காதல்

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"காதல்
கடைகோடி மனிதன் வாழ்விலும்
கட்டாயம் வீற்றிறுக்கும்"


"கண்ணிகளின் மூலம்
ஆயிரம் கதை பேசும்"


"ஆசை நெஞ்சில்
அதீத அன்பு கொண்டிருக்கும்"


"இளமையில் இன்பம் தரும்
முதுமையில் மகிழ்ச்சி தரும்"


"காதலால்
கசிந்துருகியவர்கள் சிலர்
காணாமல் போனவர்கள் சிலர்"


"நேசத்தின் துணை மட்டும் கொண்டு
காதலால் காலத்தை வென்றவர்கள் பலர்"


"குடும்பத்தை எதிர்த்து கரம் பிடித்து
கடைசி காலம் வரை கரம் பிரியாதவர்கள்
காதல் வரலாற்றின் கவிதைகள்"


"காதல்
கண்கள் நான்கும் கண்டதும் நேசம் வந்து
கைகள் நான்கும் இறுதி வரை கோர்த்து
மனம் முழுதும் பாசம் நிறைந்து
அடுத்த தலைமுறைக்கு அச்சாரம் இட்டு
அழியாத காவியம் படைத்திடும் ஆயுள் முடியும் வேளையில்"


"அழகிய வாழ்க்கை வேண்டுமெனில்
அழியாத ஓவியம் காதல் அதை செய்து பார்"
 
Advertisement

Sponsored