குடும்ப தலைவி

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"குருவி கூட்டில்
கோடி பிரச்சனை
குணமாய் அதை முடித்திடுவாள்
குடும்பம் அதை காத்திடுவாள்"


"விடியும் முன் துவங்கும் அவள் ஓட்டம்
விடாபிடியாய் தொடர்கிறது
அவளின் மேல் விறகு அடுக்கும் வரை"


"விடுமுறை இல்லா வேலை
அவளுக்கு மட்டும் ஆயுள் முடியும் வரை"


"அவள் அசதியில்
கண் அசரும் வேளையில்
கரித்து கொட்டும்
ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து
நீ வெட்டி தானே என்று"


"விதவிதமாய் அவள் விருந்து படைக்கையில்
அறியவில்லையோ அவள் வெட்டி என்று"


"கடுகு கிண்ணத்தில்
அவள் சேர்க்கும் காசில்
செலவழிக்கையில் தெரியவில்லையோ
அவள் வெட்டி என்று"


"கட்டாந்தரையையும்
கண்ணாடி மாளிகை போல்
அவள் கைவண்ணத்தில் ஒளிரச்செய்தபோது
அவள் வெட்டி எனும் எண்ணம்
ஓடி ஒளிந்து கொண்டதோ "



"பன்னாட்டு நிறுவனத்தின்
பட்ஜெட் திட்டம் கூட பலிக்காது
அவள் போடும் பட்ஜெட்டின் முன்னால்"


"கருத்தோடு அவள் இருக்க
கவலைகளற்று குடும்பம் இருக்க
கடமைகளை அவள் நிறைவேற்றிட
கரை சேர்கிறது குடும்பம்"


"எதிர்பார்ப்பில்லா இதயம் அவளுடையது
எதையும் சாதிக்கும் துணிவு அவளுடையது"


"குடும்ப தலைவியாய் அவள் இருக்க
குறைகளற்று குடும்பம் இருக்க
ஒரு கோடி மூலையில் அவள் இருப்பாள்
குதுகலிக்கும் குடும்பத்தை தான் பார்த்துஇருப்பாள்"


"எரியும் சுடர் விளக்கின்
இன்றியமையா தேவையாய் எண்ணெய் இருக்க
என் குடும்பத்தில்
சுடர் எரிய
எண்ணெய்யாய் நானே எந்நாளும் இருப்பேனே
என்றாள் அவள்
அவள் தான் குடும்பத்தலைவி"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top