில லாக் பண்ணிட்டான், லாக் பண்ணவனுக்கு அதை திறக்க தெரியலை, அம்மா ரூம்ல குழந்தை ஹால்ல, அவங்க மொபைலும் ஹால்ல மாட்டிட்டு, ராத்திரி முழுவதும் குழந்தை எப்படி தனியா இருப்பான், பயந்திருவானேனு அவங்க குரல் கொடுத்திருக்காங்க, இதாங்க பிரச்சனை...

இது என் அம்மா வீட்டு பக்கத்தில் நடந்தது, அண்ணன் அவர் பொண்ணும் சத்தம் கேட்டு போனது, இவங்க வெளியில் வந்து தேட, பக்கத்துல நைட் வேலை பார்த்த கார்பென்டரும் சேர்ந்து கொண்டார்.

பக்கத்து வீட்டில் யார் இருக்காங்க என்றும் தெரியலை, உள்ள இருக்கும் உயிரை விட 1000 ரூபா பூட்டுதான் பெரிசா இருக்கு, என்னய்யா மனுஷங்க... குழந்தைங்க குழந்தைங்களாதான் இருப்பாங்க, அவங்க கிட்ட நாமதான் எச்சரிக்கையா இருக்கனும், இல்லை இப்படிதான் மாட்டிட்டு முழிக்கனும்...:rolleyes::rolleyes::rolleyes:
 
banumathi jayaraman

Well-Known Member
அட பரதேசிங்களா?
குழந்தையை விட பூட்டு பெருசா போயிடுச்சா?
ரொம்ப நல்ல மனித நேயம்தான் போங்க
அட அந்தம்மாவுக்கே கரண்ட் தொட்டு ஷாக் அடிச்சு இல்லாட்டி கீழே விழுந்து அடிகிடி பட்டிருந்தா என்னவாகிறது?

ரொம்ப வருஷம் முன்னாடி என் வீட்டில் நடந்தது
முன்பெல்லாம் காலை மாலை இரண்டு நேரமும் பால் வாங்குவேன்
ஒரு லீவு நாளில் காலைப் பாலில் மீதியிருந்ததில் காபி குடித்து விட்டு வெளியே போய் விட்டோம்
(பொதுவா சாயங்காலம் பால் வந்தபிறகுதான் காய்ச்சி காபி குடிப்போம்
அன்னிக்கு என் கெரகம் சரியில்லை போலிருக்கு)
ஒரு சின்ன தவறு என்னன்னா மாலை வாங்கிய பாலை வழக்கம் போல அடுப்பில் வைத்து சிம்மில் வைத்திருந்தேன்
மறந்து போய் வெளியே போய்விட்டேன்
பால் நன்கு கொதித்து சுண்டி அடிப் பிடித்து கருகி வாடை வீசி பக்கத்து வீட்டில் கருகின வாடைக்கு என்னவோ ஏதோன்னு பார்த்து எங்கள் வீட்டுப் பூட்டை உடைத்து அடுப்பை அணைத்து விட்டார்கள்
இல்லாவிட்டால் பெரிய தீ விபத்து ஆகியிருக்கும்
அதிலிருந்து எங்கே போனாலும் ஒருமுறைக்கு நாலு முறை எல்லாவற்றையும் செக் பண்ணிட்டுத்தான் போறது
 
Last edited:

Joher

Well-Known Member
பக்கத்துவீட்டுகாரங்க னு சொல்றாங்க....... எங்க பக்கத்துக்கு வீட்டுக்காரங்க பண்ணுற இம்சைக்கு நாங்க கதவை தொறக்குறதே இல்லை......
அது மாதிரி பல நார்த் இந்தியன்ஸ் பொதுவா யார்கிட்டேயும் ஒட்டமாட்டாங்க....... என் வழி தனி வழின்னு போய்கிட்டே இருப்பாங்க.....
அதுவுமில்லாமல் families இருந்தால் ஓரளவுக்கு தெரியும்...... sharing ல இருந்தா யார் வாரா போறான்னே தெரியாது........
இப்படி எல்லாம் பல பிரச்சனைகள்........

இதெல்லாம் இப்போ இருக்கிற லாக் சிஸ்டம் ல சகஜம்........
என்னோட பெரிய பையன் 4 yrs இருக்கும்....... காலையில் தூங்கிட்டிருப்பான்........ குப்பை வண்டி வர்ற சத்தம் கேட்டல் போதும் உடனே எழுந்துடுவான்....... ஒரு நாள் இப்படித்தான் தூங்குறானேன்னு குப்பையை போட சின்ன பையனை தூக்கிட்டு கதவை பூட்டி சாவி எடுத்துட்டு போயிட்டு வர்றதுக்குள்ள கிட்சன் லாக் (படம்) போட்டுட்டான்........
இந்த push button door knob ரொம்ப ஆபத்தானது....... நடுவில் இருக்கும் பட்டனை பிரஸ் பண்ணிட்டு வெளிப்பக்கமா இருந்து லாக் பண்ணிட்டா சாவி இல்லாமல் யாரும் நுழைய முடியாது.....

1611239219298.png

அப்புறம் அவனையே பால்கனி வழியே கிட்சேன் ல ஸ்டூல் போட்டு அது வழியா குதிச்சு ஓபன் பண்ண வச்சோம்....... ஏன்னா key கிடையாது அதுக்கு......

சாதா சாவி லாக் தான் ஓகே.......
ஆட்டோமேட்டிக் லாக் எப்போவும் ரிஸ்க் தான்.......
 
ஐயோ...:eek: நல்ல வேளை... எவ்வளவு பெரிய பிரச்சனையாகி இருக்கும்... மேம்
 
View attachment 8185

அப்புறம் அவனையே பால்கனி வழியே கிட்சேன் ல ஸ்டூல் போட்டு அது வழியா குதிச்சு ஓபன் பண்ண வச்சோம்....... ஏன்னா key கிடையாது அதுக்கு......

சாதா சாவி லாக் தான் ஓகே.......
ஆட்டோமேட்டிக் லாக் எப்போவும் ரிஸ்க் தான்.......

நம்ம பிள்ளைங்க பண்ற சேட்டை நாமதான் மாட்டிட்டு முழிக்க வேண்டியிருக்கு ஜோ...

அப்போ மாதிரி இப்போ யாரும் பக்கத்துல பழக மாட்டேங்கிறாங்க ஜோ... லீவுன்னாலே அம்மாக்கள் ஒரு கூட்டணி, மகள்கள் & மகன்கள் ஒரு கூட்டணினு அரட்டைதான்... உறவுகள் கூட விலகி போற காலமாயிட்டு... இப்போ அது மலரும் நினைவுகள் நினைவுகளாவே இருக்கு...
 
Gomathianand

Well-Known Member
சத்தம் கேட்டு பதறுகிற நேரத்தில் பூட்டு விலை பெரிசா:mad:
பிள்ளைகளுக்கு கதவு தாழ் பற்றி எச்சரித்தே வளர்க்க வேண்டிய சூழல்..
பிள்ளைகள் மேல் கண் வைத்துப் பார்த்துக்கிட்டே இருக்கணும்....
 
ஆமா சிஸ் நாம பிள்ளைகளிடம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்ம கண்ண தப்பி அவங்க செய்ற சேட்டை சில நேரம் காமெடியா இருக்கு, சில நேரம் பயமா இருக்கு...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top