கானலாகி போவாயோ காதலே?!!5(a)

#1
அத்தியாயம்-5(a)
வட்சனை வெளியில் அனுப்பிவிட்டு வந்த மிருணாளினி மயூரியின் முன் தயக்கமாக நின்றிருந்தாள். “என்ன நாளினி அவன அனுப்பிட்டல்லா அப்புடினா நெக்ஸ்ட் உன் வேலைய பார்க்க போய் இருக்கலாமே எதுக்கு இப்போ இங்க வந்த ” என்று கம்பியூட்டரில் ஒரு உடையின் மாடலை வரைந்து கொண்டே கேட்டாள்.நளினியோ மனதுக்குள்ளேயே “இப்ப எதுக்கு வெட்டியா இங்க வந்த போய் உன் வேலைய பார்க்க வேண்டியதுதானேனு மறைமுகமா கேட்கறாங்களோ ” என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே வந்து குதித்தது அவளது மனசாட்சி “ஏது அவங்க மறைமுகமா சொன்னாங்க நீ அதை பார்த்த ட பக்கி ஒரு மனுஷிக்கிட்ட இதைவிட அப்பட்டமா வெளிப்படையா யாராலையும் வெட்டியா இல்லாம போய் வேலைய பாருனு சொல்லமாட்டாங்க நீ என்னனா மறைமுகமா சொல்றாங்கனு சொல்ற ” என்று கேட்க அதை கண்டு கொள்ளாதது போல் இருந்துவிட்டாள் நளினி.

நளினி மயூரியின் தோழிதான் அவளுக்கு அதிக சொத்து ஊரில் இருந்தாலும் தோழியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவளது பிஏ வாக அவளுடனே இருக்கிறாள்.வேலை நேரத்தில் எப்போதும் மேடம் அவங்க என்பதை தவிர வேறு வார்த்தை பேசமாட்டாள் இப்போதும் அதையே பாலோவ்பண்றாங்க மேடம்.(அடே அப்பா சரியான ரூல்ஸ் இராமனுஜம்தான் போல).

மயூரி கம்பியூட்டரில் இருந்த பார்வையை நளினி பக்கம் திருப்பி கேள்வியாக பார்க்க அவளோ சொல்ல வந்ததை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மேடம் அவர்க்கிட்ட கொஞ்சம் சாப்ட்டா பேசி இருக்கலாம் ஆளு கொஞ்சம் பெரிய ஆள் அது மட்டும் இல்லாமல் வில்லங்கம் புடிச்ச ஆளும் கூட என்று சொல்லி இருந்தாள்.அதுதான் நளின் வட்சன் மயூரிக்கான அப்பாயிண்மண்டை கேட்கும் போதே அவரைப்பற்றிய அனைத்து தகவலையும் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட் மூலம் அறிந்து இருந்தாள் அதைதான் இப்போது மயூரியிடம் சொன்னாள்.

“கமான் நளினி என்னோட பிஏ நீ.நீயே இப்புடி பேசறது எனக்கு ஆச்சரியமா இருக்கு.எப்படி அந்த ஆளிடம் சாப்ட்டா பேச சொல்ற இதுல அந்த பண பிசாசு என்னோட அப்பாவோடு அவனை கம்பேர்பண்ணிக்கறான். எவ்வளவு கொழுப்பு இருக்கணும் அந்த ஆளுக்கு அதுதான் நல்லா கவனிச்சு அனுப்புனேன்.அந்த மாதிரி ஆளுக்கிட்ட எல்லாம் இப்படிதான் பேசனும். வாங்க சார் ஜூஸ் குடிங்க சார்,டீ குடிங்க சார்னு உபசரிச்சு சாப்ட்டா பேசுனா அவன் விரிச்ச வலைல நாம விழுந்துட்டதா நினைப்பான். சோ இப்போ தேவையில்லாததை பேசாம போய் வேலைய பாரு” என்று மீண்டும் தன் பார்வையை கம்பியூட்டர் பக்கம் திருப்பி கொண்டாள்.

நளினி அப்போதும் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டு இருக்க.இந்த முறை மயூரி அவளை அழுத்தமாக பார்த்து “என்ன” என்று பார்வையாலேயே கேட்டாள். நளினியோ “ஆமாம் மேடம் வாய் திறந்து கேட்டா முத்து உதிர்ந்துவிடும்” என்று மனதிக்குள்ளேயே திட்டியவள் வெளியில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு தான் நின்றதற்கான காரணத்தை சொன்னாள் “மேடம் காலைல இருந்து அம்மா நாலு டைம் போன்பண்ணிட்டாங்க நீங்க மீட்டிங்ல இருக்கீங்கனு சொல்லி சமாளிச்சுட்டேன் இனி போன் வந்தாள் உங்க ரூம்க்கு கனெக்ட் பண்ணிவிடுறேன் நீங்க அவங்களோட பேசிடுங்க” என்று வேகமாக சொல்லிவிட்டு தனது அறைக்கு ஓடிவிட்டாள்.

நளினி வேகமாக செல்வதை பார்த்த மயூவிற்கு உதட்டில் மென் புன்னகை தோன்றி மறைந்தது.பின் அவள் சொன்ன விஷயத்தை யோசித்தவளுக்கு பெரு மூச்சு வெளிப்பட்டது.வழக்கம் போல் அம்மா பாடும் பல்லவியை கேட்க தன்னை தயார் செய்து கொண்டு இருக்கும் போதே நளினி தன் வேலையை சிறப்பாக செய்திருக்க அவளது அறையில் இருக்கும் போன் சிணுங்கி அவளை அழைத்தது. ”இவளோட கடமை உணர்ச்சிக்கு அளவு இல்லாம போச்சு.போன் அவங்களே போட்டாங்களா இல்ல இவ போட்டு அவங்களா போட்ட மாதிரி நம்ம கோத்து விடறாளா தெரியலையே” என்று நினைத்தவள் “நளி.........” என்று பல்லை கடித்து கொண்டே போனை அட்டென் செய்தாள்.

தங்கம் அந்த பக்கம் கோவமாக பேச ஆரம்பித்தார். ”ஒரே பொண்ணுனு உன்ன பார்த்து பார்த்து வளர்த்ததுக்கு ,இப்புடி கண் காணா தேசத்துல போய் உட்காந்துக்கிட்டு எங்களுக்கு நல்ல மரியாதை குடுக்கற.உன்னோட வேலைக்கும் ,உன்னோட ஆசைக்கு நாங்க கொடுத்த மதிப்பை நீ எங்களுக்கு கொடுக்கவில்லை.’அம்மானு இங்க ஒருத்தி இருக்கானாவது உனக்கு நியாபகம் இருக்கா?’ நேத்து நைட்ல இருந்து நான் உன்கிட்ட பேச முயற்சிபண்றேன்’ ஆனா,…. முடியல, பெத்த பொண்ணுக்கிட்ட பேச, எனக்கு இத்தனை தடை .நான் அப்படி என்ன ஆசைப்பட்டேன்? என் பொண்ணை என்கூட வச்சுக்கணும்னு ஆசைப்பட்டேன்.அது தப்பா ?. இது எல்லா பெத்தவங்களுக்கும் இருக்கும் ஆசைதானே.எனக்கு இருப்பது தப்பா சொல்லுமா நீயே சொல்லு ,நீ என்ன பண்ணுவியோ தெரியாது இன்னும் ரெண்டு மாசத்துல நீ இந்தியா வந்திருக்கணும்” என்று முதலில் கோபத்தில் ஆரம்பித்து இடையில் தன் ஆற்றாமையை வெளிபடுத்தி இறுதியில் கட்டளையில் முடித்தார்.தாயின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த மயூரிக்கு அவரின் இறுதி பேச்சில் முகம் இறுகி போனது.

தங்கத்தின் புலம்பல் நியாயமான ஒன்றுதான் ஆனால் அவளால் இந்தியா செல்ல முடியவில்லையே.இந்தியா என்றாலே ஏதோ ஒவ்வாமை போன்ற உணர்வு,மனதை அழுத்தும் உணர்வு ஏற்படுகிறதே என்று நினைத்தவள் கலங்கிய தன் குரலை சரி செய்து “அம்மா நான்தான் இன்னும் ஆறு மாதம் உங்கக்கிட்ட டைம் கேட்டு இருக்கேன் இல்ல.அது முடியட்டும் அப்புறம் வருகிறேன்” என்றவள் பேச்சு முடிந்தது என்பது போல் போனை கட் செய்தாள்.

மயூரிக்கு அதன் பின் தாயின் சொற்களே மனதில் எதிரொலிக்க, அதற்கு மேல் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமானாள். எதனால் தனக்கு அந்த மனதை அழுத்தும் உணர்வு வருகிறது என்பதை யோசிக்க ஆரம்பித்தாள்.அதன் விளைவு அவளுக்கு ‘விண்ணென்று’ தலை வெடித்து விடுவது போல், வலி எடுக்க ஆரம்பித்தது.தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.வலியில் அவள் கண்கள் கலங்கி போனது.அவளையே தன் அறையில் இருந்து நோட்டம் விட்டு கொண்டிருந்த நளினி தோழியின் முகத்தில் வந்த தீவிர யோசனை பாவத்தை பார்த்து பதறி போனாள்.”ஹய்யோ யோசிக்கறாளே தலைவலி வந்துவிடுமே” என்று இவள் நினைத்து கொண்டு இருக்கும் போதே அங்கே மயூரி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.நளினி உடனே தோழியின் வலி உணர்ந்தவளாக அவளுக்கு தலை வலி வரும் போது கொடுக்க சொல்லி டாக்டர் கொடுத்த மாத்திரையை எடுத்து கொண்டு அவளது அறை நோக்கி ஓடினாள்.

மயூரியின் அறையில் வேகமாக நுழைந்தவள் “மயூ என்னடி என்னாச்சு” என்று கேட்க அவளோ எதுவும் சொல்ல முடியாமல் தலையை கைகளால் பிடித்து கொண்டு கண்ணில் நீர் வர துடித்து கொண்டு இருந்தாள்.அவளை அப்படியே தன் மேல் சாய்ச்சு கொண்டவள் “சரி ...சரி ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை சரியா போய்டும்,இந்தா வாயை திற இந்த மாத்திரையை போடு” என்று அவள் டேபிளில் இருந்த டம்ளரை எடுத்து கையோடு கொண்டு வந்திருந்த மாத்திரையை விழுங்க வைத்தாள்.மாத்திரை போட்டு பத்து நிமிடம் அப்படியே தோழியின் மீது சாய்ந்து இருந்தவள் பின் வலி மட்டுப்படவும் அமைதியாகி அப்படியே மயக்க நிலைக்கு சென்றாள்.

மயூரியின் நிலையை உணர்ந்தவளாக அடுத்து சூழ்நிலையை தனது கையில் எடுத்து கொண்டவள் ,தங்களது மேனேஜரை அழைத்து ஆபிஸை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு தோழியை அழைத்து கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு கிளம்பினர்.ஆம் ,இருவரும் ஒரே விட்டில்தான் தங்கி இருந்தனர்.மயூவை காரின் பின் பக்கம் படுக்க வைத்தவள் முன் பக்கம் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டாள்.வீட்டிற்கு சென்று மயூவை படுக்க வைத்தவள் தங்கத்திற்கு போன் செய்து அவரிடம் இங்கு நடந்த அனைத்தையும் சொன்னாள்.நளினி சொல்வதை கேட்டு அவர் அங்கு துடித்து போனார்.மகளின் பிரிவு அவளின் தற்போதைய சூழ்நிலையை அவருக்கு மறக்க வைத்திருக்க தேவையில்லாமல் மகள் மேல் கோபப்பட்டு விட்டோமோ என்று இப்போது யோசிக்க ஆரம்பித்தார்.நளினியிடம் அழுகையினூடே மகளை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவர் அடுத்து போய் நின்றது மகனின் எதிரில்தான்.

கலவரமான முகத்துடனும்,கண்ணில் நிற்காமல் வடிந்து கொண்டு இருக்கும் நீருடனும் தன் முன் வந்து நின்ற தாயை பார்த்து பதறிய சூர்யா, “என்னமா என்ன ஆச்சு? எதுக்கு இந்த அழுகை?”, என்று கேட்க அவரும் கண்ணீரினூடே நடந்த அனைத்தையும் மகனிடம் சொல்லி அழுதார் .பின் வழிந்த கண்ணீரை துடைத்து “நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது, இப்போதே, என் மகளை நான் பார்க்க வேண்டும், உன் அப்பாவிடமும் சொல்லிவிடு, என்றவர் அவரது அறைக்கு சென்றுவிட்டார்.

சூர்யா .முதலிலேயே தங்கையிடம் இந்தியா வருவதாப்பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவன்தான், ஆனால் அப்பாவும் இங்கு இல்லாத சூழ்நிலையில் வேலை அவனை இழுத்து கொண்டது அதனால் அவனால் தங்கையுடன் பேச முடியாமல் போய்விட்டது. இப்போது தாயின் கண்ணீரை கண்டு வருந்தியவன்,வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கையிடம் முதலிலேயே பேசி இருக்கலாமோ என்று யோசிக்க ஆரம்பித்து பின் ஒரு முடிவெடுத்தவனாக தந்தையை அழைத்து பேசிவிட்டு துபாய் செல்வதற்கான டிக்கெட் போடும் வேலையில் இறங்கினான்.

மதுரையில் அலமேலு பாட்டி பேரனுக்கான பெண் தேடும் படலத்தில் அந்த ஊரையே தலைகீழாக புரட்டி கொண்டு இருந்தார்.ஒன்று பெண் அழகாக இருந்தால்,படிப்பு இல்லை,படிப்பு இருந்தால்,குணம் இல்லை.இப்படியே பல பெண்களை ஒதுக்கிவிட்டார்.அவராகவே பார்த்திருந்தாலே பெண்ணை செலக்ட் செய்வதில் ஏகப்பட்ட பொறுத்தம் பார்த்திருப்பார் டீ விளம்பரத்தில் வருவது போல் நிறம்,குணம்,தரம்னு இப்போ பேரனின் கண்டிஷனும் சேர்ந்து கொள்ள பெண் வேட்டை சிறப்பாக நடந்து கொண்டு இருந்தது.

கிருஷ்,எதையும் கண்டு கொள்ளவில்லை முதலில் சொன்னது போல் ஒரு வாரம் இங்கிருந்து முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தவன் அடுத்த வாரமே சிங்கப்பூர் கிளம்பிவிட்டான்.தனது வியாபாரத்தை பெருக்கும் வகையில்.அலமேலு பாட்டியோ மதுரை மட்டும் இல்லாமல் பக்கத்தில் இருக்கும் ஊர்களில் இருந்தும் தரகர்களை வர சொல்லி படுத்தி எடுத்துவிட்டார்.அப்படிதான் அன்றும் தரகர் பெண்கள் புகை படத்தை காட்டி கொண்டு இருக்க ஒவ்வொரு புகை படத்தையாக பார்த்து ஒதுக்கி வைத்து கொண்டு இருந்தார் பாட்டி.அப்போது அங்கு வந்த சந்திரன் தாத்தா “என்னமா பெண் பார்க்கும் படலம் ஏக போகமா நடக்குது போல” என்று கேட்க, கணவனின் பேச்சிற்கு”ஆமாம்” என்பது போல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு போட்டோ பார்ப்பதில் மும்முறமாகிவிட்டார்.

சந்திரன் தாத்தா மனைவி பதில் தருவார் என்று காத்திருக்க ,பாட்டி அவரை கண்டு கொள்ளாமல் தலையை மட்டும் ஆட்டியதில் கடுப்பானவர்.எதுவும் பேசாமல் நியூஸ் பேப்பரை எடுத்து கொண்டு அமர்ந்துவிட்டார்.அப்போது அங்கு வந்த சுஜாதா அங்கிருந்த போட்டோ ஒன்றை எடுத்தவள் “ஹை இவங்க அழகா இருக்காங்க,பாட்டி இவங்கள செலக்ட் பண்ணலாமா” என்று கேட்டாள்.அலமு பாட்டியோ சுஜா கையில் இருந்த போட்டோவை வாங்கி பார்த்தார்.அதில் இருந்த பெண் நல்ல அழகாகதான் இருந்தாள் ஆனால் அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

“ஏன் பாட்டி, அவங்கள ரிஜெக்ட் பண்ணிங்க அழகாதானே இருந்தாங்க பின்னாடி படிப்பை பார்த்தேன் எம்.பி.ஏ போட்டிருந்தது.படிப்பு அழகு ரெண்டும் இருக்கு அப்புறம் ஏன் பாட்டி” என்று புரியாமல் கேட்டால்.

அலமு பாட்டியோ அழகுனா எதுமா கண்ணுல பார்க்கற விஷயமா, இல்லமா மனசுல இருக்கறதுதான் உண்மையான அழகு.வெளி அழக பார்த்து அதுக்கு பேர் லவ்னு பேர் வச்சு வீட்டுக்கு எதிரா போய் கல்யாணம் செய்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் ஆன பிறகு டைவர்ஸ் கேட்டு கோர்ட்ல நிப்பாங்க. அதனாலதான் இபத்தைய பெற்றோர்கள் காதல்னா வெறுக்கறாங்க இளம் வயசுல உங்க கண்ணுக்கு படற முதல் விஷயம் அழகு அதற்கு பிறகுதான் குணம்.ஆனால் உங்க வயது எங்க அனுபவம் எங்க கண்ணுக்கு முதலில் தெரிவது குணம் பிறகுதான் அழகு.

அழகான பொம்மை வாங்கி நாம யூஸ் பண்றோமா என்ன,அப்புடியே ,ஷோ கேஸ்ல வச்சு அழகுதான் பார்க்கறோம்.அதே சாதாரணமா இருக்க பொருள நம்மளோட நம்மாளா வச்சு யூஸ்பண்றோம்.நாம வீட்டுக்கு ஷோ கேஸ் பொம்மையா பொண்ண கூட்டி வரதை விட நம்மளோட ஒத்து போற பொண்ணா என் பேரனுக்கு பார்க்கறேன் அவதான் என் பேரனின் ஆதியும் அந்தமுமா இருக்கனும் அப்படி ஒரு பொண்ண தேடுறேன் போதுமா விளக்கம் என்றார்.பாட்டியின் நுணுக்கமான அறிவை கண்ட சுஜா வாயடைத்துதான் போனாள்.இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று. பேத்தியின் ஆச்சரியமான பார்வையை கண்டு கொண்ட அலமு பாட்டி அழகுங்கறது கண்ணால பார்க்க கூடாதுமா மனசால பார்க்கனும் என்று அர்த்தமான பார்வையுடன் கூறினார்.பாட்டியின் பார்வையை புரிந்து கொண்ட பேத்தியும் சம்மதமாக தலையாட்டி தாத்தாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்..

சந்திரன் தாத்தாவோ மனதில் “நான் கண்ணுல அழக பார்த்து கட்டி என்னோட வாழ்க்கைய வீணாக்கிட்டனே” என்று மனதுள் நினைத்து புலம்பி கொண்டார்.தாத்தாவின் அருகில் அமர்ந்திருந்த சுஜா தாத்தாவை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்து கொண்டே “எனக்கு கேட்டுருச்சு,எனக்கு கேட்ருச்சு” என்று குதிக்க ஆரம்பித்தாள்.தாத்தா பேத்தியை பார்த்து பேந்த பேந்த விழிக்க ,அலமு பாட்டி பேத்தியை புரியாமல் பார்த்து கொண்டிருந்தார்.
 
#4
யோசித்தால் தலைவலிக்குமா?
மயூரிக்கு ஏன் எதனால் அடிக்கடி தலைவலி வருது?
அவளுக்கு ஏதாவது அடிபட்டுவிட்டதா?

ஹா ஹா ஹா
பேத்தி சுஜாவாலே சந்திரன் தாத்தா அலமுப் பாட்டிக்கிட்டே மாட்டிக்கிட்டாரே

கிருஷ் எப்போ மயூரியைப் பார்ப்பான்?
மிருணாளினி அருமையான தோழி
 
#7
யோசித்தால் தலைவலிக்குமா?
மயூரிக்கு ஏன் எதனால் அடிக்கடி தலைவலி வருது?
அவளுக்கு ஏதாவது அடிபட்டுவிட்டதா?

ஹா ஹா ஹா
பேத்தி சுஜாவாலே சந்திரன் தாத்தா அலமுப் பாட்டிக்கிட்டே மாட்டிக்கிட்டாரே

கிருஷ் எப்போ மயூரியைப் பார்ப்பான்?
மிருணாளினி அருமையான தோழி
மயூரிக்கு நடந்த ஒரு விபத்துல பழைய விஷயங்கள் மறந்துடும் பானுமா அதனால அவ ரொம்ப யோசிச்சா தலை வலி வந்துரும் ☺️☺️☺️

சந்திரன் தாத்தா அலமு பாட்டிக்கிட்ட மாற்றாரோ இல்லையோ உங்ககிட்ட நல்லா மாட்டிட்டாரு. கிருஷவிட அவருதான் உங்கள இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு போல

நன்றி பானுமா
 
#9
மயூரிக்கு நடந்த ஒரு விபத்துல பழைய விஷயங்கள் மறந்துடும் பானுமா அதனால அவ ரொம்ப யோசிச்சா தலை வலி வந்துரும் ☺️☺️☺️

சந்திரன் தாத்தா அலமு பாட்டிக்கிட்ட மாற்றாரோ இல்லையோ உங்ககிட்ட நல்லா மாட்டிட்டாரு. கிருஷவிட அவருதான் உங்கள இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு போல

நன்றி பானுமா
கிருஷ் இன்னும் என்ட்ரியே கொடுக்கலையே
நீங்கதான் அவனை வெளியே விடவேவேஏஏஏஏஏஏஏஏ மாட்டேங்கிறீங்களே
கிருஷ் வந்தால்தானே அவனைப் பற்றி எனக்கு தெரியும்
 
#10
கிருஷ் இன்னும் என்ட்ரியே கொடுக்கலையே
நீங்கதான் அவனை வெளியே விடவேவேஏஏஏஏஏஏஏஏ மாட்டேங்கிறீங்களே
கிருஷ் வந்தால்தானே அவனைப் பற்றி எனக்கு தெரியும்
அவன்தான் பொண்ணு பாக்க ரூல்ஸ் சொல்லிட்டு ஓடிட்டானே. கம்பெனி டெவெலப்மண்ட்க்கு,
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement