கும்பகோணம்.....

#1
கும்பகோணம்
கும்பகோணம் என்றதும்
கோவில்கள்
கண் முன்
வந்தது போய்
பற்றிக் கொண்ட பஞ்சாய்
பரிதாபமாய் இறந்த
பிஞ்சுகளின் ஞாபகம் .....
புத்தகத்தோடு கரைந்து
போன பூ மொட்டுகள்...
சிரிப்பும் கும்மாளமுமாய்
சென்ற சின்ன மலர்கள்
கருகிய
சின்னகளாய் மாறியதேன் ?
பாடம் படித்தவர்கள்
பாடம்,’
பண்ணப்படுவார்கள் என
யார் நினைத்தார் ?
உலகத்தையே
உலுக்கிப்போட்ட
உண்மை சம்பவத்தில் – கருகியது
பிஞ்சுகள் மட்டுமல்ல நம்
நெஞ்சுகளும்தான் ....
பிள்ளைகளோடு சேர்ந்து
கரியாகிப்போனது
பெற்றோரின் கனவுகளும் கூட ...
இவற்றை
வெறுமனே
விதியின்
விளையாட்டென
விட்டு விட முடியாது....
ஒப்பற்ற குழந்தைகளை – வெறும்
ஒப்பிக்கும் இயந்திரங்களாக
மாற்றிய
கல்வித்துறை திட்டங்கள்
களங்கம் படிந்தவை,,,
சமூக குற்றவாளிகளால்
குற்றமற்ற
குழந்தைகள்
குறைந்த ஆயுளில்
ஜோதியாகிப்போனார்கள் ...
யார் யாருடைய
தவறுகளுக்காகவோ
சத்தமில்லாமல்
அடங்கிப் போயின
அந்த
பட்டாம் பூச்சிகள் ,,,
பறி போனது
மழலைகள் மட்டுமல்ல...நமது
மானமும்தான்,,,
மானவர்களாய் வந்தவர்கள்
பாடங்கள்
பலவற்றைக் கற்பித்து
ஆசிரியர்களாய்
மரித்துப் போனார்கள்...
மழலை தியாகிகளின்
மரணத்திர்க்கு
மதிப்பேன்ன ?
பள்ளி சாலைகளை
பண சாலைகளாய்
மாற்றாமல்
கலைமகளை
கறைபடியாமல்
காப்பது ஒன்றுதான் ......


ஆக்கம்
கண்ணம்மாள் ஸ்ரீதர் ..
தூத்துக்குடி .
 
#3
ஐயோ எத்தனை வருடங்கள்
கழிந்தாலும் மறக்க முடியாத
நினைத்து நினைத்து நெஞ்சம்
மறுகும் கொடுமையான நிகழ்வு
 
#4
நாளுக்கு நாள் இன்னும்
நிலைமை மோசமாகி
பள்ளி சாலைகள் எல்லாம்
பணப் பேய்கள் உலாவும்
சுடுகாடாகத்தான் மாறிக்
கொண்டு வருகிறது
இந்த நிலை மாறி எப்போ
நல்லது நடக்குமோ?
 
Advertisement

Sponsored