கானலாகி போவாயோ காதலே?!!5(b)

#1

அத்தியாயம்-5(b)


ஹாசினி காட்டிய திசையில் இருந்த சீனியரை பார்த்து பதுங்கிய மிரு, ச்ச....ச்ச.... என்ன கொடுமை இது காலேஜ்க்கு வர்றதுக்கு பதிலா கத்தி எடுத்துட்டு போர்களத்துக்கே போயிடலாம் போல,என்னடி மிரு உனக்கு வந்த சோதனை என்று புலம்பி கொண்டு இருக்க,ஹாசியோ சஞ்சய் சிரித்து பேசி கொண்டு இருப்பதையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.மனதினுள்ளே யார்க்கிட்ட இப்புடி சிரிச்சு பேசிட்டுயிருக்கானு தெரியலையே என்ற பொறாமை எழுந்தது.அதே யோசனையில் அவள் இருக்க யாரோ கையை பிடித்து இழுக்கவும்தான் நிகழ் காலத்திற்கு வந்தாள்.

கையை பிடித்து கொண்டு நின்ற மிருவை புரியாத பார்வை அவள் பார்த்து கொண்டிருக்க,மிருவோ “அடியே, என்னடி ஆச்சு வா கிளாஸ்க்கு போகலாம், அந்த சீனியர் பசங்க போய்ட்டாங்க” என்று சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தாள் .அவள் பின்னோடு அமைதியாக சென்ற ஹாசியின் முன் வந்து குதித்த மனசாட்சி அவளிடம் ,“என்னடி நீ இப்படி சுத்தி என்ன நடக்குதுனு தெரியாம அவன சைட் அடிச்சுட்டு இருக்க எனக்கு என்னவோ நீ ஒழுங்கா படிப்ப முடிப்பன்ற நம்பிக்கை இல்ல, காலேஜ் சேர்ந்த இரண்டாவது நாளே இப்படி அவன பாத்துட்டு இருக்க” என்று புலம்பி கொண்டு இருக்க,அவளோ “நிறுத்து நிறுத்து இப்ப எதுக்கு நீ எண்பது காலத்துல வந்த படத்துல பேசற மாதிரி டையலாக் பேசிட்டு இருக்க.நான் படிக்கதான் வந்திருக்கிறேன்,அது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய படிப்பையும் யாருக்காகவும் விடமாட்டேன்,அதே போல் காதலையும் விட மாட்டேன்”.

“நான் என்ன நாளைக்கு அவர்கிட்ட என்னோட காதலை சொல்லி, நாளை மறுநாள் திருமணத்திற்கு ரெண்டு பேரும் தயார் ஆகிடுவோம்ங்கற போல பேசுற. இது காதலுக்கும், கல்யாணத்துக்கும் சரியான வயசு இல்லனு எனக்கும் புரியுது ஆனாலும் அவர பார்க்கும் போது எனக்கு ஏதோ ஒரு சொந்த உணர்வு,அவர் சிரிப்பை பார்க்கும் போது அந்த சிரிப்பு எனக்கான சிரிப்பா,என்னோட பேச்சுக்கான சிரிப்பா எப்ப மாறும்ற ஏக்கம் இது எல்லாம் தானா வருதே நான் என்ன பண்ண.?”

முதல் காதல் எல்லோருக்கும் ஸ்பெஷல்னு சொல்லுவாங்க இவன்தான் என்னுடைய முதலும் கடைசியுமான காதலா,காதலனா இருக்கனும்னு மனசு ரொம்ப ஏங்குது.ஒரு நாளுள எப்படி இந்த மாற்றம்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல ஆனா என்னோட உள் மனசு அவன்தான் எனக்கானவன்னு சொல்லுது.இந்த உணர்வ நான் முழுதா அனுபவிக்கணும் அப்புறம்தான் அவனிடம் சொல்வேன்.ஏன் பார்த்தவுடன் காதல் எல்லாம் ஆணுக்குதான் வரணும்னு சட்டமா என்ன.எனக்கு வந்திருக்கு.அதை நான் முழுமையா அனுபவிப்பேன்.அவர் என்ன படிக்கறாருனு எனக்கு தெரியல ஆனா என்னைய விட சீனியர்தான்னு எனக்கு நல்லாவே தெரியுது,அவருக்கு எப்போ கடைசி தேர்வு முடியுதோ அப்போதான் நான் அவர்கிட்ட என்னோட காதலை சொல்வேன்.அப்போது, சொல்வதற்கான காரணம் நான் ஒருத்தி இருக்கேனு அவருக்கு தெரியபடுத்ததான்.சோ நான் படிப்பையும் பார்ப்பேன்,காதலையும் அனுபவிப்பேன்” என்ற பதிலை கூறி கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தாள்.இடையில் மிருணா பேசிய எதையும் அவள் காதில் வாங்கவில்லை என்பது வேறு விஷயம்.

அன்றைய பொழுது அவர்களுக்கு புது ஆசிரியர்களின் அறிமுகத்தில் துவங்கி சிறப்பான நாளாகவே முடிந்தது.மாலை கல்லூரிவிட்டு கிளம்பும் போது மிரு ஹாசியிடம் “என்னடி காலேஜ் பஸ்ஸா ஸ்கூட்டியா ” என்று கேட்க, அவளோட “ இல்லடி அண்ணா வருவாங்க,ஸ்கூட்டி எல்லாம் எனக்கு ஓட்ட தெரியாது. நான் அங்க இருக்க பெஞ்ச்ல வெயிட் பண்றேன்.நீ போ“ என்றாள்.

மிருவோ தோழியை மேலும் ,கீழும் பார்த்துவிட்டு மீண்டும் காலேஜ்ஜினுள் செல்ல திரும்பினாள்.என்னடி, எதாவது மறந்துட்டியா அதை எடுக்க உள்ளே போகிறாயா என்று கேட்க.மிருவோ, ” ஆமாம்டி என்கூட ஒரு எல்.கே.ஜி பாப்பா படிக்குது, அதோட அண்ணா வந்து வீட்டிற்கு அழைத்து போகும் வரை சாப்பிட ஏதாவது வாங்கி கொடுத்தாள், சாப்பிட்டுட்டே வெயிட்பண்ணும்ல, அதான் ஸ்னேட்ஸ் வாங்க போறேன் என்று சொல்ல அவளை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ஹாசினி.

மிருவை முறைத்து கொண்டே “என்னடி கிண்டலா தனியா போக பயமாக இருக்கிறது என்று அண்ணாவை கூட்டி போக சொல்லி நான் அவனிடம் கெஞ்சியது எனக்குதான் தெரியும். நீ, என்னனா ஈசியா பாப்பானு சொல்ற, தனியா போறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” ஹாசியை நக்கலாக பார்த்த மிருவோ “ ஹய்யோடா நான் தனியா போனது இல்லைங்க மேடம், அதனால, எனக்கு அதுல இருக்க கஷ்டம் தெரியல, இன்னைக்கு என்னோட என்னோட ஸ்கூட்டில வாங்க .அந்த கஷ்டத்த நானும் பார்த்து ஒரு ‘ஹாய்’ சொல்றேன்” என்று தோழியை இழுத்து கொண்டு சென்றாள்.

ஹாசியோ “மிரு சொன்னா கேளுடி நானே அவன்கிட்ட காலுல விழாத குறையா கெஞ்சி டெய்லி வந்து விடவும் கூட்டி போகவும் அக்ரிமண்ட் போட்டுருக்கேன்டி,நீ ஒரே நாளுல அதுக்கு ‘பெரிய ஆப்பா’ வச்சுறாதடி, மீ பாவம்” என்றாள் அப்பாவியான முகத்தை வைத்து கொண்டு.மிருவோ ”என்னடி அண்ணா அண்ணானு, ஓவர் பில்டப் குடுக்கற,அந்த மூசுருண்ட மூஞ்சி வந்தா, ‘நாங்க பயந்துடுவோமா?’ ஓவரா பேசுன, உன் அண்ணன அறிய வகை ஜந்துனு சொல்லி ,மியூஸியம்ல வைக்க சொல்லிவிடுவேன் பாத்துக்கோ.எனக்கு ‘போர்ட் மியூசியத்துல’ (fort musium) ஆளு இருக்கு தெரிஞ்சுக்கோ’ ஒரே ஒரு போன் கால் உன் அண்ணன அப்புறம் ,நீ’ மியூசியம்லதான் பார்க்கணும். அவனும், அவன் மண்டையும்” என்று பேசி கொண்டே இருவரும் ,ஸ்கூட்டி நிறுத்தும் இடத்திற்கு வந்திருந்தனர்.சரி இனி மிரு அவளுடன் வராமல் விட மாட்டாள் என்பதை அறிந்த ஹாசி அண்ணனிடம் சொல்லிவிடலாம் என்று பிரகாஷிற்கு அழைத்தாள். அந்த பக்கம் அழைப்பு எடுக்கபட்டவுடன் “அண்ணா நான் மிரு வண்டியில் வீட்டிற்கு போகிறேன் நீங்க நேரா வீட்டிற்கு வந்துடுங்க” என்று சொல்லி உடனே போனை கட் செய்தாள்.அண்ணன் தோழியிடம் செல்வதற்கு எதுவும் சொல்வான் என்று.

பிரகாஷ்ஷோ தன் முன் இருந்த மிருணாளினிப்பற்றிய தகவலை பார்த்து கொண்டு இருந்தான்.மிருணாளினி வயது 17,அம்மா இல்லை,அப்பா மட்டும்தான் அவர்தான் சென்னை நகரின் போலிஸ் கமிஷனர்.ஒரே பெண்தான் என்பதாலேயே செல்லம் அதிகம்.விளையாட்டுதனமாக இருந்தாலும் படிப்பில் கெட்டி பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளாள் என்பது போன்ற தகவலை பார்த்தவன் அவளுடன் தங்கை பழகுவதில் தவறில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தான்.அதனாலேயே தங்கை மிருவுடன் போகிறேன் என்றதற்கு மறுப்பு கூறாமல்,அமைதியாக இருந்தான்.ஆனால் மனதின் ஓரத்தில் “அடே அப்பா அந்த வெட்டுக்கிளி படிப்ஸா” என்று ஆச்சரியப்பட்டு கொண்டான்.

மிருவின் பின் புறம் அமர்ந்த ஹாசினிக்கு, இவளுடன் ‘எதற்கு வந்தோம்’, என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.”பொறுமை” என்பதே கொஞ்சமும் இல்லை, டிராபிக்கில் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் அதனுள் புகுந்து வளைந்து வளைந்து ஓட்டி செல்வதை பார்த்த ஹாசி “’அய்யோ பிள்ளையாரப்பா’ என்னை முழுசா இன்னைக்கு வீடு கொண்டு போய் சேர்த்துடு உனக்கு நிறைய மோதகம் விநாயகர் சதுர்த்திக்கு செய்து வைக்கிறேன்” என்ற வேண்டுதலை வைத்தாள்.

மிருவோ சத்தமாக ஹாசி “நீ பத்திரமா வீட்டுக்கு போக வேண்டுமென்றால் , இந்த ‘மிருணாளினி தேவிதான்’ ஆசி வழங்கணும். உன்னோட ‘பிள்ளையார் அப்பா’ இல்ல, என்று சொல்ல ஹாசி அதிர்ந்து “நான் எதுவும் பேசவும் இல்லை,வேண்டவும் இல்லை, தயவு செஞ்சு நீ ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுமா தாயே” என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள்.ஒருவழியாக அவளை பயமுறுத்தி ஹாசியின் வீட்டு வாசலில் அவர்கள் ஸ்கூட்டி நிற்க வேகமாக கீழே இறங்கிய ஹாசி “உனக்கு ‘ஒரு பெரிய கும்பிடுமா தாயே’, என்னை பத்திரமா கொண்டு வந்துவிட்டத்தற்கு”, என்று கையை தலைக்கு மேல் தூக்கி பெரிய கும்பிடு போட்டாள்.


ஹாசியின் செயலில் ‘பக்கென்று சிரித்த’ மிரு “இது வெறும் டிரையல்தான், இனி ‘தனியா போக பயம்,வண்டி ஓட்ட பயம்னு’ ‘தெனாலி’ டையலாக் விட்ட அவ்ளோதான் சொல்லிட்டேன்”, என்றவளை முறைத்த ஹாசி, “ஓவரா பேசறடி வீட்டுக்கு வா, அம்மாவை அறிமுகபடுத்தறேன் என்று சொல்ல, அவளோ “’சாரிடி’ இன்னொரு நாள் வரேன், இப்போ அப்பா வந்திடுவாரு. ‘ஈவ்னிங் டைம்’ நான், அவரோடதான் இருக்கணும் என்று அவரோட விருப்பம் , நானும் போன போகிறது நம்ம அப்பாதானே என்று கேட்ட வரத்தை கொடுத்துவிட்டேன். அதனால் இப்போதைக்கு முடியாது. இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறிவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.


 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement