காதல் படகை கரையேற்ற வா - 4

Advertisement

Padmarahavi

Active Member
உதயனும் தர்னிகாவும் காரில் படத்திற்குச் சென்றனர். அவர்கள் சென்ற படம் மாஸ்டர். தர்னிகா படத்தை ரசித்துப் பார்க்க உதயனின் முகம் வாடியிருந்தது. எதேச்சையாக திரும்பிய தர்னிகா அவன் முகத்தைப் பார்த்து குழம்பி பின் அவனிடமே கேட்டாள்.


என்னாச்சு! படம் பிடிக்கலையா?


இல்லை நான் பாக்கவே இல்லை. ஏதோ யோசனையாய் இருந்தேன்.


என்ன யோசனை


ஒன்னுமில்லை விடு. நீ பாரு.


இல்லை. நீ சொல்லு.


சொன்னா நீ கோவப்படுவ. நீயாவது படத்தை பார்த்து என்ஜாய் பண்ணு.


இப்ப நீ சொல்லனும். அவ்வளோ தான்.


ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பிறகு பேசினான்.


மஹதிக்கு விஜய் னா ரொம்ப பிடிக்கும். எந்த விஜய் படம் வந்தாலும் முதல் நாளே பாக்கணும்னு அடம் பிடிப்பா. கடைசியா நாங்க போன படம் மெர்சல். அதுக்கு அப்புறம் கொடைக்கானல்க்கு அவங்க குடும்பத்தோட டூர் போனப்ப விபத்து நடந்திருச்சு.


அவ்வளவு தான். அதற்கு மேல் தர்னிகா ஒரு நிமிடம் கூட அங்கு அமரவில்லை. எழுந்து விடுவிடுவென வெளியே வந்தவள் பின்னே "தர்னிகா, ப்ளீஸ், நில்லு" எனக் கத்திக்கொண்டே வந்தான் உதயன்.


இதுக்கு தான் நான் சொல்லமாட்டேன்னு சொன்னேன். நீ தான் சொல்லு சொல்லுன்னு என்னை வற்புறுத்துன.


சொல்ல வேண்டாம்னு நினைச்சா அதை நாங்க கண்டுபிடிக்காதபடி மூஞ்சியை வச்சிருக்கணும். எல்லாரும் சந்தோசமா படம் பாக்கும் போது இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்தா பக்கத்துல இருக்கிறவங்க நிம்மதியா படம் பாக்க முடியுமா?


அதுக்காக மனசுல தோணுறதை நினைக்காம இருக்க முடியுமா? நான் என்ன வேணும்னா பண்ணேன். இதுக்குத் தான் நான் படத்துக்கு வரலைன்னு சொன்னேன்.


உன்ன யாரு வர சொன்னா?நான் ராஜேஷ் கூட வந்திருப்பேன்ல


என் பொண்டாட்டியை எவனோடையோ படத்துக்கு அனுப்புற அளவுக்கு நான் பெருந்தன்மையானவன் இல்லை.


என் புருஷன் என்னை பக்கத்துல வச்சிகிட்டே வேற யாரையோ நினைக்கும் போது போனா போகுதுன்னு விடுற அளவுக்கு நானும் பெருந்தன்மையானவள் இல்லை.


இருவரின் சண்டைகள் உச்சமடைய அதில் உதயன் தர்னிகாவை பொண்டாட்டி என்றதையும் தர்னிகா உதயனை புருஷன் என்றதையும் இருவருமே கவனிக்கவில்லை.


சரி இப்ப என்ன சொல்ல வர? உதயன் இறுதியாக சரணடைந்தான்.


நீங்கறா மனசு மாறுற வரை நான் உங்க கிட்ட உரிமை எடுத்துக்க மாட்டேன். இப்ப வீட்டுக்கு போகலாம் வாங்க. என்று கூறிய தர்னிகா காரில் ஏறினாள்.


சட்டென்று அவள் தன்னை அந்நியமாக்கியதைப் போல் உணர்ந்தான் உதயன். வாங்க போங்க என்றது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதை விட அவள் நாலு அடி அடிப்பதே நன்றாக இருந்தது என்று தோன்றியது அவனுக்கு.


வீட்டுக்கு வரும் வரை அவள் பேசவேயில்லை. அவன் பேசியதற்கும் புன்னகையையே பதிலாகத் தந்தாள். அவள் கோபப்படும் போதே அதை தாங்கிக்கொண்டவன் அவள் புன்னகைத்து பதில் பேசாதபோது தவித்துப் போனான்.


அன்றிரவே சென்னை கிளம்புவதால் வீட்டில் விருந்தினர் வருகை கூடியது. அவளுடன் பேசவே நேரம் கிடைக்கவில்லை. அவள் முன்னே குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டே இருந்தான்.


அண்ணா! அண்ணி எங்கையும் ஓடிப் போக மாட்டாங்க. சென்னையில உன் கூட தான் இருக்கப் போறாங்க. இப்ப எங்க கிட்ட விடு என நேரம் தெரியாமல் ஜோக் அடித்தாள் ஹரிணி.


அசடு வழிய சிரித்தவன் வேறு வழியின்றி அறைக்குச் சென்றான்.


தர்னிகாவின் தாய் சுந்தரி அவளை தனிமையில் பிடித்தார்.


என்னம்மா? மாப்பிள்ளை நல்லா வச்சிக்கிறாரான்னு கேக்கப் போற அதானே!


இல்லடி. நீ மாப்பிள்ளையை ஒழுங்கா வச்சிருக்கியா? தங்கமான பையன்டி. கொஞ்சம் பொண்ணா நடந்துக்க


அவரை முறைத்த தர்னிகா, "என்னப் பாத்தா எப்படித் தெரியுது"


சத்தியமா பொண்ணு மாதிரி தெரியலை. நானும் வந்ததுல இருந்து கவனிக்கிறேன். அவரோட சிரிச்சு பேச மாட்டேங்குற. படத்துக்கு போய்ட்டு பாதிலயே வந்துட்ட கேட்டா தவைவவலின்னு சொல்ற.


உண்மையாவே தலைவலிமா. நல்லா விருந்து சாப்பிட்டுட்டு தூங்காம படத்துக்கு போனா எப்படி இருக்கும்.


அதுக்குத் தான் வேணாம்ன்னு அவர் சொன்னாரு. அந்த ராஜேஷ் பயலோட போறேன்னு குதிக்கிற.


அம்மா தாயே தப்பு தான் ஆளை விடு. நைட் ஊருக்கு கிளம்பனும்ல. என்ன விடு.


தர்னி! நீ சின்ன குழந்தை இல்லை. என்ன நடந்தாலும் பொறுமையா யோசிச்சு பாரு. கொஞ்சம் நிதானமா நடந்துக்கோ என்று கூறிவிட்டுச் சென்றார் சுந்தரி.


ஆமா. இந்தாளு பழைய லவ்வரை நினைச்சு சோக கீதம் வாசிப்பாரு. நான் அதுக்கு நிதானமா ஒத்து ஊதணுமா என கோபத்தில் சுவற்றை குத்திவிட்டுச் சென்றாள் தர்னிகா.


அன்று உதய்- தர்னிகா ரிசப்ஷன்.


மஞ்சள் சிவப்பு நிற காம்பினேஷன் லெஹங்காலில் தேவைதைப் போல் இருந்தாள் தர்னிகா. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் உதயன். அதற்கும் அவளிடமிருந்து முறைப்பு பரிசாகக் கிடைத்தது.


என்ன மேடம்! ஆறு மாசத்துல லவ் பண்ணணும்னா இப்படியெல்லாம் ரொமான்டிக்கா பாக்கணும்ல.


அவள் காதுமடல் சிவந்தது வெட்கத்தில். அதை வெளிக்காட்டாமல் "நான் இன்னும் கோவமா தான் இருக்கேன்" என்றாள்.


பரவாயில்லை. அது தான் உங்க அழகே!


இப்படியெல்லாம் சொன்னா நான் மயங்கிற மாட்டேன் மிஸ்டர்.


அதற்குள் புகைப்படக் கலைஞர் அவர்களை நெருங்கி நிற்கச் சொன்னார்.


அதெல்லாம் வேணாம் ப்ரோ. இப்படியே எடுங்க என்று தர்னிகா கூறினாள்.


பரவாயில்லை. இதுல எனக்கு பிரச்சனை இல்லை என்று உதயன் கூற


எனக்குப் பிரச்சனை இருக்கு. பக்கத்துல நின்னா, மஹதி கூட இப்படித் தான் பக்கத்துல நின்னு செல்ஃபி எடுத்தேன். அந்த நியாபகம் வந்திருச்சுன்னு சொல்லுவீங்க. ஏற்கெனவே கல்யாணத்துல இப்படி எடுத்தப்ப என்ன நினைச்சீங்களோ! அதை நினைச்சாவே அசிங்கமா இருக்கு. என்று அடிக்குரலில் கூறினாள் தர்னிகா.


அவள் மனம் எப்படி காயப்பட்டிருக்கிறது என உணர்ந்த உதயனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.


வர்த்தக நோக்கத்திற்க்காக நடத்தப்படும் ரிசப்ஷன் என்பதால் வந்திருந்தவர்களில் பெரும்பாலான தொழிலதிபர்களை இருவருக்கும் அவ்வளவாக தெரியவில்லை. உதயனின் தந்தை உதயன் அருகிலேயே நின்று கொண்டு அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.


உதயனுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை. தர்னிகாவின் வார்த்தைகளே நிழலாடியது. மறுநான் தேனிலவு செல்கின்றனர். அங்கிருந்து வருவதற்குள் தர்னிகாவை சமாதானப்படுத்தி பழையபடி பேச வைக்கவேண்டும். குறைந்தது அடிக்கவாவது வைக்கவேண்டும் என முடிவெடுத்தான் உதயன்.


என்ன நடக்கும் தேனிலவில்? சந்திப்போம் வெனிஸில்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top