காதல் மனைவிக்கு கணவன் எழுதும் மடல் (கவிதை)

#1
wind-couple.jpg பனி தூவும் நீண்ட இரவுகள்நொடிப்பொழுதும் மூடாஇதய விழிகள்...

சப்தநாடி துடிப்பும்
சதா உனை நினைத்திருக்க
தனித்திருக்கும் நம்
வாழ்வின் கோலங்கள்.........
கோடி ரோஜாக்கள் கொண்டுன்னை
வடித்தெடுத்த உன் பெற்றோருக்கும்
குடகின் ஊற்றாக பிரவாகிக்கும் உன்
அன்பின் காவிரிக்கும்
அநேக நன்றிகள்.....

அன்பால் கூடிய
அதரங்கள் இணைந்த நேரங்கள்
ஆத்மாவில் நீ குடியேறிய நிமிடம் முதல்
ஆருயிராய் சூடிக்கொண்டேன்
ஏந்திழையு னையே....

நீ சிரிக்க மகிழ்வும்
நீ வலி காண ரணமும்
நிரந்தரமாகிப் போனதடி
கண்ணம்மா.....

உன் புன்னகைக்கும்
பூரிக்கும் பேரழகிற்கும்
உணர்வின் ஆசைகளுக்கும்
உயிர் தருவேன் ....

உன் மகிழ்வில் வாழ்ந்திடுவேன்
தனித்திருக்கும்
இந்நிலை
தீர்ந்திடவேண்டும்- என்
தோள்மீது கண்மூடி நீ
மகிழ்ந்துறங்க வேண்டும்.....

உன் அன்பால் மட்டுமே
உயிர் வாழ்வேன்....
உனக்காக என்றும் ஏங்கும்
உன்னவன் நான் - கணவன்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikam[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement