காதல்

Vethasri

Writers Team
Tamil Novel Writer
#1
காதலில் தோல்வியடைந்த ஒரு பெண் அவனின் திருமணத்தன்று எழுதியது

என்னுடைய
காவ(த)லன்
நீ அல்ல

உன்
பாதியும்
நான் அல்ல

எதிரி
என்றால்
மன்னித்து இருப்பேன்

நீ
துரோகி
மறந்து விட்டேன்

நானும்
ஒருவேளை
மேடையில் அமரலாம்

ஆனால்
என்னருகில்
வேறொரு தெய்வத்தோடு

நான் ஜனிக்க
காரணமாக
இருந்தவர்களின்
ஆசை(சி)யுடன்

காதலன்
பதவியில் தான்
கானல்நீரானாய்

கணவன்
பதவியிலாவது அன்புக்
கடலாய் இரு

வருங்காலத்தில்
என்னை
கனவிலும் நினைக்காதே
நினைத்தால்
பொசுங்கிவிடுவாய்

நான் என்றுமே
அ(க)ரசி தான்

அந்நிய தேசத்தில்
அவளை மணந்தவனே
நீ எனக்கு என்றும்
அந்நியனே

இப்படிக்கு உன்
கடந்த கால கனவுகளின்
கனலின் பிழம்புகள்
 
#8
உங்களுடைய அடுத்த நாவல் எப்போ ஆரம்பிக்கப் போறீங்க, வேதாஸ்ரீ டியர்?
@Vethasri டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes