
அத்தியாயம்-32
ஹாசி வேலையை புயல் வேகத்தில் செய்ய ஆரம்பித்தாள். மீட்டிங் முடிந்த ஒரு வாரத்திலே குழந்தை,நளினி,மயூ, குழந்தையை பார்த்து கொள்ள பாட்டி என்று மூவரும் துபாய் கிளம்பினர்.சந்திரன் தாத்தா அலமு பாட்டியிடம் இருந்து “விடுதலை…… விடுதலை….. விடுதலை…..” என்று மகிழ்ந்தாலும் பேத்திகளை பிரிவதை நினைத்து வருந்தினார்.
கிருஷிற்கு மனைவியின் முடிவு மகிழ்ச்சியை தந்தாலும் அவளை பிரிவதை நினைத்து வருந்தினான். துபாய் செல்லும் வரையிலாவது அவர்களுடன் இருக்க ஆசைப்பட்டவன் சீக்கிரம் ஆபிஸிலிருந்து வந்தான். ஆனால் மயூ அவனை கண்டு கொள்வதாக இல்லை. வேலை அதிகம் இருப்பதால் சஹாவையும் அவளால் கவனிக்க முடியவில்லை அதனால் கிருஷ் மகளை தன் பொறுப்பில் எடுத்து கொண்டவன் கையிலேயே வைத்து கொஞ்சி கொண்டும் பிரிவின் வலியை போக்க மழலை சிரிப்பை ரசித்து கொண்டு நாட்களை நகர்த்தினான்.
மேலும் மனைவிக்கு தெரியாமலையே அவளுக்கு கேடயமாக மாறினான்.பழைய பகையை மனதில் வைத்து கொண்டு அவளிடம் நெருங்குபவர்களிடம் இருந்து விலக்கி தன் பாதுகாப்பு வளையத்திலேயே வைத்திருந்தான். நளியையும் எங்கு சென்றாலும் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கண்டிப்பாக கிருஷ் சொல்லி இருக்க அவளால் மனதினுள் புலம்ப மட்டுமே முடிந்தது.
நளி, “என்னடா வாழ்க்கை இது முதல்ல அந்த மூசுருண்ட மண்டைக்கிட்ட எல்லா டீடேயிலும் சொல்ல வேண்டியதா இருந்துச்சு,இப்போ இந்த இத்து போன கிருஷ்ட்ட சொல்ல வேண்டியதா இருக்கு,இவனுங்களுக்கு பயந்தே நாம வாழ்க்கை முடிஞ்சுடுமோ” என்று புலம்ப அவளை கிண்டலாக பார்த்த அவள் மனசாட்சி “எது….. நீ பயந்தியா,இந்த சம்பவம் எப்போ நடந்துச்சு,நீ யாருக்கு எப்போ பயந்திருக்க,என்னமோ புதுசா பயப்படுறேன்னு எல்லாம் சொல்ற”என்று கேட்க,அதை பார்த்து அசடு வழிய சிரித்தவள் “பயப்படல ஆனா பயப்படற மாதிரி நடிச்சேன்ல,நடிக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா, எதிராளி போர்ஸ்ஸா திட்டும் போது சவுண்ட மியூட் பண்ணிட்டு அவங்க பேஸ் ரியாக்ஷன மட்டும் போகஸ்பண்ணி பார்க்கும் போது வர்ற சிரிப்பை கண்ட்ரோல் பண்ணி பாவமா முகத்தை வச்சுட்டு உட்கார்ந்து இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா,இதுல காதுல இருக்க பஞ்சு அவங்களுக்கு தெரியா மெய்ண்டன் வேற பண்ணனும்,ஒரு நாள் நீ நளினியா இருந்து பாரு அப்போதான் உனக்கு என் கஷ்டம் தெரியும் என்க,அவளை அரண்டு போய் பார்த்த மனசாட்சி “அடியே நான்தான் நீ, நீ தான் நான்,அதுக்கூடவா உனக்கு மறந்து போச்சு,என்னமோ ஒரு நாள் சி.எம்மா இருந்து பாருனு நம்ம ரகுவரன் சொல்ற மாதிரி சொல்ற”என்று அலற,அவளோ அது எல்லாம் முடியாது.ஒரு நாள் நீ வெளிய வா,நான் உள்ள போறேன், இந்த மயூ வேற வேலை சொல்லியே என்னை கொல்றா எனக்கும் ரெஸ்ட் வேணும்ல,கம்.....கம்.....கம் குவிக்” என்றவள் சொன்ன மறுநிமிடம்,அங்கிருந்து அடித்து பிடித்து ஓடிவிட்டது அவளின் மனசாட்சி.
ஹாசி வேலையில் முழு கவனமாக இருந்தாலும் கணவனின் அருகாமைக்காக ஏங்க ஆரம்பித்தாள்.அவளது ஒரு மனதோ “அவன் உன்னை திட்டியவன்,உன் வளர்ப்பையே தவறாக சொன்னவன்,அவன் பின்னாடி செல்கிறாயே” என்று கேட்க,காதல் மனமோ “அதற்காகத்தான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுவிட்டாறே,அவரைவிட அதிகமாக நீயும் வார்த்தைகளால் காயபடுத்தி இருக்கிறாயே”என்று கேட்டது,இந்த போராட்டத்தில் தடுமாறியவள் தலையை பிடித்து கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். அவளுள்ளே துபாய் கிளம்புவதற்கு முன் தங்களுக்குள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் படமாக ஓடியது.
மயூ கிருஷை காயபடுத்தும் மாறு பேசினாலும் அவனது வாடிய முகம் இவளையும் பாதிக்க செய்யும், அதனாலேயே அவனிடமிருந்து விலகி இருப்பாள்.எதற்காக அவனை காயப்படுத்த வேண்டும்,பின் அந்த காயத்தின் வலியை தான் உணர வேண்டும் என்று, ஆனாலும் அவனது மனைவி என்ற உரிமை பேச்சையும்,கல்லூரியில் இருந்து ரசித்த அவன் ஆளுமையையும் அவனுக்கே தெரியாமல் ரசிக்கத்தான் செயவாள்.தினமும் காலையும் மாலையும் மகளை கொஞ்சும் சாக்கில் அவளை நெருங்கி நிற்பவனின் வாசம் அவள் நாசியை தீண்டி காதல் மனதை தட்டி எழுப்பினாலும் பிடிவாத மனம் அவனுக்கான காதலை காட்டாமல் மறைத்து வை,கோபமாக இரு என்ற கட்டளையை இட,அவன் அருகில் நிற்கும் வரை முகம் இறுக நின்றிருப்பாள்.
மகளை கொஞ்சி கொண்டே ஓர கண்ணால் மனைவியை பார்ப்பவனின் கண்களுக்கு அவள் கோபமான முகமே காணகிடைக்கும்,ஒரு மென்மையான சிரிப்பு அல்லது சாதாரண முகபாவத்தை எதிர் பார்ப்பவனுக்கு அது ஏமாற்றத்தை தர,கோபமாக அவளிடம் சொல்லாமல் அறையைவிட்டு வெளியே செல்பவன், மனது கேட்காமல் சற்று நேரத்திலேயே திரும்ப வருபவன் “நான் ஆபிஸிக்கு கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டே செல்வான்.செல்லும் கணவனின் முதுகையே வெறித்து பார்ப்பவளின் மனதில் “எனக்கு உன் மேல் கோபம் இருக்கா இல்லையானே தெரியலடா,ஆனா உன்னை பார்க்காம உன் குரலை கேட்காம இருக்கனும்னு நினச்சாலே மனசு பாரமா ஆகிடுது,என்னோட திறமைய வெளிய கொண்டுவரணும்னுதான் நீ இவ்ளோ பேசுனங்கறது எனக்கு புரியுது முதல் முறை மாதிரி இந்த முறை உன்னோட வார்த்தைகள் என்னை காயப்படுத்தல,மாறா எதனால அப்படி பேசினனு யோசிக்கத்தான் வச்சது. அப்போதைக்கு உன்கிட்ட நான் கோபத்துல பேசினாலும் அப்புறம் பொறுமையா யோசிக்கும் போதே அதை நான் புரிஞ்சுக்கிட்டேன். உனக்காகவாவது இந்த வேலைய வெற்றிகரமா முடிக்கணும்னு முழு முயற்சிபண்றேன்” என்று மனதோடு பேசி கொள்பவள் மேலும் “உன்கிட்ட எதையோ என் மனசு எதிர்பார்க்குது என்னனுதான் எனக்கே புரியல,அது புரிஞ்சாதான் என்னால உன்னோட நார்மலாவாவது பேச முடியும்” என்று பெரு மூச்சுவிட்டாள்.
இதையெல்லாம் யோசித்து கொண்டு இருந்தவள் ஆபிஸ் போன் அடிக்கவும் சுய நினைவுக்கு வந்தவளாக அதை அட்டன் செய்து “யார்?” என்று கேட்க அந்த பக்கம் அவர்கள் ஆபிஸின் செக்யூரிட்டிதான் அழைத்திருந்தார்.”மேடம் உங்களுக்கான கார் ரொம்ப நேரமாக காத்திருக்கிறது” என்று சொல்ல,உடனே பதறியவள் மணியை பார்க்க அது இரவு பதினொன்று என்றது.
மயூ, “ச்ச.....இவ்ளோ நேரமா யோசனையில் இருந்திருக்கிறேன்” என்று தலையில் அடித்து கொண்டவள். செக்யூரிட்டியிடம் தான் உடனே வருவதாக கிளம்பியவள், கார் அரெஞ்ச் செய்தது நளி வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்து,”நான் என்ன சின்ன குழந்தையா,எதுக்கு இப்படிபண்றா என்னோட காரை எனக்கு ஓட்ட தெரியாதா, லேட் ஆனா என்ன எதுக்கு வெட்டியா டிரைவர் எல்லாம் இன்னைக்கு அவளுக்கு இருக்கு” என்று வீட்டில் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்த நளினியை வருத்து எடுத்து கொண்டே சென்றாள்.ஆனால் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவளது கணவன்தான் டிரைவராக காத்திருக்கிறான் என்பதை அவள் அறியவில்லை.
காரின் பின் சீட்டில் அமர்ந்தவள் போலாம் டிரைவர் என்றுவிட்டு அப்படியே தன் கையில் வைத்திருந்த பையில் தான் வரைந்த உடைகளை பார்த்து கொண்டு வர,டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவன் தன்னையே ஏக்கம் நிறைந்த விழிகளுடன் பார்த்திருப்பதை கவனிக்காமல் போனது ஏனோ.
கிருஷ் நினைத்ததைவிடவே மயூ வேகமாக அனைத்து வேலைகளையும் செய்திருந்தாள்.அவளை பார்க்காமல் இருபது நாட்கள் ஓட்டியவன் அதற்கு மேல் முடியாமல் நேரிலேயே பார்த்துவிடலாம் என்று வந்திருந்தான். மதியம் துபாய் வந்தவன் இரவு வரை வீட்டில் இருந்து தன் மகளை கொஞ்சிவிட்டு பாட்டியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இரவு மயூவை பார்த்துவிட்டு கிளம்புதாக வந்தவன்,அதே போல் அவளை வீட்டில் டிராப் செய்துவிட்டு இந்தியாவிற்கு கிளம்பிவிட்டான்.அவள் முன் போய் நின்று அவள் கோபத்தை ஏற்ற வேண்டாம் என்று அவன் நினைத்திருக்க, ஆனால் அதுவே அவனை அவளுள் தேட வைத்தது.
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டு இருக்க ஷோவிற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது என்ற நிலையில்,வேலைகள் அனைத்தும் நன்றாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று நினைத்தாலும் மயூ மனதில் ஒரு ஏமாற்றம்,வெற்றிடம் இருப்பதை அவளால் உணர முடிந்தது அது எதனால் என்பதும் அவள் அறிந்ததே.
கிருஷ் மயூவை துபாய் வந்து பார்த்துவிட்டு சென்ற பின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவளை அழைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தான்.ஆனால் அவள் பேச மாட்டாள். ஏனோ எதுவும் நடக்காதது போல் அவனிடம் பேச அவளால் முடியவில்லை,அது மட்டும் இல்லாமல் அவன் வந்து தன்னை பார்த்து சென்றுள்ளான் என்பது தெரியாமல்,இத்தனை நாட்கள் இல்லாத அக்கறை இப்போது மட்டும் என்ன என்ற கோபம் வர அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டு அவன் குரலை மட்டும் கேட்கலாம் என்று ஆன் செய்து வைத்துவிட்டு அமைதியாகிவிடுவாள்.அந்த பக்கம் இருக்கும் அமைதி கிருஷ் புரிந்து கொண்டாலும் சாதாரண நலம் விசாரிப்பு மட்டும் கேட்டுவிட்டு அவள் பதில் இல்லை என்றாலும் தான் பேச வந்ததை பேசிவிட்டு வைத்துவிடுவான்.
அவள் பதில் சொல்லவில்லை என்றால் என்ன போனை அட்டன் செய்து நான் பேசுவதை கேட்கிறாளே அதுவே போதும் என்று நினைத்திருந்தவனுக்கு ஏனோ அன்று மனைவியின் மதிமுகத்தை காண ஆவல் வர எப்போதும் அழைக்கும் நேரத்திற்கு வீடியோ கால் போட்டான்.
மயூ அன்று தலை வலிப்பதாக சொல்ல,நளினி, “ரெஸ்ட் இல்லாம ஒர்க்பண்ணிட்டு இருக்க அதான் உனக்கு தலைவலி வந்திடுச்சு,நீ வீட்டுக்கு போ நான் மீதி வேலையை பார்த்துக்கறேன்” என்று அனுப்பி வைத்திருந்தாள்.அதனால் அன்று விரைவாக வீட்டிற்கு வந்தவள் தூங்கி எழ ஓரளவு பராவாயில்லாமல் இருந்தது. அத்தோடு பாட்டியின் சுக்கு காப்பியும் சேர்ந்து அவளுக்கு ஓரளவு தெளிவை தந்தது.அப்போது போன் அடிக்க மணியை பார்த்தே கண்டு கொண்டாள் அழைப்பது தன்னவன்தான் என்று,வழக்கம் போல் போனை கவனிக்காமல் ஆன் செய்து அப்படியே வைத்துவிட்டாள்.
ஸ்கிரீனில் மனைவி மற்றும் குழந்தையின் முகத்தை கண்டவனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் போனை அவள் கீழே வைத்திருக்கவும் முகம் வாடி போனான். “அப்போ இத்தனை நாளும் அவள் தன் குரலைகூட கேட்க விரும்பாமல் போனை ஆன் செய்து அப்படியே வைத்துவிடுகிறாள்.அதனால்தான் பதில் தராமல் அமைதியாக இருந்திருக்கிறாள்” என்று சரியாக தவறாக யோசித்தவனின் மனம் வெகுவாக பாதிக்க போனை கட் செய்தவனின் மன கண்ணில் ஹாசி ஒவ்வொரு முறையும் மரத்தின் அருகில் இருந்து கண்ணில் காதலுடன் தன்னை பார்க்கும் காட்சி வந்து போக “தனக்கான காதலை தன் செயலாலேயே அளித்துவிட்டேனே” என்று தன்னையே வெறுத்து கொண்டான்.அவன் அறியாத ஒன்று அவன் மனையாட்டி ஸ்பீக்கரில் அவன் குரலை கேட்கிறாள் என்பது.அந்த காயத்தின் தாக்கத்தால் இரண்டு நாட்கள் போன் போடாமல் அவன் தவிர்க்க அவன் தவிர்ப்பில் இங்கொருவளுக்கு தவிப்பு வர ஆரம்பித்தது.
மயூ, “என்ன ஆனது தினமும் இந்த நேரத்திற்கு போன் வந்து விடுமே ஏன் வரவில்லை,எதுவும் ஆபத்தில் இருப்பாரோ ஒரு வேலை விபத்து...இல்லை.....இல்லை.....அப்படி இருக்காது,ஒரு வேளை உடம்பு சரியில்லாமல் போய் இருக்குமோ” என்ற எண்ணம் மாறி மாறி தோன்றி அவளை அலைப்புற செய்தது.இதனால் வேலையின் போது பலமுறை தடுமாறினாள். சரியாக அடுத்த இரண்டு நாளில் அவளது ஷோ இவளின் தடுமாற்றத்தை கண்ட நளி எதனால் என்பதையும் எளிதாக ஊகித்து அடுத்த நிமிடம் கிருஷிற்கு அழைத்து மயூவின் நிலையை சொல்லவும் மறக்கவில்லை.இருந்தாலும் தடுமாறும் தோழியிடம் சமாதானமாக பேசி வேலையில் கவனம் செலுத்த வைத்தாள்.
நினைத்த நேரத்திற்கு முன்பே அனைத்து உடைகளும் ரெடியாகிவிட மாடல்களை வர செய்து அவர்களுக்கான உடையை போட்டு பார்க்கவைத்து அட்ஜஸ் செய்வதை நோட் செய்து என்று பம்பரம் போல் சுழன்று கொண்டு இருந்தாள் மயூ.
அவள் விருப்பப்பட்டு கஷ்ட்டப்படும் அந்த நாள் இவளுக்கு என்ன அதிர்ச்சிகளை கொடுக்கும் என்ன மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை அடுத்த எபில பார்க்கலாம்.
Last edited: