குழந்தைகளுக்கான கருப்பு பொட்டு...

Advertisement

shiyamala sothy

Well-Known Member
மிகவும் அருமை ஜோஹர் சிஸ். நாங்கள் சுத்தமான இரும்பு வாணலியில் சவ்வரிசியை நீங்கள் சொன்ன முறையில் வறுத்து நல்லெண்ணெய் சேர்த்துக் காச்சி சிரட்டையில்(சுத்தமான தேங்காய் சிரட் டை) ஊற்றி வெயிலில் காயவைத்து எடுப்போம். தேவையான நேரம் சிறிது தண்ணீர் சேர்த்து உரசி(கரைத்து) நெற்றியில் பொட்டு, கன்னத்தில் திருஸ்டிப்பொட்டும் வைப்போம். இதுவும் வாசமாக இருக்கும். குழந்தைக்கு இதனால் நெற்றியும் அவியாது.
 

Nachu

Well-Known Member
oh...... எப்படி பண்ணுவாங்க சொல்லுங்க.......
தேவையான பொருட்கள் :
சுத்தமான அகல்விளக்கு :1 அல்லது 2.
சுத்தமான நல்லெண்ணெய் அல்லது சுத்தமான விளக்கெண்ணை -விளக்கு ஏத்துவதற்கு தேவையான அளவு.
வெற்றிலை அல்லது செப்பு தட்டு அல்லது சுத்தமான எவர்சில்வர் தட்டு.
சுத்தமான பருத்தி துணி -1.

செய்முறை :
*பருத்தி துணியை 4cm *4cm அளவில் வெட்டிக் கொண்டு நீளமாக உருட்டி திரி போன்று திரித்து கொள்ள வேண்டும்.

*அகல்விளக்கில் இந்த திரி முழுகும் அளவில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

இரண்டு விதமாக செய்யலாம்.....
* வெற்றிலையின் முன்பக்கம் சிறிது எண்ணெய் தடவி விளக்கிற்கு நேரே சற்றே சாய்வாக பிடித்து கொள்ள வேண்டும்...... சற்று நேரத்திற்கு எல்லாம் வெற்றிலையில் கருமை படிய ஆரம்பிக்கும்..... அதை சேகரித்துக் கொண்டு வரலாம்..... (இது எவ்வளவு நேரம் சூடு தங்குமென்பதை பொறுத்து அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம்...... இப்போ இந்த முறை செய்யுறாங்களா தெரியாது..... என் பாட்டி செய்து நான் பார்த்த முறை)

** அகல் விளக்கிற்கு நேரே சற்றே சாய்வாக செப்பு தகடு (கிடைத்தால் உத்தமம் ) அல்லது எவர்சில்வர் தட்டை வைக்க வேண்டும்..... தட்டு முழுவதும் விளக்கில் படாமல் விளக்கின் சுடர் தட்டில் படும்படி சற்றே சாய்வாக வைக்க வேண்டும்.... பிடிமானத்திற்கு வெயிட்டு உள்ளது ஏதும் அணைவாக வைக்க வேண்டும்..... விளக்கிற்கு எண்ணெய் தீர தீர ஊற்றி கொள்ளவும். நீங்கள் விரும்பும் நேரம் வரைக்கும் வைத்து இருக்கலாம்.
தட்டில் கரிப்புகை போன்று படிந்து இருக்கும்..... சுத்தமான சிறிய டப்பாவில் சேகரித்து கொண்டு வரலாம். இதனுடன் சிறிதாக சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்து குழப்பி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரம் உபயோகிக்கலாம்.
6மாதம் ஆனாலும் கெடாது.
இந்த முறை தான் நாங்கள் எல்லோரும் பயன்படுத்துவது.
மிகவும் எளிது. பக்கவிளைவுகள் இல்லாதது.
 

Geetha sen

Well-Known Member
அருமை ஜோ.என் பாட்டி செய்து தந்திருக்காங்க.அதன் பிறகு இல்லை. இனி நான் இந்த விளக்கத்தினால் செய்வேன். நிறைய டிப்ஸ் வந்திருக்கு செய்து பார்க்கலாம்.
 

Devi29

Well-Known Member
Nice info sis madurai meenakshi temple shopla ready made செரட்டை பொட்டு னு விக்கும் அதை தான் வாங்கி கொள்வது ஜவ்வரிசியில் செய்வார்கள் என்று கேள்வி பட்டு இருக்கேன்
6 months varum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top