கானலாகி போவாயோ காதலே?!! 4

#1
அத்தியாயம்-4
ஹாசினி தோழியிடம் விடை பெற்றவள் காரில் சென்று அமர்ந்துவிட,பிரகாஷிம் தங்கையின் பின்னோடு சென்றவன் காரை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்.காரில் சென்று கொண்டிருந்த இருவருக்குமிடையில் அமைதியே நிலவியது. அண்ணன் ஏதாவது கேட்பான்என்று எதிர் பார்த்த ஹாசினி ஏமாந்துதான் போனாள்.

பிரகாஷோ தங்கை தன்னையும், ரோடையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு வருவதை உணர்ந்தே இருந்தாலும் எதுவும் பேசாமல் காரை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். ஓரளவுக்கு மேல் அண்ணனின் மௌனத்தை தாங்கமுடியாதவளாக “அண்ணா காலைல நீங்க கலேஜ் உள்ளே வராமல் அப்படியே விட்டு போனதற்குதற்கு நான்தான் கோபபட வேண்டும். நீங்க ஏன் அமைதியா வர்றீங்க” என்று நடந்ததை மறந்தவள் போல் கேட்க அவனோ அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்பதையே மறந்தவள் போல் காரை செலுத்தி கொண்டு இருந்தான்.
வீட்டிற்கு அருகில் வந்தும் அண்ணனின் அமைதி தொடர கண்ணில் கோர்த்த நீருடன் பிரகாஷை பார்த்து “அண்ணா கோவமா இருக்கீங்களா” என்றாள். தங்கையின் குரலிலேயே அவள் அழ தயாராகிவிட்டாள் என்பதை உணர்ந்தான் அந்த பாசகார அண்ணன்.அவளின் சின்ன முக சுருக்கத்தைக்கூட தாங்காதவன் அவள் மனதை மாற்றும் பொருட்டு “நான் எதுக்குமா உன் மேல் கோபபட போகிறேன். புதுசா பாடிகார்ட் வேற கிடைச்சுருக்காங்க அவளிடம் சொல்லி என்னை அடித்துவிடாதேம்மா எனக்கு பயமாக இருக்கிறது” என்றான் கண்ணில் குறும்புடன்.

அண்ணன் கோபமாக இருக்கிறானோ என்று அவன் முகத்தை பார்த்தாள் ஹாசினி.ஆனால் அவன் கண்களில் குறும்புதான் மின்னியது அண்ணனின் விளையாட்டை தெரிந்து கொண்டவள் “அண்ணா” என்று சிணுங்கிவிட்டு “போ அண்ணா நீ கோவத்துலதான் என்னோட பேசலனு பயந்து போய் கேட்டேன் பாருங்க என்னை சொல்லனும்” என்றவள் சிறு அமைதிக்கு பிறகு “சாரி அண்ணா அவள்” என்று சொல்லவந்தவளின் தலையை வாஞ்சையாக தடவியவன் “பரவாயில்லை விடுமா. யாரையும் சீக்கிரம் நம்பகூடாது பார்த்து பழகு ஆதாயம் இல்லாமல் யாரும் அவர்களாக நம்மை தேடி வரமாட்டார்கள் ” என்றவன் காரை வீட்டை நோக்கி செலுத்த துவங்கினான்.ஆனால் அவன் அறியாத ஒன்று “நட்பு” தேவையை அறிந்து வருவது இல்லை.உண்மையான அன்பை கொண்டு வருவது என்று.
பிரகாஷின் பேச்சில் முகம் வாடிய ஹாசினி “சரி அண்ணா அவளுடன் பேசுவதை இனி குறைத்து கொள்கிறேன்” என்று மனமே இல்லாமல் கூறிவிட்டு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.ஏனோ மிருவை விலக்கி வைப்பது நெடுநாள் தோழியை விலக்குவது போல் மனம் பாரமானது ஹாசினிக்கு .ஹாசி அதிகம் யாருடனும் பேசாதவள்தான் ஆனல் பேசி பழகிவிட்டால் அவர்களின் பிரிவை விடும்பாதவளும்கூட காலையில் இருந்து மிரு அவளை சுற்றி சுற்றி வந்து பேசி அவளின் குறும்பு பேச்சிலும் வெள்ளந்தி சிரிப்பிலும் கவர்ந்திருந்தாள். அதனாலேயே அவளது நட்பு இனி தனக்கு இருக்காதோ என்ற கவலையில் அமர்ந்திருந்தாள்.

பிரகாஷ் ஹாசியை கூர்மையாக பார்த்தவன் அவளின் முகவாட்டத்திலும் உள்ளே போன குரலில் இருந்துமே தெரிந்து கொண்டான் அந்த பெண் ஒரே நாளில் தங்கையை வசிகரித்துவிட்டாள் என்று.இந்த அளவுக்கு தங்கையிடம் நல்மதிப்பை பெற்றுவிட்டாள் என்றால் எதுவும் பிளானில் வந்து இருப்பாளோ என்று எண்ண ஆரம்பித்தான்.(டேய் என்னடா நீ மிருவ ஸ்லீப்பர்செல் லெவலுக்கு யோசிக்கற அவ அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லடா சொன்னா நம்பு) .

பிரகாஷின் இந்த எண்ணத்திற்கும் காரணம் இருந்தது.அது என்வென்றால் பிஸ்னஸில் அவர்களுக்கு இருக்கும் எதிரிகள் அப்படி நேர்மையாய் இருப்பவர்களுக்கு எதிரிகளா பஞ்சம்.அது மட்டும் இல்லாமல் தங்கை அப்படி எளிதில் யாருடனும் பழகுபவள் இல்லை.எப்போதும் மற்றவர்களுடன் அதிகம் பேசாமல் ஒதுங்கிதான் இருப்பாள் அப்படிப்பட்டவளையே பேச வைத்த அந்த பெண்ணின் மேல் ஆச்சரியம் எழுந்ததுடன் சந்தேகமும் அவனுக்கு சேர்ந்து எழுந்தது.அவனுக்கு எப்படி தெரியும் அவன் நினைத்தது போல் அவன் தங்கை ஒதுங்கி அமைதியாக அமர்ந்து இருக்க, அந்த அமைதியே மிருணாளினியை ஈர்த்து ஹாசி பின்னாடியே அலைந்து நட்பை பெற வைத்தது என்று .எதிரெதிர் துருவம் ஈர்க்கும் என்பது காதலில் மட்டும் இல்லை நட்பிலும் உண்டு என்று இருவரும் நிருபித்தனர்.

தங்கையின் முகவாட்டம் மனதை தாக்க நம்மை மீறி அந்த பெண்ணால் என்ன ஆபத்து வந்துவிட போகிறது.ஏதாவது தவறாக நடந்தால் தங்கையை தோள் கொடுத்து தாங்க அண்ணன் நான் இருக்கிறேன் அதே சமயம் அந்த பெண்ணை முழுவதுமாக அளிக்கவும் என்னால் முடியும் அப்படி இருக்க இப்போது ஏன் தங்கையின் மனதை வருத்த வேண்டும். ஒருவேளை அந்த பெண் நல்லவளாக இருந்தால் தங்கை அவளுடன் பழகுவது நல்லதுதான். தங்கையின் பயந்த குணத்திற்கு அந்த பெண் போல் ஒரு தைரியசாலி அவளுடன் இருப்பதும் நல்லதுதான் என்று அவனின் எண்ணங்கள் முழுவதும் தங்கையை சுற்றியே இருந்தது. இப்படியே எண்ணி கொண்டு வந்தவனின் கண்ணில் மிரு கோபமாக அவனிடம் பேசிய தோற்றம் தோன்றியது.ஒரு நிமிடம் அவளது முகத்தில் வந்து போன கோபத்தை நினைவுபடுத்தியவனுக்கு அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளில் பொய்யில்லாமல் தோழி மேல் இருந்த பாசம் மட்டுமே தெரிந்தது ஆச்சரியமாக இருந்தது.பின் தலையை உலுக்கி அவனுள் தோன்றிய காட்சியை கலைந்துவிட்டு தங்கையை பார்த்தான்.

ஹாசினியோ முகவாட்டத்துடன் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். அவளது கவலையை போக்கும் விதமாக தான் எடுத்த முடிவை மறைமுகமாக தங்கைக்கு தெரியபடுத்தும்விதமாக.“உன் முடிவை நீ சுயமாகவே எடுக்க மாட்டாயா அம்முமா.அந்த பெண் என்னுடைய தோழி அவளை ஏன் நான் விட வேண்டும் என்று நீ கேட்க வேண்டாமா? உனக்காக அவள் என்னுடன் சண்டையிட்டாள் நீ என்னவென்றால்” என்று இழுத்த அண்ணனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தவள் “ஆமாம் அவள் என் தோழி அவளை விட மாட்டேன் போங்கள் உங்கள் மனம் வருந்த கூடாதே என்று பார்த்தாள் என்னையே கிண்டல் செய்றீங்களா போங்க நான் வளுடன் பேசுவேன்......பேசுவேன்.பேசுவேன் டாட் அவ்ளேதான் போங்க” என்றவள் வேறு எதுவும் பேசாமல் ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.

ஹாசி மனதில் அளவிட முடியாத அளவு உற்சாகம் ஏற்பட்டது அண்ணனின் பேச்சில்.தங்கையின் செல்ல கோபத்தை கண்ட பிரகாஷும் சிறு சிரிப்புடனே காரை ஸ்டார்ட் செய்தவன் மனதினுள் “எதற்கும் அந்த பெண்ணைப்பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளவேண்டும் அதுதான் அம்முவிற்கு நல்லது” என்று குறித்து கொண்டான்.பிரகாஷிற்கு மிரு மேல் கோபம் இருந்தாலும் தங்கைக்கு அவள் துணை தேவை என்பதை உணர்ந்தவனாகவே தங்கையிடம் அவ்வாறு கூறிஇருந்தான் இருந்தாலும் மனதில் சரியான வெட்டுக்கிளி வெடுக்கு வெடுக்கு என்று குதித்து கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து கொண்டான். அடுத்து அவர்கள் கார் சென்று நின்ற இடம் அவர்கள் வீடுதான்.

வீட்டிற்கு வந்த "ஹாசினி" அம்மா என்று குதித்து கொண்டு உள்ளே செல்ல மகளின் முகத்தில் இருந்த புன்னகையை வைத்தேஅந்த தாய் உள்ளம் புரிந்து கொண்டது மகளது முதல் நாள் கல்லூரி சிறப்பாக இருந்து இருக்கிறது என்று பின்னே காலை எழுந்ததில் இருந்து அவள் பாடிய மந்திரம் அப்படி “அண்ணா வகுப்பறை வரை என்னை வந்து விட்டுவிட்டுதான் செல்ல வேண்டும்” என்று ஒரு நூறு முறையாவது சொல்லி இருப்பாளே.

“என்னமா புது பிரண்ட் கிடைத்தார்களா இல்ல ஸ்கூலில் போலயே இங்கும் அமைதியாக இருந்துவிட்டாயா” என்று கேட்ட்டார்.தாயை செல்லமாக முறைத்த ஹாசி “அப்படி எல்லாம் நான் அமைதியாக இல்லை எனக்கு புது பிரண்டு கிடைச்சிருக்கா பேரு” என்று ஆரம்பித்து அவரிடம் மிருணாளினி காலையில் இருந்து தன் பின்னே சுற்றியது பின் பேச ஆரம்பித்த மறு நிமிடத்தில் இருந்து தன்னுடன் பல நாள் பழகிய தோழி போல் பேசியது என்று சொல்லி கொண்டே போனவள் இறுதியில் பிரகாஷை திட்டியதில் வந்து நிறுத்த தாய், மகள் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. இருக்காதா பின்னே எப்போது பார்த்தாலும் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்று மற்றவர்களை விரட்டுபவனையும் ஒரு ஆள் விரட்டி இருக்கிறாள் என்றால் சிரிப்பு வரத்தானே செய்யும்.தாயிடம் ஹாசி சொல்வதை கேட்டு கொண்டு இருந்த பிரகாஷிற்கு மிரு மேல் மேலும் சந்தேகம் தோன்றியது எதற்கு அவள் தங்கை பின்னேயே சுற்றி வந்திருக்கிறாள் என்று அதனால் தங்கையின் பேச்சை பாதிக்கு மேல் கேட்காமல் வேகமாக தன் அறைக்கு சென்றவன் போன் அடித்தான் அவன் எப்போதும் பிஸ்னஸ் விஷயமான சில தகவல்களை பெறும் டிடெக்டிவ் ஏஜெண்டிற்கு.அவரோ நாளை மாலை அந்த பெண்ணைப்பற்றிய அனைத்து தகவல்களும் வனிடம் தருவதாக சொல்லி போனை அணைத்தார்.அதன் பின்பே பிரகாஷிற்கு நிம்மதியாக இருந்தது.

தாயுடன் மேலும் சற்று நேரம் பேசியவள் அடுத்து தனது அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு ஓய்வு எடுக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் கடந்து தந்தையின் கார் சத்தத்தை கேட்டு கீழே வர அவளது தந்தை உள்ளே சோபாவில் அமர்ந்திருந்தார்.

“அப்பா “ என்று மென் நகையுடன் பூமிக்கும் வலிக்குமோ என்பது போல் பூ பாதம் பதித்து வந்த மகளைபார்த்தவருக்கு மனம் நிறைந்துதான் போனது. அவர் காதுகளில் போன வாரம் மகளின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு வந்த தன் தோழர்கள் சொன்ன வார்த்தைகளான “இப்படி ஒரு அழகான அமைதியான பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்ற வார்த்தை காதுகளில் எதிரொலிக்க தன் மகளை பார்க்கும் போது எல்லாம்அவருக்கு தோன்றும் கர்வமான எண்ணம் இப்போதும் தோன்றியது “என் மகள்” என்று.

ஹாசினியின் தந்தை சேகருக்கு எப்போதும் மகள் மேல் தனி பிரியம் உண்டு. இப்போதும் அதே பாசம் கண்ணில் மின்ன பார்த்தவரின் அருகில் வந்த ஹாசினி அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.தந்தையையும், தங்கையையும் பார்த்து கொண்டே தனது அறையில் இருந்து வெளியில் வந்தான் பிரகாஷ்.அவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் தாய்க்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

கணவருக்கும், மகன், மகளுக்கும் மாலை நேர உணவை எடுத்து வந்த ஹாசினியின் தாய்க்கு மகளும்,கணவனும் அமர்ந்திருந்த தோற்றத்தை பார்த்து கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.இருந்தாலும் அதை கணவருக்கு தெரியாமல் துடைத்து கொண்டவர் அவர்களின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.தாய் வருவதற்காகவே காத்திருந்த பிரகாஷ் அவர் வந்தவுடன் அவர் மடியில் படுத்து கொண்டான்.

தந்தையின் தோளில் சாய்ந்திருந்தாலும் ஹாசி தாயின் கண்ணீரை கண்டு கொண்டாள் .ஒரு நொடி தாயின் கண்ணீருக்கான காரணத்தை புருவம் சுருக்கி யோசித்தவள் பின் காரணம் அறிந்தவளாக தந்தையிடம் இதைபற்றிபேச வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டாள், கணவனை பார்த்து சிரித்தவர் மகனின் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்து “எழுந்து டீ குடிப்பா” என்றவர், “கணவனை பார்த்து அப்பாவும், மகளும் சேர்ந்தாள் சுற்றி இருக்கும் உலகை மறந்து விடுவீர்களே கீழே இறங்கி வாங்க டீ எடுத்துகோங்கள்” என்று கூறி தனக்கு ஒன்றை எடுத்து கொண்டார்.

ஹாசியின் தந்தை சேகரோ “எங்களை பார்த்து உனக்கு பொறாமை ” என்று சொல்லிவிட்டு மனைவியின் முகம் போகும் போக்கை பார்த்து ரசித்து சிரித்துவிட்டு அவருக்கான டீ யை எடுத்து கொண்டு மற்ற விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். பிறகு நினைவு வந்தவராக ஹாசியிடம் முதல் நாள் கல்லூரி பற்றி கேட்க தாயிடம் கூறிய அனைத்தையும் மீண்டும் தந்தையிடமும் ஒப்பித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ் தன் கைகளால் காதை குடைந்து கொண்டு “ஆ.........”என்று கத்தினான்.நால்வரும் அவனது செயல் புரியாமல் பார்த்தனர்.

ஹாசியோ அப்பாவியாக “என்ன அண்ணா என்ன ஆச்சு” என்று கேட்க அவனோ "இல்லை ஹாசிமா நீ எது பேசினாலும் முதலில் நீ பேசிய உன் கல்லூரி கதையே என் காதில் விழுகிறது நீ அதையேதான் பேசினாயா இல்லை வேறு பேசுகிறாயா” என்று கிண்டல் செய்ய அவளோ “ அண்ணா” என்று பல்லைக் கடித்தவாறு அவனை அடிக்க துறத்தினாள்.தங்கைக்கு போக்கு காட்டி அவன் ஓட இருவரின் செல்ல சண்டையை சாயும்,தந்தையும் ரசித்து சிரித்தனர். அன்றைய பொழுது அப்படியே செல்ல இரவு உணவை முடித்துக் கொண்டு தன் அறைக்கு வந்த ஹாசி அன்றைய பொழுதை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள் அப்பொழுது அவள் கண் முன் வந்து நின்றது கூறிய தீட்சண்யமான கண்கள். டக்கென்று எழுந்து அமர்ந்து கொண்டவளுக்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது.

“ஹய்யோ ஹாசி உனக்கு என்ன ஆச்சு எதுக்கு இப்போ அவர் நியாபகம் வருது ” என்று தனக்குள் கேட்டு கொண்டவளுக்கு மனதின் படபடப்பு அதிகமாகிதான் போனது.“அவரை பார்க்கும் போது எல்லாம் ஏதோ சொந்த உணர்வு,இல்லை...இல்லை உரிமை உணர்வு தோன்றுவது போல் இருக்கிறதே எதனால்” என்று யோசித்தவளுக்கு அதற்கான பதில்தான் தெரியவில்லை.இருந்தாலும் “ஹாசி இது போல் அவர் நியாபகம் வர்றது தப்பு இப்போது உனக்கு படிக்கும் வயதுதான் ஆகிறது அதை மட்டும் பார் மற்ற எதிலும் கவனம் செலுத்தாதே உன் அண்ணன் சொன்னதை நினைவில் வைச்சுக்கோ யாரையும் உடனே நம்பாதே” என்று தனக்குதானே கூறி கொண்டவள் மெத்தையில் படுத்து கண்களை மூட. மறுபடியும் அவள் மோதி நின்ற அவனது திண்ணெண்ற நெஞ்சமே நினைவு வந்தது.”ஹய்யோ ஆண்டவா இதுக்கு ஒரு எண்டு கார்டு இல்லையா” என்று நினைத்தவள் அவன் தன் கண் முன் இருப்பது போல் சுட்டு விரல் நீட்டி மிரட்டும் தொணியில் “ இனி என்னுடன் வராதே வந்த...வந்த ....நான்......என்ன பண்ணுவேன் ஹய்யோ டக்குன்னு ஒன்னும் நியாபகம் வரலையே .ஹான்.... கண்டுபிடிச்சுட்டேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது போ...போ.. ” என்றவள் மீண்டும் குப்புறபடுத்து தூங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலை எழுந்த ஹாசி எப்போதும் போல் தோட்டத்தில் இருக்கும் செடிகளை பறித்து சாமி படத்திற்கு போட்டாள்.பின் அங்கு ஒளி வீசும் கண்களுடன் வீற்றிருக்கும் முருகனை மனமுருக வேண்டியவள் கல்லூரிக்கு கிளம்பி வந்தாள்.பிரகாஷூம் ஆபிஸ் செல்ல கிளம்பி வந்தவன் தங்கையை பார்த்து சிரித்து “என்ன மேடம் இன்னைக்கும் கிளாஸ் வரைக்கும் வரணுமா” என்று கிண்டலாக கேட்டான்.அவளோ அண்ணனை செல்லமாக முறைத்துவிட்டு ”நேத்து நீங்க வந்ததே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு நியாபகம் இருக்கு அதனால நானே கிளாஸ் வரை போய்க்கறேன் போங்க” என்று முறுக்கி கொண்டாள்.அவனோ “சரி ஓகே காலேஜ்லயாவது டிராப்பண்ணிட்டு போகட்டுமா இல்லை அங்கையும் நீயே போய் கொள்வாயா” என்று கேட்க அவளோ அண்ணனை பார்த்து நக்கலாக சிரித்து “அந்த டிரைவர் வேலை உங்களுக்குதான் வேறு யாருக்கும் இல்லை” என்று கண்ணடித்து சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.ஒருவழியாக இருவரும் கல்லூரிக்கும்,ஆபிஸிற்கும் காரில் கிளம்பிவிட்டனர்.

கல்லூரியின் வாயிலிலேயே தங்கையை இறக்கிவிட்ட பிரகாஷ் தனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொல்லி விரைவில் கிளம்பிவிட்டான். அண்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பியவள் கல்லூரிக்குள் கால் எடுத்து வைத்த அடுத்த நொடி வாசலின் அருகிலேயே பிடித்துவிட்டாள் மிருணாளினி ”உனக்காகத்தான் இவ்வளவு நேரம் இங்கு இருந்த புல்வெளியில் உட்கார்ந்திருந்தேன் என்றவள் அந்த முசுருண்டை மூஞ்சு எதுவும் என்னைப்பற்றி சொன்னுச்சா, என்னுடன் பேச வேண்டாம்னு சொன்னுச்சா” என்று கேட்டாள்.

ஹாசினியோ மிருவின் கேள்வி புரியாமல் திருதிருவென முழித்துவிட்டு ”மூசு உருண்டையா” என்று கேட்டாள்.மிருவோ தன் தலையில் அடித்து கொண்டவள் ”அது தாண்டி உன் பாச மலர்” என்று அவள் சொல்லி முடிக்கும் சமயம் அவர்கள் இருவருக்கும் பின்புறம் இருந்து ”அம்முமா“ என்ற குரல் கேட்டது.

யார் அது என்று திரும்பிய மிரு அதிர்ந்தாள் என்றால், ”அம்முமா” என்ற குரலிலேயே வந்தது யார் என்று புரிந்து கொண்ட ஹாசி யோசனையுடன் திரும்பினாள்.மீட்டிங் இருக்கிறது என்றவன் இப்போ எதுக்கு வந்தான் என்று யோசனையுடன்.பிரகாஷோ முகத்தில் கடின தன்மையுடன் மிருவை முறைத்து கொண்டு நின்றிருந்தவன் பின் தங்கையின் புறம் தன் பார்வையை திருப்பினான்.அவள் பார்வையிலேயே எண்ணத்தை ஊகித்தவனாக தன் கையில் இருக்கும் போனை நீட்டினான்.”ஹாசியோ ஸ்......என்று கண்ணை மூடி நாக்கை கடித்து கொண்டவள் சாரி அண்ணா வர்ற அவசரத்துல மறந்துட்டேன்” என்று கூறி போனை வாங்கி கொண்டாள்.

மிருணாளினியோ மனதிற்குள்ளேயே “ ஐயையோ மறுபடியும் இவன்கிட்ட மாட்டிக்கிட்டனே எனக்குன்னு மிஸ்டர் சட்டர்டே ஓவர் டைம் பாப்பாரு போலயே இவன்கிட்டயே என்னை கோத்துவிடறாரே ” என்று புலம்பியவளின் மறுபக்கம் வந்து குதித்த அவளது மனசாட்சி “அமைச்சரே நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம் இப்படி ஒருவனிடமே பல்ப் வாங்கி கொண்டு இருக்கிறோம்” என்று கூறியது அதை பார்த்து முறைத்தவள் “எனக்கு எதிரி வெளிய இல்லை உள்ளதான் இருக்கு என்னையவே கலாய்க்கிறியா ” என்று மனசாட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்தவள் பிரகாஷின் பார்வையில் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு அவனை பார்த்திருந்தாள்..தங்கையிடம் போனை கொடுத்த பிரகாஷ் மிருவை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென வெளியே சென்று விட்டான்.

பிரகாஷ் கார் கண்ணில் இருந்து மறையும் வரை வாயை இறுக மூடி கொண்டு இருந்தவள் அதன் பின் “ஐயோ என்னடி ஆச்சு எனக்கு.தேவை இல்லாம பேசி உன் அண்ணன் முன்னாடி பல்ப் வாங்குறதே எனக்கு பொலப்பா போச்சு.அது என்னடி பார்வை அப்புடி ஒரு பார்வை என்று அவள் ஹாசியுடன் பேசி கொண்டு இருக்கும் போதே எகிறி குதித்த அவளது மனசாட்சி அது கேவலமான பார்வைனு உனக்கு தெரில என்றது.அடேய்........ ஓடி போ அங்குட்டு என்று அதை அந்த பக்கம் துறத்தியவள் .தோழியிடம் புலம்பலை தொடர்ந்தாள்.இப்ப எனக்கு அந்த பார்வைக்கு அர்த்தம் தெரிஞ்சாகனும்.இல்ல,நானு தெரியாமல்தான் கேக்குறேன் இருக்க வேலைய விட்டுட்டு வந்து குடுக்கற அளவுக்கு இந்த போன் அவ்ளோ முக்கியமா போச்சா இது என்ன டிசைனோ "என்று புலம்பி கொண்டு இருந்தாள் என்றால் அவளது புலம்பலை மென் சிரிப்புடன் கேட்டு கொண்டு இருந்தாள் ஹசி.

தோழியின் சிரிப்பை பார்த்த மிரு “அடியே இங்க நான் புலம்பிட்டு இருக்கேன் நீ என்னவோ நான் கலக்க போறது யாரு ஷோ பண்ணுறாப்ல சிரிச்சுட்டு இருக்க என்னக்கு இப்ப ஒரு பதில் சொல்லு” என்று கேட்க ஹாசியோ அப்பாவியான குரலி”நான் வேணா என்னோட அண்ணன் கிட்ட கேட்டு சொல்லவா” என்று கேட்க .கடுப்பான மிரு தோழியை பார்த்து நக்கலான குரலில் ”இதுதான் உனக்கு லாஸ்ட் இன்னொரு டைம் நீ எனக்கு பல்பு கொடுத்த அக்கட சூடு” என்றாள்.தோழி காட்டிய இடத்தை திரும்பி பார்த்த ஹாசினி அதிர்ந்தாள்.அங்கு நேற்று யாரிடம் இருந்து தப்பிக்க சஞ்சய் பின்னால் சென்றாலோ அதே கும்பல் நின்று கொண்டிருந்தது.

முகத்தில் பீதியுடனும் கண்ணில் கலவரத்துடனும் மிருவை பார்த்த ஹாசி. ஹேய் ப்ளீஸ்ப்பா என்னை அவங்ககிட்ட மாட்டாம எப்படியாவது நம்ம கிளாஸ்க்கு கூட்டி போ இனி நான் உன்னை கிண்டல்பண்ணவே மாட்டேன் என்று சொன்னாள்.தன்னிடம் கெஞ்சிய தோழியை “அது” என்பதுபோல் பார்த்தவள் ஹாசியை இழுத்துகொண்டு அந்தப் புல்வெளியில் ஓரமாக நடக்க ஆரம்பித்தனர்.

இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஹாசினி தன் பார்வையை நாலாபுறமும் சுழற்றி கொண்டே நடந்தாள்.அப்போது அங்கே ஒரு காலை மடக்கி மரத்தின் மீது வைத்துக் கொண்டு கண்ணில் குறும்பு மின்ன,முகம் முழுவதும் சிரிப்புடன் போனில் பேசிக்கொண்டிருந்தான் சஞ்சய். அவனின் சிரிப்பில் தன்னை தொலைத்து நின்றவள் காதில் அவன் தனக்கான உறவு,தனது உறவு என்ற உள் மனதின் சத்தம் கேட்டது. மிருவுடன் நடக்காமல் அப்படியே சஞ்சயை பார்த்து நின்றுவிட்டாள் ஹாசி.தன்னை அறியாமல் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.திடீரென்று ஹாசி நின்று விடவும் அவளை திரும்பி பார்த்த மிரு “என்னடி ஆச்சு ஏன் நின்னுட்ட என்று கேட்க” அவள் சஞ்சய் நின்ற பக்கம் கையை நீட்டியிருந்தாள்.

ஹாசி கை நீட்டிய பக்கம் அவர்களது சீனியர் கும்பலில் ஒருவன் நின்று கொண்டு இருந்ததை பார்த்த மிருவும் “அடியே ராசாத்தி நல்ல வேலை அவன பார்த்த வா நாம போய் அந்த புதர் பக்கத்துல ஒளிஞ்சு நிப்போம் கொஞ்ச நேரம் கழிச்சு நாம போகலாம்” என்று சொன்னாள்.மிருவிடம் கையை காட்டிய பிறகுதான் தன்னிலை உணர்ந்த ஹாசி “ஹய்யயோ இவளிடம் போய் அவரை காட்டிவிட்டேனே,நேற்றுதான் பார்த்தேன் இன்று அவரை ரசிக்கிறேன் என்று தெரிந்தால் மிரு என்னைப்பற்றி என்ன நினைப்பாள்” என்று எண்ணி கொண்டு இருந்தவள் ,அவள் சஞ்சயை பார்க்காது அவன் முன் நின்றிருந்த சீனியர் மாணவனை பார்த்து பேசவும் அவளுக்க நிம்மதியாக இருந்த அதே சமயம் மனதின் ஓரத்தில் குறுகுறுப்பும் ஏற்பட்டது என்னவோ உண்மை.

அவளையே அறியாமல் அவளுள் புகுந்திருந்தான் சஞ்சய்.வேண்டாம் என்று ஒன்றை நினைக்கும் போதுதான் அது நம் கண் முன் வரும் அது போல் “இது படிக்கும் வயது என்னிடம் இருந்து தள்ளியே இரு” என்று இரவு முடிவெடுத்து சென்னவளால் காலை முகம் முழுவதும் சிரிப்புடன் தன் முன் நிற்பவனிடம் அப்படி சொல்லி விலக்கி வைக்க முடியவில்லை.ஒரு வேலை அவனின் இந்த சிரித்த முகம் இல்லாது இன்னோரு முகத்தை பற்றி தெரிந்து இருந்தாள் விலகி இருப்பாளோ என்னவோ.

காதல் வரமானது மட்டும் இல்லை அதற்கு உண்மையாக இருப்பவர்களுக்கு பல சமயம் சாபமாகவும் மாறும்.இப்போது ஹாசிக்கு ஏற்பட்ட முதல் காதல் வரமாகுமா ?சாபமாகுமோ? அந்த விதியின் கையில் வாழ்க்கை.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement